யாரிந்த சூஸி ஆர்மன் (Suze Orman)?

சில நாட்களுக்கு முன்பாக சிஎன்பிசி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பொது ஒரு சுவராஸ்யமான நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. அந்நிகழ்ச்சியில்  ஆர்மன் என்னும் பெண்மணி தொலைபேசியில் நேயர்களுக்கு நிதி ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார். நேயர்கள் தங்களது நிதி நிலைமை (வருமானம், கடன், முதலீடு, சேமிப்பு) இவற்றை சொல்லி அவரிடம் ஆலோசனை பெற்றனர். உதாரணத்திற்கு ஒருவர் எதாவது பொருளை (எல்.சி.டி டிவி) விருப்பப்படுகிறார் என்றால் அவர் தனது சம்பளம், கடன் இவற்றை எல்லாம் சொல்லி தான் அந்த பொருள் வாங்கலாமா என்று கேட்பார். அதற்கு சூஸி அந்நேயருடைய நிதி நிலைமையை ஆராய்ந்து அவர் அப்பொருளை வாங்கலாமா வேண்டாமா என்று சொல்லுவார் (பாதி நேரம் கண்டபடி அந்நேயரை திட்டி விடுவார், உனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது, இந்நேரத்தில் உனக்கு இந்தப் பொருள் தேவையா என்று).

ஏனிந்த நிகழ்ச்சியை போன்று இன்னும் எந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வில்லை என்பதே என் ஆச்சரியம்.

எனக்கு இந்நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக பட்டதால் யார் இந்த பெண்மணி என்று விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தப் போது கிடைத்தவை இவை.

சூஸி ஆர்மன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிதி ஆலோசகர். இவர் CNBC தொலைக்காட்சியில் “சுஸ் ஆர்மன் ஷோ” என்கின்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவர் எழுதிய ஆறு நூட்கள் நியூயார்க் டைம்ஸ் இதழால் பெஸ்ட் செல்லர்ஸ் என்ற சிறப்பை பெற்று இருக்கின்றன. இந்த ஆறு நூட்களை வைத்து இவர் PBS (Public Broadcasting Services) ஆறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இவருடைய PBS நிகழ்ச்சிகளுக்காக இரண்டு முறை எம்மி அவார்ட் வாங்கி உள்ளார். 2008 ல் டைம்ஸ் இதழால் இவர் மிகுந்த செல்வாக்கு உள்ள நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவர் மேல சில புகார்களும் உள்ளன. போர்ப்ஸ் இதழ் இவர் வழங்கும் ஆலோசனைகள் மிக எளிமையாக உள்ளது மற்றும் இவரது சில சான்றிதழ்களை தவறாக காட்டி உள்ளார் என்றும் கூறி உள்ளது. உதாரணத்திற்கு இவரிடம் இருந்த காலவதியான உரிமத்தையும், அவை இன்னும் செல்லக் கூடியது என்று சொல்லி உள்ளாராம். அதே போன்று இவருடைய கோப்புகளில் இவருக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுடன் 18 வருட அனுபவம் உள்ளது என்று கூறி உள்ளார். ஆனால் இவருக்கு 7 வருடங்கள் அனுபவம் தான் உள்ளது என்றும் கூறுகின்றனர். ஒரு செய்தித் தாள் நிறுவனம் சூஸி ஆர்மன் சம்பந்தப் பட்டவரிடம் இது குறித்து தொடர்பு கொண்ட போது, அப்புத்தகத்தை பதித்த நிறுவனம் அத்தவறான தகவலை தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

பின்குறிப்பு:

என்னால் முடிந்த வரை தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பிழை இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும்.

பதிவு மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும் 🙂

Advertisements

19 responses to “யாரிந்த சூஸி ஆர்மன் (Suze Orman)?

 1. மிக்க நன்றி நானும் இதை பார்த்து இருக்கிறேன். பதிவுக்கு மிக்க நன்றி

 2. நிழல் தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

 3. நான் ஒரு புதிய பதிவர் உங்களின் ஆதரவை என்றும் வேண்டுகிறேன்

 4. நிழல், என்(ங்கள்) ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

 5. அவரது பெயரை சூஸி என்று படிக்க வேண்டும் சூஸ் அல்ல.

