மின்சார சமாச்சாரம்

தமிழக அரசு(மின் துறை) சில நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் சம்பந்தமாக சில விஷயங்களை அறிவித்தது (அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு, என்னுடைய பதிவு எண்ணிக்கையை ++ செய்யவே இப்பதிவு):

1)தனியார் நடத்தும் விழாக்களுக்கு(ஆலயத் திருவிழாக்கள் நீங்கலாக) ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இது கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இருக்கலாம். இதை எல்லா கட்சி கூட்டங்களுக்கும் கடுமையாக அமுல்படுத்தவேண்டும். (இதை  தே மு தி க பொதுக்கூட்டம் அறிவித்த போதே அமுல்படுத்தி இருந்தால் நிறைய மின்சாரம் சேமித்து இருக்கலாமே, ஹிஹி)

2) நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாம்.

குறைந்தபட்சம் 20 மணி நேரம் என்று சொல்லி இருக்கிறார்கள் (நல்ல வேலை உஷாராக அதிகபட்சம் என்று சொல்ல வில்லை), அதை அமுல்படுத்தியும் உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் (??)

3) சில நிறுவனங்களுக்கிற்கு, தொழிற்சாலைகளிற்கு, அலுவலகங்களிற்கு மின்வெட்டிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) வீட்டு இணைப்புகளில் அதிகமாக மின்சாரம் உபயோகிப்போருக்கு 50% அதிகமாக கட்டணம் விதிக்கப்படும்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைப் பார்த்து இவ்வுத்தரவை ரத்து செய்து விட்டார்கள்.

இதை பற்றி, விஜயகாந்த் என்ன சொல்கிறார்? இந்த மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அவரிடம்  யோசனை இருக்கிறதாம். அதை சொன்னால் கருணாநிதி அதை செயற்படுத்தி விடுவார் என்பதால் அதை இப்போது சொல்ல மாட்டாராம்.  அடப்பாவிகளா, உங்கள் யோசனையை யார் செயல்படுத்தினால் என்ன, மக்கள் பயன்பெறுவார்களே, உங்களுக்கும்(விஜயகாந்திற்கு) பெயர் கிடைக்குமே? (நன்றி சிம்பிள் சுந்தர்!)

சரி மக்களே, அதை எல்லாம் விட்டுடுவோம். தமிழத்தில் தலைவிரித்தாடும் இந்த மின்வெட்டு பிரச்னைக்கு என்ன காரணம்(ங்கள்) என்பதை யாரவது தெரியப்படுத்தலாமே?

Advertisements

12 responses to “மின்சார சமாச்சாரம்

 1. //சரி மக்களே, அதை எல்லாம் விட்டுடுவோம். தமிழத்தில் தலைவிரித்தாடும் இந்த மின்வெட்டு பிரச்னைக்கு என்ன காரணம்(ங்கள்) என்பதை யாரவது தெரியப்படுத்தலாமே?//

  அட… அப்ப உங்களுக்கும் தெரியதா?….

 2. மின்வெட்டு பிரச்சனைக்கு காரணம் தேட முற்பட்ட உங்களை முதலில் வாழ்த்தி உங்கள் ஐயத்தை தீர்க்க விழைகின்றேன். ஒரு அமைச்சராலேயே விளக்க முடியாத கேள்வியின் பதிலை நீங்கள் அறிய முற்பட்டதை எண்ணினால் – உபநிஷத்துகளில் வரும் நசிகேதஸ் தான் ஞாபகத்திற்கு வருகிறார்!

  என்னதான் நாம் Global Warming என்று கரடியாய் கத்தினாலும் உலகம் பூராவும் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொண்டிருப்பது அனல் மின் நிலையங்கள் தாம். இதை எதிர்த்து ஓரளவு வெற்றி பெற்ற நாடுகள் சில உள்ளன – ஜப்பான் மற்றும் Scandinavian நாடுகள் அவற்றுள் சில.

  இப்படி இருக்கும் பொது நிலக்கரி உற்பத்தியில் நாம் (இந்தியா) கவனம் செலுத்தியிருக்கவேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் ( உதாரணத்திற்கு, விவசாயிகளின் எதிர்ப்பு, அரசியல் காரணங்களால் தொழிற்சாலையும் சுரங்கமும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நிறுவுதல்) இவை இன்று மிகவும் குறைந்து நாம் நிலக்கரியை இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். இதையாவது சரியாக செய்தோமா என்று கேட்டால், அதற்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சுட்டி:http://www.businessworld.in/index.php/Energy-Power/Running-Low-On-Coal.html. தற்பொழுது கையிருப்பில் உள்ள நிலக்கரியின் அளவு கிட்டத்தட்ட3 -4 வாரங்களுக்கான செலவிற்கு மட்டும்தான்.

  இதன் பாதிப்பு நன்றாகவே நம்மால் உணர முடிகின்றது. அதுவும் தமிழ்நாட்டில் NTPC யின் உற்பத்தி கிட்டத்தட்ட 59% சதவிகிதமாக உள்ளது source: http://tnebldc.org/reports/peakdet.pdf. இதன் தாக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் காற்றாலை மற்றும் அணு உலை மின்சாரமும் நம்மை கை விட்டிருக்கலாம் (அணு உலை மின்சாரம் குறைந்ததற்கான காரணங்கள் ஓர் தனி பதிவு). ஆனால் கோடை காலங்களில் மின் தட்டுப்பாட்டுக்கு அவை முக்கிய காரணங்கள் இல்லை.

