நமக்கு விடுமுறை, ஆனால் அவர்களுக்கு?

சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்காக அலுவலகத்தில் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறை நாளென்பதால் மதிய உணவிற்காக வெளியே செல்ல நேரிட்டது. அப்படி செல்லும்போது ஒரு விடயத்தை கவனித்தேன். நமக்கு தான் விடுமுறையேத் தவிர பெரும்பாலனவ  ர்களுக்கு அந்நாள் வேலை நாளே. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அவர்களுக்கு இம்மாதிரி விடுமுறை நாட்களில் தானே வியாபாரம் நிறைய செய்ய முடியும்.

இதே மாதிரி மே 1 (உழைப்பாளர் தினம்) அன்று கூட இம்மாதிரி ஆட்களுக்கு விடுமுறை கிடையாது. நிறைய தடவை நான் யோசிப்பது என்னவென்றால் உழைப்பாளர் தினம் அன்று இம்மாதிரி உழைப்பவர்களுக்குத் தானே விடுமுறை அளிக்க வேண்டும். நமக்கு எதற்கு என்று (என்னை மாதிரி கணினி சம்பந்தப் பட்ட வேலை செய்பவர்களை சொல்கிறேன், இது என்னுடைய கருத்து).

தீபாவளி, பொங்கல் மற்றும் இன்ன பிற விழா நாட்களில் தங்களது குடும்பத்துடன் அந்நாளை செலவழிக்காமல் தங்கள் வேலை நிமித்தமாக உழைப்பவர்கள் எத்தனை பேர். அவர்களது குழந்தைகள் அப்பா(அல்லது அம்மாவை) பார்க்காமல் எப்படி ஏங்கி போவர்? ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் நிலைமையோ இதற்கும் மேல். தங்கள் சொந்த ஊருக்கு வந்து தங்கள் குடும்பத்தை பார்க்கும் தினம்தான் அவர்களுக்கு திருவிழா.

அதுவும் இம்மாதிரி விழா நாட்களில் ஒயின் ஷாப்பில் வேலை செய்யும் நபர்களின் நிலைமை சொல்ல வேண்டுமா? அங்கு வரும் குடி மகன்களின் இம்சை வேறு தாங்க முடியாது. விழா காலம் என்றாலே என்னை போன்று வெளியூரில் தங்கி இருப்பவர்கள் பேருந்து பயணத்தை தான் நம்பி இருக்கிறோம். விழா காலங்களில் பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதே இல்லை. அப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் படும் பாடு இருக்கே. விழா நாட்களிலும் அவர்கள் அவர்களது கடமையை செய்தே ஆக வேண்டும். (அவர்கள் அந்நாட்களில் அதிக பணம் பெறலாம், இருந்தாலும்?). இப்பட்டியலில் மருத்துவர்கள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள், இன்னும் பலர் உள்ளனர்.

நம்மை போன்றவர்களுக்காக தங்களுடைய குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை விட்டு விட்டு வேலையை/கடமையை செய்யும் அவர்களுக்கு இவ்விடுகை ஒரு சமர்ப்பணம்.

Advertisements

9 responses to “நமக்கு விடுமுறை, ஆனால் அவர்களுக்கு?

 1. செந்தழல் ரவி தங்கள்‌ வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  இந்த சரிக்குத்தான் என்ன அர்த்தமென்று புரியவில்லை

 2. //நம்மை போன்றவர்களுக்காக தங்களுடைய குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை விட்டு விட்டு வேலையை/கடமையை செய்யும் அவர்களுக்கு இவ்விடுகை ஒரு சமர்ப்பணம்//

  மனதை தொட்டு விட்டீர்கள் 🙂

 3. As these peopl are working on holidays, ppl like us can work on weekdays in office and do all other works in weekend. According to me, it is their choice. Every profession got its own advantage and disadvantage. Because of work , we are going different countries irrespective of our interest. Though we are earning in dollars/pounds/euros, we also miss our family during the special occassion, right?. its alls part of life. so kindly appreciate the people who are working (mentally or physically).

  kindly visit my blog and post your comments.

