சினிமா சினிமா – தொடர் பதிவு

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? (அணிமா ஸ்டைல்)

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

அடடா, எவ்வயதில் முதல் சினிமா பார்த்தேன் என்பது எனக்கு நினைவு இல்லையே. அப்பொழுதே வலைப்பதிவு வசதி இருந்திருந்தால் நான் அதை பதிவு செய்திருப்பேன். இப்பொழுது உபயோகமாக இருந்திருக்கும். ஆகையால் வலைப்பதிவு, இணையம் போன்றவற்றை அப்போது கண்டு பிடிக்காததற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

மெய்யாலுமே இதற்கும் என்னிடம் பதில் இல்லை.

இ. என்ன உணர்ந்தீர்கள்?

என்னத்த உணர்ந்து இருப்பேன். எப்படா வீட்டுக்கு போகலாம் என்று இருக்குமோ?

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தலைவரின் குசேலன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பொதுவாக நான் தமிழ் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பது வழக்கம். ஆனால் உன்னாலே உன்னாலே திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன். படம் ஒகேவாகத்தான் இருந்தது. ஒளிப்பதிவிற்காகவும் திரைக்கதையில் சிறிது வித்தியாசம் காட்டியதற்கும் ஜீவாவிற்கு ஒரு சல்யூட்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாதித்த படங்கள் நிறைய இருக்கின்றன:
நீ வருவாயென – பார்த்திபன் நடித்த படம் ஆயிற்றே என்று பார்த்து பாதிப்படைந்த படம்
வரலாறு (காட் பாதர்) – நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் செய்யப்பட்ட படத்தை பார்த்து அடைந்த பாதிப்பு இருக்கிறதே
கண்ணுக்குள் நிலவு – பார்த்து கடுப்பு ஆனது ஒரு கதை
மோனிஷா என் மோனலிசா – காரணங்கள் சொல்ல வேண்டுமா? இதற்கு பிறகு T.R. படங்கள் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை.
அடடா, தருமபுரியை விட்டுட்டேனே!

(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்லை

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

தொழில் நுட்பம் முன்னேறியதால் எப்படங்கள், பாடல்கள் எங்கிருந்து சுடப்பட்டவை என்று நமக்கு தெரிய வந்துள்ளது என்னை பாதித்துள்ளது .(கேள்வியை சரியாக புரிந்துக் கொண்டேன் தானே?)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

முன்பு விகடன், குமுதம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதில்லை. இருந்தாலும் வலையுலகிலும் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. எனவே தமிழ் சினிமா பற்றி வாசிக்காமல் இருக்கமுடியாது.

7.தமிழ்ச்சினிமா இசை?

நிச்சயம் பெருமை படலாம்.மலையாளம், தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி பேசுபவர்களும் விரும்பி கேக்கும் அளவுக்கு தமிழ் இசை உள்ளது. பெரும்பாலானவர்களை போல இளையராஜா இசை பிடிக்கும். எ.ஆர்.ரஹ்மான் இசை பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவாக வேறு இந்திய மொழி படங்கள் பார்ப்பதில்லை. எக்கச்சக்கமாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன் (அது புரிகிறதோ இல்லையோ).
ஹாஸ்டல், சா(1,2), பேதாலஜி . அதுவும் ஹாஸ்டல், பேதாலஜி  படங்கள் முழுதாக பார்க்க முடியவே இல்லை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. அதை மீண்டும் செய்வேன். இதை செய்வதால் தமிழ்ச்சினிமா மேம்படும் என்று நினைக்கின்றேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மசாலா மற்றும் நல்ல படங்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அப்படி நடந்தால் பாவம். தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என்ன செய்யும்? நான் ஹாலிவுட் படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்வேன். தமிழர்களுக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும்.

இப்பொழுது நான் சிலரை கோர்த்து விட வேண்டும்.

