A for Apple – தொடர்பதிவு

நண்பர் அணிமா என்னை இத்தொடர் பதிவில் என்னை சேர்த்து(மாட்டி) விட்டார்.

A – axxo-movies
இத்தளத்திலிருந்து தான் நான் அடுத்து என்ன படம்(ஹாலிவுட்) தரவிறக்கம் செய்யவேண்டுமென்று முடிவு செய்வது. பிட் டார்ரண்ட் தரவிறக்கம் செய்ய நம்பகமான தளம்(ஆள்).

C- Cinema Express
இந்த தளத்தில்தான் நாட்டு நடப்பு, முக்கியமான செய்திகளை தெரிந்துக்கொள்வேன்.

D – தினமணி
செய்திகள்

E – Gadget news
சமீபத்திய சாதனங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ள

F- Future bazaar
பொருட்களுக்கு ஏதானும் சலுகை இருந்தால், இதில் ஆர்டர் செய்வேன்.

G – Gmail
யாராவது நம்மை நினைத்து ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி இருக்கிறார்களா என்றுப் பார்க்க

Google Labs
கூகுள் ஆய்வகத்தில் இப்போது என்ன புதிதாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுப்பார்க்க

H – HDFC Bank என்னுடைய வங்கிக் கணக்கில் ஏதாவது பணம் இருக்கிறதா என்றுப் பார்க்க

I – ISO Hunt
இத்தளத்திலிருந்து பிட் டார்ரண்ட் கோப்பு கண்டுபிடித்து, அதனை தரவிறக்கம் செய்து, ஏதாவது ஒரு பிட் டார்ரண்ட் கிளையண்ட் மூலமாக படத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

K – KPN Travels
திருவிழா நேரத்தில் ஊருக்கு போக முன்பதிவு செய்ய நாடும் தளம்.(மத்த நேரத்தில் எல்லாம் நம்ம தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தான்)

Kernel
சமீபத்திய லினக்ஸ் கெர்னல் தரவிறக்கம் செய்ய

L – Linked In
புரொஃபஸனல் நெட்வொர்க், ஆர்குட் போலதான், ஆனா ஒன்லி ஃபார் ஆபிஸர்கள்ஸ்.

M – Mailinator
ஈமெயில் ஐடி கொடுத்தால் மட்டும்தான் வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும் தளங்களிற்கு தற்காலிகமான ஈ-மெயில் ஐடி உருவாக்கிக் கொள்ளலாம்.

N – NDTV
செய்திகள்

O – Open Subtitles
தரவிறக்கம் செய்யப்பட்ட ஆங்கில, வேற்றுமொழி படங்களுக்கு சப்டைட்டில் நீங்கள் தனியாக பதிவிறக்கம் செய்து, படம் பார்க்கும் போது டிவிடி மாதிரி பார்க்கலாம்.

Rajini

என்னைப்போன்ற ரஜினி ரசிகர்களுக்கான வலைப்பதிவு

P – PVR Cinemas
பிவிஆர் திரையரங்குகளில் ஓடும் படங்களிற்கு முன்பதிவு செய்ய.

R – Rajini fans
இன்னொரு ரஜினி ரசிகர்களுக்கான தளம்

Rediff
செய்திகள், வர்த்தகம், சினிமா, விளையாட்டுப்பற்றி தெரிந்துக்கொள்ள

S – Speed Test
பிராட்பேண்ட்(யாரோ இதை அகலப்பட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்) வேகத்தை பரிசோதிக்க

T – Tamilish
தமிழ் பதிவுலகத்தில் என்ன புதுசு என்று தெரிந்துக்கொள்ள மற்றும் நமது படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.

Tamibeat
தமிழ் mp3 பாடலகளை தரவிறக்கம் செய்ய

V – Video Lan
வீ எல் சி – ஓபன் சோர்ஸ் வீடியோ/ஆடீயோ பிளேயர்.

W- WordPress
இங்கேதான் நான் என்னுடைய வலைப்பதிவு வீடு வைத்திருக்கிறேன்.