 4. கிரி, தங்கள்‌ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  //மனதை தொட்டு விட்டீர்கள் :-)//

  மெய்யாகவா? என் பதிவை வச்சி நீங்க காமெடி பண்ணலியே?

 5. Hi Sasi, Thank you for your visit and comment.

  //Though we are earning in dollars/pounds/euros, we also miss our family during the special occassion, right?.//

  Every body may miss the special occasion, but have you ever thought about these people who may be in their native town itself and they may not be able to spend the time with their family. Also how many times they might have missed these special occasions? This post is about those people only.

  //so kindly appreciate the people who are working (mentally or physically). //
  I hope by this post, I have not appreciated/depreciated any one.

 6. சரியாக சொல்லியுள்ளீர்கள் மோகன்.

  ஏன் போலீசும் அப்படித்தான்.

  இவர்கள் இப்படி பொறுப்புடன் இருப்பதால்தான் நாம் சந்தோஷமாக இம்மாதிரி விடுமுறைகளை அனுபவிக்க முடிகிறது.

 7. சரிதான் மோகன்..

  முதலில் இது போன்ற அபத்தமான விடுமுறைகளை நீக்க வேண்டும். இது போகப் போக மக்களை சோம்பேறித்தனத்தில்தான் கொண்டு போய் விடும்.. இப்போதே பாதி விட்டுவிட்டது.

  கடைகளுக்கு லீவு இல்லையெனில் அவர்கள் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.. நஷ்டத்தை ஒரு நாள் என்றால்கூட இழக்க மறுக்கிறார்கள்.

  ஆனால் அரசு ஊழியர்கள்.. அன்றைக்குப் பணியாற்றினாலும் அதே சம்பளம்தானே.. வராமல் வீட்டில் இருந்தாலும் அதே சம்பளம்தானே.. பின்பு எதற்கு வர வேண்டும் என்கிற அலட்சியம்..

  அரசுக்கு.. தேர்தல் நாளன்று கால் வலிக்க கியூவில் நின்று ஓட்டளிக்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கூட்டமும் ஒன்று. அவர்கள் மனம் வைத்தால்தான் இவர்கள் கோட்டையில் உட்கார்ந்து கல்லா கட்ட முடியும்.

  ஸோ.. கொஞ்சம் விட்டுக் கொடுத்தல்.. பரஸ்பர உதவி..

  யாருக்கு நாட்டைப் பற்றிக் கவலை..?

  அந்த ஒரு நாளில் எத்தனையோ பைல்களை பார்த்து முடிக்கலாமே.. அரசு வேலைகள் குறையத் துவங்குமே.. யாருக்கு இருக்கு பொது நலன்..?

  இதில் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளையே குற்றம் சொல்ல முடியாது.. அரசு ஊழியர்கள்தான் முதல் பொறுப்பாளிகள்..

  நல்லதொரு சிந்தனை மோகன்..

  வாழ்க வளமுடன்

 8. உண்மைத்தமிழன் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  தாங்கள் சொன்னது போல தேவை இல்லாத விடுமுறை நாட்களை எடுக்கலாம்.

  //கடைகளுக்கு லீவு இல்லையெனில் அவர்கள் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.. நஷ்டத்தை ஒரு நாள் என்றால்கூட இழக்க மறுக்கிறார்கள்.//
  கடையதிபர்களுக்கு அன்று லாபம். ஆனால் அக்கடையில் வேலை செய்பவர்களுக்கு?

  //நல்லதொரு சிந்தனை மோகன்..

  வாழ்க வளமுடன்//
  மிக்க நன்றி உண்மைத்தமிழன். என் வலைப்பதிவை அவ்வப்பொழுது வந்து பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s