நண்பர் அடலேறு
சேலத்து சிங்கம் இங்கிலிஷ்காரன் (அப்பாடா பட்டத்தை ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சி)
அன்பர் கல்யாண்
நண்பர் கிரி (கிரி இந்த தடவை சரியாக தொடர் பதிவு போட்டு விடுங்கள்)
மதிப்பிற்குரிய அருண்

Advertisements

76 responses to “சினிமா சினிமா – தொடர் பதிவு

 1. சூப்பரா இருக்கு மாப்பி உங்களோட சினிமா சினிமா .

  நன்றி மோகன். தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு தொடர்

  பதிவு இதுவரைக்கும் கலந்தது இல்ல. முதல் தடவையா

  களத்துல எறங்கர பாக்கலாம் டெப்பாசிட்

  கெடைக்குதான்னு ..

 2. வந்துட்டோம்ல
  வந்துட்டோம்ல
  வந்துட்டோம்ல

 3. ஃஃகோர்த்து விட்ட அணிமாவிற்கு என் முதற்க்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டுஃஃ

  நன்றியை எந்த ஜ்டைல்ல சொல்லுவீங்க ?

 4. முழுதாக படித்து விட்டேன்
  எல்லா கேள்விகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 5. ஃஃஅப்பொழுதே வலைப்பதிவு வசதி இருந்திருந்தால் நான் அதை பதிவு செய்திருப்பேன்.ஃஃ

  நல்ல வேள அப்ப கண்டுபிடிக்காம போனாங்க
  ஹிஹி

 6. ஃஃஇணையம் போன்றவற்றை அப்போது கண்டு பிடிக்காததற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஃஃ

  ஹம்ம்ம்
  என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

 7. முதல் கேள்விக்கு நரியான பதில் சொல்லாமல் மழுப்பியதற்கு என் கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!

 8. ஃஃநினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

  மெய்யாலுமே இதற்கும் என்னிடம் பதில் இல்லை.ஃஃ

  நீங்க அனியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே !!!!
  எப்படி???????

 9. ஃ என்ன உணர்ந்தீர்கள்?

  என்னத்த உணர்ந்து இருப்பேன். எப்படா வீட்டுக்கு போகலாம் என்று இருக்குமோ?ஃஃ

  ம்ம்ம் இருந்திருக்கும்.
  அந்தமட்டுமாவத ஞாபகம் இருக்கே!!1
  ஹிஹி

 10. ஃஃ
  கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

  தலைவரின் குசேலன்.ஃஃஃ

  பாராட்ரேன்
  உங்க நெஞ்சுரத்த பாராட்ரேன்!!!!

 11. நல்லா எழுதி இருக்கிங்க… நண்பரே…

  எனக்கு என்னவோ சேலத்துசிங்கம் பட்டம் உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் போல இருக்கு…

 12. ஃஃபொதுவாக நான் தமிழ் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பது வழக்கம். ஃஃ

  ஆஹா அப்படியா!!!
  நொந்த நூடுள்ஸ் அனாலும் கூட்டமா ஆகணும்கற உங்க சமூக அக்கறய பாராட்ரன்!!!!

 13. ஃஃஆனால் உன்னாலே உன்னாலே திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன்ஃஃ

  போலீஸ்…….. போலீஸ்

 14. ஃஃபடம் ஒகேவாகத்தான் இருந்தது. ஃஃ

  பின்ன நம்ம சதான்னா சுவம்மாவா?

 15. ஃஃஒளிப்பதிவிற்காகவும் திரைக்கதையில் சிறிது வித்தியாசம் காட்டியதற்கும் ஜீவாவிற்கு ஒரு சல்யூட்.ஃஃ

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 16. ஃஃபாதித்த படங்கள் நிறைய இருக்கின்றன:ஃஃ

  என்னது சேலத்து சிங்கத்த தாக்கிய படமா????
  தியேட்டர் அட்ரச சொல்லுங்க
  வந்து கிளிச்சுடுரோம்!!!!!

 17. ஃஃவரலாறு (காட் பாதர்) – நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் செய்யப்பட்ட படத்தை பார்த்து அடைந்த பாதிப்பு இருக்கிறதேஃஃ

  ஹிஹி
  சேம் பிளட்!!!!

