விகடனின் வருத்தமும் (அல்லது மன்னிப்பும்)

சில நாட்களுக்கு முன் ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்ட்டரும் ஜெயலலிதாவை பற்றி செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதற்கு ஜெயலலிதா தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர்  வார இதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜூனியர் விகடனின் பதில்:

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்

கிரேட் எஸ்கேப்

//அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். //

அடாடா, அதாவது அப்படி ஒரு செய்தி வெளியிட்டதற்கு இவர்களிடம் ஒரு ஆதாரமும் இல்லை என்று அர்த்தமா? காது வழி செய்தியை தான் இவர்கள் பிரசுரம் செய்தார்களா? அப்பொழுது இந்த மாதிரி வந்த செய்திகளில் எத்தனை சதவிகிதம் இவர்கள் புலானய்வு செய்து தீர விசாரித்து வெளியிட்டனர்? இந்த மாதிரி ஆதாரம் இல்லாத செய்திகளுக்கு யாரேனும் மறுப்பு தெரிவிக்கும் வரை (அல்லது நீதிமன்றத்தை அணுகாதவரைக்கும்) எல்லோரும் அது உண்மை செய்தி என்று நம்பி கொண்டு இருப்பார்களே?

//இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

ஒரு வேளை ஆதாரம் இருந்தால் ஏன் இவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? (இவர்கள் தெரிவித்தால் வருத்தம், அதே ரஜினி என்றால் மன்னிப்பா?). இந்த ஊடகங்களின் போக்குக்கு ஒரு அளவே இல்லையா?

நன்றி:

அருண்
இட்லிவடை

Advertisements

14 responses to “விகடனின் வருத்தமும் (அல்லது மன்னிப்பும்)

 1. Mohan,

  You are asking Nethi Adi questions. But unfortunately JV & Other Yellow Magazines are Shameless people. Of course, we have to keep on pointing out their diabolic ways whenever we get an opportunity so that people will slowly but surely realise the “true character” of these magazines.

  Please keep writing such good posts.

  Arun

 2. Hi Arun,

  Thanks for your visit and comment. As you said, we can’t get any answer from them.

 3. //ஒரு வேளை ஆதாரம் இருந்தால் ஏன் இவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? (இவர்கள் தெரிவித்தால் வருத்தம், அதே ரஜினி என்றால் மன்னிப்பா?). இந்த ஊடகங்களின் போக்குக்கு ஒரு அளவே இல்லையா?//

  சரியான சவுக்கடி!!!..
  தெரிந்தோ தெரியாமலோ எனக்கு அரசியல் பத்திரிக்கைகள் படிப்பது வழக்கத்தில் இல்லை…
  இரண்டு மூன்று முறை பரிசல்காரன் சொல்லி, வாங்கி படித்ததுண்டு..

 4. செருப்பால அடிச்ச மாதிரி கேட்டீங்க..

  இவங்களுக்கெல்லாம் கலைஞர் ஜெயலலிதா போன்றவர்கள் தான் சரி. ரஜினி போல குட்ட குட்ட குனிந்தால் மேல ஏறி மிதிச்சுட்டே இருப்பாங்க.

 5. சங்கணேசன் தங்கள்‌ முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  //தெரிந்தோ தெரியாமலோ எனக்கு அரசியல் பத்திரிக்கைகள் படிப்பது வழக்கத்தில் இல்லை…//

  நல்ல வேளை செய்தீர்கள். இவர்கள் நடத்துவது அரசியல் பத்திரிகைகள் அல்ல, கிசுகிசு பத்திரிகைகள். இவற்றை வண்ணத்திரை போன்ற புத்தகங்களோடுத்தான் ஒப்பிடவேண்டும்.

  எனது வலைப்பதிவை அவ்வபொழுது எட்டிப்பாருங்கள்.
  மோகன்.

 6. கிரி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  //செருப்பால அடிச்ச மாதிரி கேட்டீங்க..//
  துடைத்து விட்டு போய் கொண்டே இருப்பார்கள் அடுத்த இதழுக்கு இம்மாதிரி ஏதாவது விடயம் கிடைக்குமா என்று.

