உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் படங்கள் = High dynamic range imaging

நான் சிறிது நாட்களாக புகைப்படக் கலையை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் முயற்சி பண்ணியவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாமே (உங்களுக்கு வேறு வழியில்லை) என்று இப்பதிவு.

சமீப காலமாகத்தான் நான் PIT (Photography in Tamil பதிவு) படித்து வருகிறேன். அதில் சொல்லி இருந்த HDR தொழில்நுட்பத்தை முயற்சித்து பார்க்க்கலாம் என்று எனது சோனி P73 கேமரா எடுத்து பார்த்தால் அப்பதிவில் சொல்லி இருப்பது போன்று “AEB” வசதி என் கேமராவில் இல்லை. எனினும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் (இது அது சரியோட  விக்கிரமாதித்தன் இல்லை) போல கேமராவில் அவ்வசதி இல்லையென்றால் என்ன நாம் முயற்சி செய்து பார்ப்போமென்று நான் செய்த ஆராய்ச்சிதான் இப்பதிவு.

எனக்கு புரிந்த வரை HDR என்றால் என்னவென்றால் ஒவ்வொரு exposure-ல் இருக்கும் சிறப்பு அம்சங்களை (அம்சா இல்லை) ஒன்றாக ஒரே படத்தில் இணைப்பது. தவறாக சொல்லி இருந்தால் திருத்தவும்.

கேமராவில் Programming(P) மோடுக்கு சென்று அதில் exposure -2 என்று அமைத்து முதல் படம் எடுத்தேன். அடுத்து exposure 0 என்று அமைத்து இரண்டாவது படம் எடுத்தேன்.  அடுத்து exposure 2 என்று அமைத்து மூன்றாவது படம் எடுத்தேன். அப்புறம் இதை எல்லாவற்றையும் கிம்பில் (gimp) போட்டு ஒரு கலக்கு கலக்கி ஒரு HDR படம் உருவாக்கினேன்.

உங்கள் பார்வைக்கு எல்லா படங்களும். பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இப்படங்கள் எடுப்பதற்கு முக்காலி(tripod) இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால் நீங்கள் எடுக்கும் 3 படங்களும் ஒரே கோணத்தில் மற்றும் நிலையில் இருந்தால் HDR ஆக மாற்றுவது சுலபம். என்னிடம் உள்ள பழைய சோனி P73(4 வருடங்கள்) க்கு எதற்கு முக்காலி வாங்கி செலவு செய்ய வேண்டும் என்று ஒரு யோசனை.

மேலும் விவரங்களுக்கு இத்தளங்களைப் பார்க்கவும்:

Photography-in-tamil
இதைப் பார்த்து தான் HDR என்று ஒரு தொழில் நுட்பம் உள்ளதென்றுத் தெரிந்துக் கொண்டேன்.

Instructables.com
http://www.instructables.com/id/HDR-photos-with-the-GIMP/HDR-photos-with-the-GIMP.pdf
இந்த தளத்தில் HDR படம் எப்படி உருவாக்குவது என்று புட்டு புட்டு வச்சி இருக்காங்க.

“உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் படங்கள்” என்கின்ற தலைப்பைக் கொடுத்து உதவிய சர்வேசனுக்கு மிக்க நன்றி.

Advertisements

19 responses to “உயர்ந்த ஆற்றல்மிகு தொடர் படங்கள் = High dynamic range imaging

 1. இந்தப்பதிவில் இருந்து தெரிந்தது என்னவென்றால் அம்சா என்று யாரோ இருக்காங்க.

 2. மோகன்,
  நல்ல முயற்சி.

  மூலப் படம், ‘பளிச்’ கம்மியா இருக்கரதால HDR படத்திலும், ‘பளிச்’ கம்மியாயிடுச்சு.

  என் அனுபவத்த்தில், நல்ல கலர் வெரைட்டி இருக்கர படங்கள், hdr பண்ணும்ப்போது நல்லாவருது.

  SLRக்கு மாறுங்க தல.:)

 3. ச்சும்மா…கலாய்க்கத்தான்…மேலே இருப்பது..