2Wire
பிராட்பேண்ட் வேகத்தை பரிசோதிக்க

Y – Yahoo Mail
யாஹூலயும் ஒரு இலவச ஈமெயில் அக்கவுண்ட் வச்சிருக்கோம்ல


இத்தொடர் பதிவின் ஆரம்பம்: http://microblog.ravidreams.net/a-for-apple/

Rule:The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites
Tag 3 People.

இப்பொழுது நான் மூன்று பேரை இத்தொடர் பதிவிற்கு அழைக்க வேண்டும்.

பின்னூட்டமளித்து ஊக்கம் கொடுத்த மூத்த பதிவரான கிரி
கூடுதுறை சுந்தர்
எனக்கு கூட ஒரு அவார்ட் கொடுத்த குந்தவை அக்கா

மக்களே, ஆரம்பிங்க உங்க தொடர் பதிவை

Advertisements

62 responses to “A for Apple – தொடர்பதிவு

 1. மோகன் நான் இதில் கலந்து கொள்வது சிரமம் இல்லை, ஆனால் மூன்று பேரை மாட்டி விடுவது தான் சிரமம்.

  //பின்னூட்டமளித்து ஊக்கம் கொடுத்த மூத்த பதிவரான கிரி//

  நான் மூத்த பதிவர் எல்லாம் கிடையாதுங்க, ஐந்து மாதம் தான் ஆகிறது.

 2. எனக்கு நீங்கள் மூத்த பதிவர் தானே. சரி சரி, சூப்பர் ஹிட் பதிவாளர் என்று வைத்துக் கொள்வோம். தொடர் பதிவு போட்ருங்கண்ணா!

  //மோகன் நான் இதில் கலந்து கொள்வது சிரமம் இல்லை, ஆனால் மூன்று பேரை மாட்டி விடுவது தான் சிரமம்.
  ஹாஹா, நல்லவங்க யாராவது கிடைப்பாங்க!. யாருப்பா இந்த C++ ஸ்டைல் கமெண்டை பதிவுக்கு உபயோகப்படுத்தியது?

 3. //ஆனால் மூன்று பேரை மாட்டி விடுவது தான் சிரமம்.//

  ஏம்பா நான் மூன்று பேரை கண்டுபிப்பதே பெரிய வேலை என்று ஒதுங்க பார்த்தால் நீங்க, வேறு மூன்று பிடிக்க சொல்லுகிறீர்கள். இப்படி எல்லாம் அநியாயத்துக்கு வேலை வாங்கறது தப்பு. (ஏதாவது bachelor ஐ பிடிங்க தம்பி).

 4. நல்ல புதிய தளங்கள்..
  அறிமுகபடுதியதற்கு நன்றி..

 5. பரவாயில்லியே..
  நீங்கள் அழைத்த மூவரும் கிரேட் தான் போங்கள்..
  வாழ்த்துக்கள் அவர்களுக்கு உங்கள் வாயிலாக..

 6. அப்போ நீங்களும் தலைவர் விசிறி தான????
  சேம் சேம் …

 7. //நல்ல புதிய தளங்கள்..
  அறிமுகபடுதியதற்கு நன்றி..
  நன்றி நண்பரே, மெய்யாலுமா?

 8. //பரவாயில்லியே..
  நீங்கள் அழைத்த மூவரும் கிரேட் தான் போங்கள்..
  வாழ்த்துக்கள் அவர்களுக்கு உங்கள் வாயிலாக..
  கிரேட்-ஒ-கிரேட்

 9. ///யாஹூலயும் ஒரு இலவச ஈமெயில் அக்கவுண்ட் வச்சிருக்கோம்ல///

  அதுல மட்டும் தானா??
  இல்ல இன்னும் இருக்கா???
  என்ன குதுகளிப்பு பாரு..

 10. //அப்போ நீங்களும் தலைவர் விசிறி தான????
  ஓஹோ, நீங்களும் தலைவர் ரசிகனா! சூப்பர்!

