கன்னாப்பின்னாச் செய்திகள்


  • குருவை சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை – ஜெயலலிதா குற்றச்சாட்டு

அதிசயம் ஆனால் உண்மை – மைனாரிட்டி தி.மு.க அரசு இதற்கு பொறுப்பு இல்லையா?

  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – தமிழகமெங்கும் மூன்று நாட்கள் விடுமுறை

எடியூரப்பாவிடம் பேசி கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் விடுமுறை வாங்கி கொடுக்கலாமே, ஹிஹி!

  • பெண் சிங்கம் – இதை ஏன் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜயன்ட்) அல்லது தயாநிதி அழகிரி (கிளௌட் 9 ) விநியோகிக்க வில்லை?
  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விளம்பரம் சன் டிவியில் வரும் போது, எழுத்து பிழையோடு போடுகின்றனரே? (உலகத் தமிழ செம்மொழி மாநாடு என்று) – மாநாடு முடியும் முன்னர் இதை சரி செய்வார்களா?
  • தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகம் – இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், இவர்கள் வேலை தேடி தமிழ்நாடை விட்டு வெளியே போக முடியுமா?
Advertisements

ஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே?


சமீபத்தில் குஜராத் அரசு உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றி உள்ளது. இதைப் போன்று சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கும் வாக்கு அளிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனர் “தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்க முடியாது. 40% மக்கள் தேர்தலில் ஓட்டு போடுவது இல்லை. இதை கட்டாயம் ஆக்குவதற்கு பதில், இதை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதே சிறந்தது” என்று சொல்லி உள்ளார்.

ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்க்கு பதில் ஓட்டு போடுபவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கலாமே? இலவசம் கொடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இதற்கும் ஏதாவது சலுகைகள் கொடுக்கலாமே? ஓட்டு போடாமல் இருப்பதில் பெரும்பான்மையானோர் மத்திய தர வர்க்கத்தினர் (middle class). எனவே ஓட்டு போடுபவர்களுக்கு வரிச்சலுகைகள் தரலாம். வரியே காட்டாதவர்களுக்கு (அதாவது அவ்வளவு வருமானம் இல்லாதவர்களுக்கு) இலவசமாக ஏதேனும் தரலாம். அல்லது அரசு சேவைகளில் ஓட்டு போட்டவர்களுக்கு முன்னுரிமை/சலுகைகள் வழங்கலாம். நான் சொல்லுவது சரி என்று பட்டால் இப்பதிவுக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் அதற்கு எந்த சலுகையும் கிடையாது 🙂

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சன்னின் பெருந்தன்மை


நேற்று சன் தொலைக்காட்சி டாப் டென் மூவிஸ் பார்க்க நேர்ந்தது. அதில் டாப் டென்னில் வழக்கம் போல சன் பிக்சர்ஸ் படமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தான் முதலிடம் இருக்கும் என்று எண்ணிய எனக்கு சன் அதிர்ச்சி கொடுத்தது. கந்தசாமி படம் முதலில் இருந்தது. எப்படி இது சாத்தியம்? சன் பிக்சர்ஸ் தவிர வேறு பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் கூட வசூலை அள்ளுமா? சன் பிக்சர்ஸின் பெருந்தன்மை வேறு எந்த பிக்சர்ுக்காவது வருமா?

பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பற்றித் தான் கூறுகிறார் விவேக். தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டு வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் விவேக்கிற்கு கடும் கோபம் இருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம். சாமி படத்தில் பாரதியார் புகைப்படத்தை சிறுவர்களிடம் காட்டி இவர் யாரென்று கேட்பார், அதற்கு அவர்களில் ஒருவன் “சந்தன கடத்தல் வீரப்பன்” என்று சொல்வான். இவர் இதை நகைச்சுவைக்காக செய்தாராம். பாரதியாரை இவர் அசிங்கப்படுத்த வில்லையா? என்னங்கையா நியாயம் இது? ஒரு வேளை நம்ம ஊர் காரங்களை நாம மட்டும் தான் அசிங்கப் படுத்தனும்னு நெனச்சி அந்த மாதிரி பண்ணிட்டாரு போல!

தமிழிஷில் ஓட்டு போட இங்கு க்ளிக்கவும்

சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்


சேலத்தில் எதிர்பார்த்தது போன்று அதிமுக முன்னிலை. சேலம் செம்மலை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

NDTV செய்திகள் சொல்வது தே.மு.தி.க வெற்றி!

Update:

சேலம் – அதிமுக செம்மலை வெற்றி, வாக்கு வித்தியாசம்  சுமார் 46, 491

மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்


உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் அதிரடி ஆக்ஸன் படம் தேர்தல் 2009, டிரைலர் இதோ:

வயதானாலும் சளைக்காத கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்துள்ள படம் தான் இது. கூடவே ஜால்ரா அடிக்கும் வேடங்களில் வைகோ, திருமாவளவன், இராமதாஸ், மொத்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இவ்வளவு வருடங்களாக இலங்கை தமிழர்களா அப்படி ஒரு இனம் இருக்கின்றதா என்று கேட்டு வந்த ஜெயலலிதா தற்போது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆறு மாதங்கள் மேலாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு தேர்தல் சமயம் தீடீர் என்று ஒரு அவசர உண்ணாவிரதம் (அதை காலை சாப்பாடு சாப்பிடா விரதம் என்றும் சொல்லலாம்) இருந்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் கருணாநிதி.

இப்படி பல பர்ஃபார்மன்ஸ் கேரக்டர்களில் இருவரும் பின்னி பெடலெடுத்து நடித்துள்ளனர்.

நாளைக்கு இப்படம் வெளியாகிறது. படத்தின் ரிஸல்ட் இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும். நடிகர்களுக்குள் கூட்டணி மாறும்.

எது எப்படியோ நீங்கள் நாளை மறக்காமல் இப்படத்தை பார்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் சீட்டை வைத்து வேறு யாராவது இப்படத்தை பார்த்து விடுவார்கள்.

நாளைக்கு வாக்கு சாவடியில் ஓட்டுப் போடுங்கள். அப்படியே இங்கேயும் ஓட்டு போடுங்களேன்.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்


அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணி – ஓமலூர் செம்மலை
தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்

இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில துணை செயலாளர் – ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரிநகர் என். கிருஷ்ணன்

சுயேச்சை வேட்பாளர்கள்:

  • சேலத்தாம்பட்டி தா. பெரியசாமி (வெள்ளி வியாபாரி)
  • தளவாய்பட்டி மகேஸ்வரன் (தனியார் வங்கி)
  • அம்மாப்பேட்டை ஷாஜகான் (வக்கீல்)
  • மேச்சேரி சின்னண்ணன் (விவசாயி)
  • மேட்டூர் பி.நல்லதம்பி (விவசாயி)

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை – சூரமங்கலம் அசோக்சாம்ராஜ்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – ஓமலூர் செல்லதுரை

பகுஜன் சமாஜ் கட்சி –  குகை பால சுப்பிரமணியன்

இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்


தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்