மென்பொருளும் நானும் – தொடர் பதிவாம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் சுபாஷிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இத்தொடர்ப்பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு வேண்டுகோள். இனி யாரேனும் தொடர் பதிவிற்கு கூப்பிடுபவர்கள் முதலில் என்னைக் கூப்பிடுங்கள். அப்போதுதான் இதுவரை என்னை நிறைய தொடர் பதிவுகளுக்கு இழுத்து விட்ட அணிமா, சுபாஷ் போன்றவர்களை நான் இழுக்க முடியும்.ஹிஹி

நான் உபயோகிப்பது லினக்ஸ் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள். ஆனால் நிறைய திறந்த நிரல் (open source) மென்பொருட்கள் விண்டோஸுக்கும் உள்ளன.

நான் உபயோகிக்கும் இயக்குத்தளம்(Operating System) பெடோரா லினக்ஸ், தற்போதைய வெளியீடு எண் 9. நவம்பர் 25 ம தேதி பெடோரா லினக்ஸ் 10 வெளியீடாகப் போகிறது. இதல்லாமல் நான் உபுண்டு லினக்சும் அவ்வபொழுது உபயோகிப்பது உண்டு. உபுண்டு 8.10 அக்டோபர் 30 அன்று வெளியானது.

நான் அதிகமாக உபயோகிக்கும் மென்பொருட்கள்:

லினக்ஸ் என்பதால் நான் நெருப்பு நரி, ஓபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களையே உபயோகிக்கிறேன்.

நெருப்பு நரியில் நான் உபயோகிக்கும் சில எக்ஸ்டென்ஷன்கள்

 • நெருப்பு நரி விடியோ தரவிறக்க உதவியாளர்: இது யூட்யூப் போன்ற தளங்களிலிருந்து விடியோக்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படும்.
 • நீங்கள் அலுவலகத்தில் ப்ராக்சி(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ப்ராக்சி) உபயோகிக்க வேண்டி இருந்தால், வீட்டில் அதை உபயோக்கிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மடிக்கணினி உபயோகிப்பவராக இருந்தால்) பாக்சி ப்ராக்சி உபயோகிக்கலாம். ஒரு சொடுக்கலில் (single click) நீங்கள் உங்களுக்குத் தேவையான ப்ராக்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது ப்ராக்சியை செயல் இழக்கச் செய்யலாம்.
 • தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் ஆட்-ஆன் DownThemAll உபயோகப்படுத்தி பாருங்கள் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
 • இன்னும் பல உபயோகமான ஆட்-ஆன்களுக்கு இத்தளத்தை பாருங்கள். About

கிம்ப் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் மென்பொருள் (அடோபி போட்டொஷாப் போன்று)
கேரைட் – எளிய கேடிஈ தொகுப்பாளர் மென்பொருள்
கேடார்ரன்ட் – படங்களை தரவிறக்கம் செய்ய உபயோகப்படுத்தும் மென்பொருள்
டிஜிகேம் – புகைப்படங்களை மெறுகேற்ற உதவும் கேடிஈ-யின் மென்பொருள், இதில் உள்ள சிறப்பு புகைப்படங்களை குழுக்களாக பராமரிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் அனைத்துப் புகைப்படங்களிற்கு ஓரக்கோடு/சட்டம்(border/frame) போட விரும்பினால் டிஜிகேம் சிறந்த வழி

அக்ரெகேட்டர் – RSSFeed படிக்க
அமரோக் – பாடல்கள் கேட்க
விஐ(ம) – சக்திவாய்ந்த தொகுப்பாளர். விசுவல்(visual) கமாண்டின் சுருக்கமே விஐ – சக்தி வாய்ந்த
பிட்ஜின் – இதன் வழியாகத்தான் யாஹூமற்றும் ஐ.ஆர்.சி சேட் செய்வேன்.
காண்டாக்ட் – கேடிஈ-யின் PIM (Personal Information Manager) மென்பொருள்.
விஎல்சி – படம் பார்க்க, இதன் மூலமாக நீங்கள் பார்க்கும் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம்.
அடாசிட்டி – ஒலிப் பதிவு செய்யும் மென்பொருள்
கே3பி – சிடி/டிவிடி பதிவு செய்ய உதவும் மென்பொருள்
யம் எக்ஸ்டெண்டர்(யமெக்ஸ்/yumex) – மென்பொருள் நிறுவ
தண்டர்பேர்ட் – ஈமெயில் அனுப்ப/படிக்க

ஏதோ என் புருஷனும் கச்சேரிக்கு போறான் என்று சொல்லும் விதமாக நானும் ஒரு தொடர் பதிவு போட்டு விட்டேன். இப்பொழுது நான் சிலரை இதில் மாட்டி விட வேண்டும்.

