Monthly Archives: நவம்பர் 2008

கன்னாபின்னாச் செய்திகள் 3


கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து இதோ கன்னாபின்னா செய்திகள் 3 உங்களுக்காக.

50

போட்டிச் செய்திகள்

கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம், ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.(இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு)


ஏடாகூடச் செய்திகள்

.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்! (கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உண்மைகளைச் சொன்னதாலா?).

உசிலம்பட்டியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.(நல்ல வேளை அந்த உறவினர்களும் பேருந்து மீது கல் வீசாமால் அமைதியாக மறியல் செய்தார்களே).

இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த, தமிழகத்தில் இருந்து 1500 மாணவர்கள் சிறப்பு ரெயிலில் டெல்லி சென்றனர்.(இதில் ராமதாஸ், கருணாநிதி மற்றும் பல அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரபலங்களின் குழந்தைகள் அல்லது  பேரன், பேத்திகள் இருக்கின்றார்களா?).

புதிய அமைச்சரவையில் எதிர்க்கட்சியினருக்கும் பதவி: ஒபாமா!(எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்).

பொதுக்கூட்டங்களில் மாவட்டங்களைச் சேர்ந்த எந்த ஒரு தனி நபரையும் புகழ்ந்து பேசக்கூடாது என கட்சியினருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய கட்டளை பிறப்பித்துள்ளார்.(என்ன சொல்ல வராங்கன்னு புரியுதா?).
.

சிரிப்புச் செய்திகள்

மாணவர்களை ஜெ., வைகோ தூண்டி விட்டிருக்கலாம்: கருணாநிதி (ஹையோ ஹையோ).

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், விஜயகாந்த் தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் (‘மரியாதை’ படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை -விஜயகாந்த்)


உருப்படியானச் செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கே-15 ரக ஏவுகணையை, முதன் முறையாக தரையில் இருந்து ஏவி இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை நடத்தியது(12/நவம்பர்).

இந்தியா, நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன்-1’ செயற்கைக்கோள், திட்டமிட்டபடி நிலவின் வட்டப்பாதையில் இறங்கியதன் மூலம் இத்திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது

ஆர்ப்பாட்டச் செய்திகள்

  • கரூரில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
  • அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்
  • சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கள்ளக் குறிச்சி, பரமக்குடி ஆகிய இடங்களில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

பின்குறிப்பு 1:
இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.

பின்குறிப்பு 2:
ஏய் டண்டணக்கா டணக்குணக்கா, இத்தோடு 50 பதிவு போட்டாச்சி. மக்கள்  இப்போது போல எப்போதும் தர வேண்டும்.

முந்தைய கன்னாபின்னாச் செய்திகள்

Advertisements

எதற்கு ராஜினாமா?


இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள  ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் 11/நவம்பர் அன்று சட்டசபையில் கேட்டுள்ளனர். சபாநயாகர் அதைப் பற்றி பேச அனுமதிக்காததால் வழக்கம் போல சபை வெளிநடப்பு செய்து விட்டார்கள்(கூடவே மதிமுகவும் என்பதை சொல்ல வேண்டுமா?).

எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இம்மாதிரி எதிர்கட்சிகள் ராஜினாமா செய்ய சொல்லி கேட்கலாமா? (மத்திய அரசால் கலைக்கப் படுவது வேறு விஷயம்).

எது எதற்குத்தான் நம் நாட்டில் ராஜினாமா செய்ய சொல்லுவார்களோத் தெரியவில்லை. இதே இவர்கள் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது இலங்கை தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும்போதோ தமிழக அரசு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அவற்றை செய்ய தவறி, அப்பொழுது ராஜினாமா செய்ய சொல்லி கேட்டால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் கட்சி தலைவிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் ஒரு அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பதை என்னவென்று சொல்வது? கட்சி தலைமைக்கு இவர்கள் விசுவாசமாக நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒட்டு போட்டு மக்களுக்கு எந்தக் கட்சியும் விசுவாசமாக நடந்துக் கொள்வதுப் போன்ற அறிகுறியேத்  தெரியவில்லை.

இதுவரைக்கும் ஆளும் காட்சியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரிய எந்த எதிர் கட்சியினரும் தாங்கள் ஆளும்கட்சியாக இருந்தப்போது (எந்த காரணத்திற்காக மற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கிறார்களோ அந்த காரணங்களுக்குக்கூட) அதே காரணங்களுக்காக ராஜினாமா செய்ததில்லை.

இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு நாளை எதிர் (எதிரி ?) கட்சியானால் இதைப் போன்றே, அல்லது இதை விட உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட ஆளும் அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பார்கள். திமுகவோ அதிமுகவோ கழகங்களிற்கிடையே எவ்வேறுபாடும் இல்லை. மத்திய அரசில் திமுகவை காங்கிரஸ் என்றும் அதிமுகவை பிஜேபி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  நம் திராவிட கழகங்களைப் போன்றே மற்ற மாநிலங்களில் அம்மாநிலக் கட்சிகள் எப்படி  இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆக மொத்தத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால் லாஜிக் பார்க்க கூடாது மற்றும் செலக்டிவ் அம்னீசியா வியாதி இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சி என்கின்ற கம்பெனியை திறமையாக நடத்த முடியும்.