 18. ஃஃகண்ணுக்குள் நிலவு – பார்த்து கடுப்பு ஆனது ஒரு கதைஃஃ

  அதே சேம் பிளட்.
  ஆனா இந்தமுறை குறைவு. ஏன்னா நா டிவிலதா பாத்தே!!!

 19. ஃஃஅடடா, தருமபுரியை விட்டுட்டேனே!ஃஃ

  ஆஹா
  ரொம்பத்தா நொந்துபோயிருக்கீங்க!!!!

 20. ஃஃஅ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

  சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்லைஃஃஃ

  ம்ம்ம் அப்ப நோ கமன்ட்ஸ்

 21. ஃஃ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

  தொழில் நுட்பம் முன்னேறியதால் எப்படங்கள், பாடல்கள் எங்கிருந்து சுடப்பட்டவை என்று நமக்கு தெரிய வந்துள்ளது என்னை பாதித்துள்ளதுஃஃ

  ஹிஹி
  எனக்கு இந்த விடயம் சந்தோசமானதாக இருக்குப்பா

 22. ஃஃ தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

  முன்பு விகடன், குமுதம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதில்லை. இருந்தாலும் வலையுலகிலும் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. எனவே தமிழ் சினிமா பற்றி வாசிக்காமல் இருக்கமுடியாது.ஃஃ

  ஒத்துக்கறேன்
  நீங்க உண்மைத்தமிழன்னு ஒத்துக்கறேன்!!!

 23. ஃஃஎ.ஆர்.ரஹ்மான் இசை பிடிக்கும்.ஃஃ

  வாழ்க!!!!!!!

 24. ஃஃஎக்கச்சக்கமாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன் (அது புரிகிறதோ இல்லையோ).ஃஃ

  பாத்தாலே எல்ல்ல்லாமே பரிஞ்சுடுமே!!!
  கதைய சொன்னேன்

 25. ஃஃஅதுவும் ஹாஸ்டல், பேதாலஜி படங்கள் முழுதாக பார்க்க முடியவே இல்லை.ஃஃ

  அப்ப ஸோ வ முழுசா பாத்திங்களா???
  உவ்வே!!!!!!!!

 26. ஃஃமறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. ஃஃ

  மீ டு

 27. ஃஃஇதை செய்வதால் தமிழ்ச்சினிமா மேம்படும் என்று நினைக்கின்றேன்.ஃஃ

  தொடர்ந்து தமிழ் சினிமாவை வாழ வைக்க வாழ்த்தி வேண்டுகிறோம்

 28. ஃஃதமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  மசாலா மற்றும் நல்ல படங்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.ஃஃ

  இது ஒரு நல்ல பதில்

  தமிழ் சினிமாவ இந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!!!!
  ஹிஹிஹி

 29. ஃஃநான் ஹாலிவுட் படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்வேன். தமிழர்களுக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும்.ஃஃ

  இப்படி பதிவுபோட கூட மேட்டர் கிடைக்காது!!!!
  ஹாஹா

 30. இப்போதைக்கு ரெஸ்டு
  அப்பாலிக்கா டண்டணக்கா

 31. //சூப்பரா இருக்கு மாப்பி உங்களோட சினிமா சினிமா . //
  உண்மையாவா அடலேறு சொல்லுறீங்க?

  //நன்றி மோகன். தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு//
  இதற்கு எதற்கு நன்றி. இந்த மாதிரி நெறைய தொடர் பதிவிற்கு உங்களை கோர்த்து விடுவேன்(வோம்). அப்போ பார்க்கலாம். நீங்க நன்றி சொல்லுரீங்கள இல்லை திட்டரீங்கலான்னு

  //முதல் தடவையா களத்துல எறங்கர பாக்கலாம் டெப்பாசிட் கெடைக்குதான்னு ..//
  அதெப்படி கெடைக்காம போறதுன்னு பாத்துடலாம். கவலையே படாதீங்க.

