KS தியேட்டர்

KS தியேட்டரை அறியாத சேலத்துக்காரர்கள் இருக்க முடியாது (10 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இப்பொழுதும் அப்படி என்றுதான் நினைக்கிறேன்). இப்பொழுதும் அந்த தியேட்டர் இருக்கிறது. ஆனால் அதில் படங்கள் இப்பொழுது திரையிடுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

KS தியேட்டர், “KS தியேட்டர்” ஆக மாறுவதற்கு முன்பு “VPS‌ தியேட்டர்” என்று இருந்தது. அதில் எப்பொழுதும் பழைய படங்களையே திரையிடுவார்கள். சிறு வயதில் நாங்கள் குடும்பத்தோடு “சங்கர் குரு” என்ற படத்தை VPS‌ தியேட்டரில் பார்த்தோம்.

பின் VPS‌ தியேட்டரை வேறு ஒரு குழுமம் வாங்கி “KS தியேட்டர்” என்று பெயரிட்டார்கள். அதில் முதன்முதலில் விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தை திரையிட்டார்கள். அதற்கு அப்படத்தில் நடித்த கலைஞர்கள் வந்து இருந்தனர் (விஜயகாந்த் உட்பட). KS தியேட்டரில் புதுப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு அதில் ஆங்கில படங்கள் மட்டும் திரையிட ஆரம்பித்தார்கள். திரையரங்கை நன்றாக பராமரிப்பார்கள். இப்பொழுது எப்படி இருக்கிறதென்று தெரிய வில்லை.

KS தியேட்டர் எங்கள் வீட்டிற்கு பக்கம் வேறு இருந்தது. பாலிடெக்னிக் நண்பர்கள் கூட்டத்தோடு வார இறுதி நாட்களில் KS தியேட்டருக்கு சென்று விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் சில: Rumble in the bronx,Eraser, Species. சில சமயங்களில் அதில் ஹிந்தி படங்களும் திரையிட்டார்கள். அப்படி நான் பார்த்த படம் “ராஜா ஹிந்துஸ்தானி”, பார்த்த பின்பு தான் அது ரொம்ப வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் ஹிந்தி பதிப்பு என்று.

பின்பு நான் 1997ல் கோவைக்கு பொறியியல் படிப்பிற்காக சென்று விட்டேன். ஆனால் பெரும்பாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சேலம் வந்து விடுவேன். KS‌ தியேட்டரில் அப்பொழுது பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றுவார்கள். ஆகவே நானும் எனது நண்பன் சீனிவாசனும் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் பார்த்து விடுவோம். அப்படி நாங்கள் பார்த்த படங்களில் நினைவுக்கு வருபவை சில “‌Ransom, Jurassic Park 2”.

படித்து முடித்து சென்னையில் வேலை கிடைத்து சென்னை சென்ற பின், சேலத்துக்கு மாதம் ஒரு முறை தான் வர முடிந்தது. தவிர சீனிவாசனுக்கு மைசூரில் வேலை கிடைத்து அவனும் மைசூர் சென்று விட்டான். அவன் சேலம் வருவது 2-3 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. அதனால் படம் பார்க்கும் வழக்கமும் குறைந்தது.

காலம் மாறி விட்டது. ஆர்குட்டில் நான் “ARRS Multiplex” க்கு குழுமங்களை பார்த்து இருக்கிறேன். என்னை(ங்களை) போன்று KS திரையரங்கிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களா இன்னும்?

Advertisements

15 responses to “KS தியேட்டர்

 1. Naan Iruken Annachi…

  Aalavandhan,

  Gemini, innum sila padangal (sattendru nyabagathirku varavillai)

  paarthitukkiren. Intha theatril migavum piditha vishayam DTS Effect. Summa Adhirumilla…

 2. இங்கிலிஷ்காரன், நீங்க தான் முதல் ஆளு. :). அப்பாடா எனக்கு கம்பெனி கொடுக்க நீங்க ஒரு ஆளு இருக்கீங்க. நான் கடைசியா என்ன படம் கே.எஸ். திரையரங்கில் பாத்தேநேன்ற நினைவு இல்லை.

  நீங்க ஜெமினி, ஆளவந்தான் பாத்தீங்களா? நீங்க அடுத்த தலைமுறை 🙂 ஆமா, இப்போ நீங்க எங்க இருக்கீங்க (எந்த ஊருல)?

  நீங்க சொன்னது போல இந்த திரையரங்கில் என்னை கவர்ந்த விஷயங்களில் ஒன்று DTS, மற்றொன்று சுத்தமாக இருக்கும்.

  அடுத்து எப்போ கே.எஸ். திரையரங்கம் போவேனோ, தெரியவில்லை. இன்னொரு விஷயம் நாளை சேலம் தினம் கொண்டாடுகிறார்கள். இனிமேல் ஒவ்வொரு நவம்பர் 1, சேலம் தினம். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்.

