கன்னாபின்னாச் செய்திகள் 4

எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் அரசு ரகசியமாகவே முழுமையாக முடிக்கவும் திட்டம் இட்டுள்ளது. அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக வழங்கப்படும் என்று நம்ப முடியாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே(மதுரை) மேயரோ, துணை மேயரோ உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மதுரை வந்தால் எழுச்சியான வரவேற்புக் கொடுப்பதில்லை. போஸ்டர்கள் ஒட்டுவதில்லை. அப்படியிருக்க, ஸ்டாலின் மதுரை வந்தால் இவர்கள் எப்படி அவர் முன்னால் போய் நிற்கமுடியும்?” என அலுத்துக்கொண்டு முடித்தனர் தி.மு.க. கவுன்சிலர்கள். திமுக தலைவரே போஸ்டர்கள், வரவேற்பு விளம்பரங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க சில கவுன்சிலர்கள் இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? அப்பொழுது இந்த மாதிரியான மரியாதைகள் செய்தால் தான் அவரி(ர்களி)டம்  மக்கள் பிரச்சினையை பேச முடியுமா?  என்னக் கொடுமை சார் இது?

மதுரை தி.மு.க. கவுன்சிலர்கள் இரு குழுக்களாக இருப்பது அதிகாரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. அதனால் அழகிரி அண்ணன் கவனத்துக்கு அதிகாரிகள் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கொண்டு செல்வதில்லை. அதிகாரிகள் நன்றாகச் செயல்படுகிறார்கள் என அண்ணன் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

தீவிரவாதிகளின் தாக்குதலை நேரடி ஒளிபரப்பு மீடியாக்கள் செய்தது சரியா தவறா? சரி என்றால் Y என்றும் தவறு என்றால் N என்றும் 9000000000 என்கின்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்(ஒரு செய்திக்கு 50 ரூபாய் உங்கள் மொபைலில் இருந்து கழிக்கப்படும்)

“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். நீங்க முதலமைச்சரா இருந்தப்போது  உங்கள்  மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அப்போது  ஏன் நீங்களாகவே பதவி விலகி விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வில்லை? அப்படின்னு நான் கேக்கலை,மைனாரிட்டி திமுக அரசை சேர்ந்தவங்க கேக்கறாங்க.

சென்னை, நவ. 25:நக்சல் (மாவோயிஸ்ட்) இயக்கத்திற்கு மதுரையில் உள்ள 2 கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேம்பஸ் இன்டர்வியு?

இலங்கைத் தமிழர் பிரச்சனை : லண்டன் சென்றார் வைகோ! எப்போ இலங்கை போறீங்க?

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை இலங்கையில செஞ்சி இருக்கலாமே?

சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி. சிட்டி வங்கியில் கடன் வாங்கி இருக்கும் எனக்கு யாராவது  உதவ முன் வருவீர்களா என்று கேட்கிறார் நம்ம கோவிந்து.

வீட்டுக் காவலில் மசூத் அசார் : பாகிஸ்தான் நடவடிக்கை! ஏன் வீட்டிலேயே உக்காந்து அடுத்த தாக்குதலை திட்டமிடறதுக்கா?

திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதிருப்தி அலை வீசாது, சுனாமி அதிருப்தி அலையே வீசும் அப்படின்னுல பேசிக்குறாங்க.

பந்து வீச அதிக நேரம் எடுத்தால் கடும் நடவடிக்கை; கிரிக்கெட் சங்கம் முடிவு. இப்படி சொல்லிட்டதால பந்தை எறியாதீங்க.

5 மாநில தேர்தல் முடிவு; மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை-பா.ஜனதா கருத்து. இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லுவாங்களா?

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி:-3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது . டெல்லியில் கிடைத்த வெற்றி நாடு முழுவதும் வெற்றி பெற்றதற்கு சமம். ஆமா, யாராலும் தடுக்க முடியாது. நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு(அதாவது ஒண்ணுமே செய்யாம) இருங்க. வேற யாரும் ஒண்ணும் பண்ண வேண்டாம். யானை தன் தலையில தானே மண் அள்ளி போட்டுக்குமாம், அது மாதிரி ஆகிட போகுது.

சேலத்தில் 31 ஏழைகளை அகற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆடியாட்கள் கைப்பற்றியதாக கூறப்படும் நிலம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. லோக்கல் கேபிள் டிவி ஒண்ணு ஆரம்பிச்சமா அதை வச்சி நெறைய பிசினஸ் ஆரம்பிச்சமானு அப்படியே நிறைய டெவலப் பண்ணமானு இருந்திருந்தா பிரச்சனையே இருந்து இருக்காதே?

கருணாநிதி குடும்பம் – மாறன் சகோதரர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்தது. அப்போ சன் டிவி டாப் டென்ல வாரணம் ஆயிரம் வருமா வராதா? தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்குமா இருக்காதா?

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முக்கியமான அவசரம் எதுவும் இல்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். ஏப்ரல் 1 அன்னிக்கி வச்சா ரெம்ப பொருத்தமா இருக்கும்னு பொது மக்கள் சொல்லுறாங்க.

