ஏன் இப்படி?

பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் நிகழ்ந்தது. அரசியல் கட்சிகள் அறிக்கைப் போரை ஆரம்பித்து விட்டன.

பாஜக அத்வானி பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று பேட்டி தர ஆரம்பித்து விட்டார். என்னவோ பொடா சட்டம் அமுலில் இருந்தப்போது நாட்டில் குண்டுகளே வெடிக்காத மாதிரி. எனக்கென்னவோ பொடா சட்டமிருந்தப்போது நிறைய அப்பாவி மக்கள்தான் சிரமத்துக்குள்ளாயினர் என்றுத் தோன்றுகிறது. காங்கிரஸோ நரேந்திர மோடி குஜராத் குண்டு வெடிப்பிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டாயிற்று. இது முழுக்க முழுக்க மாநில அரசின் தவறு/பிரச்சினை என்ற ரீதியில் ஒரு அறிக்கை. அப்பொழுது மத்திய அரசு எதற்கு? காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இவ்வாறு நடந்திருந்தால் என்னச் சொல்வார்கள்? இதையெல்லாம் பார்க்கும் போது நல்ல ஆரோக்கியமான அரசு, ஆரோக்கியமான ஆளுங்கட்சி – எதிர்கட்சி உறவு (அப்படின்னா என்னா-ன்னு கேட்கப்படாது) இதெல்லாம் நமது நாட்டில் அமைய வாய்ப்பே இல்லையா என்ற ஏக்கம் தோன்றுகிறது. எதாவது ஒரு பிரச்சினையென்றால் அதை அடுத்தவர் மீது போடுவதை நாம் நிறுத்த மாட்டோமா? லால் பகதூர் சாஸ்திரி இரயில்வே துறை அமைச்சராக இருந்த்போது நடந்த இரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகினாராம். இது ஏனோ எனக்கு இப்போது தேவையில்லாமல் நினைவிற்கு வருகிறது.

இனி சில வாரங்களுக்கு எல்லா ரயில் நிலையங்களிலும்/முக்கிய இடங்களிலும் தீவிர பரிசோதனை நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல அதெல்லாம் காற்றோடுப் போய்விடும். நம் ஊரில் ஏதாவது பிரச்சினையா? சிறிது நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு. அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

சரி, அப்பரிசோதனையைத்தான் சரியாக செய்கிறார்களா? எங்கள் அலுவலக வளாகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நுழையும்போது செக்யூரிட்டி-கள் ஒரு கண்ணாடி வைத்து அவ்வாகனங்களை பரிசோதனை செய்வர். எனக்கு ஒரு சந்தேகம், என்ன பரிசோதிக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இல்லை சும்மா செய்கிறார்களா? ஏன் அப்பரிசோதனையை இரு சக்கர வாகனங்களிற்கு செய்வதில்லை? இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ரொம்ப நல்லவர்களா?

Advertisements

2 responses to “ஏன் இப்படி?

  1. //இனி சில வாரங்களுக்கு எல்லா ரயில் நிலையங்களிலும்/முக்கிய இடங்களிலும் தீவிர பரிசோதனை நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல அதெல்லாம் காற்றோடுப் போய்விடும். நம் ஊரில் ஏதாவது பிரச்சினையா? சிறிது நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு. அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

    சரி, அப்பரிசோதனையைத்தான் சரியாக செய்கிறார்களா? எங்கள் அலுவலக வளாகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நுழையும்போது செக்யூரிட்டி-கள் ஒரு கண்ணாடி வைத்து அவ்வாகனங்களை பரிசோதனை செய்வர். எனக்கு ஒரு சந்தேகம், என்ன பரிசோதிக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இல்லை சும்மா செய்கிறார்களா? ஏன் அப்பரிசோதனையை இரு சக்கர வாகனங்களிற்கு செய்வதில்லை? இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ரொம்ப நல்லவர்களா?//

    மோகன் எளிமையான நடையில் சிறப்பாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

  2. கிரி, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s