 3. Hi Salem friends,

  I am ravi from Thailand.
  Naan.. Salem Karungalpatty paiyan…
  K.S. theater is still functioning.. I have seen Kuruvi during my last visit to Salem.

  Does ARK complex start screening films?

 4. ரவி, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் கருங்கல்பட்டியா? நானும் சிலகாலம் அங்கு இருந்தேன். ஆம், கே.எஸ். திரையரங்கில் இன்னும் படம் போடுகின்றனர். இப்போது அத்திரையரங்கம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது என்று எண்ணுகிறேன். ARK காம்ப்ளெக்ஸ் என்றால் நீங்கள் சந்தோஷ், சப்னா மற்றும் சாந்தம் திரையரங்கைக் குறிப்பிடுகிறீர்களா? எனக்குத் தெரியவில்லை. அந்தப் பக்கம் சென்று நிறைய மாதங்களாகிவிட்டது. நேற்று சேலம் தினம் கொண்டாடினார்கள். அதைப் பற்றி ஒருப்பதிவு போட்டுள்ளேன். அவ்வபொழுது என் வலைப்பதிவு பக்கம் வாருங்கள்.

 5. Dear Mohan, You r mentioned ARK Complex.But poo ravi mentioning ARRS complex is situated near New bus stand .In
  that complex there r 5 theaters.One sad news that ARK complex now closed.

 6. Dear Venkat,

  Poo ravi is mentioning ARK complex only i.e, sapna, santham, santhosh. This theatre is closed now.

 7. Aama Mohan Annachi,

  I m the next generation of urs. May be 3 or 4 years younger…(Thats y i m calling u as annachi…)

  Then me too heard about Salem day… Lets be proud of salem city.

 8. இங்கிலிஷ்காரன், தகவலுக்கு நன்றி. ARK திரையரங்கத்தை மூடி விட்டார்களா? ஏன்? என்ன ஆயிற்று?

 9. //Aama Mohan Annachi,

  I m the next generation of urs. May be 3 or 4 years younger…(Thats y i m calling u as annachi…)

  Then me too heard about Salem day… Lets be proud of salem city.//

  ஆஹா, அதுக்காக என்னை அண்ணாச்சி (சீ சீ) ன்னு கூப்டறதா, என்னை மோகன்-ன்னு கூப்டுங்க இங்கிலிஷ்காரன். சேலம் தினத்திற்கு நம்ம ஊர்ல ஊர்வலம் பாய் என்னமோ செஞ்சி இருக்காங்க.

 10. Hello Mr. Mohan,

  Enakku ippodhu 27 vayasu aagudhu. Chennai-la oru MNC-la velai paarkirraen.

  Ennaip polave k.s theater rasigargal sila paer iruppadhai ninaikkumbozhudhu sakkarai saappitadhu pola inikkudhu!!!

  Ungalukku eppadiyo theriyavillai…enakku K.S yendral UYIR….!andha theaterai naan theater thirandhadhil irundhu swaasam poal pin thodargiraen… adhan maatrangall, DTS seetrangall, Nunukkangall anaiththaiyum naan arivaen.

  Enakku apppodhu vayasu sumaar 15-kku pakkamaaga vayasu irukkum endru ninaikkiraen(1991, when K.S was opened by Viyayakanth). theater thirandhirundha pudhusu. enn appa oru pudhu theater thirandhu irukaanga, adhil DTS endru oru amsam pudhusa kondu vandhu irukaangannu solli koottittu ponaar. ANNAIKKU MAYANGIYAVANDHAAN NAAN…. andru mudhal K.S theater-in DTS-sukku naan rasigan aagi vittaen. (Andru mudhan mudhalili naan paartha padam “Evil Dead — Part III).

  K.S. -ill enakku pidiththa vishyam… DTS. aahhaa… thaen amudhu adhu!!!. ahuvum DOLBY DIGITAL print-il padam pottaargall endraal padaththai naan 2,3 murai kooda paarthu rasiththu irukkiraen … just to enjoy the effect. effect endraall damaal dumeel mattum alla, THULLIYAM enbadhum adhil adangum enbadhai Salem makkall K.S moolamaagadhaan arindhu kodaargall endrall adhu migai aagaadhu!!

  Pazhaya K.S-il enakku anaega padangal paartha nyaabagam. andha padap paadalgalayo, scene-galayo ippodhu tv-yil paarkum bodhu kooda enakku k.s-il padam paartha nyabagam dhan varum!!

  List of movies i saw in K.S( a small list from what i could remember; List includes only movies in which DTS effect was superb in K.S):

  Evil Dead Part-III
  Jeans
  Alai Paayudhae
  Padayappa
  Mission Impossible II
  Species I & II
  Rush Hour I & II
  Mummy I & II
  Gladiator
  Pearl Harbor
  Aalavandhaan…
  … and the list goes on and on and on… i haven’t missed a single movie in K.S!!

