சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு   பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லோரும் இதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்பதிவு.

வலையில் கிடைத்த சில சுவையான சம்பவங்களை அப்படியே பகிர்ந்துக் கொள்கிறேன்:

சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்ட சுவையான சம்பவம். நன்றி சினிமா எக்ஸ்ப்ரஸ்.

பெங்களுருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்… இந்தப் பகுதிகள் சென்னையிலுள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு போல் எந்த நேரமும் பரபரப்பாக இருக்கின்ற இடம். பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ் ஏறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். அவரவர் வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

ஒரு வயதான கிழவி விறகுச் சுமையைத் தலைமீது தூக்கி வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். நான்கு பக்கமும் பார்த்து யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்க்கிறார்.

பஸ் ஸ்டாண்ட்டின் ஓரமாக இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த கிழவிக்கு உதவ யாரும் முன்வராததை கவனிக்கின்றார். உடனே ஓடோடிச் சென்று விறகுக்கட்டைத் தூக்கி விடுகிறார்.

‘‘இத்தனை பேர் நடமாடுகின்ற இடத்தில் யாரும் இவருக்கு உதவவில்லையே” என்ற வருத்தத்தோடு அந்த கிழவியை பார்த்தவர் கண்களில் தன் தாய் ஞாபகம் வர, கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த கிழவியிடம் கொடுத்துவிட்டு நகர்கிறார்.

அந்த கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் கொடுத்த நபரை அன்னாந்து பார்ப்பதற்குள் அவர் படு ஸ்பீடாக, ஸ்டைலாக நடந்து மாயமாய் மறைந்துவிட்டார்.

சுமையோடு நின்ற கிழவி, எங்கேயோ பார்த்த நபராக இவர் தெரிகிறாரே என்று நினைக்கிறார். அந்த முகத்தை மறுபடி அசை போட்டபடி நடக்கிறார். அந்தக் கிழவிக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது தெரியாது.

இது ஏதோ ரஜினி கண்டக்டராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்று நீங்கள் நினைத்திருந்தால் ஸாரி… புகழ் பெற்ற நடிகரான பிறகு மாறு வேடத்தில் ரஜினி பெங்களூரை சுற்றியபோது நடந்த நிகழ்ச்சி இது!

ரஜினியின் நண்பர்களான கன்னட நடிகர் துவாரகேஷ், பாலமுத்தய்யா, ஜெகதீஷ்ரெட்டி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சிரித்திருக்கிறார் ரஜினி.

‘‘ஏன் இப்படி மாறுவேடத்தில் போகிறீர்கள்?” என அவர்கள் ரஜனியிடம் கேட்டபோது, ‘‘யாரும் என்னை அடையாளம் தெரிஞ்சிக்காம இருந்தாதான் எந்த இடத்திற்கும் என்னால் போய் வர முடியும். முன்பு நான் பஸ் கண்டக்டரா இருந்தபோது பழகிய, பார்த்த இடங்களுக்குப் போனால் மனதுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கிறது. மக்களோடு நெருங்கிப் பழக வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் ஏற்றமான வாழ்க்கையை ஆண்டவன் கொடுக்கணும் என்று கடவுளிடம் நான் வேண்டாத நாள் கிடையாது” என்று பதிலளித்திருக்கிறார் ரஜினி.

இன்னொரு சுவராஸ்யமான சம்பவம்/பேட்டி: இது தமிழ்வாணன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணவன் ரஜினியை மனைவி லதா ஒரு பேட்டி கண்டார், ‘சாவி’ பத்திரிக்கைக்காக. அந்தப் பேட்டியில் அவர் கேட்ட சில சுவையான கேள்விகளும் அவற்றிற்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் அவர்களது அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

‘நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?‘

‘சினிமா நடிகையும் ஒரு பெண்தானே?‘

‘படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?‘

‘எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?‘ (‘வேண்டாம்…’ என்கிறார் லதா வெட்கத்தோடு)

‘ஏன் கல்யாணம் செய்துகொண்டோம், பிரம்மசாரியாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணியதுண்டா?‘

‘உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும் போது கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.‘

‘வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப் புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?‘

‘என் தனித்தன்மையை!‘

‘என்னிடம் இதுவரை சொல்லாத இரகசியமோ மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?‘

‘என்னிடம் எந்த இரகசியமும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே நியாயமா?!‘

‘ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?‘

‘என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்!‘

‘குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?‘

‘நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்!‘

‘ஓரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?‘.

‘என்னுடைய மகிழ்ச்சியில்!‘

‘என்னைப் போலவே யாராவது டெலிபோனில் நான்தான் லதா பேசுறேன்னு சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?‘

‘என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?‘

‘மனம் விட்டுச் சொல்லுங்கள், என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?‘

‘முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!‘

Advertisements

25 responses to “சூப்பர் ஸ்டார் ரஜினி காந்(தத்)திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

 1. நான் தான் முதல்ல…

 2. ஒரு நல்ல மனித நேயம் மிக்க, நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் …

 3. ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

 4. வாங்க ஸ்ரீராம், நீங்கதான் பர்ஸ்டு.

 5. ‘சினிமா நடிகையும் ஒரு பெண்தானே?‘

  உன்மையாகவே நல்ல பதில்.

  தலைவா வாழக பல்லான்டு.

 6. வாங்க கிரி, உங்க பதிவு பக்கம் வரேன்!

 7. ராஜா தங்கள் வருகைக்கு நன்றி.

 8. He is best humanity person..all the best wishes for his Birthday….

 9. தலைவருக்கு பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்..

 10. கண்ணா இப்போ போறேன்..
  ஆனா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது..

 11. ஆனால் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்

 12. அதாவது இப்போ போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்

 13. கேசவா, தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 14. //தலைவருக்கு பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்..//

  வாங்க அணிமா தலை. ரொம்ப நாள ஆளைக் காணோம்?

 15. //கண்ணா இப்போ போறேன்..
  ஆனா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது//

  நானும் இப்போ போய்ட்டு அப்புறமா வரேன். 🙂

 16. தலைவரை பற்றி சுவையான தகவலுக்கு நன்றி மோகன்!!

 17. //ஆனால் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்//

  வந்துடுவீங்க தானே?

 18. // அதாவது இப்போ போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம் //

  புரிஞ்சதுபா!

 19. // Nice //

  ரேவதி, தங்கள் முதல் வருகைக்கும் ஒரு வார்த்தை கருத்திற்கும் மிக்க நன்றி.

 20. // waste of time //

  அடடா மணி, தங்களுடைய நேரத்தை வீணடித்து விட்டேனா? அடுத்த தடவை இம்மாதிரி படித்து தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

 21. // தலைவரை பற்றி சுவையான தகவலுக்கு நன்றி மோகன்!! //

  புவனேஷ், நன்றி!

 22. //நன்று…//

  வினோஜாசன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s