கன்னாபின்னாச் செய்திகள் 2

மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சி எங்கே என்றும் கேட்டு மடல் மேல் மடலாக அனுப்புவதால் கன்னாபின்னா செய்திகள் 2 உங்களுக்காக (அந்த மடல் எங்கே என்று கேட்கக் கூடாது)

ஜனாதிபதி, கவர்னர் சம்பளம் மும்மடங்கு உயர்வு: மத்திய அமைச்சரவை முடிவு
பண வீக்கம் உயர்வினாலா?

கங்குலியை நீக்கியது பின்னடைவு: சொல்கிறார் பாண்டிங்
யாருக்கு ஆஸ்திரேலியாவிற்கா?

நியாய விலைக்கடைகளில் ரூ.50க்கு 10 மளிகை பொருட்கள்:முதல்வர்
நியாயமான எடையில் இருக்குமா பொருட்கள்?

போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது-  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம கூறுகிறார்
இவர் ரொம்ப விவகாரமானவரா  இருப்பார் போல இருக்கே

நகைக்கடை வேனை மறித்து ரூ.3 கோடி கொள்ளை- பனை மரத்தில் ரூ.75 லட்சம்!
இதைத்தான் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்று சொல்வார்களோ?

புத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!
இது தேறாது என்கிறார்கள் பெற்றோர்கள்

முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக ரெயில் களில் கூடுதலாக 2 பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் – ரெயில்வே மந்திரி வேலு
அப்படியே டிக்கெட் வாங்காத பயணிகளுக்கும் இரண்டு பெட்டிகள் இணைக்கலாமே?

தீவிரவாதத்தை இணைந்து ஒழிக்க பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு
அது சரி

ஜெ பொதுக் கூட்டம்-சன் லைவ் ரிலே
அட க(ச)ண்றாவியே!

பொங்கல் முதல் சென்னை மாநகருக்கு கடல் குடிநீர்
இனிப்பான செய்தி!?

மதுரையில் இன்று அரசு கேபிள் துவக்கப்படுகிறது
சன் தொலைக்காட்சியின் புதிய நகைச்சுவை தொலைக்காட்சி சன் டீடிஎச்-ல் மட்டுமே தெரியும்

100 நாளில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் பா.ஜ., உறுதி
இது எப்படிய்யா?

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியா, மாயாவதி!
என் பெயர் இல்லாததால் இது கருணாநிதியின் சதி – ஜெயலலிதா

பின்குறிப்பு/டிஸ்கிளெய்மர்:

 • டீக்கடை மற்றும் சந்து பொந்துகளில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்விடுகையை வெளியிட்டிருக்கிறேன் (நீல நிறத்தில் இருப்பவை)
 • இவ்விடுகை சிரிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே. இருப்பினும், இவ்விடுகையினால் யார் மனமாவது புண்பட்டிருந்தால், என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisements

63 responses to “கன்னாபின்னாச் செய்திகள் 2

 1. இப்போ ஆஜர் போட்டுக்குறேன்..

  அப்புறமா வந்து பிரிச்சு மேயுறேன்..

 2. பட்டாசா இருக்குங்க ஹா ஹா ஹா ஹா தொடர்ந்து எழுதுங்க இது மாதிரி வேண்டும் என்றால் நான் மின்னஞ்சல் செய்கிறேன் :-)))))))

  எல்லாமே டாப்பு அதோடு இதுவும் “இவ்விடுகையினால் யார் மனமாவது புண்பட்டிருந்தால், என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

  கலக்கிட்டீங்க போங்க… இதற்கும் விகடன் கூறியதற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் அறிவிக்கிறேன் ஹி ஹி ஹி

 3. //இப்போ ஆஜர் போட்டுக்குறேன்..

  அப்புறமா வந்து பிரிச்சு மேயுறேன்..//

  ஸ்டூடண்ட் நம்பர் 1 மாதிரி, நீங்க பின்னூட்டர் நம்பர் 1.

  வருக வருக!

 4. சந்து பொந்து, செய்தி, டீக்கடை, தகவல்///////

  இன்னும் வேற எதுனா இருக்கா??

 5. //எல்லாமே டாப்பு அதோடு இதுவும் “இவ்விடுகையினால் யார் மனமாவது புண்பட்டிருந்தால், என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”//

  நன்றி கிரி.

  //கலக்கிட்டீங்க போங்க… இதற்கும் விகடன் கூறியதற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் அறிவிக்கிறேன் ஹி ஹி ஹி//

  ஹிஹி, சரியா புடிச்சீங்க.

