- குருவை சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை – ஜெயலலிதா குற்றச்சாட்டு
அதிசயம் ஆனால் உண்மை – மைனாரிட்டி தி.மு.க அரசு இதற்கு பொறுப்பு இல்லையா?
- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – தமிழகமெங்கும் மூன்று நாட்கள் விடுமுறை
எடியூரப்பாவிடம் பேசி கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் விடுமுறை வாங்கி கொடுக்கலாமே, ஹிஹி!
- பெண் சிங்கம் – இதை ஏன் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜயன்ட்) அல்லது தயாநிதி அழகிரி (கிளௌட் 9 ) விநியோகிக்க வில்லை?
- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விளம்பரம் சன் டிவியில் வரும் போது, எழுத்து பிழையோடு போடுகின்றனரே? (உலகத் தமிழ செம்மொழி மாநாடு என்று) – மாநாடு முடியும் முன்னர் இதை சரி செய்வார்களா?
- தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகம் – இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், இவர்கள் வேலை தேடி தமிழ்நாடை விட்டு வெளியே போக முடியுமா?