 6. //அவரது பெயரை சூஸி என்று படிக்க வேண்டும் சூஸ் அல்ல.//

  முரளி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சூஸி என்று மாத்திவிடுகிறேன்.

 7. சூஸி ஆர்மன் பற்றிய செய்திகளுக்கு நன்றி மோகன்.

 8. இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வரவேற்கப்படவேண்டியவைகள். நம்மவரில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து டிவி காரங்கதா இதுக்கு முன்வரணும்.

 9. ஃஃபாதி நேரம் கண்டபடி அந்நேயரை திட்டி விடுவார்ஃஃ

  இதுக்கு நம்ம ஊர்காரங்க பதிலுக்கு கண்டபடி மாறி பேசிவிட்டாலென்ற பயத்தில்தான் இப்படி பண்ணாம இருக்கிறாங்களோ ???

  லைவ் இல்லாம றெக்கோர்டட் ஆக போடலாம்!!
  ஹிஹி

 10. ஃஃஉனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது, இந்நேரத்தில் உனக்கு இந்தப் பொருள் தேவையா என்று).ஃஃ

  இதுக்கு அந்தந்த பொருட்களின் நிறுவனங்கள் ” விற்பளையை கெடுக்கிறார்”னு கேஸ் போட மாட்டாங்களா ???

 11. ஃஃஏனிந்த நிகழ்ச்சியை போன்று இன்னும் எந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வில்லை என்பதே என் ஆச்சரியம்.ஃஃ

  நாட்டுக்கும் வீட்டுக்கும் இவ்வளவு கடன் இருக்கும்போது உனக்கு இப்ப இந்த டிவி புநோக்றாமுக்கு போ்ன் பண்றதுதான் முக்கியமானு கேப்பாங்கலியா? அதுக்குதான் !!!!
  ஹிஹி

 12. ஃஃசற்று வித்தியாசமாக பட்டதால் யார் இந்த பெண்மணி என்று விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தப் போது கிடைத்தவை இவைஃஃஃ

  ம்ம்ம்ம்ம்
  உண்மைய சொல்லுங்க!!!!

 13. சுபாஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 14. //இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வரவேற்கப்படவேண்டியவைகள். நம்மவரில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து டிவி காரங்கதா இதுக்கு முன்வரணும்.//

  அதே அதே. நான் வழிமொழிகிறேன்.

 15. //இதுக்கு நம்ம ஊர்காரங்க பதிலுக்கு கண்டபடி மாறி பேசிவிட்டாலென்ற பயத்தில்தான் இப்படி பண்ணாம இருக்கிறாங்களோ ???

  லைவ் இல்லாம றெக்கோர்டட் ஆக போடலாம்!!
  ஹிஹி//

  அந்த மாதிரி ப்ரொக்ராம் பண்றவங்க திட்டினா, நம்ம ஆளுங்க பயங்கரமா திட்டிட மாட்டாங்க?!‌ 🙂

  ரெக்கார்ட் பண்ணாதான் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும், பார்க்கும் நமக்கும் நல்லது. 🙂

 16. //இதுக்கு அந்தந்த பொருட்களின் நிறுவனங்கள் ” விற்பளையை கெடுக்கிறார்”னு கேஸ் போட மாட்டாங்களா ???//

  நல்லா கேட்டீங்கய்யா கேள்வி!

 17. //நாட்டுக்கும் வீட்டுக்கும் இவ்வளவு கடன் இருக்கும்போது உனக்கு இப்ப இந்த டிவி புநோக்றாமுக்கு போ்ன் பண்றதுதான் முக்கியமானு கேப்பாங்கலியா? அதுக்குதான் !!!!
  ஹிஹி//

  கேட்டுட்டாலும்!

 18. //ம்ம்ம்ம்ம்
  உண்மைய சொல்லுங்க!!!!//

  உண்மையைத்தான் சொன்னேன், சுபாஷ்.
  எங்க தலை(அணிமா)யை காணோம்?

 19. ஃஃஎங்க தலை(அணிமா)யை காணோம்?ஃஃ

  அதேதா நானும் பாக்கறேன்!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s