மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சேலத்திற்கு நான் இவ்வாரம் வந்துள்ளேன். நேற்று உள்ளூர் தொலைகாட்சி செய்திகளில் இனிமேல் மின்வெட்டு ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறரை மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று அறிவித்ததை கேட்டு எனக்கு அதிர்ச்சி. அதுவும் எங்கள் பகுதியில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மின்வெட்டு. அலுவகலம் போகும் நேரம் பார்த்து நன்றாகத்தான் மின்வெட்டை அமுல் படுத்தி உள்ளனர். அதே போன்று மாலை நான்கு மணி அளவில் சிறிது நேரம், இரவு பத்து மணிக்கு சிறிது நேரம் என்று மின்வெட்டை சரியாக செயல் படுத்தி வருகின்றனர்.

நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பார்த்தால் ஒரு கட்சிக் கூட்டம், அதற்கு ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள். சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.

இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)

பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல(எனக்கு இதை பற்றி சரியாகத் தெரிய வில்லை). அது ஏன் தலை நகரத்திற்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு மற்ற ஊர்களுக்கு ஆறரை மணி நேர மின்வெட்டு?

Advertisements

82 responses to “மின்வெட்டு இவர்களுக்கு ஏன் இல்லை?

 1. //பொது மக்களுக்கு மின்வெட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது. இதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லையா? எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படுவது நம்மை போன்ற பொது மக்கள் தானே.//

  Look here for answer.

 2. //அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், இவர்கள் பொது மக்கள் காசில், வயிற்றெரிச்சலில் சூனியம் வைத்து கொள்கின்றனர்.//

  எப்படியும் அடுத்தது வரப்போவது இல்லை. இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியதுதானே.

 3. காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்

 4. a reader தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. நானும் இம்மாதிரி புகை படம் எடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் முடிய வில்லை.

 5. //எப்படியும் அடுத்தது வரப்போவது இல்லை. இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியதுதானே.//

  இவர்கள் செய்வதை பார்த்தல் அப்படிதான் தோன்றுகிறது.

  முன்னர் வெங்காயம் ஒரு தேர்தல் வெற்றியை தீர்மானித்ததாக நினைவு. அதேப் போன்று மின்சாரம் வரும் தேர்தல் வெற்றியை தமிழகத்தில் தீர்மானிக்குமா?

 6. மோகன் காந்தி தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

  //காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்//

  அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு எப்போது இம்மாதிரி காற்று அடிக்கும்?

 7. இனி யாராலும் என்னைக்கிம் என்னை தடுக்க முடியாது,,..

 8. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பின்னூட்டத்தை என்னாலே தடுக்க முடியாது..

 9. நீங்க எவ்ளோ தான் சமூக பிரச்சனையை பத்தி பேசுனாலும், கும்மி என்றும் எப்பொழுதும் தொடரும்..

 10. ஆமா, சேலம் எப்படி இருக்கு.. ஊரு மக்கள் யாவரும் நலமா?? மல்டிப்ளக்ஸ் போயிருந்தீங்களா??

 11. இத்தனைக்கும் சேலம் அவ்ரோட சொந்த தொகுதி தானே… ஆற்க்காடாருக்கு இருக்கு அடுத்த தேர்தலில் மிக பெரிய ஆப்பு…

 12. அவருக்கு மட்டும் இல்ல … தி மு க வின் சாதனைகளில் இதுவும் ஒன்று…

 13. எல்லாம் அவர்களின் ஆட்சியின் அலட்சிய போக்கு மற்றும் கையாலாகத்தனம்..
  விவரம் கேட்டால் ஏதோ இது முந்தைய ஆட்சியின் அலட்சிய போக்கு என்று சொல்வார்கள்..

 14. நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது.///

  எதுக்கு இப்ப்படி அஞ்சு ரோடுக்கு போனீங்க.. எதுனா ஒரு ரோடுக்கு போக வேண்டியது தானே??( ஹி ஹி )

 15. சொல்லாமலேயே தெரிந்து இருக்கும், எக்கட்சியின் கூட்டம் என்று.///////////

  எனக்கு தெரியாது.. சும்மா சொல்லுங்கள், ஆட்டோ எல்லாம் வராது..

 16. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், ////

  சொந்த வாழ்வில் வலைப்பக்கம் வைத்து இருப்பார்கள் என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி ( நான் என்னை பற்றி சொல்ல வில்லை)

 17. இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)////

  ஒரு வேளை ஆக்ஸன் ரீப்ளே வா இருக்குமோ ??

