Monthly Archives: ஜூன் 2008

சுத்த அசைவம்


சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது

என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.

Advertisements

பிவிஆர் திரையரங்கும் கைமுறுக்கும்


எப்பொழுதாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரு பிவிஆர், ஃபன் திரையரங்ககிளிற்க்கு போவதுண்டு. அங்கு டிக்கெட் விலை உண்மையாகவே யானை விலை, குதிரை விலை (யானை விலை சரி, அது என்ன குதிரை விலை, இச்சொற்றொடர் எப்படி/எப்பொழுது வந்தது?). திரையரங்கினுள் பட இடைவேளைக்கு சற்று முன்பு திரையரங்க உணவகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்டர் எடுக்க வருவார்கள்.

இது எனது சிறுவயது திரையரங்கு சம்பந்தப்பட்ட நினைவுகளை கொண்டு வருகிறது. அந்த கொட்டாய்களில் இடைவேளை சமயம் கைமுறுக்கு, தட்டுவடை இன்னபிற சாப்பிடும் சமாச்சாரங்களை திரையரங்கினுள் விற்பார்கள். அப்போது அவர்களுக்கு சீருடை ஏதும் இல்லை.

அதைத்தான் இப்போது பிவிஆர், ஃபன் மற்றும் பல மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் நன்றாக சீருடை அணிந்த யுவதிகளும் இளைஞர்களும் செய்கிறார்கள். இவர்கள் பர்கர், நாசோஸ் என்று விற்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்! 🙂

என்னே கால மாற்றம்?

காப்புரிமை நமதுரிமை


சமீபத்திய ஜூனியர் விகடன் படித்த போது, கண்ணில் பட்ட‌(உறுத்திய) தை பகிர்ந்துக்கொள்ளலாமென்று இப்பதிவு.

மலேசியாவில் ஒரு நிறுவனம் “பொன்னி” என்ற அரிசிப் பெயருக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது. எனவே இனிமேல் இந்திய விவசாயிகள் பொன்னி அரிசி என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வளவு வருடம் பொன்னி என்ற பெயரில் பொன்னி அரிசியை விற்று வந்த விவசாயிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

காப்புரிமை சட்டப்படி காப்புரிமை செய்யப்பட வேண்டிய பொருளும் அதன் பெயரும் எங்கேனும் உபயோகத்திலிருந்தால் அதை காப்புரிமை செய்ய முடியாது.

1986ல் தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் கண்டுப்பிடிப்பே இந்த பொன்னி அரிசி. ஆனால் இதை எல்லாம் மீறி எப்படி மலேசிய காப்புரிமை அலுவலகம் “பொன்னி அரிசி” என்ற பெயருக்கு காப்புரிமை வழங்கியது? விவரமாக படிக்க

ஆனால் பின்னர் போடப்பட்ட வழக்கினால் (அல்லது கொடுக்கப்பட்ட புகாரினால்?) அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காப்புரிமை நிராகரிக்கப் பட்டுவிட்டது (ஜூனியர் விகடன் செய்திப்படி, ஆனால் இணையத்தில் இதைப்பற்றி ஒன்றும் காணோம்) என்பது ஒரு ஆறுதலான செய்தி.

இதேப் போன்று சில வருடங்களுக்கு முன்பு பாஸ்மதி அரிசிக்கு அமெரிக்க நிறுவனம் ரைஸ்டெக்கிற்க்கு (RiceTec) காப்புரிமை வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கு இந்திய அரசு ரொம்ப வருடங்கள் போராடித் தான் அந்த காப்புரிமை ஆவணத்தில் உள்ள சிலவற்றை ரத்து செய்ய வைத்தது, இதில் முக்கியமானது அவர்கள் “பாஸ்மதி” என்கிற பெயருக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்பது தான். விவரமாக படிக்க1 மற்றும் விவரமாக படிக்க2

நமது கண்டுபிடிப்புகளுக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை முளையிலேயே கிள்ளி எறிய இந்திய அரசு ஏதாவது செய்தாக வேண்டும், இல்லையென்றால் நாம் அசந்து இருக்கும் சமயமாகப் பார்த்து அவர்கள் நம் கண்டுப்பிடிப்பை காப்புரிமை செய்து விடுவார்கள், பின்பு அரசு தும்பை விட்டு வாலை பிடித்த கதையாககத்தான் இருக்கும்.

புது சரக்கு கைவசம் ஏதும் இல்லை


வேலைப்பளு (நெசமாத்தாங்கோ) காரணமாகவும் எதைப் பற்றி எழுதுவது என்பதைப் பற்றி தெரியாததாலும் இம்மாதம் சரியாக வலைப்பதிவு செய்ய முடியவில்லை.

நான் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறேன். இனிமேல் மேட்டர் கிடைக்காதப் போது, தமிழ் பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன இடுகையை ரீமேக் செய்து ஆங்கிலப்பதிவிலும், ஆங்கிலப்பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன பிளாக்கை தமிழில் மொழிமாற்றம் செய்தும் பதிவுகளை நிரப்பலாமென்று இருக்கிறேன். படங்களை மட்டும் தான் ரீமேக் செய்ய வேண்டுமா என்ன? பதிவுகளை ரீமேக் செய்ய கூடாதா? ஹிஹி

சாரி


நான் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது (1994) படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு மடம் சார்பாக 3-4 மாவட்டங்களிடையே விவேகானந்தரைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் பட்டது. நான் அதில் எனது பள்ளி சார்பாக கலந்துக் கொண்டேன். எனது பள்ளி ஆசிரியர்களும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவினர். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றிருப்பதாக எங்கள் பள்ளிக்கு தகவல் வந்தது. ஜனவரி மாதம் கோவையில் உள்ள அம்மடத்தில் நடைபெறும் ஒரு பூஜை விழா சமயம் அங்கே வந்து பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். பரிசை வழங்க இருந்தவர் முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் என்றும் ஒரு தகவல். ஆனால் சில காரணங்களால் நேரில் போக முடியாத சூழ்நிலை.

இதை எனது தமிழ் ஆசிரியரிடம் சொன்னப்போது அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார். முன்னாள் ஆளுநர் கையால் பரிசு வாங்கும் வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று கேட்டு என்னை நேரில் சென்றே பரிசை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் அப்பாவிடம் இதை எடுத்துச் சொல்ல அவரும் சரி, நாம் கோவை செல்லலாம் என்று ஒத்துக் கொண்டார். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அப்பாவும் நானும் கோவைக்கு பேருந்தில் கிளம்பினோம்.

அடுத்த நாள் தான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அம்மடத்திலியே அன்று இரவு தங்கினோம். அடுத்த நாள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக காத்திருந்தோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆனால் என்னை மட்டும் கூப்பிடவில்லை. எனது அப்பா சென்று விழா நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஏதோ ஒரு பட்டியலை பார்த்து விட்டு, “சாரி சார், இது தவறி விட்டது” என்று சொல்லி விட்டனர். அப்பா அதற்கு “ஆங்கிலத்தில் சாரி ஒரு கெட்ட வார்த்தை” என்று சொல்லி அவர்களை திட்டி விட்டு பரிசை அவர்களிடமே வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

குறிப்பு: இது என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.