இப்பதிவை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும் (பதிவையும் ரீ-மேக் செய்ய ஆரம்பிச்சிட்டோம்ல!!!!)

எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?


(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர்  தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம்  கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.

இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?

பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.

வித்தியாசமான உபகரணங்கள்


அண்மையில் Engadget தளத்தில் சில வித்தியாசமான உபகரணங்களைப் பற்றி வெளியிட்டு இருந்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமென்று இப்பதிவு.

USB தம்ப் டிரைவ் (அதாவது கட்டை விரல் சேமிப்பி) உண்மையிலே எப்படி இருக்க வேணடும்?
usbrealthumbdrive

முட்டைகோஸ் சேமிப்பி எப்படி இருக்கும்?

usb_cabbage

தொலைபேசியை ஹை ஹீல் செருப்பில் வைத்தால் எப்படி இருக்கும்?

Highheel shoe

விரல்களுக்கு ஸ்கேடிங் போர்டா?

skate

இது மௌஸ் பேடா இல்லை ட்ரம்சா ?

finger-drum-mousepad
வெப் கேமராவில இப்படி கூட செய்யலாமா?

092608_tf_webcam

யூஎஸ்பி ஹப்?

uhub001200_02_l

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதம்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்களைப் பற்றியும் அதற்குப் பின் ஏற்பட்ட கேள்விகளைப் பற்றியும் ஒருப்பதிவு. இது லேட் தான், ஆனால் லேட்டஸ்டா என்றுத் தெரியாது 🙂

விஜயகாந்திற்கு அவர் கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் பிடித்து வைத்திருந்தனராம். துண்டு போட்டுவைத்து இருந்தனரா என்றுத் தெரியவில்லை.

அஜீத் மற்றும் விஜய் சந்த்திப்போது அவர்கள் கைகுலுக்க முயன்றப்போது அதை அங்கிருந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப் போட்டோ போட்டி போட்டுள்ளனர். இதைப்பார்த்து ராதாரவி ஆவேசமாகி “இது நட்சத்திர இரவு அல்ல, போய் உட்காருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த போட்டோகிராபர்களை என்னவென்றுச் சொல்வது? பாவம் அவர்களும் இந்தப் புகைப்படங்களைப்போட்டு நாலு காசு பார்க்க வேண்டாமா?

உண்ணாவிரத மேடையிலிருந்த நடிகைகளைப் பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதி நடிக/நடிகயைர்கள் சார்பாக நிதி திரட்டப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

இந்த நிதிக்கு ரஜினி மட்டுமே 10 லட்சம் அளித்தார். கமல் மற்றும் சிவக்குமார் ஆளுக்கு 5 லட்சம் கொடுத்தனர். லாரன்ஸ் 10 லட்சங்கள் நிதி திரட்டி அவருடையப் பணம் 2 லட்சங்களோடு 12 லட்சங்கள் கொடுத்துள்ளார். வழக்கம்போல சிலர் ரஜினி பேசியதை வைத்து அறிவி ஜீவித்தனமாக கேள்வி கேட்டுவிட்டனர். அவர் கொடுத்த 10 லட்சங்களைப் பற்றி மறந்துவிட்டனர். ஆனால் அவர் நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே என்றுக் கேட்பவர்கள் இப்பொழுது கொடுத்த பணத்தை வசதியாக மறந்துவிடுவார்கள். நதிநீர் இணைப்புப் பற்றி இன்னும் எந்த செயலும் ஆரம்பிக்காதப்போது அவர் எதற்குப் பணம் இப்போதே கொடுக்க வேண்டுமென்றுப் புரியவில்லை. அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதற்கும் இவர்கள் ஏதேனும் ஒரு அர்த்தம் கற்பிப்பர். நல்லவேளை ரஜினியைப் போன்று கமல், ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.

மென்பொருளும் நானும் – தொடர் பதிவாம்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் சுபாஷிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இத்தொடர்ப்பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு வேண்டுகோள். இனி யாரேனும் தொடர் பதிவிற்கு கூப்பிடுபவர்கள் முதலில் என்னைக் கூப்பிடுங்கள். அப்போதுதான் இதுவரை என்னை நிறைய தொடர் பதிவுகளுக்கு இழுத்து விட்ட அணிமா, சுபாஷ் போன்றவர்களை நான் இழுக்க முடியும்.ஹிஹி

நான் உபயோகிப்பது லினக்ஸ் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள். ஆனால் நிறைய திறந்த நிரல் (open source) மென்பொருட்கள் விண்டோஸுக்கும் உள்ளன.

