எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?

(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர்  தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம்  கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.

இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?

பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.

Advertisements

24 responses to “எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?

 1. //பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்//

  🙂

  பன்னீர் செல்வம் வாயே திறக்கமாட்டாரு திறந்த ஒன்றுக்கும் இப்படி ஆகி விட்டதா….

  என்ன கொடுமை சார் இது ?

 2. 1)அவருக்கு அடுத்த மொற சீட் வேணாம் போலத் தோணுது…
  2)இல்ல அம்மாவ பாத்து நாளாயிருக்கும்..
  3) மனசாட்சி கேக்காம அப்படி பண்ணியிருக்கலாம்..

  ஏன் சார் அவர அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துட்டிங்க..

 3. Auditor oruthar high heels seruppala adi vaankinathu thaan ninaivu varukirathu.

 4. இது மட்டும் அல்லாமல் நேற்று அவர் முதல் மரியாதை படத்தில் வரும் ” அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் “என்ற வசனத்தை வேறு பேசியிருக்கிறார். இதனால் சட்ட சபையே சிரிப்பில் அதிர்ந்திருக்கிறது.

 5. Mr. Panneerselvam maathiri unmaiyaana visuvaasi jayalalithaavidam kidaiyaadhu.. so , avar appdi antha maathiri ellaam pesi erukka maattaar.

 6. Hi Najimudeen,

  I agree that he is a gr8 person who is more reliable to Jayalalitha.

  But,Please see today’s thina thanthi news paper for the details that i posted…

 7. Please watch the video at the following site.

  http://www.defence.lk/videos/20081112_LTTE01.wmv

  This video should have taken at the war front.

 8. இதுல முக்கியமான விஷயம் பன்னி(ர்) செல்வம் அடுத்து பேசுனது தான்..

  இப்பிடி இலங்கை பிரச்சினை பத்தி விவாதம் நடந்துக்கிட்டு இருக்கும் போதே, ஜெயலலிதாவை மதுரையில தாக்குனாங்க, பொரச்சி தலைவிக்கு பாதுகாப்பு வேணும்னு பேச ஆரம்பிச்சிட்டாரு..

  அதாவது அங்க எத்தனை பேரு குடும்பம் அழிஞ்சாலும் சரி, பொர்ச்சி தலைவி காருல கீறல் விழுந்துரக் கூடாது!

 9. //பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.
  //

  நீங்க ரெம்ப நல்லவங்களா இருக்கீங்களே?

 10. நஜிமுதீன் , தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அவர் ரொம்ப விசுவாசமாக இருந்ததால் தான் ஜெயலலிதா அவரை (பொம்மை) முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார். ஆனால் நான் அன்று செய்திகள் பார்த்து போட்ட பதிவு தன் இது. மற்றப்படி நான் எதுவும் அவரைப் பற்றி சொல்ல வில்லை. 🙂

 11. //
  Hi Najimudeen,

  I agree that he is a gr8 person who is more reliable to Jayalalitha.

  But,Please see today’s thina thanthi news paper for the details that i posted…//

  இங்கிலிஷ்காரன், சரியான நேரத்தில் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. (வேலை பளு காரணமாக சரியாக கமெண்ட முடியவில்லை)

 12. sankily , தங்கள் வருகைக்கு நன்றி

 13. அது சரி, சரியாகச் சொன்னீர்கள். அவர்களுக்கு அவர்கள் கட்சித் தலைவி பாதுகாப்புத் தான் முக்கியம், இதை பற்றியும் நான் ஒரு பதிவு போட்டுட்டேன்ல. அங்கேயும் வாங்க. வந்து கருத்து சொல்லுங்க (சைக்கிள் கேப்ல விளம்பரம் 🙂 )

 14. //நீங்க ரெம்ப நல்லவங்களா இருக்கீங்களே?//

  ஆமாங்க, இந்த மாதிரி தான் நெறைய பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி குந்தவை.

 15. //பன்னீர் செல்வம் வாயே திறக்கமாட்டாரு திறந்த ஒன்றுக்கும் இப்படி ஆகி விட்டதா….

  என்ன கொடுமை சார் இது ?//

  வாங்க கிரி, என்னமோ நடக்குது. ஹிஹி, மர்மமா இருக்குது.

 16. //1)அவருக்கு அடுத்த மொற சீட் வேணாம் போலத் தோணுது…
  2)இல்ல அம்மாவ பாத்து நாளாயிருக்கும்..
  3) மனசாட்சி கேக்காம அப்படி பண்ணியிருக்கலாம்..

  ஏன் சார் அவர அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துட்டிங்க..//

  4) இல்ல வேற எதாவது காரணம் இருக்குதா ? 🙂

  கந்தசாமி தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. சார் னு சொல்லாதீங்க, நான் ரொம்ப சின்ன பையன். அழுதுடுவேன். தொடர்ந்து என் தளத்திற்கு வாங்க.

 17. //Auditor oruthar high heels seruppala adi vaankinathu thaan ninaivu varukirathu.//

  மனோகர் தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அடடா நீங்க அதை மறக்கலியா? 🙂

 18. //இது மட்டும் அல்லாமல் நேற்று அவர் முதல் மரியாதை படத்தில் வரும் ” அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் “என்ற வசனத்தை வேறு பேசியிருக்கிறார். இதனால் சட்ட சபையே சிரிப்பில் அதிர்ந்திருக்கிறது.//

  இதெல்லாம் வேற செஞ்சி இருக்காரா? ஒரு திட்டத்தோட இருக்காரு போல இருக்கு.

 19. //Nice…

  Nalla irunga…

  Vera ennatha solla???//

  அணிமா என்னமோ எஸ் ஆகர மாதிரி இருக்கே? ஒன்னும் புரியலை.

 20. //rrrrrrrra vittuteenga….//
  இல்லையே, சார் நீங்க ர்ர்ர்ர்ர் விட்டுடீங்களா, மேடம் நீங்க ர்ர்ர்ர்ர் விட்டுடீங்களா?

  கவுண்டமணி & செந்திலோட மறக்க முடியாத நகைச்சுவைல இதுவும் ஒன்று, இங்கிலிஷ்காரன்.

 21. Adhu sari avargal panneer selvam endra peril rrrrrra vittuttaaru…

  Naan atha sonnengo…

  Naan vera edhayum mean pannalaingo…

  Naan Nallavanungo…Nallavanungo

 22. அப்படியா இங்கிலிஷ்காரன், நம்பிட்டேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s