 18. //வந்துட்டேன்…//

  வந்துடீங்களா ராசா, உங்க ஊருல மின்வெட்டு கெடயாதா?

 19. //இனி யாராலும் என்னைக்கிம் என்னை தடுக்க முடியாது,,..//

  யாரும் தடுக்க மாட்டோம். 🙂 உங்களை தடுக்க யாருக்கும் தைரியம் கிடையாது.

 20. //நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பின்னூட்டத்தை என்னாலே தடுக்க முடியாது..//

  அப்படியாங்கலாண்ணா?

 21. //நீங்க எவ்ளோ தான் சமூக பிரச்சனையை பத்தி பேசுனாலும், கும்மி என்றும் எப்பொழுதும் தொடரும்..//

  அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே!

 22. //ஆமா, சேலம் எப்படி இருக்கு.. ஊரு மக்கள் யாவரும் நலமா?? மல்டிப்ளக்ஸ் போயிருந்தீங்களா??//

  சேலம் நல்லா இருக்கு, ஊர் மக்கள் நலம். மல்டிப்ளெக்ஸ் பக்கம் போறது இல்லைங்க.

 23. //இத்தனைக்கும் சேலம் அவ்ரோட சொந்த தொகுதி தானே… ஆற்க்காடாருக்கு இருக்கு அடுத்த தேர்தலில் மிக பெரிய ஆப்பு…//

  ஆற்காட்டார் சொந்த தொகுதி இது இல்லைங்க. இது வீரபாண்டியார் தொகுதி.

 24. //அவருக்கு மட்டும் இல்ல … தி மு க வின் சாதனைகளில் இதுவும் ஒன்று…//

  ஆம், உடன்பிறப்பே!

 25. //எல்லாம் அவர்களின் ஆட்சியின் அலட்சிய போக்கு மற்றும் கையாலாகத்தனம்..
  விவரம் கேட்டால் ஏதோ இது முந்தைய ஆட்சியின் அலட்சிய போக்கு என்று சொல்வார்கள்..//

  ஆமா, அடுத்து வர ஆட்சியும் இதையே தான் சொல்லுவாங்க. அப்படி முந்தய ஆட்சி மேல பழி போடறதுக்கு எதுக்கு ஆட்சிக்கு வரணும்? இது நான் கேக்கலை. வேற யாரோ கேட்டதை, நான் காபி பேஸ்ட் பண்ணி கீறேன்.

 26. //நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது.///
  எதுக்கு இப்ப்படி அஞ்சு ரோடுக்கு போனீங்க.. எதுனா ஒரு ரோடுக்கு போக வேண்டியது தானே??( ஹி ஹி )//

  நல்லாத் தானே இருந்தீங்க, ஏன் இப்படி?

 27. //எனக்கு தெரியாது.. சும்மா சொல்லுங்கள், ஆட்டோ எல்லாம் வராது..//

  நைஜீரியாவுக்கு வராது, ஆனா இங்கே வருமே?

 28. //சொந்த வாழ்வில் வலைப்பக்கம் வைத்து இருப்பார்கள் என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி ( நான் என்னை பற்றி சொல்ல வில்லை)//

  ஹிஹி, அதை நான் எப்படி சொல்லறது?

 29. //ஒரு வேளை ஆக்ஸன் ரீப்ளே வா இருக்குமோ ??//

  மின்சாரம் உபயோகிக்காமல் ஏதோ பண்ணிவிட்டு போகட்டுமே?

 30. //எங்க போய்டீங்க ?? லீவா ??//

  ஒரு ஷார்ட் பிரேக். அதுக்கு அப்புறமா வந்து பாத்தா நீங்க கும்மு கும்முன்னு கும்மி இருக்கீங்க.

 31. //அப்புறமா வரேன்//

  வாங்க, வாங்க!

 32. வணக்கம் ..நான் விஷ்ணு ..
  இப்பதான் இங்க வந்தேன் ..

  உங்க பதிவை பார்த்தேன் ..
  ரெம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க ..

  வாழ்த்துக்கள் …

 33. // உருப்புடாதது_அணிமா

  நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பின்னூட்டத்தை என்னாலே தடுக்க முடியாது..
  //

  தலைவா ..இங்கயுமா ????

 34. // உருப்புடாதது_அணிமா

  நீங்க எவ்ளோ தான் சமூக பிரச்சனையை பத்தி பேசுனாலும், கும்மி என்றும் எப்பொழுதும் தொடரும்..//

  நானும் இதை தான் சொல்கிறேன் ..

