எதற்கு ராஜினாமா?

இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள  ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் 11/நவம்பர் அன்று சட்டசபையில் கேட்டுள்ளனர். சபாநயாகர் அதைப் பற்றி பேச அனுமதிக்காததால் வழக்கம் போல சபை வெளிநடப்பு செய்து விட்டார்கள்(கூடவே மதிமுகவும் என்பதை சொல்ல வேண்டுமா?).

எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இம்மாதிரி எதிர்கட்சிகள் ராஜினாமா செய்ய சொல்லி கேட்கலாமா? (மத்திய அரசால் கலைக்கப் படுவது வேறு விஷயம்).

எது எதற்குத்தான் நம் நாட்டில் ராஜினாமா செய்ய சொல்லுவார்களோத் தெரியவில்லை. இதே இவர்கள் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது இலங்கை தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும்போதோ தமிழக அரசு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அவற்றை செய்ய தவறி, அப்பொழுது ராஜினாமா செய்ய சொல்லி கேட்டால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் கட்சி தலைவிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் ஒரு அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பதை என்னவென்று சொல்வது? கட்சி தலைமைக்கு இவர்கள் விசுவாசமாக நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒட்டு போட்டு மக்களுக்கு எந்தக் கட்சியும் விசுவாசமாக நடந்துக் கொள்வதுப் போன்ற அறிகுறியேத்  தெரியவில்லை.

இதுவரைக்கும் ஆளும் காட்சியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரிய எந்த எதிர் கட்சியினரும் தாங்கள் ஆளும்கட்சியாக இருந்தப்போது (எந்த காரணத்திற்காக மற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கிறார்களோ அந்த காரணங்களுக்குக்கூட) அதே காரணங்களுக்காக ராஜினாமா செய்ததில்லை.

இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு நாளை எதிர் (எதிரி ?) கட்சியானால் இதைப் போன்றே, அல்லது இதை விட உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட ஆளும் அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பார்கள். திமுகவோ அதிமுகவோ கழகங்களிற்கிடையே எவ்வேறுபாடும் இல்லை. மத்திய அரசில் திமுகவை காங்கிரஸ் என்றும் அதிமுகவை பிஜேபி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  நம் திராவிட கழகங்களைப் போன்றே மற்ற மாநிலங்களில் அம்மாநிலக் கட்சிகள் எப்படி  இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆக மொத்தத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால் லாஜிக் பார்க்க கூடாது மற்றும் செலக்டிவ் அம்னீசியா வியாதி இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சி என்கின்ற கம்பெனியை திறமையாக நடத்த முடியும்.

இப்பதிவை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும் (பதிவையும் ரீ-மேக் செய்ய ஆரம்பிச்சிட்டோம்ல!!!!)

Advertisements

12 responses to “எதற்கு ராஜினாமா?

 1. Paataiyum, padathaiyum thaan remix,remake nu pannanga…
  Ippa pathivaiyum remake panna aarambichiteengala….

  Sabaaaaassu….

 2. //
  ஆனால் இவர்கள் கட்சி தலைவிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் ஒரு அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பதை என்னவென்று சொல்வது.

  //

  அக்கிரமமா பேசாதீங்க மோகன். குள்ளம்பட்டி குறுக்கு தெருவுல, குடிச்சிட்டு போன ச்சுப்பிரமணி கல்லு தடுக்கி குப்புற விழுந்ததுக்கே ராஜினாமா செய்ய சொல்லி கேட்டவுங்க அவங்க..இதுக்கு விடுவாங்களா??

  நாளைக்கி அம்மா வீட்டு தோட்டத்துல பூசணிக்கா காணாப்போனா கூட கருணானிதி, மன்மோகன் சிங்கு, ஜார்ஜ் புஷ்சு, ஓபாமா, கோர்டன் பிரவுன், குப்புசாமி மூணாவது தெரு கவுன்சிலரு…எல்லாரும் ராஜினாமா செய்ய சொல்லி அறிக்கை விடுவாங்க.. அப்ப என்ன பண்ணுவீங்க?

 3. // திமுகவோ அதிமுகவோ கழகங்களிற்கிடையே எவ்வேறுபாடும் இல்லை.//

  வழிமொழிகிறேன்

  //இப்பதிவை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும் (பதிவையும் ரீ-மேக் செய்ய ஆரம்பிச்சிட்டோம்ல!!!!//

  வாழ்த்துக்கள் மோகன். கலக்குறீங்க 🙂

  //adhusari
  அக்கிரமமா பேசாதீங்க மோகன். குள்ளம்பட்டி குறுக்கு தெருவுல, குடிச்சிட்டு போன ச்சுப்பிரமணி கல்லு தடுக்கி குப்புற விழுந்ததுக்கே ராஜினாமா செய்ய சொல்லி கேட்டவுங்க அவங்க..இதுக்கு விடுவாங்களா??

  நாளைக்கி அம்மா வீட்டு தோட்டத்துல பூசணிக்கா காணாப்போனா கூட கருணானிதி, மன்மோகன் சிங்கு, ஜார்ஜ் புஷ்சு, ஓபாமா, கோர்டன் பிரவுன், குப்புசாமி மூணாவது தெரு கவுன்சிலரு…எல்லாரும் ராஜினாமா செய்ய சொல்லி அறிக்கை விடுவாங்க.. அப்ப என்ன பண்ணுவீங்க?//

  ஹா ஹா ஹா ஹா

 4. //அக்கிரமமா பேசாதீங்க மோகன். குள்ளம்பட்டி குறுக்கு தெருவுல, குடிச்சிட்டு போன ச்சுப்பிரமணி கல்லு தடுக்கி குப்புற விழுந்ததுக்கே ராஜினாமா செய்ய சொல்லி கேட்டவுங்க அவங்க..இதுக்கு விடுவாங்களா??