1. அடலேறு
2. இங்கிலிஷ்காரன்
3. குந்தவை
4. சர்வேசன்

அழைக்கப்பட்ட அனைவரும் தயவு செய்து பதிவை போட்டு விடுங்கள். இல்லையென்றால் ஆட்டோவெல்லாம் வராது. அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு 5000 ரூபாய் காசோலையை அனுப்பிவிடுங்கள். அவ்வளவுதான்.

Advertisements

13 responses to “மென்பொருளும் நானும் – தொடர் பதிவாம்

 1. Annaachi unga theerpukku kattu pattu 18 pattiyum paakura maathiri oru pathiva pottu vitten…

 2. நன்றிங்க மோகன் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு, ஆனா

  மோகன் இந்த தடவ தொடர் பதிவுல கலந்துக்க

  முடயுமான்னு தெரியல. இந்த மாசம் முழுதும்

  வேலைக்கு புடிச்சுட்டாங்க என்னைய. நிறைய பயணங்கள்

  அப்பறம் அலுவலகத்துல எல்லா வலை பூக்கலயும் தடை

  பண்ணிட்டதால வலை பக்கங்களை படிக்கறதே முடியாம

  போட்சு. தொடர் பதிவுல கலந்துக்க கண்டிப்பா முயற்சி

  பண்ற மோகன் நன்றிகள்.

 3. Enna vida romba busya iruppaaru pola namma adaleru…
  Adra Sakkai….AdraSakkai…Adraaaaaa Sakkai…

 4. அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள் மோகன்.
  எதிர்பார்த்தவாறு பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி

 5. உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றிகள்.
  உயர்கலிவி நிமித்தமாக பல வேலைகள். வெறுத்துவிட்டது.
  ஒருவளியாக புதிய லேப்டாப்பொண்ணும் 2 நாள் முன்னாடி வாங்கி இணையமும் ஓகேயாச்சு ( அப்பாடி. ஒரு வளியா சொல்லியாச்சு )
  இனி தொடர்ந்தும் அனைவருடனுமிருப்பேன்.
  மிக்க நன்றிகள்.

 6. //அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள் மோகன்.
  எதிர்பார்த்தவாறு பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி//

  இதற்கு எதற்கு சுபாஷ், நன்றி. இது எங்கள் கடமை. 🙂

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுபாஷ்.

 7. //உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றிகள்.
  உயர்கலிவி நிமித்தமாக பல வேலைகள். வெறுத்துவிட்டது.
  ஒருவளியாக புதிய லேப்டாப்பொண்ணும் 2 நாள் முன்னாடி வாங்கி இணையமும் ஓகேயாச்சு ( அப்பாடி. ஒரு வளியா சொல்லியாச்சு )
  இனி தொடர்ந்தும் அனைவருடனுமிருப்பேன்.
  மிக்க நன்றிகள்.//

  என்னது லேப்டாப்பொண்ணும் -ஆ? என்ன மாதிரி பொண்ணு இது? 😛

 8. //ஒருவளியாக புதிய லேப்டாப்பொண்ணும் 2 நாள் முன்னாடி வாங்கி இணையமும் ஓகேயாச்சு

  பொண்ணு வாங்கி இணையமும் ஓகே வா ?
  இது எதோ டபுள் மீனிங் மாதிரி தெரியுதே? என்ன விஷயம்?

 9. நாங்க office la புது கண்டுபுடிசுட்டோம்ள. இனி பாருங்க

 10. புது “”proxy “”கண்டுபுடிசுட்டோம்ள

 11. புது proxy கண்டு புடிச்சீடீங்களா? உங்க ஆபீஸ் அட்மின் இ-மெயில் ஐ-டி குடுங்க. ஹிஹி. சும்மா டமாஷுக்கு.

  அப்போ சீக்கிரம் பதிவு போடுங்க பாசு.

 12. ஆபீஸ் அட்மின் இ-மெயில் ஐ-டி

  officeadmin@officeadmin.com

  ஹிஹி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s