கேடி நம்பர் 1

விஜய் தொலைக்காட்சி அதனுடைய ஜோ(கே)டி நம்பர் 1க்கு நிறைய பார்வையாளர்களை ஆயத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது. முன்னர் சிம்பு-ப்ரித்விராஜ் சண்டையை (அது உண்மையிலேயே சண்டைதானா?) வைத்து கொஞ்சம் பரபரப்பு உண்டாக்கியது. அச்சண்டையை பார்த்த தொலைக்காட்சி நேயர்களுக்கும் (விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தான்) இது ஒரு விளம்பரமே என்று தெரியும்.(நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை பார்ப்பதில்லை)

அடுத்த தேவையே இல்லாத பரபரப்பு விஷயம், விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு உண்டாக்கி கொண்டுள்ளது. மகேந்திரனை வைத்து இப்போது பரபரப்பு உருவாக்கிக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சி சில நிகழ்ச்சிகள் மூலம் நல்ல பெயர் எடுத்திருந்தாலும் இம்மாதிரி கேவலமாக விளம்பரம் செய்து அப்பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள்.

இதே போல் தான் கனா காணும் காலங்கள் (சீசன் 2?) அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு விஜய் தொலைக்காட்சி ஊர் ஊராகச் சென்று நேர்முக தேர்வுகள் வைத்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதில் நான் பார்த்த ஒரு விடயம்: தேர்வு குழுவினரால் நீக்கப்பட்ட பெண் ஒருவர் மேடையில் அழுவார் “சார் நான் நல்ல தான் பண்ணேன். என்னை என் ரிஜெக்ட் பண்ணிங்க”. அதற்கு அப்புறம் அப்பெண்ணை அதே தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இதே மாதிரி இன்னொரு கேள்விக்குரிய விடயம் ஒரு சிறுவனை  தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதற்குப்பின் அச்சிறுவனின் பெற்றோர் அவனை அந்த தேர்விலிருந்து விலக சொல்லி விட்டனர். என்ன நடந்ததோ? விஜய் தொலைக்காட்சிக்கே தெரியும்.

விஜய் தொலைக்காட்சி தனது மட்டமான விளம்பர உத்தி மூலம் பெற்றிருக்கும் பெயரை இழந்து விடுமோ?

Advertisements

38 responses to “கேடி நம்பர் 1

 1. நானும் பாக்குறதில்லை … மகேந்திரனை வச்சி என்ன பண்ணினாங்க

 2. சூர்யா, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் இக்கொடுமைளை விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 க்கு விளம்பரம் செய்யும்போது பார்த்தேன். மகேந்திரனால் இப்போட்டியில் மேற்கொண்டு ஆட முடியவில்லையாம். என்ன நடந்ததோ?

 3. உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் TV என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம்.அதில் வருவது எல்லாம் உண்மை கிடையாது அதை பாருங்கள் பார்த்துவிட்டு போங்கள்.அப்படி அவர்கள் செய்வதை எல்லாம் கணக்கில் எடுக்கவேண்டும் என்றால் பல விசயத்தை சொல்லலாம் .உதாரணம் ஒன்னுசொல்லரேன் இந்த “கலக்க ” “அசத்த”போறதுயாருன்னு வர நிகழ்ச்சியில் வர கெஸ்டு எல்லாம் அவங்களுக்கு இருக்கற வேலைஎல்லாம் விட்டுவிட்டு இதத்தான் பார்போம்ன்னு சொல்லரத நம்பமுடியுதா.இன்னும் ஒரு சூப்பர் காமடி டெல்லி கனேஷ் இருக்காருல்ல அவர் கலைஞர் டி வி எல்லாமே சிரிப்புத்தான் நடுவர். அவர் கலக்க போறதுயாருல வந்து இததவிர வேற காமடி புரகராம் பார்ப்பதுகிடையாது சொல்லறார்.அதுசெரி விஜய் மேல எதுக்கு இவ்வளோ காண்டு.அப்ப சிம்ரன் ஆதிராஜ் சன் டிவியில போட்டது என்ன .விஜய் டிவியில சிம்பு,பப்லு சண்டை பிரபலம் ஆன உடனே அவனுவோ அங்க சண்டபோடவச்சானுவோ.விஜய் டிவி செய்யரத அப்படி காபி அடிக்காரானுவோ சன் டிவில அதசொல்லாம வந்துடாருடா வெண்ண.உங்களுக்கெள்ளாம் அழுதுவடியர சீரியல்தான் சரி.