 32. ஆஆஆஆஆ
  அடலேறு என்பவர் முந்திட்டாரே!

 33. //வந்துட்டோம்ல
  வந்துட்டோம்ல
  வந்துட்டோம்ல//

  வாங்க, வாங்க, வாங்க (நானும் மூணு தபா சொல்லிட்டேன்ல)

  //ஹையா
  மீ த பெஷ்டு//

  அடடா, அடலேறு முந்திகிட்டாரே

 34. //நன்றியை எந்த ஜ்டைல்ல சொல்லுவீங்க ?//

  அதை என் ஸ்டைல்ல சொல்லுவேன்/சொல்லுறேன்

 35. சினிமா சினிமா தொடர் பதிவு இங்கேபார்க்கவும்

 36. அட உண்மையத்தாங்க சொல்ற நல்ல இருக்கு உங்க

  பதிவு

 37. @ சுபாஷ்

  //ஆஆஆஆஆ
  அடலேறு என்பவர் முந்திட்டாரே!//

  அடலேறு என்பவர் அல்ல !!! அடலேறும் உங்கள் நண்பன்

  தான் சுபாஷ்.

  அடலேறு வலைப்பக்கம் வாருங்களேன்

 38. சுபாஷ், என்னுடைய பதிவை விட, உங்களுடைய பின்னூட்டங்களை மிகவும் ரசித்தேன். பின்னிட்டீங்க!

 39. //முழுதாக படித்து விட்டேன்
  எல்லா கேள்விகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

  எப்போ நீங்க உங்க சினிமா பதிவு போட போறீங்க?

 40. //முழுதாக படித்து விட்டேன்
  எல்லா கேள்விகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

  இதுல எதோ டபுள் மீனிங் இருக்குற மாதிரி இருக்கே

 41. ஃஃஅடலேறு என்பவர் அல்ல !!! அடலேறும் உங்கள் நண்பன்

  தான் சுபாஷ்.

  அடலேறு வலைப்பக்கம் வாருங்களேன்ஃஃ

  முதலில் வாழ்த்துக்கவிதை படித்தேன்.
  பின்னிட்டீங்க

 42. ஃஃசுபாஷ், என்னுடைய பதிவை விட, உங்களுடைய பின்னூட்டங்களை மிகவும் ரசித்தேன். பின்னிட்டீங்க!ஃஃ

  நன்றி மோகன்
  நம்ம தொழிலே இதானே.
  சரியா பண்ணணுமில்ல!!!

 43. ஃஃஎப்போ நீங்க உங்க சினிமா பதிவு போட போறீங்க?ஃஃ

  போட்டாச்சுங்க!!!

  போட்டு தமிழ்மணத்தில் இணைத்து வரமுன்னடியே உங்க கும்மல் ஆரம்பிச்சுதா!!!
  ஓடியாந்துட்டன்.
  ஒரு வாட்டி வெளிய போக வேண்டியிருக்கு.
  வந்து தா பாப்பேன். கோச்சுக்காதீங்க

 44. ஃஃஅடலேறு

  அக்டோபர் 17th, 2008 at 11:24 மு.பகல்

  //முழுதாக படித்து விட்டேன்
  எல்லா கேள்விகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

  இதுல எதோ டபுள் மீனிங் இருக்குற மாதிரி இருக்கேஃஃ

  ஹிஹி
  சிங்கிள் மீனிங்தாங்க
  ஆனா சரியானமாதிரி கண்டுபிடிக்கோணும்!!! ஹிஹி

 45. ஃஃஅடலேறு

  அக்டோபர் 17th, 2008 at 11:31 மு.பகல்

  நன்றிங்க சுபாஷ்.ஃஃ

  வெல்கம்மு!!!!!

 46. me the 50டிடிடிடிடிடிடிடி

 47. ////முழுதாக படித்து விட்டேன்
  எல்லா கேள்விகளையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்
  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

  இதுல எதோ டபுள் மீனிங் இருக்குற மாதிரி இருக்கே//

  ஆஹா, இது வஞ்ச புகழ்ச்சி பின்னூட்டமா. இதுக்கூட தெரியாத அப்பாவியா இருக்கேனே நான்.