 35. // இக்கட்சி கூட்டங்களிற்கு மட்டும் எப்படி தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய முடிகின்றது //

  நல்ல கேள்வி மோகன் …

 36. //நேற்று வெளியே வேலை இருந்ததால், அதை முடிக்க ஐந்து ரோடுக்கு செல்ல வேண்டி இருந்தது //

  கூட்டம் நடக்கும்போதெல்லாம் வெளியில் போகலாமா ..இப்படி மின்சார திருட்டெல்லாம் பார்த்து ..இப்படி பதிவுல புலம்ப வச்சிட்டாங்க ..பாத்தீங்களா ..

 37. //இன்று வெளியே செல்ல நேர்ந்தப் போது, இன்னொரு பகுதியில் அதே போன்று கட்சி கூட்டம், அதே போன்று ஏகப்பட்ட மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள்(அதே கட்சி)//

  பாருக்கப்பு ..சொன்னத கேக்கமா அடுத்த நாளும் போய் இருக்காரு ..என்ன மோகன் நீங்க …

 38. // உருப்புடாதது_அணிமா

  அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வார்கள், ////

  சொந்த வாழ்வில் வலைப்பக்கம் வைத்து இருப்பார்கள் என்று சொல்லாமல் விட்டதற்கு மிக்க நன்றி ( நான் என்னை பற்றி சொல்ல வில்லை) //

  இத முடிச்சிட்டு அங்க தா வரப்போறேன் ..தலைவா…நீ சொந்தமா வச்சிருக்கற சூனியத்தை பார்க்க

 39. மோகன் சார் ..இப்போ போறேன் அப்பறமா வருவேன் ..

 40. விஷ்ணு, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
  உங்கள் வீட்டிற்கும் வந்து இருக்கிறேன். ஆனால் கவிதைகளை புரிந்து கொள்ளும் அளாவுக்கு எனக்கு புத்தி இல்லை 🙂

 41. //தலைவா ..இங்கயுமா ????//

  தலைவரோட கால் (கை) படாத வலை பதிவுகளே இருக்க முடியாது.

 42. //நானும் இதை தான் சொல்கிறேன் ..//

  ஆமா, நாம தான் கும்மி சங்க உறுப்பினர்கள் ஆச்சே!

 43. //நல்ல கேள்வி மோகன் …//

  ஆனா பதில் தான் கெடைக்காது!

 44. //கூட்டம் நடக்கும்போதெல்லாம் வெளியில் போகலாமா ..இப்படி மின்சார திருட்டெல்லாம் பார்த்து ..இப்படி பதிவுல புலம்ப வச்சிட்டாங்க ..பாத்தீங்களா//

  அது சரி, இவங்க தினமும் ஒரு இடத்துல கூட்டம் நடத்துறாங்க. அதுக்காக என்ன பண்ணுறது. அப்புறம் அது மின்சார திருட்டனு நான் பாக்கலை. அடுத்த தடவை தான் விஜயகாந்த் மாதிரி தீவிரமா துப்பு துலக்கணும்.

 45. //பாருக்கப்பு ..சொன்னத கேக்கமா அடுத்த நாளும் போய் இருக்காரு ..என்ன மோகன் நீங்க …//

  இனிமேல போகலை, விஷ்ணு. சரியா?

 46. //இத முடிச்சிட்டு அங்க தா வரப்போறேன் ..தலைவா…நீ சொந்தமா வச்சிருக்கற சூனியத்தை பார்க்க//

  என்னே உங்கள் தொண்டு உள்ளம்.

 47. //மோகன் சார் ..இப்போ போறேன் அப்பறமா வருவேன் ..//

  ஒரு முடிவோடு தான் இருக்கீங்க. வாங்க, வாங்க.

 48. //மோகன் சார் ..இப்போ போறேன் அப்பறமா வருவேன் ..//

  ஒரு முடிவோடு தான் இருக்கீங்க. வாங்க, வாங்க.

 49. நானே எனக்கு 50 போட்டுட்டேன். இதற்கு பெயர் தான் பின்னூட்ட பேமானித்தனமா?

 50. என்னுடய இடுகையை சூடான இடுகையில் இடம் பிடிக்க வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி.

 51. 52 | மோகன்

  அக்டோபர் 12th, 2008 at 1:08 பிற்பகல்

  நானே எனக்கு 50 போட்டுட்டேன். இதற்கு பெயர் தான் பின்னூட்ட பேமானித்தனமா?
  ……….

  இல்லை இதுக்கு பேரு பின்னூட்ட கேப்மாறிதணம்

 52. 53 | மோகன்

  அக்டோபர் 12th, 2008 at 1:09 பிற்பகல்

  என்னுடய இடுகையை சூடான இடுகையில் இடம் பிடிக்க வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி.
  ///////////

  என்னது சூடான இடுகையா ???