 4. மணி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஏன் ரொம்ப கோவப்படுகிறீர்கள்? இப்போது நான் விஜய் தொலைக்காட்சியை தாழ்த்தி, மற்ற எந்த தொலைக்காட்சியையும் உயர்த்த வில்லையே. ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொரு விதத்தில் இப்படித்தான் உள்ளனர். நான் விஜய் தொலைக்காட்சியின் இவ்விளம்பர பாணியைத்தான் குறைச் சொல்லி உள்ளேன்.

  //விஜய் மேல எதுக்கு இவ்வளோ காண்டு//
  விஜய் தொலைக்காட்சியின் மீது எனக்கு எவ்வித காண்டும் இல்லை. எனது இன்னொரு இடுகையில் எல்லாத் தொலைக்காட்சியையும் பற்றித்தான் கிண்டல் செய்துள்ளேன். http://pathivu.wordpress.com/2008/09/02/special/

  //ஒரு சூப்பர் காமடி டெல்லி கனேஷ் இருக்காருல்ல அவர் கலைஞர் டி வி எல்லாமே சிரிப்புத்தான் நடுவர். அவர் கலக்க போறதுயாருல வந்து இததவிர வேற காமடி புரகராம் பார்ப்பதுகிடையாது சொல்லறார்.//
  ஆஹா, இதை சொல்லிட்டு அவர் எப்படி இன்னும் கலைஞர் தொலைக்காட்சியில் காலம் தள்ளுரார்? ஒருவேளை எல்லாத் தொலைக்காட்சியும் ஒரு ஒப்பந்தம் வைத்துள்ளதோ. நாம, இப்படி பேசிக்கலாம். ஆனால் ஒன்றும் கண்டுக்க வேண்டாம் என்று.

  //அப்ப சிம்ரன் ஆதிராஜ் சன் டிவியில போட்டது என்ன .விஜய் டிவியில சிம்பு,பப்லு சண்டை பிரபலம் ஆன உடனே அவனுவோ அங்க சண்டபோடவச்சானுவோ.விஜய் டிவி செய்யரத அப்படி காபி அடிக்காரானுவோ சன் டிவில அதசொல்லாம//
  இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. காபி அடிப்பதில் சன் தொலைக்காட்சி இப்போது முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. சொல்லிட்டீங்கள்ள, இதைப்பற்றியும் ஒரு இடுகை போட்டுவிட வேண்டியதுதான்.

  //வந்துடாருடா வெண்ண.//
  மிக்க மரியாதையாக பேசுகிறீர்களே! 🙂

  //உங்களுக்கெள்ளாம் அழுதுவடியர சீரியல்தான் சரி.//
  நான் எப்போது அய்யா, சீரியல் பிடிக்கும் என்று சொன்னேன்? அவ்வ்வ்வ்.

 5. ////விஜய் தொலைக்காட்சி தனது மட்டமான விளம்பர உத்தி மூலம் பெற்றிருக்கும் பெயரை இழந்து விடுமோ?///

  என்ன ஒரு அக்கறை???
  ச்சோ ச்சோ…

 6. ///அடுத்த தேவையே இல்லாத பரபரப்பு விஷயம், விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு உண்டாக்கி கொண்டுள்ளது. ////

  நாம எழுதுற பதிவ விடவா இது ??

 7. வாங்க ராசா, எம்புட்டு நாளாச்சு உங்கள(பின்னூட்டங்களை) பாத்து!

 8. ///விஜய் தொலைக்காட்சி அதனுடைய ஜோ(கே)டி நம்பர் 1க்////

  ஐயோ ஐயோ …
  ஹி ஹி ஹி ஹி

 9. //என்ன நடக்குது இங்க??//

  வெல், நான் என்ன சொல்ல வரேன்னா…. விஜய் தொலைக்காட்சி பற்றி விமரிசித்துள்ளேன்.

