கன்னாப்பின்னா செய்திகள்

இந்த வாரச் செய்திகள்

நகைச்சுவை(அல்லது அதிர்ச்சி) செய்திகள்:

சென்ற வாரம் (24/ஆகஸ்ட்) கலைஞர் தொலைக்காட்சியில் “டாப் 10 படங்களில்” இரண்டாமிடத்தைப் பிடித்த படம் எதுவென்றுத் தெரியுமா? உளியின் ஓசை (மக்களே அழாதீங்க, என்ன பண்றது?)

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பேன்: சொன்னது யாரு? சுப்பிரமணியசாமி! (அதிர்ச்சியடையாதீங்க)

ஏக்கச் செய்திகள்

வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர் (இப்படி சொன்னாலாவது யாராவது என்னுடைய கட்சிப் பற்றி பேசுங்களேன். இல்லை திட்டியாவது ஒரு அறிக்கை விடுங்களேன்)

குழப்பச் செய்திகள்

பாமக இல்லாததால் திமுக பலவீனமடையவில்லை: கருணாநிதி – யாஹூசெய்திகள்

பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கருணாநிதி – தட்ஸ்தமிழ் செய்திகள்

சாதா செய்திகள்

கோவை அருகே நடைபெற்ற டைரக்டர் சீமான் கூட்டத்தில் சோடாபாட்டில் வீச்சு (இப்போ நான் என்ன செய்ய என்றுக் கேட்கிறார் சீமான்)

ஸ்பெஸல் சாதா செய்திகள்

ரங்கசாமி மீது ஆளுநரிடம் அமைச்சர்கள் புகார்

கவிழும் கப்பல்: கம்யூனிஸ்டுகளுக்கு வாசன் பதிலடி (அப்போ நீங்க)

நம்பினால் நம்புங்கள் செய்திகள்

இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை குறைகிறது உலக வங்கி தகவல் (ஆனால் பரம ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு)

உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்! – தட்ஸ்தமிழ்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் (கர்நாடகாவில் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிந்தப் பின்பு)

காங்கிரஸ் தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: கே.வி.தங்கபாலு! (நோ கமெண்ட்ஸ்)

கற்பனைச் செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக வைகோவைத் தேர்ந்தெடுத்தார் ஒபாமா

திரையரங்கு உரிமையாளர்கள் புதுத்தீர்மானம்: படம் பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் டிக்கெட் பணம் திருப்பித்தரப்படும்.

பின் குறிப்பு:
()யில் உள்ளவை என்னுடைய எண்ணங்கள்/கற்பனை.

Advertisements

22 responses to “கன்னாப்பின்னா செய்திகள்

 1. //பின் குறிப்பு:
  ()யில் உள்ளவை என்னுடைய எண்ணங்கள்/கற்பனை.///

  உங்கள் எண்ணங்கள், அருமை..
  சிரிப்பை வரவழைத்தது..

 2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
  அய்யா, தங்கள் பெயரென்ன? உங்களை எப்படி கூப்பிடுவது? :-/

 3. உருபுடாததுன்னும் கூப்பிடலாம்..
  அணிமானும் கூப்பிடலாம்..
  பெயரில் என்னங்க இருக்கு..
  நண்பரேன்னு கூப்புடுங்க.. அது போதும்

 4. ///திரையரங்கு உரிமையாளர்கள் புதுத்தீர்மானம்: படம் பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் டிக்கெட் பணம் திருப்பித்தரப்படும்.///

  அப்போ இண்டர்நெட்லஉம், டிவிடி ளையும் பாத்தவங்களுக்கு ஒண்ணுமே கிடையாதா??

 5. தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பேன்: சொன்னது யாரு? சுப்பிரமணியசாமி! (அதிர்ச்சியடையாதீங்க)

  (அதிர்ச்சியடையாதீங்க) சொல்லிபுட்டு.. இந்த மாதிரி அதிர்ச்சியான செய்திகள் போடலாமா??