  //பட்டாசா இருக்குங்க ஹா ஹா ஹா ஹா தொடர்ந்து எழுதுங்க இது மாதிரி வேண்டும் என்றால் நான் மின்னஞ்சல் செய்கிறேன் :-)))))))//

  அப்பாடா, இந்த மாதிரி கைவசம் ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு. 🙂 இதை வச்சி ஒரு 5 இடுகை போட்டுடலாம்.

 6. //இன்னும் வேற எதுனா இருக்கா??//

  இதை சேர்த்து இருக்கலாமோ? “உருப்படாதது”? 🙂

 7. Hi Raja, Thanks for your visit and comment.

 8. என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

  இது டாப்பு

 9. ஃஃஅப்படியே டிக்கெட் வாங்காத பயணிகளுக்கும் இரண்டு பெட்டிகள் இணைக்கலாமே?ஃஃ

  ஹிஹி

 10. ஃஃபுத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!ஃஃ

  இது உண்மையிலேயே மாணவர்களை சிந்திக்க துண்டும். ஏனெள்றால் நேரடிக்கேள்விகள் இருக்காது.

 11. ஃஃஃஃ
  சந்து பொந்து, செய்தி, டீக்கடை, தகவல்///////

  இன்னும் வேற எதுனா இருக்கா??
  ஃஃஃஃஃ

  ஹிஹிஹிஹிஹஜ

 12. //அப்பாடா, இந்த மாதிரி கைவசம் ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு. 🙂 இதை வச்சி ஒரு 5 இடுகை போட்டுடலாம்.//

  அட்ரா அட்ரா

 13. மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் >>>

  இனி மேல் இது போல பதிவுகள் எழுத கூடாது என்று ஆட்டோவில் வந்து மிரட்டினார்கள் …

 14. தொடர்ச்சி எங்கே என்றும் கேட்டு மடல் மேல் மடலாக அனுப்புவதால் ////

  ஸ்டாம்ப் ஒட்டியா இல்ல ஒட்டாமலா??

 15. (அந்த மடல் எங்கே என்று கேட்கக் கூடாது)////

  கேட்டா மட்டும் காட்டவா போறீங்க??? ( திருந்துற மாதிரி ஐடியா யாவே இல்லன்னு நினைக்குறேன் )

 16. ///கங்குலியை நீக்கியது பின்னடைவு: சொல்கிறார் பாண்டிங்
  யாருக்கு ஆஸ்திரேலியாவிற்கா?///////

  சூப்பர்

 17. ///போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
  குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?////

  கும்முனாங்களா இல்லியா ???

 18. ///தீவிரவாதத்தை இணைந்து ஒழிக்க பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு///////

  எவ்ளோ நெருக்கம்???

 19. ///ஸ்டூடண்ட் நம்பர் 1 மாதிரி, நீங்க பின்னூட்டர் நம்பர் 1.///

  நல்ல வேலை.. மொள்ளமாரி no 1 சொல்லாம போனீங்க

 20. //இது உண்மையிலேயே மாணவர்களை சிந்திக்க துண்டும். ஏனெள்றால் நேரடிக்கேள்விகள் இருக்காது.//

  சுபாஷ், நீங்கள் சொல்வது சரியென்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்து ஒரு கல்லூரியில் இந்த மாதிரி ஓபன் புக் எக்ஸாம் மற்றும் சாதாரண தேர்வும் உள்ளது.

 21. இவ்விடுகை சிரிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே.////

  சிந்திக்கவா??

  அப்படின்னா என்ன சார்??

  ஆமா தெரியாம தான் கேக்குறேன், எதுக்கு சிந்திக்கனும்??

 22. ///என் பெயர் இல்லாததால் இது கருணாநிதியின் சதி – ஜெயலலிதா//

  மைனாரிட்டி தி மு க வின் சதி என்று தான் இருக்கணும்

 23. //உருப்புடாதது_அணிமா//

  மேனேஜர் என்னை முறைக்குறாரு. வேலை செய்ய சொல்லுராரு. இப்போ ஆஜர் போட்டுக்குறேன். அப்புறமா வந்து பிரிச்சு மேயுறேன்.

 24. /////100 நாளில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் பா.ஜ., உறுதி
  //////////////

  ஏன் போன முறை அஞ்சு வருஷம் ஆட்சி செஞ்சப்ப ஒழிக்க வேண்டியது தானே??
  அஞ்சு வருசத்த உட்டுபுட்டு இப்போ நூறு நாலா ஒழிக்கிராங்களாம்…

  இது தான் பெரிய காமெடி …

 25. //////மேனேஜர் என்னை முறைக்குறாரு.//////
  மொறச்சா மட்டும் திருந்திடுவீங்களா என்ன??