பின்குறிப்பு:

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

Advertisements

19 responses to “கன்னாபின்னாச் செய்திகள் 4

 1. //அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக வழங்கப்படும்

  அதே போல் அந்த மாநிலத்தை ஏமாற்ற மக்கள் வழக்கம் போல் குடிநீர் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அதை பார்த்து தமிழக மக்கள் ஏமாறவேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது!

 2. //அப்பொழுது இந்த மாதிரியான மரியாதைகள் செய்தால் தான் அவரி(ர்களி)டம் மக்கள் பிரச்சினையை பேச முடியுமா?

  மரியாதை செய்வது மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு இல்லை! மரியாதை செய்தாலும் மக்கள் பிரச்சனை பேசமுடியாது!

  ‘மேயர்களின் தொழில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது என்ற அறியாமையுடன் செய்திகள் வெளியிட்ட மோகன், மேயர்களின் “மானநஷ்ட வழக்கை” சந்தித்தே தீரவேண்டும்! ” என்று அனைத்து மாவட்ட மேயர் கூட்டு களவானி சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது !

 3. //Me The First!!//

  ஆமா ராசா, நீங்கதான் பர்ஸ்டு.

 4. //அதே போல் அந்த மாநிலத்தை ஏமாற்ற மக்கள் வழக்கம் போல் குடிநீர் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அதை பார்த்து தமிழக மக்கள் ஏமாறவேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது!//

  அந்த மாநிலத்து மக்களை ஏமாத்துராங்களோ இல்லையோ நம்ம மாநிலத்து மக்களை நல்லாவே ஏமாத்துறாங்க.

 5. //இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.

  எங்க அஞ்ச நெஞ்சனை பற்றி பேச மறுப்பது மதுரை சட்டத்துக்கு புறம்பானது என்பதை தெரிவித்துகொள்கிறேன்!

 6. //இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.
  எங்க அஞ்சா நெஞ்சனை பற்றி பேச மறுப்பது மதுரை சட்டத்துக்கு புறம்பானது என்பதை தெரிவித்துகொள்கிறேன்!

 7. //எங்க அஞ்சா நெஞ்சனை பற்றி பேச மறுப்பது மதுரை சட்டத்துக்கு புறம்பானது என்பதை தெரிவித்துகொள்கிறேன்!//

  அவருதாங்க அஞ்சா நெஞ்சன்.

  நான் இல்லையே 😛

 8. //‘மேயர்களின் தொழில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது என்ற அறியாமையுடன் செய்திகள் வெளியிட்ட மோகன், மேயர்களின் “மானநஷ்ட வழக்கை” சந்தித்தே தீரவேண்டும்! ” என்று அனைத்து மாவட்ட மேயர் கூட்டு களவானி சங்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது !//

  ஓஹோ, அப்படின்னா மேயர் என்ன செய்யனும்?

 9. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

 10. //அதே போன்று, நீரையும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளுக்கு ரகசியமாக //

  :-)))

  //இதை பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.//

  இதை பத்தி நான் பேச மாட்டேன் :-))))))

  //சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி//

  சிட்டி பேங்க் விளம்பரம் “சிட்டி நெவர் ஸ்லீப்” :-)))))

  //அப்போ சன் டிவி டாப் டென்ல வாரணம் ஆயிரம் வருமா வராதா? //

  சூப்பர் ஹா ஹா

 11. வந்துட்டேன்…தொடர்ந்து கலக்குறீங்க…வாழ்த்துக்கள்

 12. அருண், தங்கள் வருகைக்கு நன்றி. வோர்ட் பிரசில் இந்த கேட்ஜட் சேர்க்க முடியுமா என்றுத் தெரிய வில்லை. முயற்சிக்கிறேன்.

 13. //சிட்டி பேங்க் விளம்பரம் “சிட்டி நெவர் ஸ்லீப்” :-)))))//
  அது ஒரு வேலை சிடி பேங்க்ல முதலீடு செஞ்சவங்களுக்கா இருக்குமோ?

  தங்கள் தொடர் வருகைக்கு நன்றி கிரி.

 14. //வந்துட்டேன்…தொடர்ந்து கலக்குறீங்க…வாழ்த்துக்கள்//

  எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் ஸ்ரீராம். நன்றி.

 15. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை இலங்கையில செஞ்சி இருக்கலாமே?

  சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி.

  சிட்டி வங்கியில் கடன் வாங்கி இருக்கும் எனக்கு யாராவது உதவ முன் வருவீர்களா என்று கேட்கிறார் நம்ம கோவிந்து.
  `

  ha ha ha.. …

 16. நன்றி குந்தவை தங்கள் வருகைக்கும் ஹாஹா_விற்கும்

 17. குந்தவைன்னு கூப்பிட்டதற்கு நன்றி. எங்கே என்னை பாட்டின்னு கூப்பிட்டிருவீங்களோன்னு பயமாத்தேன் இருந்தது.

 18. ஹாஹா, நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல இருக்கே? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s