  தலைப்பு வைக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ..

  வாழ்த்துக்கள் நண்பரே

 53. 21 | மோகன்

  அக்டோபர் 12th, 2008 at 11:06 மு.பகல்

  //வந்துட்டேன்…//

  வந்துடீங்களா ராசா, உங்க ஊருல மின்வெட்டு கெடயாதா?
  /////////////

  அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்த அண்ணன் பதிவு மோகன் எங்கு இருந்தாலும் வாழ்க வளர்க

 54. // | மோகன்விஷ்ணு, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
  உங்கள் வீட்டிற்கும் வந்து இருக்கிறேன். ஆனால் கவிதைகளை புரிந்து கொள்ளும் அளாவுக்கு எனக்கு புத்தி இல்லை //

  எழுதற எனக்கே இல்லை …படிக்கற உங்களுக்கு தேவைன்னு யாரு சொன்னது ..

  ( நம்ப அணிமா தலை எல்லாம் கவிதை படிக்கிறாரு …)

 55. “சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்வெட்டு ஆறரை மணி நேரம், சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் போல”

  கன்னியாகுமரில இருந்து ஆற்காட்டார திட்ட தான் முடியும்
  ஆனா சென்னையில ஆறரை மணி நேரம் மின் வெட்டு இருந்தா ஆற்காட்டார் வெளியவே வர முடியாது.

 56. அடடா, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, அதுக்கு அவரு என்ன பண்ணுவாரு பாவம்?

  கிராமத்திற்கு இம்புட்டு வெட்டு, நகரத்துக்கு இம்புட்டு வெட்டு, தொழிற்சாலைக்கு இம்புட்டு வெட்டுன்னு சொன்னாரு. ஆனா, கட்சிக்காரய்ங்களுக்கு வெட்டுன்னு எதுனா சொன்னாரா? அவய்ங்களுக்கு போக தான் மிச்சம்..

 57. மோகன்

  வந்துடீங்களா ராசா, உங்க ஊருல மின்வெட்டு கெடயாதா?
  ///////////

  இங்கும் இருக்கிறது..
  ஆனால் ஜெனேரேட்டர் இருப்பதால் தப்பித்தோம்

 58. மோகன்

  யாரும் தடுக்க மாட்டோம். 🙂 உங்களை தடுக்க யாருக்கும் தைரியம் கிடையாது.
  ///

  ஒ.. இன்னும் அந்த பயம் மனசுல இருக்கா??
  அப்படி தான் இருக்கணும்..

 59. மோகன்

  //நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பின்னூட்டத்தை என்னாலே தடுக்க முடியாது..//

  அப்படியாங்கலாண்ணா?///

  என்னது இது?? இது ஒன்னும் பவ்யமான ரிப்ளை போல தெரியலையே??

 60. மோகன்

  //நீங்க எவ்ளோ தான் சமூக பிரச்சனையை பத்தி பேசுனாலும், கும்மி என்றும் எப்பொழுதும் தொடரும்..//

  அது தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே!’////

  உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
  ரொம்ப விவரமா தான்யா இருக்கீங்க??

 61. இதை எல்லாம் நினைத்து வயிறு எரிகிறது. நமக்கு இதில் இருந்தெல்லாம் விமோசனமே கிடையாது.

 62. எனது ஆஜரை இப்பவே போட்டுக்கொள்கிறேன்.
  ஆனால் எனக்கு அங்கு என்னதா நடக்கிறதென்பது தெரியவில்லை.
  இங்கு போல மின்வெட்டு உண்டென தெரிகிறது. அது நிறைய பேருக்கு எரிச்சலை வரவைக்கிறது. அதிலும் ஒரு அரசியல்வாதியின் தலையும் உருளகிறது. இவ்வளவும் பத்திரிகை மற்றும் வெப்பில் பார்த்து தெரிந்துகொண்டது.
  ம்ம்ம்
  எதுக்கும் நாளைக்கு வந்து அனைவரையும் சந்திக்கிறேன்

 63. அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
  வந்து கலந்து கொள்ளவும்..
  விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)

 64. சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

  அப்ப்ரைசல் இருப்பதால்,

  மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

  ( நான் போட மாட்டேன்… பட் எனக்கு நீங்க போடலாம் )

 65. //இல்லை இதுக்கு பேரு பின்னூட்ட கேப்மாறிதணம்//

  திருத்தியமைக்கு மிக்க நன்றி அணிமா

 66. வெளி ஊருக்கு சென்று இருந்ததால் சரியாக பின்னூட்டம் இட வில்லை என்பபதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 67. //அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்த அண்ணன் பதிவு மோகன் எங்கு இருந்தாலும் வாழ்க வளர்க//

  மேட்டர் கொடுக்காட்டியும் நீங்க பதிவு(கள்) போட்டுடுவீங்களே?