  நாளைக்கி அம்மா வீட்டு தோட்டத்துல பூசணிக்கா காணாப்போனா கூட கருணானிதி, மன்மோகன் சிங்கு, ஜார்ஜ் புஷ்சு, ஓபாமா, கோர்டன் பிரவுன், குப்புசாமி மூணாவது தெரு கவுன்சிலரு…எல்லாரும் ராஜினாமா செய்ய சொல்லி அறிக்கை விடுவாங்க.. அப்ப என்ன பண்ணுவீங்க?//

  ஆமா, ஏன் மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்ய சொல்லி கேக்கலை? அது யாருங்க கோர்டன் பிரவுன், லண்டன் கவுன்சிலரா? தங்கள் வருகைக்கு நன்றி, அது சரி

 5. //வாழ்த்துக்கள் மோகன். கலக்குறீங்க//

  வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி கிரி. எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் 🙂

 6. வாழ்த்துக்கள்!!
  இவங்க ராஜினாமா செய்ய சொல்லி சொல்லி அத யாருமே சீரியஸ்-௮ எடுத்துக்கறது இல்ல! எப்படி சொல்லி சொல்லி இவங்க செயௌஸ்-௮ சொன்ன கூட காமெடிய போகுது!!

  எல்லாம் சரி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு லிங்க் குடுத்த நீங்க, ஏன் ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு லிங்க் கொடுக்கல?

  இதை தான் நம்ம டி.ஆர்
  “you are trying suppress and depress and oppress the view of tamilan ya… naan tamilan” னு சொல்லி இருக்கார்!!

 7. //வாழ்த்துக்கள்!!
  இவங்க ராஜினாமா செய்ய சொல்லி சொல்லி அத யாருமே சீரியஸ்-௮ எடுத்துக்கறது இல்ல! எப்படி சொல்லி சொல்லி இவங்க செயௌஸ்-௮ சொன்ன கூட காமெடிய போகுது!!

  எல்லாம் சரி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு லிங்க் குடுத்த நீங்க, ஏன் ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு லிங்க் கொடுக்கல?

  இதை தான் நம்ம டி.ஆர்
  “you are trying suppress and depress and oppress the view of tamilan ya… naan tamilan” னு சொல்லி இருக்கார்!!//

  புவனேஷ் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதாவது புலி வருது கதை மாதிரி ஆயிடும்னு சொல்லுறீங்க :ப

  அடடா, அது தான் ஆங்கிலப் பதிவுல பிங்க் பேக் ல என்னுடைய தமிழ் பதிவு இணைப்பும் இருக்கே. ஆனால் என்ன, ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு இணைப்பு கொடுத்தடலாம்.

  அடடே, டி.ஆர் (அவர் பேரு மாத்திட்டருல?) இதெல்லாம் சொல்லி இருக்காரா? அவரு இப்போ இங்கிலிபீஷ்ல கூட அடுக்கு மொழி பேச ஆரம்பிச்சிட்டாரா?

 8. Pingback: Why one has to resign? « ~mohan

 9. //அடடே, டி.ஆர் (அவர் பேரு மாத்திட்டருல?) இதெல்லாம் சொல்லி இருக்காரா? அவரு இப்போ இங்கிலிபீஷ்ல கூட அடுக்கு மொழி பேச ஆரம்பிச்சிட்டாரா?

  இந்த வசனம் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி பிரஸ் மீட் ல பேசுனது.. Its in youtube. Search panni paarunga..
  அவரு முன்னமும் ஆங்கிலத்தில் பேசுவாரு.. எதோ ஒரு படத்துல வக்கீலா வருவாரு, அப்போ அவரு இங்கிலீஷ் ல பேசு வாறு பாருங்க.. எல்லாம் – ion ல முடியும்..அந்த படத்துல ஹீரோயின் கௌதமி

 10. //இந்த வசனம் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி பிரஸ் மீட் ல பேசுனது.. Its in youtube. Search panni paarunga..
  அவரு முன்னமும் ஆங்கிலத்தில் பேசுவாரு.. எதோ ஒரு படத்துல வக்கீலா வருவாரு, அப்போ அவரு இங்கிலீஷ் ல பேசு வாறு பாருங்க.. எல்லாம் – ion ல முடியும்..அந்த படத்துல ஹீரோயின் கௌதமி//

  ஒ தகவலுக்கு மிக்க நன்றி புவனேஷ். ஆனா அதை யு-டுபுல வேற பாக்க சொல்லுறீங்க?

  ஆமா, அந்த படத்துல சிம்பு கூட கொடுத்த காசுக்கு அதிகமா நடிச்சி இருப்பாரே?

 11. //ஒ தகவலுக்கு மிக்க நன்றி புவனேஷ். ஆனா அதை யு-டுபுல வேற பாக்க சொல்லுறீங்க?

  மோகன், செம காமெடி சார் அது!! பாருங்க உங்களால சிரிப்ப அடக்க முடியாது!! கடைசியா “Why are you come here?” னு வெப்பாரு பாருங்க ஒரு பஞ்ச்.. அதெல்லாம் பாத்தா தான் சார் தெரியும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s