இளையவர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் – இந்தியா முன்னிலை

புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே 🙂 ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.

காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க், நகரத்தில் 2000 ம்ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது போட்டிகள் 2004 ம்ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பதக்கம் வென்ற சில இந்தியர்கள்: திரிபாதி கிருஷன் நந்து, குலே  சாரதா,  பூனம் ராணி, அர்ஜுன் குமார் இன்னும் பலர்.

இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்.

சரி, பதக்கங்கள் பட்டியலை பார்ப்போமா?

Medal Standings Gold Silver Bronze Total
1 India 33 26 17 76
2 Australia 24 19 22 65
3 England 18 9 14 41
4 South Africa 7 14 9 30
5 Canada 6 10 10 26

இதை பற்றி மேலும் அறிய இத்தளத்தை பாருங்கள்.

Advertisements

5 responses to “இளையவர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டுகள் – இந்தியா முன்னிலை

 1. //
  இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்
  //

  தொல்லைக்காட்சி நிலையங்கள் கண்டுக்குதோ இல்லியோ, அரசு விளையாட்டு துறையாவது ஒழுங்கா இவங்களுக்கு ஹெல்ப் பண்ணா அடுத்த ஒலிம்பிக்லயாவது இன்னும் பெர்ஃபாமன்ஸ் காட்லாம்!

 2. அது சரி, நீங்கள் சொல்வதை நான் வழி மொழிகிறேன்.

 3. //இந்தியா பெற்றுள்ள இவ்வெற்றியைப் பற்றி தொலைக்காட்சி நிறுவனங்கள் சரியாக கண்டுக்கொள்ளவே இல்லை. எல்லாரும் கிரிக்கெட் பற்றி மட்டுமே இன்னும் கவனம் செலுத்துகிறார்கள்//

  உண்மை தான் மோகன். இது மிக வருத்தம் அளிக்கிறது.

  ஊடகனால் லாபம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றன செய்திகளை கொடுக்காமல். நம்மவர்களும் இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிரிக்கெட் கிரிக்கெட் என்று அதன் பின்னே அலைகிறார்கள், ஒலிம்பிக் ல் தங்கம் வாங்க வில்லை என்றால் அப்புறம் குய்யோ முறையோ ன்னு கத்த வேண்டியது.

 4. கிரி, ஒன்றை சரியாகச் செய்யவில்லை என்றால் (அல்லது உப்பு சப்பில்லாத விஷயங்களை கூட) அதை பெரியதாக ஊதிக்காட்டும் ஊடகங்கள் இம்மாதிரி விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ தெரிய வில்லை. இவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த ஒலிம்பிக்கிற்கு தயார் செய்ய வேண்டியது நமது விளையாட்டுத்துறை கடமை. இதற்கு ஊடகங்களும் உதவி செய்ய வேண்டும். பார்ப்போம் செய்வார்களா என்று.

 5. வெற்றிபெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்க்ள்

  பதிவு வாசிக்கும் போது பின்னுட்டவேணும் என தோன்றியதை கிரி அவர்கள் அழகாக சொல்லியழருக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s