 68. //எழுதற எனக்கே இல்லை …படிக்கற உங்களுக்கு தேவைன்னு யாரு சொன்னது ..//

  உங்களுக்கு இல்லை என்று சொல்வதை நம்புவது கடினம். ஆனால் படிக்க ஒன்றும் தேவை இல்லை என்று சொல்வதை நம்பலாம் 🙂

  //( நம்ப அணிமா தலை எல்லாம் கவிதை படிக்கிறாரு …)//

  அது என்னது தலை எல்லாம் கவிதை படிக்கிறாரு, ஏன் அவர் படிக்க கூடாதா?

 69. கட்டபொம்மன் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  //கன்னியாகுமரில இருந்து ஆற்காட்டார திட்ட தான் முடியும்
  ஆனா சென்னையில ஆறரை மணி நேரம் மின் வெட்டு இருந்தா ஆற்காட்டார் வெளியவே வர முடியாது.//

  ஒ அது தான் சங்கதியா!

 70. வாங்க அதுசரி.

  //அடடா, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, அதுக்கு அவரு என்ன பண்ணுவாரு பாவம்?//

  அதானே, அவரு என்ன பண்ணுவாரு பாவம். அவர் மின்துறை அமைச்சர் தானே, அவரால என்ன பண்ண முடியும்?

  //கிராமத்திற்கு இம்புட்டு வெட்டு, நகரத்துக்கு இம்புட்டு வெட்டு, தொழிற்சாலைக்கு இம்புட்டு வெட்டுன்னு சொன்னாரு. ஆனா, கட்சிக்காரய்ங்களுக்கு வெட்டுன்னு எதுனா சொன்னாரா? அவய்ங்களுக்கு போக தான் மிச்சம்..//

  அது சரி.

 71. //இங்கும் இருக்கிறது..
  ஆனால் ஜெனேரேட்டர் இருப்பதால் தப்பித்தோம்//

  இங்க ஜெனரேட்டர் போட்டு கட்டுபடி ஆகாது ராசா.

 72. 75 போட்டாச்சி, (பின்னூட்ட கேப்மாரித்தனம்)

  //ஒ.. இன்னும் அந்த பயம் மனசுல இருக்கா??
  அப்படி தான் இருக்கணும்..//

  உங்களை பத்தி பயப்படாம இருக்க முடியுமா? T.Rக்கு கூட நாங்க பயப்படாம இருக்கலாம் ஆனா அணிமவுக்கு பயப்படாம இருக்க முடியாது.

 73. //என்னது இது?? இது ஒன்னும் பவ்யமான ரிப்ளை போல தெரியலையே??//

  அண்ணா, என்னங்கன்னா இப்படி சொல்லிபுட்டீங்க! பெரியவங்களை பாத்தா நான் மரியாதி கொடுக்கறதுல மட்டையா வளைஞ்சிடுவாங்கன்னா !

 74. //இதை எல்லாம் நினைத்து வயிறு எரிகிறது. நமக்கு இதில் இருந்தெல்லாம் விமோசனமே கிடையாது.//

  ஆமாம், கிரி. எல்லா கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

 75. சிவா, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து ஆதரவை அள்ளித்தாருங்கள்.

 76. வாங்க சுபாஷ்.

  //இங்கு போல மின்வெட்டு உண்டென தெரிகிறது//

  மின்வெட்டு இருக்கிறதா? மின்சாரம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

  //அது நிறைய பேருக்கு எரிச்சலை வரவைக்கிறது.//

  கொலை வெறியில் இருக்கிறார்கள்.

 77. //அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
  வந்து கலந்து கொள்ளவும்..
  விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)//

  கட்டாயம் கலந்து கொள்கிறேன். நீங்கள் கூப்பிட்ட பின், அதில் இருந்து தப்பிக்க முடியுமா? சிறிது நேரம்(நாள்) கொடுங்கள். எதாவது யோசித்து பிட் போட வேண்டும்.

 78. //மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
  ( நான் போட மாட்டேன்… பட் எனக்கு நீங்க போடலாம் )//

  இட்ஸ் ஒகே. நீங்கதான் பின்னூட்டம் போடும் போதே 2-3 நாட்களுக்கு சேர்த்து போட்டு விடுகிறீர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s