 48. //நல்ல வேள அப்ப கண்டுபிடிக்காம போனாங்க
  ஹிஹி//

  //ஹம்ம்ம்
  என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்//

  உமக்கு ஏமையா வளர்ந்து வரும் ஒரு பதிவனை (ஹிஹி) பார்த்து காண்டு?

 49. //முதல் கேள்விக்கு நரியான பதில் சொல்லாமல் மழுப்பியதற்கு என் கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!//

  உடன்பிறப்பே, எத்தனையோ பேர் முதல் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்து இருக்கிறார்கள். அதில் ஏன் என்னை மட்டும் குறி வைக்கிறார்கள்?

 50. //தலைவரின் குசேலன்.ஃஃஃ
  பாராட்ரேன்
  உங்க நெஞ்சுரத்த பாராட்ரேன்!!!!//

  அது தான் தலைவரின் சொல்லிட்டோம்ல, அப்புறம் என்ன?

 51. //நல்லா எழுதி இருக்கிங்க… நண்பரே…
  எனக்கு என்னவோ சேலத்துசிங்கம் பட்டம் உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் போல இருக்கு…//

  ஒரு முடிவோடுத்தான் இருக்கீங்களோ! ஏன் இந்த வெறி?

 52. //ஆஹா அப்படியா!!!
  நொந்த நூடுள்ஸ் அனாலும் கூட்டமா ஆகணும்கற உங்க சமூக அக்கறய பாராட்ரன்!!!!//

  அப்போ தானே ஆறுதல் படுத்த நெறைய பேரு இருப்பாங்க. ஹிஹி

 53. ////ஃஃஆனால் உன்னாலே உன்னாலே திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்த்தேன்ஃஃ////

  //போலீஸ்…….. போலீஸ்//

  இப்படி ஒரு படமா? தெரியாம போச்சே?

 54. //பின்ன நம்ம சதான்னா சுவம்மாவா?//

  நல்ல வேலை, சதான்னா சோதாவா ன்னு கேக்காம விட்டீங்களே?

 55. //என்னது சேலத்து சிங்கத்த தாக்கிய படமா????
  தியேட்டர் அட்ரச சொல்லுங்க
  வந்து கிளிச்சுடுரோம்!!!!!//

  மறுபடி என்னை வச்சி காமெடியா? சேலம்ல படம் பாத்து ரொம்ப வருஷம் ஆச்சிங்க.

 56. //ஃஃவரலாறு (காட் பாதர்) – நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் செய்யப்பட்ட படத்தை பார்த்து அடைந்த பாதிப்பு இருக்கிறதேஃஃ
  ஹிஹி
  சேம் பிளட்!!!!//

  அப்பாடா, நம்ம கூட இன்னொருத்தரும் இருக்காரு.

 57. //ஃஃகண்ணுக்குள் நிலவு – பார்த்து கடுப்பு ஆனது ஒரு கதைஃஃ
  அதே சேம் பிளட்.
  ஆனா இந்தமுறை குறைவு. ஏன்னா நா டிவிலதா பாத்தே!!!//

  அதை டிவிடில வேற வாங்கி பாத்தீங்களா, ஹய்யோ ஹய்யோ!

 58. //ஆஹா
  ரொம்பத்தா நொந்துபோயிருக்கீங்க!!!!//

  ஓஹோ, நீங்க நொந்து போகலையோ? அப்போ உங்களுக்கு தருமபுரி டிவிடி எங்கயாவது கெடச்சா வாங்கி அனுப்பறேன். உங்க அட்ரஸ் கொடுங்க. ஆட்டோ அனுபினல்லாம் சரிபட்டு வரமாட்டீங்க. உங்களுக்கு தருமபுரி டிவிடி தான் சரி.

