ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்களைப் பற்றியும் அதற்குப் பின் ஏற்பட்ட கேள்விகளைப் பற்றியும் ஒருப்பதிவு. இது லேட் தான், ஆனால் லேட்டஸ்டா என்றுத் தெரியாது 🙂

விஜயகாந்திற்கு அவர் கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் பிடித்து வைத்திருந்தனராம். துண்டு போட்டுவைத்து இருந்தனரா என்றுத் தெரியவில்லை.

அஜீத் மற்றும் விஜய் சந்த்திப்போது அவர்கள் கைகுலுக்க முயன்றப்போது அதை அங்கிருந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப் போட்டோ போட்டி போட்டுள்ளனர். இதைப்பார்த்து ராதாரவி ஆவேசமாகி “இது நட்சத்திர இரவு அல்ல, போய் உட்காருங்கள்” என்று சொல்லியுள்ளார். இந்த போட்டோகிராபர்களை என்னவென்றுச் சொல்வது? பாவம் அவர்களும் இந்தப் புகைப்படங்களைப்போட்டு நாலு காசு பார்க்க வேண்டாமா?

உண்ணாவிரத மேடையிலிருந்த நடிகைகளைப் பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதி நடிக/நடிகயைர்கள் சார்பாக நிதி திரட்டப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது.

இந்த நிதிக்கு ரஜினி மட்டுமே 10 லட்சம் அளித்தார். கமல் மற்றும் சிவக்குமார் ஆளுக்கு 5 லட்சம் கொடுத்தனர். லாரன்ஸ் 10 லட்சங்கள் நிதி திரட்டி அவருடையப் பணம் 2 லட்சங்களோடு 12 லட்சங்கள் கொடுத்துள்ளார். வழக்கம்போல சிலர் ரஜினி பேசியதை வைத்து அறிவி ஜீவித்தனமாக கேள்வி கேட்டுவிட்டனர். அவர் கொடுத்த 10 லட்சங்களைப் பற்றி மறந்துவிட்டனர். ஆனால் அவர் நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே என்றுக் கேட்பவர்கள் இப்பொழுது கொடுத்த பணத்தை வசதியாக மறந்துவிடுவார்கள். நதிநீர் இணைப்புப் பற்றி இன்னும் எந்த செயலும் ஆரம்பிக்காதப்போது அவர் எதற்குப் பணம் இப்போதே கொடுக்க வேண்டுமென்றுப் புரியவில்லை. அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதற்கும் இவர்கள் ஏதேனும் ஒரு அர்த்தம் கற்பிப்பர். நல்லவேளை ரஜினியைப் போன்று கமல், ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.

Advertisements

12 responses to “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதம்

 1. //நல்லவேளை ரஜினியைப் போன்று கமல், ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.//

  உண்மைங்க.

 2. Tharmathin vaazhvu thannai soodhu kavvum…
  Iruthiyil tharmame vellum

 3. Back nu sonnathum ethukku thirimbi paakureenga??
  naan munnadi thaan irukken ..

 4. //
  அவர் மட்டும் தாமதமாக வந்திருந்தால் தமிழினத்துரோகி என்று ஒரு பட்டமளித்திருப்பார்கள்.
  //

  ரஜினியை வச்சித்தான் அவங்களுக்கு வருஷத்தில பாதி நாளு பொழப்பே..அதனால அவரு எல்லாருக்கும் முன்னாடி வந்தாலும் துரோகிம்பாங்க..பின்னாடி வந்தாலும் துரோகிம்பாங்க… எப்பிடின்னா பொழப்பு ஓடணும்ல?

 5. //ஆனால் அவர் நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே என்றுக் கேட்பவர்கள் இப்பொழுது கொடுத்த பணத்தை வசதியாக மறந்துவிடுவார்கள்.
  என்னங்க பண்ணறது இப்போ ரஜினிய திட்டறது தான் பகுத்தறிவு, தமிழார்வம், தமிழ் உணர்வு!! பத்திரிக்கை வியாபாரம் டல் ஆனா ரஜினி படத்த போட்டு ஒரு கவர் ஸ்டோரி எழுதனும்.

 6. // உண்மைங்க. //

  வாங்க சக்தி, தங்கள் முதல் வரவிற்கும் கருத்திக்கும் மிக்க நன்றி.

 7. இங்கிலிஷ்காரன், பேருக்கு எத்த மாதிரி இங்கிலீஷ்(taminglish) லயே டைப் அடிச்சி இருக்கீங்க 🙂
  உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

 8. //
  vantutten…..
  i’m back
  //
  backnu சொல்லிடு ஒரு கருத்தும் சொல்லாம போனா எப்படி?

 9. //
  Back nu sonnathum ethukku thirimbi paakureenga??
  naan munnadi thaan irukken ..
  //

  காமெடியா?

 10. //ரஜினியை வச்சித்தான் அவங்களுக்கு வருஷத்தில பாதி நாளு பொழப்பே..அதனால அவரு எல்லாருக்கும் முன்னாடி வந்தாலும் துரோகிம்பாங்க..பின்னாடி வந்தாலும் துரோகிம்பாங்க… எப்பிடின்னா பொழப்பு ஓடணும்ல?//

  அது சரி நீங்க சொன்னது சரி. இப்போவே சில அறிவு ஜீவிகள், ரஜினி அந்த உண்ணா விரத மேடையில பேசின அப்புறம் சத்தியராஜ் ரஜினியை பாராட்டினதை வச்சி அரசியல் பண்ணுறாங்க. ஹய்யோ ஹய்யோ. இவங்களை எல்லாம் நெனச்சா எனக்கு …..

 11. //என்னங்க பண்ணறது இப்போ ரஜினிய திட்டறது தான் பகுத்தறிவு, தமிழார்வம், தமிழ் உணர்வு!! பத்திரிக்கை வியாபாரம் டல் ஆனா ரஜினி படத்த போட்டு ஒரு கவர் ஸ்டோரி எழுதனும்.//

  புவனேஷ் தங்கள் கருத்திக்கு மிக்க நன்றி. அவ்வபோது எட்டிபாருங்க.

  சரியாகச் சொனீர்கள், ரஜினியை எதிர்த்தால் அவன் புரட்சி/மறத் தமிழன். ஆவி ரஜினியை வச்சி ஒரு கவர் ஸ்டோரி போட்டுடாங்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s