  உண்மையிலியே தங்கள் பதிவைப்பார்த்துதான் படம் எடுப்பது சம்ப்ந்தமான பதிவு இருப்பது பற்றி தெரிந்து கொண்டேன்

  நன்றி…

 4. நல்லா படம் புடிக்க வாழ்த்துக்கள் நைனா

 5. நல்லா மற்றும் நல்ல நல்ல படம் புடிக்க வாழ்த்துக்கள் நண்பு

 6. ஒரு நாயகன் உருவாகிறான் …. ( நாயகன் இடத்துல கலைஞன் போட்டுக்கோங்க)

 7. ஹாய் …
  நல்ல வந்துகீதுப்பா…
  பெர்சு பெர்சா சொல்ற … நீ பெரிய ஆளுதான்பா

 8. Oorukku oru naayagan thaan antha Naayagan yaaru namma thala J.K. Ritheesh thaan.

 9. So plz give some other “pattam” for our mohan annathai.

 10. //இந்தப்பதிவில் இருந்து தெரிந்தது என்னவென்றால் அம்சா என்று யாரோ இருக்காங்க.//

  எவ்ளோ உருப்படியான பதிவை போட்டாலும் கூடுதுறையை பாருங்க, எதை கேக்கராருன்னு.

 11. //மோகன்,
  நல்ல முயற்சி.

  மூலப் படம், ‘பளிச்’ கம்மியா இருக்கரதால HDR படத்திலும், ‘பளிச்’ கம்மியாயிடுச்சு.

  என் அனுபவத்த்தில், நல்ல கலர் வெரைட்டி இருக்கர படங்கள், hdr பண்ணும்ப்போது நல்லாவருது.

  SLRக்கு மாறுங்க தல.:)//

  சர்வேசன்,
  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  ஆமாம், மூல படங்கள்(அதாவது source) ஒன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை.

  ஆம், உங்கள் பதிவில் இருக்கும் கலர் புல் படங்களைப் பார்த்தாலே புரிகிறது.

  SLRக்கு பட்ஜெட் தாங்காது சர்வேசா. 🙂

 12. //ச்சும்மா…கலாய்க்கத்தான்…மேலே இருப்பது..

  உண்மையிலியே தங்கள் பதிவைப்பார்த்துதான் படம் எடுப்பது சம்ப்ந்தமான பதிவு இருப்பது பற்றி தெரிந்து கொண்டேன்

  நன்றி…//

  என்னமோ போங்க, அம்சாவை பத்தி பேசிட்டு இப்போ கலாவை பத்தி பேசறீங்க. PIT பாருங்க, பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன.

 13. //நல்லா மற்றும் நல்ல நல்ல படம் புடிக்க வாழ்த்துக்கள் நண்பு//

  நண்பன் எதை செஞ்சாலும் ஆதரிக்கற நீதானையா ஒரு உண்மையான நண்பன். திரும்ப சொல்லுறேன், யு ஆர் மை பெஸ்ட் பிரண்ட்.

 14. //ஒரு நாயகன் உருவாகிறான் …. ( நாயகன் இடத்துல கலைஞன் போட்டுக்கோங்க)//

  ரெண்டுமே கமல் படம் ஆச்சே!

 15. //ஹாய் …
  நல்ல வந்துகீதுப்பா…
  பெர்சு பெர்சா சொல்ற … நீ பெரிய ஆளுதான்பா//

  உண்மையாவா, ரெம்ப டேன்க்சு! நான் உன்னை விட சின்ன பையன் தான்.

 16. எவனோ ஒருவன் என்கின்ற இங்கிலிஷ்காரனே, எந்த பிரச்சனயா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். இப்படி தீக்கற மாதிரி பேசக்கூடாது. சரியா? நான் ரெம்ப பாவம்.

 17. Annachi…Enna ippadi solliputeega…

  Right vidunga…

 18. //Annachi…Enna ippadi solliputeega…

  Right vidunga…//

  இங்கிலிஷ்காரன், நீங்க ரித்தீஷ் பத்தி பேசினவுடனே எனக்கு பயம், அதான்.

 19. cha cha neenga bayapadaatheeya….

  avar vazhi thani vazhi…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s