 59. //அப்ப ஸோ வ முழுசா பாத்திங்களா???
  உவ்வே!!!!!!!!//

  சா(Saw) 1/2 ரெண்டுமே முழுசா பாத்தேங்க. என்ன ஒரு கல்மனசு எனக்கு.

 60. //ஃஃமறைமுகத் தொடர்பு உள்ளது. தமிழ் படங்களை பார்ப்பதன் மூலமாக. ஃஃ
  மீ டு//

  இதை உங்க பதிவை பாத்து தெரிஞ்சிகிட்டேன்.

 61. //ஃஃதமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  மசாலா மற்றும் நல்ல படங்கள் வந்துக் கொண்டேதான் இருக்கும்.ஃஃ
  இது ஒரு நல்ல பதில்
  தமிழ் சினிமாவ இந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!!!!
  ஹிஹிஹி//

  அடடா, என்ன இப்படி சொல்லிட்டீங்க. நாணயத்தி இரு பக்கம் மாதிரி இது ரெண்டுமே இருக்கும், இருக்கணும்.

 62. //ஃஃநான் ஹாலிவுட் படங்களை வைத்து ஒப்பேற்றிக் கொள்வேன். தமிழர்களுக்கு தான் மிகவும் கடினமாக இருக்கும்.ஃஃ
  இப்படி பதிவுபோட கூட மேட்டர் கிடைக்காது!!!!
  ஹாஹா//

  இதை நான் யோசிக்கவே இல்லையே!

 63. //ஃஃசுபாஷ், என்னுடைய பதிவை விட, உங்களுடைய பின்னூட்டங்களை மிகவும் ரசித்தேன். பின்னிட்டீங்க!ஃஃ
  நன்றி மோகன்
  நம்ம தொழிலே இதானே.
  சரியா பண்ணணுமில்ல!!!//

  சரியா சொன்னீங்க. பார்ட் டைமா தான் கணினி தட்டற வேலைய செய்யறீங்களோ?

 64. //
  ஃஃஎப்போ நீங்க உங்க சினிமா பதிவு போட போறீங்க?ஃஃ
  போட்டாச்சுங்க!!!
  போட்டு தமிழ்மணத்தில் இணைத்து வரமுன்னடியே உங்க கும்மல் ஆரம்பிச்சுதா!!!
  ஓடியாந்துட்டன்.
  ஒரு வாட்டி வெளிய போக வேண்டியிருக்கு.
  வந்து தா பாப்பேன். கோச்சுக்காதீங்க//

  நாங்க எல்லாம் எம்புட்டு ஸ்பீடு.

  இதுக்கு எதுக்கு தப்ப நெனைக்க போறேன். நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்? (என்னது எப்படி பழகி இருக்கோம்னு கேக்கறீங்களா, ஹிஹி)

 65. 50 பின்னூட்டங்கள் போட்ட அஞ்சாநெஞ்சன் சுபாஷ் வாழ்க!

 66. உங்களோடு சேர்த்து மூன்று பேர் இந்த பதிவிற்கு அழைத்து விட்டார்கள் அவ்வ்வ்வ்வ்வ்

 67. கிரி, அப்போ இந்த தடவையாது சரியா பதிவு போட்டுடுங்க.

 68. குடுகுடுப்பை, மிக்க நன்றின்னேன். 🙂

 69. நானும்தொடர் பதிவு போட்டு உங்கள் வயிற்றில் பீர் வார்த்து விட்டேன்…
  பாத்துட்டு சொல்லுங்க பாஸ்…

 70. சூப்பர்….

  நாந்தான் அணிமாவ இழுத்து விட்டேன்….

 71. மகேஷ், நீங்க தானா அது? எப்போ பாரு அணிமா (இப்போ சுபாஷ்) இவங்களே என்னை தொடர் பதிவுல கோத்து விடறாங்க. நான் இவங்களை கொத்து விடனும். அதனால இனிமேல தொடர் பதிவுக்கு என்னை பர்ஸ்ட் கூப்டுங்க. அப்போ தான் நான் அணிமாவை மாட்டி விட முடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s