 11. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  //நல்ல புதிய தளங்கள்..
  அறிமுகபடுதியதற்கு நன்றி..
  நன்றி நண்பரே, மெய்யாலுமா?////

  என்ன இது கேள்வி..
  நான் சொன்ன எதையுமே நம்ப மாட்டீங்களா?
  அப்போ அப்போ உண்மையும் பேசுவேன்பா..
  நம்புங்கப்பு

 12. //அப்போ அப்போ உண்மையும் பேசுவேன்பா..
  //நம்புங்கப்பு
  நம்பிட்டேன்.

 13. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  //அப்போ அப்போ உண்மையும் பேசுவேன்பா..
  //நம்புங்கப்பு
  நம்பிட்டேன்.////

  நம்பிடீங்களா??

  ( இப்படியே பிட்ட போட்டு நல்லவன் தான் அப்படிங்கற இமேஜ் விட்டு வரக்கூடாது ))

  இன்னுமா இந்த தமிழகம் என்னை நம்பிக்கிட்டு இருக்கு..???

 14. /////#
  Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  //அப்போ நீங்களும் தலைவர் விசிறி தான????
  ஓஹோ, நீங்களும் தலைவர் ரசிகனா! சூப்பர்!/////

  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்…

  தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்/…
  /

 15. சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
  மீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..

 16. //சரியான, மற்றும் நேரத்திற்கு ரிப்ளை வராததால், பின்னூட்ட ஆட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்..
  மீண்டும் மறு பதில் வந்ததும் வருகிறேன்..

  ஆஹா, என்ன ஒரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஸ்பீடு (பின்னூட்டம் போடுரதுல)! நான் கொஞ்சம் சுலோங்க!

 17. //( இப்படியே பிட்ட போட்டு நல்லவன் தான் அப்படிங்கற இமேஜ் விட்டு வரக்கூடாது ))
  நீங்க இப்படியே சொல்லிகினு இருந்தா, நீங்க ரெம்ப நல்லவருன்னு நெனச்சிடுவேன் ஆமா

 18. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  ஹா, என்ன ஒரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஸ்பீடு (பின்னூட்டம் போடுரதுல)! நான் கொஞ்சம் சுலோங்க!//

  இந்த பதில் எல்லாம் ஆட்டையில சேராது..

  வேற எதுனா யோசிச்சு சொல்லுங்க..
  ( உதாரணத்திற்கு.. நான் வேலையில ரொம்ப பிஸி, என்னோட இன்டர்நெட் வேலை செய்யல, பொட்டி கட்டி ஊட்டுக்கு வந்துட்டேன், ஆப்பிசர் தொல்ல தாங்க முடில…)

 19. //வந்தாச்சு.. வந்தாச்சு
  வாங்க, வாங்க!

 20. /////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  நீங்க இப்படியே சொல்லிகினு இருந்தா, நீங்க ரெம்ப நல்லவருன்னு நெனச்சிடுவேன் ஆமா//////

  அப்படி நினைக்குறதுக்கு தானே இப்படி எல்லாம் பிட்ட போடுறோம்..

 21. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 1, 2008

  //வந்தாச்சு.. வந்தாச்சு
  வாங்க, வாங்க!/////

  வாங்கறதுக்கு நான் ரெடி…
  குடுக்குறதுக்கு நீங்க ரெடியா??
  ( நான் ஒதைய சொல்லப்பா… நீங்க வேற எதுனா நினைச்சுக்குட்டு வந்து அடிச்சு மேஞ்சுராதீங்க)

 22. //வேற எதுனா யோசிச்சு சொல்லுங்க..
  ( உதாரணத்திற்கு.. நான் வேலையில ரொம்ப பிஸி, என்னோட இன்டர்நெட் வேலை செய்யல, பொட்டி கட்டி ஊட்டுக்கு வந்துட்டேன், ஆப்பிசர் தொல்ல தாங்க முடில…)//
  இம்புட்டு ஆப்ஸன் தரீங்களே! இப்போதாங்க வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தும் வேலை செய்யணும்னுதான் மடிப்பொட்டியும் கொடுத்துடுறாங்களே! வேலையும் செய்யணும்ல!‌:)

