பல நேரங்களில் பல மனிதர்கள்

சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பள்ளியைத் தாண்டி செல்ல வேண்டியதிருந்தது. அச்சமயம் பள்ளி விடும் நேரம் ஆதலால் காவலர் வாகனங்களை நிறுத்தி பள்ளி மாணாக்கர்கள் சாலையை கடக்க உதவிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் வாகன ஓட்டிகள் பொறுமை இழக்க ஆரம்பித்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் சற்று தொலைவில் தான் சிக்னல், அதுலேயும் சிவப்பு விளக்கு தான் எரிந்துக் கொண்டிருந்தது. எனவே அங்கே போயும் நிற்க வேண்டியதாய் தான் இருக்கும். ஆனாலும் இப்பள்ளி மாணாக்கர்களுக்காக சிறிது நேரம் இவர்களால் ஏன் பொறுமையாய் இருக்க  முடியவில்லை? இன்னொருவரோ காவலர் நிற்கச் சொல்லியும் அவரைத் தாண்டி அவர் பாட்டுக்கு போய் விட்டார். இதுவே அவர்கள் குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்திருப்பார்களேயானால் இம்மாதிரி செய்பவர்களை இவர்களே எப்படித் திட்டி தீர்த்திருப்பார்கள்?

சரி, இது தான் இப்படியென்றால் மெத்த படித்தவர்கள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். எங்கள் அலுவலகத்தில் அனைவரும் லிஃப்ட் உபயோகப்படுத்துவது வழக்கம். பொதுவாக லிஃப்டில் இருந்து வெளியே வருபவர்களுக்கு முதலில் வழிவிட்டு பின்னரே லிஃப்டிற்குள் போக வேண்டியவர்கள் நுழைய வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயம் அப்படி நடக்காது. லிஃப்ட் ஒரு தளம் வந்து நின்று லிஃப்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெளியே நின்றிருப்பவர்கள் வழியை மறித்துக் கொண்டி நிற்பார்கள். சில சமயம் கவலையே படாமல் அவர்கள் பாட்டிற்கு உள்ளே நுழைந்து விடுவர். இப்படிப் பட்ட பிரச்சினைகளைப் பார்த்து எங்கள் நிர்வாகம் ஒவ்வொரு லிஃப்ட் முன்பும் வைத்துள்ள அறிவிப்புத் தான் இது.

லிஃப்ட் அறிவிப்பு

லிஃப்ட் அறிவிப்பு

Advertisements

4 responses to “பல நேரங்களில் பல மனிதர்கள்

  1. //இதுவே அவர்கள் குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்திருப்பார்களேயானால் இம்மாதிரி செய்பவர்களை இவர்களே எப்படித் திட்டி தீர்த்திருப்பார்கள்?//

    இவர்கள் எக்காலத்திலும் திருந்த மாட்டார்கள்

  2. கிரி, அவர்கள் செய்வது தவறு என்பதையே அவர்கள் உணர்வதில்லை.

  3. மனிதர்கள் பலவிதம் அதில் இந்த மாக்களும் ஒருவிதம்.

  4. இலங்கேஸ்வரன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்வதுப் போல இவர்களை மாக்கள் என்றும் சொல்லலாம் போல் உள்ளது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s