  //ரஜினி போல குட்ட குட்ட குனிந்தால் மேல ஏறி மிதிச்சுட்டே இருப்பாங்க.//

  பாபா பட ஸ்டில்களை அனுமதியின்றி ஆவி போட்டதற்கு ரஜினி தரப்பிலிருந்து ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். அப்போது அடங்கியிருந்தார்கள். அதற்கு பிறகு வழக்கம் போல தான். ரஜினி இவர்களை ஒரு தடவை சட்டரீதியாக அணுக வேண்டும்.

 7. ஆதாரமாக சமர்ப்பிக்கமுடியாத தனிந‌பர்களின் பேட்டிகளின் மூலமாகவே இதுபோன்ற‌ செய்திகளை சேகரிக்கிறார்கள். பிரச்சினை வரும்போது வருத்தம் தெரிவிப்பதைத்தவிர வேறு வழியில்லை. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுமானால் சம்பந்தப்பட்ட பேட்டி தந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், மீண்டும் செய்தி சேகரிப்பது குறித்து கனவும் காண‌முடியாது. செய்திகளின் உண்மைத்தன்மையை தொடர்ச்சியான வாசிப்பின் மீது நாமே பெரும்பாலும் புரிந்துகொள்ளமுடியும்.

  இந்தப்பதிவில் சம்பந்தமில்லாமல் எதற்கு ரஜினி வருகிறார்.? சும்மா ஸ்டார் வேல்யூவுக்கா..

 8. லக்ஷ்மணன் தங்கள்‌ முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  நீங்கள் சொல்வது சரியென்று பட்டாலும், இப்படி ஒவ்வொரு தடவையும் இப்படி ஆதாரம் தரமுடியாதப் பட்சத்தில் இவர்கள் வருத்தம் தெரிவித்தால் இவர்களது நம்பகத்தன்மை குறைந்து விடாதா?

  ரஜினி கேட்காத மன்னிப்பை கேட்டதாகச் சொல்லி இவ்வூடகங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்ததையே சுட்டிக் காட்டினேன்.

 9. (இவர்கள் தெரிவித்தால் வருத்தம், அதே ரஜினி என்றால் மன்னிப்பா?).—Nyayamaana kaelvi.

 10. செந்தில் குமார், தங்கள்‌ வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  அடுத்த கவர்ஸ்டோரிக்கு எதாவது தயார் செய்துக் கொண்டிருப்பார்கள், இதையெல்லாம் கண்டுக் கொள்ளமாட்டார்கள்.

 11. ஜெயாவை தனியே சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட ஜுஜூபி வருத்தமெல்லாம் அம்மாவுக்கு போதாது 😉

 12. சேவியர், தங்கள்‌ வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  நீங்கள்‌ சொல்வதுப்போல நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் 🙂

 13. Kumudam, Aananda vikadanae

  Ungalukku vechha paru amma appppppppppppppuuuuuuu!

  Rajini pavam appirani

  Ammanna summava

  Ungaloda pathirigai Dharmam, Nadunilai, Unmai cheithikalai makkal ippozhuthu Purinthu kondirupparkal.

  Yen Ungalil Oruvarukku kuda antha cheyithi mal nambikkaiyilliai.

  Yen bayappadukireerkal,

  Neengalal yellam “Nadigaigalin Marbhu perithaka therivathu mathiri padam pottu kasupannuvathai vittu vittu Yen amma vidam mothu kireerkal.

  Athu than ungalal mudiyathae.

  ” Nanbarkalea!!

  Kumudam, Ananda vikatan pondra pathhirkaikal

  Arasiyal vathiyayai vidavum kevalam ahivittathu

  Arasiyal vathi kuda Ippadi kalil vizhunthu mannippu ketkamattan.

  “Gani” Nee kodu Intha Vara kuttu “Kumudam, vikadan” ukku.

  Intha vara poochendu Namma Thairiyalakshmi Ammavukku

  Dai pannadai Gani Nee yean intha mathiri Questionkalai A.V. Kumudam mathiri pathirigaigalai parthu ketpathillai

  Increament (OR) Beta Cut ahi viduma?

  Nee yellam oru manushan

 14. ஹரி மன்னிக்கவும், தங்கள் பின்னூட்டத்தை கொஞ்சம் திருத்தியுள்ளேன்.

  ஹரி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s