 26. வேலை செய்ய சொல்லுராரு. ////////

  சொன்ன மட்டும் செஞ்சுடுவீங்களா என்ன??

 27. ////ஃஃஅப்படியே டிக்கெட் வாங்காத பயணிகளுக்கும் இரண்டு பெட்டிகள் இணைக்கலாமே?ஃஃ////

  //ஹிஹி//

  சிரிப்பதைப் பார்த்தால் நீங்களும் நம்ம கட்சிதானா?

 28. //இனி மேல் இது போல பதிவுகள் எழுத கூடாது என்று ஆட்டோவில் வந்து மிரட்டினார்கள் …//

  நண்பரே, என் மேல் உங்களிற்கு என்ன கோவம்? எப்போது பார்த்தாலும் நமது வியாபார ரகசியங்களை வெளியிட்டுக் கொண்டுள்ளீரே?

 29. //ஸ்டாம்ப் ஒட்டியா இல்ல ஒட்டாமலா??//
  அது ஈ-மெயில்.

 30. //கேட்டா மட்டும் காட்டவா போறீங்க??? ( திருந்துற மாதிரி ஐடியா யாவே இல்லன்னு நினைக்குறேன் )//

  எல்லாம் உங்கக் கிட்ட கத்துகிட்டதுதான் தல!

 31. //கும்முனாங்களா இல்லியா ???//

  நீங்க பின்னூட்டத்துல கும்முறத விட கம்மியாதான் இருந்திருக்கும்

 32. //சிந்திக்கவா??

  அப்படின்னா என்ன சார்??

  ஆமா தெரியாம தான் கேக்குறேன், எதுக்கு சிந்திக்கனும்??//

  சிரிச்சிட்டு அப்புறம் எதுக்கு சிரிச்சோம்னு சிந்திக்கணும், அதைத்தான் சொன்னேன்.

 33. //ஏன் போன முறை அஞ்சு வருஷம் ஆட்சி செஞ்சப்ப ஒழிக்க வேண்டியது தானே??
  அஞ்சு வருசத்த உட்டுபுட்டு இப்போ நூறு நாலா ஒழிக்கிராங்களாம்…

  இது தான் பெரிய காமெடி …//

  இப்படி சொல்லி அடுத்த சான்ஸ் கேட்கறாங்க போல இருக்கு, மக்களே உஷார்!

 34. //மொறச்சா மட்டும் திருந்திடுவீங்களா என்ன??//

  நடிக்க வேணாமா?

 35. //வேலை செய்ய சொல்லுராரு. ////////

  சொன்ன மட்டும் செஞ்சுடுவீங்களா என்ன??//

  செஞ்சிடுவேன்ல!

 36. //மைனாரிட்டி தி மு க வின் சதி என்று தான் இருக்கணும்//

  சரியாகச் சொன்னீர்கள். நைஜீரியாவில் இருந்தாலும் இந்திய அரசியலை எப்படி உங்களால் இப்படி கவனிக்க முடிகிறது?

 37. | உருப்புடாதது_அணிமா

  செப்டம்பர் 15th, 2008 at 12:51 பிற்பகல்

  மக்கள் கன்னாபின்னா செய்திகள் ரொம்ப நன்றாக இருந்தது என்றும் >>>

  இனி மேல் இது போல பதிவுகள் எழுத கூடாது என்று ஆட்டோவில் வந்து மிரட்டினார்கள் … ////////

  இது எதிராளிகளின் சதியா இல்லை போலிகளின் அட்டகாசமா?

 38. ஃஃஸ்டாம்ப் ஒட்டியா இல்ல ஒட்டாமலா??ஃஃ

  ஹாஹா எந்தக்காலத்தில் இருக்கீங்க அணிமா?

 39. ஃஃகேட்டா மட்டும் காட்டவா போறீங்க??? ( திருந்துற மாதிரி ஐடியா யாவே இல்லன்னு நினைக்குறேன் )ஃஃஃ

  நாமல்லாம் திருந்துனா பிறகு பிளாக் உலகத்த யாரு வாழ வைப்பா?
  எல்லாம் ஒரு பொதுநலம்தானே!!!!!!!!!!
  🙂

 40. ////
  ///போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
  குவார்ட்டர் அடிச்சிட்டு தானே?////

  கும்முனாங்களா இல்லியா ???
  ///////

  அங்கயும் இதான் நடக்குதா?
  ஹாஹா
  அவங்க கும்முறத எந்த திரட்டில போடுவாங்க ???