 23. ////இப்போதாங்க வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தும் வேலை செய்யணும்னுதான் மடிப்பொட்டியும் கொடுத்துடுறாங்களே! வேலையும் செய்யணும்ல!‌:)////

  உண்மைய சொல்லுங்கப்பு…
  இந்த சமாளிப்பிக்கேசன் எல்லாம் வேணா…

 24. //வாங்கறதுக்கு நான் ரெடி…
  குடுக்குறதுக்கு நீங்க ரெடியா??
  ( நான் ஒதைய சொல்லப்பா… நீங்க வேற எதுனா நினைச்சுக்குட்டு வந்து அடிச்சு மேஞ்சுராதீங்க)//
  ஒதைதான் கைவசம் நெறைய இருக்கு. (மத்தவங்ககிட்ட வாங்கினதுதான்).

 25. //உண்மைய சொல்லுங்கப்பு…
  இந்த சமாளிப்பிக்கேசன் எல்லாம் வேணா…//
  உண்மைதாங்கோ! சொன்னா நம்பணும்!

 26. நண்பரே, நேற்று இரவு, இணையத்தொடர்பில் சிக்கல். அதனால் சரியான சமயத்தில் உங்களுடைய பின்னூட்டங்களிற்கு பின்னூட்டங்கள் போட முடியவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறேன்.

 27. நல்ல தளங்களின் தொகுப்பு நண்பரே.
  நான் axxO வின் Divx மட்டுமே டவுண்லோடு செய்றமாதிரி Fan ஆகிட்டேன்.

 28. //உருப்புடாதது_அணிமா..
  வேற எதுனா யோசிச்சு சொல்லுங்க..
  ( உதாரணத்திற்கு.. நான் வேலையில ரொம்ப பிஸி, என்னோட இன்டர்நெட் வேலை செய்யல, பொட்டி கட்டி ஊட்டுக்கு வந்துட்டேன், ஆப்பிசர் தொல்ல தாங்க முடில…) /////

  ஆஹா. இந்த ஐடியாலாம் எனக்கு தெரியவே இல்லையே!!!!!!

  கண்டனம் தெரிவித்து அதற்கு சமாளிப்புகேஷனும் குடுக்கறதுக்கு என் கண்டணங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  ( அப்பாடா. நமக்கும் ஒரு ரீசன் கிட்ச்சாச்சு!!!)

 29. சுபாஷ், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
  //நல்ல தளங்களின் தொகுப்பு நண்பரே.//
  நெசாமாவா?

  //நான் axxO வின் Divx மட்டுமே டவுண்லோடு செய்றமாதிரி Fan ஆகிட்டேன்.//
  உண்மை, axxo நம்பகமான படங்களிற்கு, நான் நம்புவது axxo மட்டுமே!

 30. ////( உதாரணத்திற்கு.. நான் வேலையில ரொம்ப பிஸி, என்னோட இன்டர்நெட் வேலை செய்யல, பொட்டி கட்டி ஊட்டுக்கு வந்துட்டேன், ஆப்பிசர் தொல்ல தாங்க முடில…)////
  //ஆஹா. இந்த ஐடியாலாம் எனக்கு தெரியவே இல்லையே!!!!!!//

  அவர் நம்மகிட்டயே இவ்ளோ எஸ்கேப் ஐடியா வச்சிருக்கார்னா, அவரோட ஆபிசர்கிட்ட சொல்றதுக்கு எம்புட்டு ஐடியா வச்சிருப்பாரு?

 31. ////நல்ல தளங்களின் தொகுப்பு நண்பரே.//
  நெசாமாவா?//
  என்ன இப்படி கேக்குறீங்க?
  எல்லாரும் இப்படித்தானே சொல்றாங்க?
  ஹாஹா தப்பா நினைக்க வெணாம்.
  நிஜமாகவே நல்ல தொகுப்பு.

