மனிதச்சங்கிலி போராட்டமும் தமிழனின் தகுதியும்

சென்னையில் நடைபெறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தை பற்றி  புரட்சித் தமிழன் சத்யராஜ் வழக்கம் போல ஆவேசமாக பேசியிருப்பது என்னவென்றால்:

1) சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள்.

2) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இவர் சம்பந்தப்பட்ட துறை நடத்திய ஊர்வலத்தில் அவரது வீட்டில் முக்கியமான நிகழ்ச்சி இருந்ததால் இவரால் போக முடிய வில்லையாம். ஆனால் முதல்வர் அழைத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத எவருக்கும் தமிழகத்தில் இருக்கவே தகுதி இல்லையாம். ஹிஹி, முதல் விஷயத்தையும் இரண்டாம் விஷயத்தையும் படித்து விட்டு இப்படி யாரும் விதண்டா வாதம் செய்யக்கூடாது. அவருடைய வீட்டு பிரச்சினை தான் அவருக்கு முதலில், மற்றவை எல்லாம் அதற்குப்பின்தான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருக்கக் கூடாது.

புரட்சித் தமிழன் வீட்டில் மனிதச் சங்கிலி நடத்தும் அன்று எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் நடக்காது என்றும் நம்புவோமாக. அதே போல் தமிழகத்தில் இருக்க விருப்பப்படுபவர்கள் அனைவரும் அந்நாளன்று வீட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி இருந்தால் அவற்றை வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துக் கொள்ளுங்கள்..

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும் கலந்துக் கொள்ளாதவர்கள் தமிழத்தில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

சத்தியராஜ் ஒரு புரட்சித்தமிழன், எனவே அவர் ராமேஸ்வரம் போராட்டத்தில் அவரது வீட்டு நிகழ்ச்சியினால் கலந்துக் கொள்ள முடியாததால் எந்த பிரச்சினையயும் இல்லை. அதைப் பற்றி எந்த கருத்து கந்தசாமியும் கருத்தும் கூறவில்லை. இதே நிலைமையில் மற்றவர்கள் இருந்திருந்து அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சத்யராஜ் கலந்துக் கொண்டிருந்தால் அன்றைக்கு மேடை அமர்க்களப்பட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை விட, யாரை குறிவைத்துத் தாக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

Advertisements

16 responses to “மனிதச்சங்கிலி போராட்டமும் தமிழனின் தகுதியும்

 1. //ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மட்டும் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப் படுகிறார்கள் என்றும் கலந்துக் கொள்ளாதவர்கள் தமிழத்தில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லவதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை//

  சத்யராஜ் நியாயம் :-))))))))

 2. கிரி, இது சத்யராஜ் நியாயமா? அப்படி என்றால் ஒன்றும் கேட்க முடியாது. கேட்டால் நீ தமிழனா என்று கேட்பார்கள். நமக்கு எதற்கு வம்பு.

 3. அனைத்து இந்தியத்தமிழர்களுக்கும் முதற்கண் நன்றியைத்தெரிவிக்கிறேன்.

  உங்கள் பதிவிற்கும் நன்றி மோகன்

 4. உங்கள் பதிவிக்கும், உங்களுக்கும் நன்றி.

 5. நமக்குள் ஒற்றுமை ஏற்படாதவரை நமக்கு தாழ்வுதான் மோகன்

 6. கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இலங்கையில் போர் உச்சக்க்ட்டத்தில் உள்ளது. அப்போதெல்லாம் எங்கே போனார்களாம் இந்த அறிவாளிகள்??”

 7. மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

  அன்புடையீர்!

  தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது.

  இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே.

  யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும்.

  தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும்.

  ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.

  நன்றி

  இப்படிக்கு
  தங்கள் அன்புள்ள

  வீ. ஆனந்தசங்கரி
  தலைவர்- த.வி.கூ

 8. சுபாஷ், நீங்கள் நன்றி சொல்லும் அளவிற்கு நான் என்ன செய்துள்ளேன் என்று தெரிய வில்லை.

 9. பார்த்தீ தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. சுபாசிற்கு சொன்னது போல, நீங்கள் நன்றி சொல்லும் அளவிற்கு நான் பதிவு போட்டதாக நினைக்கவில்லை.

 10. காஞ்சனா தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  //நமக்குள் ஒற்றுமை ஏற்படாதவரை நமக்கு தாழ்வுதான் மோகன்//

  எங்கே, நம்ம ஆட்கள் அடுத்தவனை எப்படி வாரி விடுவது என்று தானே யோசிக்கிறார்கள்.

 11. ராஜ்கன்ஸ் (எ) அத்திரி காஞ்சனா தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  //கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இலங்கையில் போர் உச்சக்க்ட்டத்தில் உள்ளது. அப்போதெல்லாம் எங்கே போனார்களாம் இந்த அறிவாளிகள்??”//

  ஒரு வேளை இப்போது தான் அறிவு வந்ததோ? :p

 12. sankily தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

 13. நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

  தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  மீண்டும் பிறகு வருகிறேன் ..

  ( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

 14. தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!

  தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
  நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
  மேலதிக தகலவ்களுக்கு
  http://hisubash.wordpress.com
  மிக்க நன்றி.
  சுபாஷ்.

 15. Manitha sangili endra peril pala perai deebavalikku oorukku sella vidamal 100 roobaikku sangili amaitha nam thamizhargalum, oyathu peitha mazhaiyum oru vazhi paduthiyathai ninaikkum pothu evanum inimel deebavalikku oorukku sella maatan endru ninaikka thondriyathu.

 16. மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

  அன்புடையீர்!

  தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது.

  இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே.

  யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும்.

  தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும்.

  ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.

  நன்றி

  இப்படிக்கு
  தங்கள் அன்புள்ள

  வீ. ஆனந்தசங்கரி
  தலைவர்- த.வி.கூ

  V. Anantha sankari nan ungalin karuthukkalai Vazhimozhikirean.

  Overuvariyum correct.

  Ingea thamil nattil ullavarhal Prabhaharanai Thookkivaithu kondadukirarhal.

  Athu thavaru unmai nilai veru enpathai veli vida arasiyalvathikalin Ottu endra ottrai sollil irukkirathu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s