நான் உபயோகிக்கும் இயக்குத்தளம்(Operating System) பெடோரா லினக்ஸ், தற்போதைய வெளியீடு எண் 9. நவம்பர் 25 ம தேதி பெடோரா லினக்ஸ் 10 வெளியீடாகப் போகிறது. இதல்லாமல் நான் உபுண்டு லினக்சும் அவ்வபொழுது உபயோகிப்பது உண்டு. உபுண்டு 8.10 அக்டோபர் 30 அன்று வெளியானது.

நான் அதிகமாக உபயோகிக்கும் மென்பொருட்கள்:

லினக்ஸ் என்பதால் நான் நெருப்பு நரி, ஓபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களையே உபயோகிக்கிறேன்.

நெருப்பு நரியில் நான் உபயோகிக்கும் சில எக்ஸ்டென்ஷன்கள்

  • நெருப்பு நரி விடியோ தரவிறக்க உதவியாளர்: இது யூட்யூப் போன்ற தளங்களிலிருந்து விடியோக்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படும்.
  • நீங்கள் அலுவலகத்தில் ப்ராக்சி(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ராக்சி) உபயோகிக்க வேண்டி இருந்தால், வீட்டில் அதை உபயோக்கிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மடிக்கணினி உபயோகிப்பவராக இருந்தால்) பாக்சி ப்ராக்சி உபயோகிக்கலாம். ஒரு சொடுக்கலில் (single click) நீங்கள் உங்களுக்குத் தேவையான ப்ராக்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது ப்ராக்சியை செயல் இழக்கச் செய்யலாம்.
  • தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் ஆட்-ஆன் DownThemAll உபயோகப்படுத்தி பாருங்கள் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
  • இன்னும் பல உபயோகமான ஆட்-ஆன்களுக்கு இத்தளத்தை பாருங்கள். About

கிம்ப் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் மென்பொருள் (அடோபி போட்டொஷாப் போன்று)
கேரைட் – எளிய கேடிஈ தொகுப்பாளர் மென்பொருள்
கேடார்ரன்ட் – படங்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் மென்பொருள்
டிஜிகேம் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் கேடிஈ-யின் மென்பொருள், இதில் உள்ள சிறப்பு புகைப்படங்களை குழுக்களாக பராமரிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் அனைத்துப் புகைப்படங்களிற்கு ஓரக்கோடு/சட்டம்(border/frame) போட விரும்பினால் டிஜிகேம் சிறந்த வழி

அக்ரெகேட்டர் – RSSFeed படிக்க
அமரோக் – பாடல்கள் கேட்க
விஐ(ம) – சக்திவாய்ந்த தொகுப்பாளர். விசுவல்(visual) கமாண்டின் சுருக்கமே விஐ – சக்தி வாய்ந்த
பிட்ஜின் – இதன் வழியாகத்தான் யாஹூமற்றும் ஐ.ஆர்.சி சேட் செய்வேன்.
காண்டாக்ட் – கேடிஈ-யின் PIM (Personal Information Manager) மென்பொருள்.
விஎல்சி – படம் பார்க்க, இதன் மூலமாக நீங்கள் பார்க்கும் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம்.
அடாசிட்டி – ஒலிப் பதிவு செய்யும் மென்பொருள்
கே3பி – சிடி/டிவிடி பதிவு செய்ய உதவும் மென்பொருள்
யம் எக்ஸ்டெண்டர்(யமெக்ஸ்/yumex) – மென்பொருள் நிறுவ
தண்டர்பேர்ட் – ஈமெயில் அனுப்ப/படிக்க

ஏதோ என் புருஷனும் கச்சேரிக்கு போறான் என்று சொல்லும் விதமாக நானும் ஒரு தொடர் பதிவு போட்டு விட்டேன். இப்பொழுது நான் சிலரை இதில் மாட்டி விட வேண்டும்.

1. அடலேறு
2. இங்கிலிஷ்காரன்
3. குந்தவை
4. சர்வேசன்

அழைக்கப்பட்ட அனைவரும் தயவு செய்து பதிவை போட்டு விடுங்கள். இல்லையென்றால் ஆட்டோவெல்லாம் வராது. அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு 5000 ரூபாய் காசோலையை அனுப்பிவிடுங்கள். அவ்வளவுதான்.

சேலம் தினம்


நவம்பர் 1 (இன்று தான்) சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது.

சேலம் நகராட்சி 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்படவுள்ளது.

அப்போதைய சேலம் நகராட்சி அவைத்தலைவராக(chairman) இருந்தவர் அர்புத்னாட் (Arbuthnott), 1917 ல் ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார். சேலம் ஜூன் 1 1994 ல் மாநகராட்சியாக ஆனது. டாக்டர் சூடாமணி அப்போதைய மேயராக இருந்தார். இப்போது ரேகா பிரியதர்ஷிணி மேயராக உள்ளார்‌(இவர்தான் சேலத்தின் முதல் பெண் மேயர், தமிழகத்திலியே இவர்தான் முதலா? தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

சேலம் வரலாறு
இப்பதிவின் மூலம், நன்றி தருங்

சேலம் பற்றிய அதிக தகவல்களை நேரம் கிடைக்கும்போது தொகுத்தளிக்கிறேன்.

சேலம் பற்றிய தகவல்களை அன்றாடம் அறிய