ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி

காமெடி நடிகர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் குமுதம் ரிப்போர்டர்க்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு பகுதி:

`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?’

`கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்’ என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.’

கவனியுங்கள். எப்படி இருக்கு இந்த டீலிங்? அ.தி.மு.க.வில் சேரும்போது அவர் என்ன கேட்டுள்ளார் என்று. நல்ல வேளை, மணல் கயிறு படம் போன்று நிபந்தனைகள் போடவில்லை. அப்படி நிபந்தனை போட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பது வேறு விடயம்.

அதே பேட்டியில் அவர் சொல்லி இருப்பதை கவனியுங்கள்:

சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.

`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?’

`அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில்  சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை  பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.’

அட ஆண்டவா. சங்கராச்சாரியார் அவரை இப்பொழுது வேறு கட்சியில் சேர சொல்ல மாட்டார் என்றும்  எஸ்.வி. சேகருக்கு வேறு காரணங்கள் கிடைக்காது என்றும் நம்புவோம்.

அப்பேட்டியிலிருந்து மேலும் சில பகுதிகள் உங்களுக்காக:

எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை

`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள்.  ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்…..?’

`நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்’ என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன’

பின்குறிப்பு:
தலைப்புக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்லன்.

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

Advertisements

5 responses to “ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி

 1. The best reaction to these joker like SVSekar
  not to react.. I think JJ has done smartly in her last Commitee Meeting not to talk about him at all..

 2. //The best reaction to these joker like SVSekar
  not to react.. I think JJ has done smartly in her last Commitee Meeting not to talk about him at all..//

  கல்யாண், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. சரியாகச் சொன்னீர்கள். ஆனால் காமெடியன் எஸ்.வி.சேகர் எத்தனைப் பேரை இப்படி கிண்டல் செய்திருப்பார்? அதான், நமது பங்கிற்கு ஏதாவது செய்யலாம் என்று இப்பதிவு.

 3. இவர் தான் ‘வால் பையன்’ ஆச்சே அதான் மரத்துக்கு மரம் தாவாமல் கட்சிக்கு கட்சி தாவுகிறார் ‘அல்வா’ கொடுப்பதற்கு.
  பொருத்தமான தலைப்பு தான் வைத்திருக்கிறீர் தோழா…

 4. இங்கிலிஷ்காரன், தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  இப்போதைக்கு இவர் காட்டுல மழை இல்லை. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s