  Indraya Nilai:

  ondrarai varudangalukku munbu niraya thamizh padangall tholvi adaindhadhu. appodhu theater nadathuvadhu enbadhae migavum kashtamagap poi vittadhu. podhaadha kuraikku ARRS multiplex veru vandhu vittadhu appodhu. enavae andha area makkall niraya paer andha theaterukku poda aarambichuttaanga. adhanaala K.S, ARK pondra theatergalin varumaanam kuraya aarambichudhu. Innoru kaaranam, ARRS-sukku ponaal oru padam ticket illannaa kooda innoru padathukku pogalangura ennamum makkalukku vara aarambichadhudhaan. Adhanaaladhaan Reliance ketta vudanae avanudaya theater pirivaana ADLABS-kku K.S theater owner 10 varushathukku lease-la vittu irukkaar. So this is the story how K.S Theater became ADLABS K.S!!

  ADLABS K.S:

  ADLABS vaanguna appuram theater appearance-la nalla maatram(seats, walls ellamae red colour apdidradhudhaan kandraavi !!). Ippo tickets ellaam internet-la kooda vaangalam. seats-kooda selection senjukkalaam.

  ADLABS theater-a vaangi aanaaa DTS-sil periya maatram kondu vandhaanga. munbu irundha thulliyam ADLABS vaanguna appuram illa. adjustment ellaam maaththi vechutaanunga loosup pasanga!! Ippodhaan konjam konjamaa pazhaya nilamaikku thirumbi vandhukittu irukku. Kadasiyaa 2 vaaram munaadu ippo odura Seval padam paarththaen. DTS was good. Aanaa ennadhaan niraya niraya pudhu theaters Saleththula vandhaalum, ippo kooda K.S-nudaya thulliyamaana DTS-sa adichukku saleththula theater illa. not even ARRS.

  BIG Cinemas K.S :
  Recent-aa ippo ADLABS theater ellamae BIG Cinemas-nnu maathitaanga. so ADLABS K.S is now ” BIG CINEMAS K.S”. just a name change.

  Internet booking website:
  http://www.bigcinemas.com/index.asp

  Mohan sir… ippo salem romba maariduchchu… cost of living has become so high since the arrrival of ADLABS and Odyssey in Salem. Theater-la tickets vilai ellam romba adhigam. K.S mattum dhaan first class Rs. 50. Maththa ADLABS-la RS. 85(first class). ARRS-la(Rs. 70).

  Sathtula innum sila theaters kooda ADLABS lease-kku eduththu irukaanga….
  KEERTHANA & RAMANA
  KAILASH & PRAKASH

  Ippo konjam konjamaa pazhaya nilaikku K.S-udaya DTS thrumbikittu irukradhunaala future-la innum kooda new technologies implement pannuvaangannu nambalam(may be digital projectors like other theaters in Salem)

  Edhu eppadi irundhaalum Saleththula ALWAYS K.S ROCKS!!!

 11. ARK Complex

  ARK moodi 2 varusham aagudhu mohan sir.
  ARK mooduna kaaranam unknown… however, following are some speculations/rumours!!!

  1. Fight b/w the brothers who own the theaters.
  2. Theater License problem with the government. Seems that the license has expired and there is problem in renewing it.
  3. Latest news is that ADLABS are going to remodel these theaters too(like they did K.S and other theaters…). But work hasn’t started as yet.

 12. Hi SivaShankar Anna,

  I think the second point may be the reason for the closure.

 13. Sorry Sivabhaskar Anna…Hi..Hi..

  Velai senju thooka kalakkathula oru mappula pera maathi ezhuthitten…

 14. சிவபாஸ்கர், தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  என்னோட பதிவை விட, உங்கள் பின்னூட்டம் பெரியதாக இருக்கிறது. நிறைய தகவல்களையும் தருகிறது. தொடர்ந்து என்னோட பதிவிற்கு வாங்கள். வந்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

  என்னோட டிப்ளோமா படிப்பு காலத்திலும் இன்ஜினியரிங்படிப்பு காலத்திலும் கே.எஸ் திரையரங்கு முக்கிய பங்கு வகித்தது :). நீங்கள் சொல்வது உண்மை கே.எஸ், திரையரங்கு டி.தி.எஸ் வசதி வாய் பிளக்க வைத்தது. சுத்தமாக இருந்தது இன்னொரு + பாய்ண்ட். அதற்க்கு அப்புறம் சேலத்தில் படம் பார்ப்பது குறைந்து போய் விட்டது.

  எது எப்படியோ, என்னை போல ஒரு கே.எஸ். ரசிகரை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இங்கிலிஷ்காரனும் கே.எஸ். ரசிகர் தான்.

 15. ARK திரையரங்கம் மூடப் பட்டதே எனக்கு நீங்கள் எல்லாம் சொல்லிதான் தெரிய வந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s