 10. //என்ன ஒரு அக்கறை???
  ச்சோ ச்சோ…//

  எல்லாம் ஒரு பொதுநலம்தான் நண்பரே!

 11. //////8 | மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:35 மு.பகல்

  வாங்க ராசா, எம்புட்டு நாளாச்சு உங்கள(பின்னூட்டங்களை) பாத்து!//////////

  என்னபா எப்படி கீற??

  நல்ல கீறியா??

  ரொம்ப நாளாச்சு..

  கொஞ்சமே பிஸி…

  வந்துடுவேன்.. சீக்கிரமா…

 12. //////////// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:36 மு.பகல்

  //என்ன நடக்குது இங்க??//

  வெல், நான் என்ன சொல்ல வரேன்னா…. விஜய் தொலைக்காட்சி பற்றி விமரிசித்துள்ளேன்.///////////

  ஒ.. அது தான் மேட்டரா ??
  நான் கூட வேற என்னவோன்னு நினைச்சுட்டேன் ..

 13. ///////// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:37 மு.பகல்

  //என்ன ஒரு அக்கறை???
  ச்சோ ச்சோ…//

  எல்லாம் ஒரு பொதுநலம்தான் நண்பரே!////

  ஏன் இப்படி??

  நல்ல தானே இருந்தீங்க??

 14. //நாம எழுதுற பதிவ விடவா இது ??//

  பிஸினஸ் சீக்ரட்டுகளை வெளியே விடும் நண்பர் அணிமாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 15. நண்பர் அணிமா வந்தாரய்யா, பின்னூட்டங்களை அள்ளித் தந்தாரய்யா!

 16. //என்னபா எப்படி கீற??

  நல்ல கீறியா??

  ரொம்ப நாளாச்சு..

  கொஞ்சமே பிஸி…

  வந்துடுவேன்.. சீக்கிரமா…//

  நா நல்லா கீறம்பா!
  நீ எப்படி கீற?
  பிஸியா? இடுகை போடரத்த விட என்ன பிஸியோ!
  வாங்க சீக்கிரமா!

 17. //ஏன் இப்படி??

  நல்ல தானே இருந்தீங்க??//

  இதற்கு(ம்) என்ன பதில் சொல்வது என்பது தெரியாததால், இக்கேள்வியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 18. /// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:45 மு.பகல்

  //நாம எழுதுற பதிவ விடவா இது ??//

  பிஸினஸ் சீக்ரட்டுகளை வெளியே விடும் நண்பர் அணிமாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.///

  சீக்ரட்டுக்கலா ??
  இல்லை சிகிரெட்கலா ??

 19. //// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:47 மு.பகல்

  நண்பர் அணிமா வந்தாரய்யா, பின்னூட்டங்களை அள்ளித் தந்தாரய்யா!////

  என்ன இது சிறு புள்ள தனமா ???
  எனக்கு கிள்ளி கொடுக்க தெரியாது.. அள்ளி கொடுக்க தான் தெரியும் ( சுய விளம்பரம் மட்டுமே )

 20. மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 10:52 மு.பகல்

  நா நல்லா கீறம்பா!
  நீ எப்படி கீற?
  பிஸியா? இடுகை போடரத்த விட என்ன பிஸியோ!
  வாங்க சீக்கிரமா!//////////

  போட்டுடுவோம்…

  கண்டிப்பா ….

 21. //சீக்ரட்டுக்கலா ??//

  இரகசியங்கள் (மறுபடி ரகசியாவான்னு கேட்கப்படாது)

 22. /////////// மோகன்

  இதற்கு(ம்) என்ன பதில் சொல்வது என்பது தெரியாததால், இக்கேள்வியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.///////////

  கேள்வி கேக்குறது சுலபம்..

  பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெர்யுமா???

 23. //என்ன இது சிறு புள்ள தனமா ???
  எனக்கு கிள்ளி கொடுக்க தெரியாது.. அள்ளி கொடுக்க தான் தெரியும் ( சுய விளம்பரம் மட்டுமே )//

  என்ன ஒரு குத்து வசனம்(அதாங்க பஞ்ச் டயலாக், சரியா தமிழாக்கம் செய்திருக்கேனா?)