 32. //உண்மை, axxo நம்பகமான படங்களிற்கு, நான் நம்புவது axxo மட்டுமே!//

  போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். lol

 33. //அவர் நம்மகிட்டயே இவ்ளோ எஸ்கேப் ஐடியா வச்சிருக்கார்னா, அவரோட ஆபிசர்கிட்ட சொல்றதுக்கு எம்புட்டு ஐடியா வச்சிருப்பாரு?//

  சரியாதா சொல்லிருக்கீங்க. எப்படியாவது நாமளும் இவர்கிட்டருந்து கத்துக்கணும்

 34. //உண்மை, axxo நம்பகமான படங்களிற்கு, நான் நம்புவது axxo மட்டுமே!//
  அவசரத்தில் தவறாக டைப் அடித்துவிட்டேன்
  உண்மை, நம்பகமான படங்களிற்கு, நான் நம்புவது axxo மட்டுமே!

 35. //போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். lol//
  உண்மை, நான் சிலப்படங்களை பிட்டார்ரெண்ட் மூலமாக பதிவிறக்கம் செய்து, பின்னர் அவற்றை எந்த பிளேயரிலும் ஓபன் செய்ய முடியாமல், அவற்றை டெலிட் செய்து விட்டேன்.

 36. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  அவர் நம்மகிட்டயே இவ்ளோ எஸ்கேப் ஐடியா வச்சிருக்கார்னா, அவரோட ஆபிசர்கிட்ட சொல்றதுக்கு எம்புட்டு ஐடியா வச்சிருப்பாரு?//////

  இங்கு ஜடியாக்கள் கிடைக்கும்..

  முகவரி :

  நைஜீரியா குறுக்கு சந்து,
  நைஜீரியா ..

 37. ////////சுபாஷ் on செப்டம்பர் 2, 2008

  ஆஹா. இந்த ஐடியாலாம் எனக்கு தெரியவே இல்லையே!!!!!!

  கண்டனம் தெரிவித்து அதற்கு சமாளிப்புகேஷனும் குடுக்கறதுக்கு என் கண்டணங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  ( அப்பாடா. நமக்கும் ஒரு ரீசன் கிட்ச்சாச்சு!!!)///////////

  ரீசன் கிடைச்சாச்சு இல்ல..
  பட்டைய கிளப்புங்க

 38. ///////சுபாஷ் on செப்டம்பர் 2, 2008

  //அவர் நம்மகிட்டயே இவ்ளோ எஸ்கேப் ஐடியா வச்சிருக்கார்னா, அவரோட ஆபிசர்கிட்ட சொல்றதுக்கு எம்புட்டு ஐடியா வச்சிருப்பாரு?//

  சரியாதா சொல்லிருக்கீங்க. எப்படியாவது நாமளும் இவர்கிட்டருந்து கத்துக்கணும்//////

  பள்ளிக்கூடம் போகலாமா??

  அதுக்கு புத்தகத்த வாங்கலாமா??

 39. வந்துட்டாருய்யா! நண்பரே, விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் இடுகை போட்டு இருக்கிறேன். அத்தையும் பார்த்து வைங்க. யப்பா, எப்படியெல்லாம் விளம்பரம் பண்ணவேண்டியிருக்குது.

 40. //நைஜீரியா குறுக்கு சந்து,
  நைஜீரியா ..//

  அங்க எல்லாமே குறுக்குச் சந்து தானே, எதுனு குறிப்பாச் சொல்லுங்க பாசு

 41. //பள்ளிக்கூடம் போகலாமா??

  அதுக்கு புத்தகத்த வாங்கலாமா??//

  எதுக்கு புத்தகம்?

 42. ஃஃநம்பகமான படங்களிற்கு, நான் நம்புவது axxo மட்டுமே!ஃஃ

  விளம்பரங்களை நல்லா பாத்து கெட்டுபோய்ட்டீங்க !!