 6. குந்தவை, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 7. //உருபுடாததுன்னும் கூப்பிடலாம்..
  //அணிமானும் கூப்பிடலாம்..
  //பெயரில் என்னங்க இருக்கு..
  //நண்பரேன்னு கூப்புடுங்க.. அது போதும்

  சரி நண்பரே!

 8. ///திரையரங்கு உரிமையாளர்கள் புதுத்தீர்மானம்: படம் பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் டிக்கெட் பணம் திருப்பித்தரப்படும்.///

  //அப்போ இண்டர்நெட்லஉம், டிவிடி ளையும் பாத்தவங்களுக்கு ஒண்ணுமே கிடையாதா??
  டிவிடி பார்த்தவங்க, கடையில (அல்லது ஃபிளாட்பார்ம்ல) டிவிடி திருப்பிக் கொடுத்து வேற வாங்கிக்கலாம். இண்டர்நெட்ல பார்த்தவங்க வேற வீடியோவை கிளிக்கிப் பாத்துக்க வேண்டியதுதான்.

 9. ////டிவிடி பார்த்தவங்க, கடையில (அல்லது ஃபிளாட்பார்ம்ல) டிவிடி திருப்பிக் கொடுத்து வேற வாங்கிக்கலாம். இண்டர்நெட்ல பார்த்தவங்க வேற வீடியோவை கிளிக்கிப் பாத்துக்க வேண்டியதுதான்.///

  அப்படியா…
  இந்த விஷயம் நல்லாருக்கே …

 10. ///கோவை அருகே நடைபெற்ற டைரக்டர் சீமான் கூட்டத்தில் சோடாபாட்டில் வீச்சு (இப்போ நான் என்ன செய்ய என்றுக் கேட்கிறார் சீமான்)///

  டாப்பு டக்கர் …

 11. சென்ற வாரம் (24/ஆகஸ்ட்) கலைஞர் தொலைக்காட்சியில் “டாப் 10 படங்களில்” இரண்டாமிடத்தைப் பிடித்த படம் எதுவென்றுத் தெரியுமா? உளியின் ஓசை (மக்களே அழாதீங்க, என்ன பண்றது?)

  முதல் இடத்தில் வர வேண்டிய அருமையான காவியம்..
  அதை இரண்டாம் இடத்தில் வெய்த்ததற்கு அலுது தான் ஆக்க வேண்டும்..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்

 12. //(அதிர்ச்சியடையாதீங்க) சொல்லிபுட்டு.. இந்த மாதிரி அதிர்ச்சியான செய்திகள் போடலாமா??

  நண்பரே, இடுக்கண் வருங்கால் நகுக!

 13. //முதல் இடத்தில் வர வேண்டிய அருமையான காவியம்..
  //அதை இரண்டாம் இடத்தில் வெய்த்ததற்கு அலுது தான் ஆக்க வேண்டும்..
  //அவ்வ்வ்வ்வ்வ்வ்
  கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!

 14. ஹா ஹா ஹா நல்ல காமெடி மற்றும் நக்கலான உங்கள் கருத்து 🙂

  அதுவும் விஜய டி ராஜேந்தர் டாப்பு :-)))

 15. கிரி, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ஏதோ நம்மால முடிஞ்சது. எனது பதிவிற்கு தொடர்ந்து வந்து ஆதரவு தாங்க.

 16. உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன்..
  கலந்து கொள்ளவும்
  விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்..

 17. ///உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன்..
  கலந்து கொள்ளவும்
  விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்..///

  கண்டிப்பா கலந்து கொள்ளுங்கள் நண்பரே

 18. “திரையரங்கு உரிமையாளர்கள் புதுத்தீர்மானம்: படம் பார்த்தவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் டிக்கெட் பணம் திருப்பித்தரப்படும்.”
  இது நல்லா இருக்கே.

 19. கட்டவண்டி(என்ன புனைபெயரப்பா இது), இந்த மாதிரி இருந்தா நல்லாதான் இருக்கும். தங்கள் வருக்கைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

 20. நண்பா, கண்டிப்பா கலந்துகறம்பா!

 21. Pingback: கன்னாபின்னாச் செய்திகள் 3 « மோகனின் எண்ணங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s