 24. //போட்டுடுவோம்…

  கண்டிப்பா ….//

  ஓகே ஓகே!

 25. //கேள்வி கேக்குறது சுலபம்..

  பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெர்யுமா???//

  சரியாச் சொன்னீங்க. இத ஸ்கூலு, காலேஜு பரீட்சைக்கு கொஸ்டின் பேப்பர் தயாரிக்கறவங்க யோசிக்கணும்.

 26. //// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:09 மு.பகல்

  //சீக்ரட்டுக்கலா ??//

  இரகசியங்கள் (மறுபடி ரகசியாவான்னு கேட்கப்படாது)/////

  சரி கேக்கல/…

  (எனக்கு மட்டும் சொல்லுங்க.. அது ரகசியா தான???)

 27. 24 | மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:10 மு.பகல்

  என்ன ஒரு குத்து வசனம்(அதாங்க பஞ்ச் டயலாக், சரியா தமிழாக்கம் செய்திருக்கேனா?)

  என்னோட மூஞ்சுல குத்தாத வரைக்கும் சரி தான்…
  உங்களின் தமிழாக்கம் புல்லரிக்கிறது

 28. 26 | மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:13 மு.பகல்

  /

  சரியாச் சொன்னீங்க. இத ஸ்கூலு, காலேஜு பரீட்சைக்கு கொஸ்டின் பேப்பர் தயாரிக்கறவங்க யோசிக்கணும்.///

  உட்டா.. பேப்பர் தயாரிக்கிறவங்க கூட யோசிக்கனும்ம்னு சொல்லுவீங்க போல இருக்கே ??

 29. //(எனக்கு மட்டும் சொல்லுங்க.. அது ரகசியா தான???)//

  உங்களுக்கு மட்டுமே சொல்கிறேன். அது ரகசியா இல்லை. ரகசியம் மட்டுமே. ரகசியம் மட்டுமே.

 30. //என்னோட மூஞ்சுல குத்தாத வரைக்கும் சரி தான்…
  உங்களின் தமிழாக்கம் புல்லரிக்கிறது//

  சேசே, உங்களை குத்த முடியுமா? உங்கள் இடுகைகளுக்கு பின்னூட்டங்கள் தான் குத்த வேண்டும்.

 31. //உட்டா.. பேப்பர் தயாரிக்கிறவங்க கூட யோசிக்கனும்ம்னு சொல்லுவீங்க போல இருக்கே ??//

  இந்த யோசனை நல்லா இருக்கே!

 32. //////// மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:25 மு.பகல்

  உங்களுக்கு மட்டுமே சொல்கிறேன். அது ரகசியா இல்லை. ரகசியம் மட்டுமே. ரகசியம் மட்டுமே./////////

  எங்க இப்படி வெந்த புண்ணுல ஏதோ காச்சுறீங்க..

  ( அது ஏன் ரகஸியவாக இருக்க கூடாது…?? அது ரகஸியா தான்)))

 33. ///////மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:26 மு.பகல்

  சேசே, உங்களை குத்த முடியுமா? உங்கள் இடுகைகளுக்கு பின்னூட்டங்கள் தான் குத்த வேண்டும்.
  ///////////////

  அப்படியே நடக்கட்டும்…

 34. //( அது ஏன் ரகஸியவாக இருக்க கூடாது…?? அது ரகஸியா தான்)))//

  ரெம்ப கஷ்டப்படறீங்க! சரி, அது ரகஸியாவேதான்

 35. //அப்படியே நடக்கட்டும்…//

  அதற்கு சீக்கிரம் உங்க இடுகைகள் வர வேண்டும்

 36. 36 | மோகன்

  செப்டம்பர் 8th, 2008 at 11:45 மு.பகல்

  //அப்படியே நடக்கட்டும்…//
  ///
  அதற்கு சீக்கிரம் உங்க இடுகைகள் வர வேண்டும்///

  போட்டாச்சு போட்டாச்சு
  /

 37. //போட்டாச்சு போட்டாச்சு//

  அதுக்கு பின்னூட்டங்களும் போட்டாச்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s