  செய்தியோடை மாதிரி அவங்க கும்மலோடை RSS கிடைக்குமா?

 41. ஃஃநல்ல வேலை.. மொள்ளமாரி no 1 சொல்லாம போனீங்கஃஃ

  ஐஐஐஐ
  ஐடியா குடுத்ததுக்கு தாங்ஸ்.

  இனி சொல்லிட்டாப்போச்சு!!!!
  ஹாஹா

 42. //இது எதிராளிகளின் சதியா இல்லை போலிகளின் அட்டகாசமா?//
  இது அணிமாவின் சதி

 43. //நாமல்லாம் திருந்துனா பிறகு பிளாக் உலகத்த யாரு வாழ வைப்பா?
  எல்லாம் ஒரு பொதுநலம்தானே!!!!!!!!!!
  :)//

  கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்

 44. //செய்தியோடை மாதிரி அவங்க கும்மலோடை RSS கிடைக்குமா?//

  உடனே கிளம்பிடுவீங்களே

 45. //ஐஐஐஐ
  ஐடியா குடுத்ததுக்கு தாங்ஸ்.

  இனி சொல்லிட்டாப்போச்சு!!!!
  ஹாஹா//

  இவரைத் திட்டறதுக்கு இவரே ஐடியா கொடுக்கறாரே. இவர் ரொம்ப நல்லவரு!

 46. ஃஃமேனேஜர் என்னை முறைக்குறாரு. வேலை செய்ய சொல்லுராரு. இப்போ ஆஜர் போட்டுக்குறேன். அப்புறமா வந்து பிரிச்சு மேயுறேன்.ஃஃஃஃ

  நம்ம கும்மலுக்கு பயந்து ஓட இது ஒரு பிட்டா!!!
  ஹிஹிஹி

 47. /////ஸ்டாம்ப் ஒட்டியா இல்ல ஒட்டாமலா??//
  அது ஈ-மெயில்.////

  ஈ மெயில்னா அதுல ஸ்டாம்புக்கு பதிலா ஈ யை ஒட்டுவாங்களா?
  புறா விடு துது மாதிரி இது ஈ விடு துது!!!!

 48. ஃஃசிரிச்சிட்டு அப்புறம் எதுக்கு சிரிச்சோம்னு சிந்திக்கணும், அதைத்தான் சொன்னேன்.ஃஃ

  ஹிஹி

 49. மீ த 50டிடிடிடிடிடிடிடி
  🙂

 50. ஃஃஇப்படி சொல்லி அடுத்த சான்ஸ் கேட்கறாங்க போல இருக்கு, மக்களே உஷார்!ஃஃ

  ஒருவேளை 101ஆவது நாள் தேர்தலோ?

 51. ஃஃகன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்ஃஃ

  ;)))

 52. //உடனே கிளம்பிடுவீங்களே//

  பொதுச்சேவை எங்கள் உயிர் மூச்சு

 53. ஃஃஇவரைத் திட்டறதுக்கு இவரே ஐடியா கொடுக்கறாரே. இவர் ரொம்ப நல்லவரு!ஃஃஃ

  அத நிறய வாட்டி ப்புறுஃப் பண்ணியிருக்காரே!!!!!!!
  ஹாஹா

 54. //நம்ம கும்மலுக்கு பயந்து ஓட இது ஒரு பிட்டா!!!
  ஹிஹிஹி//
  வேலை செய்ய விட மாட்டிங்களே?

 55. //ஈ மெயில்னா அதுல ஸ்டாம்புக்கு பதிலா ஈ யை ஒட்டுவாங்களா?
  புறா விடு துது மாதிரி இது ஈ விடு துது!!!!//

  அவர் இன்னும் புராண காலத்துலேயே இருக்காரே?

 56. //மீ த 50டிடிடிடிடிடிடிடி
  :)//

  ஆப் செஞ்சுரி அடித்ததற்கு மிக்க நன்றி

 57. //ஒருவேளை 101ஆவது நாள் தேர்தலோ?//

  இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

 58. //பொதுச்சேவை எங்கள் உயிர் மூச்சு//

  ஆமா, சொன்னாங்க நெறைய பேரு

 59. //ஈ மெயில்னா அதுல ஸ்டாம்புக்கு பதிலா ஈ யை ஒட்டுவாங்களா?
  புறா விடு துது மாதிரி இது ஈ விடு துது!!!!//

  ஆஹா தாங்க முடியலையே!

 60. கல்யாண், தங்கள்‌ வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

 61. Pingback: கன்னாபின்னாச் செய்திகள் 3 « மோகனின் எண்ணங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s