கல்லூரி கலாட்டாக்கள்

என் கல்லூரிக்கால கலாட்டாக்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன்.

எனது நண்பனிற்கு லேப் வைவா-வில் கேட்கப்பட்ட கேள்வி: ‌”What is a protocol?“. அதற்கு அவன் சொன்ன பதில் “Its our college function“. என் நண்பன் படித்த கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் கணினித் துறை சார்பாக நடத்தப்படும் விழா பெயர்தான் “Protocol”. அதைத்தான் அப்பெருந்தகை பதிலாக கூறியுள்ளார்.

மேனேஜ்மென்ட் பற்றி எங்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தப்போது வழக்கம்போல அதை கவனிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த அவ்வாசிரியை பாடம் நடத்துவதை நிறுத்தி என்னை எழுப்பி “Who is the decision maker?” என்று அப்போது நடத்திக்கொண்டிருந்த பாடத்திலிருந்து கேள்விக்கேட்டார். நான் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் சுற்றிமுற்றிப்பார்த்து பின்னர் அவரிடமே “I am not the decision maker” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.

அதே ஆசிரியை ஒரு நாள் நான் மறுபடி வகுப்பில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை கவனித்து (அப்போது நான் சபரி மலைக்கு மாலைப் போட்டிருந்தேன்) என்னருகில் வந்து “நீ மாலை போட்டிருப்பதே வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என்ன கோபமோ தெரியவில்லை 🙂

4வது அல்லது 5வது செமஸ்டரா என்று சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு கணித சம்பந்தப்பட்ட பாடமொன்றை எடுக்க ஒரு ஆசிரியர் வந்தார். அவர் கொஞ்சம் முசுடு. யாராவது அவரிடம் மாட்டினால் சரியாக ஓட்டிவிடுவார். இவரால் எனது நண்பர்கள் சிலர் பலதடவை நன்றாக ஓட்டப்பட்டு அவமானப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவன் அவரைப் பழிக்கு பழி வாங்கப்போவதாக சொல்லி ஒரு நாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவரைக் கேட்காமல் வகுப்பறைக்குள் நுழைந்தான் (ஆசிரியரை அவமானப்படுத்தி விட்டானாம்). அவர் அவனை நிறுத்தி “என்ன, தொறந்த வீட்டுல ஏதோ புகுந்த மாதிரி, நீப் பாட்டுக்கு உள்ள வரே” என்று கேவலமாக கேட்டு அவனை பயங்கரமாக அவமானப்படுத்தி விட்டார். பாவம் அவன். அவனை நாங்கள் இதைவைத்து இன்னுமும் ஓட்டி வருகிறோம். (அதாவது 8-9 வருடங்களாக)

இன்னொரு நண்பன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் கல்லூரிக்கு வரவில்லை. எனவே எங்கள் பேராசிரியை அவனை ஏன் நேற்று நீ வரவில்லை என்றுக் கேட்டார். அதற்கு அவன் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் “மேம். நேத்து காலேஜிற்கு வர வழியில ஆக்ஸ்டெண்ட் ஆயிடிச்சி” என்றான். அப்பேராசிரியைக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “ஏம்ப்பா உண்மையை சொல்லு, தேவையில்லாமல் பொய் சொல்லாதே அப்புறம் நிஜமாக அப்படி ஆயிடப்போகுது” என்றார். இவனோ “இல்லை மேம், நிஜமாத்தான்” என்று சொல்லிவிட்டான். இது நடந்து சில நாட்களுக்கு பிறகு நிஜமாகவே அவனிற்கு அவன் என்னப்பொய் சொன்னானோ அதே மாதிரி அதே இடத்தில் விபத்து நடந்துவிட்டது. பிறகு அவன் எங்களிடம் பட்டப்பாட்டை சொல்லவா வேண்டும்?

Advertisements

4 responses to “கல்லூரி கலாட்டாக்கள்

  1. “என்ன, தொறந்த வீட்டுல ஏதோ புகுந்த மாதிரி, நீப் பாட்டுக்கு உள்ள வரே” என்று கேவலமாக கேட்டு அவனை பயங்கரமாக அவமானப்படுத்தி விட்டார்./

    நல்ல சுவாரஷ்யமான சம்பவம். அந்த நண்பர் இந்த இடுகையை படிக்க வாய்ப்புண்டா

  2. மோகன் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    அந்நண்பனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது(அவன் மலையாளி). நான் இதை ஆங்கிலத்தில் ரீ-மேக் செய்து அதை அவனைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

  3. //அவரிடமே “I am not the decision maker” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.
    //

    அவரை decision எடுக்க வச்சுட்டீங்க.

    அழைப்பிதழ்:
    விழாவுக்கு வந்து அவார்ட் வாங்கிக்கோங்க.

  4. ஏதோ நம்மால முடிஞ்சது. என்ன விழா,எதுக்கு அவார்ட், எங்கேன்னு சொல்லுங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s