சில விஷயங்கள்

இன்று நடந்த இரண்டு விஷயங்களை பற்றியே இவ்விடுகை.

முதல் விஷயம், இன்று காலை பணம் எடுக்க ATM போன போது, என்னுடைய பைக்-ஐ
“No parking” நிறுத்தி விட்டு பணம் எடுத்து விட்டு வண்டி எடுக்க போகும் போது போக்குவரத்து காவலர், ஒரு வாகனத்தோடு வந்து “No Parking” ல் இருந்த வண்டிகளை எடுத்து அவ்வாகனத்தில் ஏற்ற சொன்னார். அவர்கள் முதலில் கை வைத்தது என் வண்டியில் தான். நான் போக்குவரத்து காவலரிடம் “அய்யா தெரியாமல் நிறுத்தி விட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று மன்றாடி அவரை சமாதானப்படுத்தி  எப்படியோ என் வண்டியை எடுத்துக் கொண்டு விவேக் பாஷையில் எஸ்கேப்ப்ப்ப். இத்தனைக்கும் என் வண்டி தமிழ்நாடு பதிவு எண் உடையது. அக்காவலர் வாழ்க. தமிழ்நாட்டை சேர்ந்த வண்டிகள் என்றால் கர்நாடகா போக்குவரத்து காவலர்கள் ஒரு பாசத்துடன் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணம் இப்போது எனக்கு சற்று மாறி உள்ளது. (ஒரு வேலை அக்காவலர் தமிழகத்தை சேர்ந்தவராக கூட இருக்கலாமோ)

இரண்டாவது என்னுடைய பிஎஸ்என்எல்  தொலைபேசி உண்மையிலே தொல்லை பேசியாக தான் இருக்கிறது. அதிலுள்ள  பிரோட்பேண்ட் இணைப்பு திருப்திகரமாக இல்லை என்பதால் அந்த இணைப்பை நீக்க என்ன வழி என்று கேட்டால் அதற்கு ஒரு கடிதம் கமர்சியல் ஆபிசர்-டம் கொடுக்க வேண்டுமாம். அக்கடிதம் எழுதி ஒரு 25 நிமிடம் வரிசையில் நின்று கொடுத்து விட்டு வந்துள்ளேன். இதற்கு சுலபமான வழியே இல்லையா? இதோடு ஏர்டெல் சேவையை ஒப்பிட்டால் ஏர்டெல் சேவை பிரமாதமோ பிரமாதம். பிஎஸ்என்எல் மாற வாய்ப்பே இல்லையா?

Advertisements

2 responses to “சில விஷயங்கள்

  1. //இதோடு ஏர்டெல் சேவையை ஒப்பிட்டால் ஏர்டெல் சேவை பிரமாதமோ பிரமாதம். பிஎஸ்என்எல் மாற வாய்ப்பே இல்லையா?//

    நீங்கள் கூறுவது மிக சரி.

    நான் முன்பு பிஎஸ்என்எல் வைத்து இருந்தேன், அதில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் நடை முறைகள். எல்லாவற்றிக்கும் அங்கே செல்ல வேண்டும். 4 வருடம் முன்பு இவர்கள் தொல்லை தாங்காமல் ஏர்டெல் மாறிவிட்டேன். இங்கு எனக்கு பிரச்சனையே இல்லை சமீபத்தில் கூட என் விலாசம் மாற்றினேன் அதற்க்கு ஒரு மின்னஞ்சலிலேயே முடித்து விட்டேன், இதே பிஎஸ்என்எல் என்றால் கொஞ்சம் நினைத்து பாருங்கள். வாடிக்கையாளருக்கு ஏற்றபடி எளிமையான முறைகளை வைத்து கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே பிஎஸ்என்எல் வளர வாய்ப்பு.

  2. கிரி, பிஎஸ்என்எல் வைத்து இருக்கும் எல்லாருக்கும் இம்மாதிரியான அனுபவம் இருக்குமென்றே நினைக்கிறேன். அக்காலத்தில் வேறு வழி இல்லாததால் அனைவரும் பொறுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது பல்வேறு வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் பொங்கி எழுந்து விடுகிறார்கள் :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s