  ஆனால் இது போன்ற மாரிக்காலங்களில் புனல் மின்சாரமும், மின் தேவை குறைவதும் (வீட்டு மற்றும் விவசாய தேவைகள்) மின் பகிர்மானம் சீரடைவதற்கு பெருமளவு உதவும். ஆனால் அவை கூட ஏன் இம்முறை கூடப்படவில்லை என்பதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை. TNEB -யின் கூற்றுப்படி அது கூட கிட்டத்தட்ட 50% அளவே உள்ளது: http://tnebldc.org/reports/peakdet.pdf.

  மேற்கூறியவை அனைத்தும் ‘technical reasons’ வகையை சார்ந்தவை. ஆனால் அரசியல் ரீதியாக இதற்கு பற்பல காரணங்கள் – பலதரப்பட்டவகளின் அலட்சிய போக்கு, பொதுநலமின்மை, நேர்மைக்குறைவு மற்றும் தொலைநோக்கின்மை ஆகியவற்றை கூறலாம். இத்தகைய அரசியல் காரணங்களினால் மின் உற்பத்தி பெருக்குவதை விட்டு விட்டவர்கள் – மனைகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க முனைந்த செயல் (side-effect ஆக சில நன்மைகள் இருப்பினும்) அரசியல்வாதிகளின் மேல் இருந்த அருவெறுப்பை மேலும் அதிகரிக்கத்தான் உதவும்.

 3. கூடுதுறை உங்களுக்கே தெரியாதா? அப்புறம் எனக்கு எப்படித் தெரியும்?

 4. பிரசாத், தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. அப்புறம் அந்த உபநிஷத்துகள் பற்றி எனக்கு அ, ஆ கூடத்தெரியாது.

  மின்பற்றாகுறைக்கு என்ன தொழில்நுட்ப காரணங்கள் என்பதை நானும் தேடிப் பார்த்தேன், ஆனால் ஒன்றும் கிட்டவில்லை. நிறைய பயனுள்ள தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக அலசியும் உள்ளீர்கள். இவ்வளவு தெளிவாக எழுதும் நீங்கள் ஏன் பதிவு எழுத ஆரம்பிக்க கூடாது?

 5. // நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுமாம்.

  கிராமத்தில் உள்ளவர்கள் என்ன பாவம் செய்தார்களோ?

  நல்ல பதிவு. அதைவிட பின்னூட்டம் நிறைய தகவலுடன் நன்றாக இருந்தது.

 6. என்ன கவர்ன்மெண்ட் இது?
  தம் அடிக்க கூடாதாம்…
  தண்ணி அடிக்க கூடாதாம்…
  கரண்ட் ஆறு மணி நேரம் தான் கொடுப்பாங்கலாம்…
  தினம் ஒரு மேம்பாலம் திறப்பாங்கலாம்…
  பாராட்டு விழவாம்….
  பெரியார் விருது தனக்கு தானே கொடுத்துக்குவாங்கலாம்…
  வாரிசுக்கு எல்லாம் மாதிததிய பதவியாம்….
  அரசு கேபிள் தான் பாக்கணுமாம்…
  தொடர் பதிவு போடணும்…
  பதிவுக்கு மறு பதிவு போட்டு ஊக்கப்படுததனும்…
  ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பா…
  இபபவே கண்ணா கட்டுது போங்க…
  எல்லாத்தையும் இந்த சூனா பாணா பாத்து கிட்டு தான் இருக்கேன்.

 7. கரண்ட் ஆறு மணி நேரம் தான் கொடுப்பாங்கலாம்…
  தினம் ஒரு மேம்பாலம் திறப்பாங்கலாம்…
  பாராட்டு விழவாம்….
  பெரியார் விருது தனக்கு தானே கொடுத்துக்குவாங்கலாம்…
  வாரிசுக்கு எல்லாம் மாதிததிய பதவியாம்….
  அரசு கேபிள் தான் பாக்கணுமாம்
  ithuvarai sari!

  தம் அடிக்க கூடாதாம்…
  தண்ணி அடிக்க கூடாதாம்…ithu aniyayam!
  kamala

 8. வாங்க குந்தவை. நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்.

  //கிராமத்தில் உள்ளவர்கள் என்ன பாவம் செய்தார்களோ?//

  தலைநகரங்களோடு ஒப்பிட்டால் சிறு நகரங்கள் பாவம் செய்தவை. சிறு நகரங்களோடு ஒப்பிட்டால் கிராமங்கள் பாவம் செய்தவை.

  //நல்ல பதிவு. அதைவிட பின்னூட்டம் நிறைய தகவலுடன் நன்றாக இருந்தது.//
  ஆமாம், பிரசாத் பயனுள்ள தகவல்கள் நிறைய தந்துள்ளார்.

 9. //இபபவே கண்ணா கட்டுது போங்க…
  எல்லாத்தையும் இந்த சூனா பாணா பாத்து கிட்டு தான் இருக்கேன்.//

  வாங்க இங்கிலிஷ்காரன், பாத்துகிட்டு இருந்தா போதாது. எதாவது செய்யுங்க 🙂

 10. கமலாம்மா, தங்கள் வருகைக்கு நன்றி. இங்கிலிஷ்காரனுடைய நியாயத்தைப் பற்றி பேசி இருக்கிறார் :).

 11. பதிவும் பின்னுட்டங்களும் நல்ல தகவல்களை கொண்டிருக்கிறது.

  எனக்கென்னமோ அனல் மின் நிலையங்களை தடுப்பது நல்லதென்றுதான் தோன்றுகிறது.

  அது தற்போதய தேவைகளுக்கு பயன்படும். ஆனால் பின்னால் வேறு சூழல் பிரச்சனைகள் ஏற்படும். அதை தீர்க்க முடியுமானால் முயற்சிக்கலாம்.

 12. வாங்க சுபாஷ். அனல் மின் நிலையங்களுக்கு இன்னும் சரியான மாற்றுமுறை நாம் வைத்து இருக்கிறோமா என்று தெரியவில்லை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s