 43. ஃஃஃபள்ளிக்கூடம் போகலாமா??

  அதுக்கு புத்தகத்த வாங்கலாமா??ஃஃஃ

  நாங்க ஓசி லதா படிப்போம்ம்ம்ம்ம்ம்

 44. //விளம்பரங்களை நல்லா பாத்து கெட்டுபோய்ட்டீங்க !!//
  நண்பர் அணிமா ஸ்டைலில் ஹிஹி

 45. //நாங்க ஓசி லதா படிப்போம்ம்ம்ம்ம்ம்//
  ஹலோ யாரந்த லதா?

 46. அட.. பரவால்லயே… நான் பழமபேசிய கூப்புட, அவர் தேடிப் புடிச்சு ஒரு உருப்புடாத அணிமாவ (இது என்ன பேருன்னு புரியவே மாட்டேங்குது… பொருள் விளங்கா உருண்ட ரொம்ப புடிக்குமோ?) இழுத்து விட, அதுல நீங்க மாட்ட, இப்போ கிரிக்கு ஆப்பு… சிங்கப்பூர் சக்கரம் மறுபடி சிங்கப்பூர்ல…

  பல தளங்கள் நான் கேள்விப்படாதது… நன்றி…

 47. மஹேஷ், தங்கள் முதல் வருகைக்கிற்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
  கிரிக்கு ஆப்பு வைக்க முடியுமா?
  //பல தளங்கள் நான் கேள்விப்படாதது… நன்றி…//
  அவை உங்களுக்கு எவ்விதத்திலாவது உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். என் பதிவை அவ்வபொழுது வந்துப் பாருங்கள்.

 48. ஃஃ//நாங்க ஓசி லதா படிப்போம்ம்ம்ம்ம்ம்//
  ஹலோ யாரந்த லதா?ஃஃ

  ஆஹாஹாஹாஹா
  இந்த கேள்வியே உங்கள காட்டிக்குடுத்துட்டுது.
  ( நம்மாளுதானா நீங்க!!! ஹிஹி)

  அது ஓஓஓஓசிசியிலதான் னு வரும்.
  😛

 49. 50டீடீடீடீடீடீடீடீடீ
  😛 🙂

 50. //நம்மாளுதானா நீங்க!!! ஹிஹி//
  என்னது, நம்மாதானானு என்னையும் சேக்கறீங்க!

 51. //50டீடீடீடீடீடீடீடீடீ//
  அணிமாக்கு செஞ்சுரி, எனக்கு 50டீடீடீடீடீடீடீடீடீ. தொடரட்டும் உங்கள் சேவை

 52. //50டீடீடீடீடீடீடீடீடீ//
  என்னது 90டீடீ கட்டிங் போட்ட மாதிரி இருக்கு

 53. //என்னது 90டீடீ கட்டிங் போட்ட மாதிரி இருக்கு//

  🙂

 54. //அணிமாக்கு செஞ்சுரி, எனக்கு 50டீடீடீடீடீடீடீடீடீ. தொடரட்டும் உங்கள் சேவை//

  ஏதோ நம்மளாள முடிஞ்சது!!!!!!
  😛

 55. நன்றி தமிழ்நெஞ்சம். 🙂

 56. //யாராவது நம்மை நினைத்து ஃபார்வேர்ட் மெயில் அனுப்பி இருக்கிறார்களா என்றுப் பார்க்க//
  சூப்பர் அப்பு

 57. அடலேறு தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  அவ்வப்பொழுது என் வலைப்பதிவை எட்டிப்பாருங்கள்.

 58. வலைபக்கத்த எட்டி பாத்தா போதுமா பின்னுட்ட்டம் போட

  வேண்டாமா ??

 59. //வலைபக்கத்த எட்டி பாத்தா போதுமா பின்னுட்ட்டம் போட

  வேண்டாமா ??//

  அடலேறு நன்றி. பதிவை எட்டியும் பாக்கணும், பின்னூட்டமும் போடணும். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s