சாரி

நான் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது (1994) படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு மடம் சார்பாக 3-4 மாவட்டங்களிடையே விவேகானந்தரைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் பட்டது. நான் அதில் எனது பள்ளி சார்பாக கலந்துக் கொண்டேன். எனது பள்ளி ஆசிரியர்களும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவினர். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றிருப்பதாக எங்கள் பள்ளிக்கு தகவல் வந்தது. ஜனவரி மாதம் கோவையில் உள்ள அம்மடத்தில் நடைபெறும் ஒரு பூஜை விழா சமயம் அங்கே வந்து பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். பரிசை வழங்க இருந்தவர் முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் என்றும் ஒரு தகவல். ஆனால் சில காரணங்களால் நேரில் போக முடியாத சூழ்நிலை.

இதை எனது தமிழ் ஆசிரியரிடம் சொன்னப்போது அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார். முன்னாள் ஆளுநர் கையால் பரிசு வாங்கும் வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று கேட்டு என்னை நேரில் சென்றே பரிசை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் அப்பாவிடம் இதை எடுத்துச் சொல்ல அவரும் சரி, நாம் கோவை செல்லலாம் என்று ஒத்துக் கொண்டார். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அப்பாவும் நானும் கோவைக்கு பேருந்தில் கிளம்பினோம்.

அடுத்த நாள் தான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அம்மடத்திலியே அன்று இரவு தங்கினோம். அடுத்த நாள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக காத்திருந்தோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆனால் என்னை மட்டும் கூப்பிடவில்லை. எனது அப்பா சென்று விழா நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஏதோ ஒரு பட்டியலை பார்த்து விட்டு, “சாரி சார், இது தவறி விட்டது” என்று சொல்லி விட்டனர். அப்பா அதற்கு “ஆங்கிலத்தில் சாரி ஒரு கெட்ட வார்த்தை” என்று சொல்லி அவர்களை திட்டி விட்டு பரிசை அவர்களிடமே வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

குறிப்பு: இது என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

Advertisements

4 responses to “சாரி

  1. கேட்கவே பரிதாபமாக இருக்கிறது! அவ்வப்பொழுது இப்படியான சம்பவங்கள் நடந்தவண்ணம் இருக்கத்தான் செய்கிறது; என்ன செய்ய, உரியவர்கள் இவைகளை உணர்ந்துகொண்டு, இனிமேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறாதபடி நடந்துகொண்டால் நல்லது!

  2. செவதப்பா, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மிகுந்த சிரமத்தில் போன எங்களுக்கு அந்நிகழ்வு மிகவும் வருத்தமாக இருந்தது. நீங்கள் சொல்வது போல இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட தவறுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் தான் கவனமாக செயல்பட வேண்டும்.

  3. சில சமயம் தவறுகள் நிறைய நடக்கிறது என்ன செய்ய
    பொருதார் பூமி ஆழ்வார் …

  4. விவேக், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. பொறுத்துதான் ஆக வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s