கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்

பெரம்பூர் ரயில் நிலையம். சேலம் போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.  அவசரமாக அலுவல் வேலையாய்  செல்ல வேண்டி இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அப்போது சேலம் செல்லும் ஒரு ரயில் மிகுந்தக் கூட்டத்துடன் வந்தது. முன்பதிவு செய்யப்படாத ஒருப்பெட்டியில் முண்டியடித்து ஏறி உட்கார இடம் தேடினார். எங்கேயும் உட்கார இடம் இல்லை.

மெல்ல நகர்ந்து நான்கு பேர் உட்கார்ந்து இருந்த இருக்கை அருகேச் சென்றார். அங்கு உட்கார்ந்து இருந்த வாலிபனிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்” என்றார். அதற்கு அவன் “முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம், இதிலே எங்கத் தள்ளி உக்கார?” என்று முறைத்தான். அதற்கு ஆனந்த் “சேலம் வரைக்கும் போகணும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா” என்று கேட்டார். அவனும் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்து இடம் கொடுத்தான். ஆனந்தும் உட்கார்ந்துக் கொண்டார்.

சில மணி நேரம் கழித்து ரயில் காட்பாடியில் நின்றது. ஆனந்த் அருகே உட்கார்ந்திருந்த இளைஞன் காட்பாடியில் இறங்கி விட்டான். அவன் இறங்கியவுடன் ஆனந்த் வசதியாக இருக்கையில் உட்கார்ந்துக் கொண்டார். காட்பாடியிலும் கூட்டம் ஏறியது. அங்கு ஏறிய ஒருவர் ஆனந்த் அமர்ந்து இருந்த இருக்கை அருகே வந்தார். அவரிடம் “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார், நானும் உக்காந்துக்கறேன்” என்று கேட்டார்.

அதற்கு ஆனந்த் “இது நாலு பேரு உட்கார சீட், இதுல முன்னாடியே நாலு பேரு உக்காந்து இருக்கோம். இதுல எப்படி உங்களுக்கு இடம் கொடுக்கறது?” என்று பதிலளித்தார். காட்பாடியில் ஏறியவரோ “சார், நான் ஈரோடு வரைக்கும் போகணும். கொஞ்சம் இடம் கொடுங்களேன்” என்றுக் கெஞ்சினார். ஆனந்த் “ஈரோடு வரைக்கும் போகனும்னா சென்னை சென்ட்ரல் போய் அங்க இருந்து ஏதோ ஒரு ட்ரைன்ல உட்காந்துட்டு வர வேண்டியது தானே? ஏன் எங்க உயிரை எடுக்கறீங்க?” என்று கடுகடுத்துவிட்டு தூங்குவது போல பாவ்லா செய்ய ஆரம்பித்தார். ஆனந்திடம் இருக்கை கேட்ட நபர் வேறு வழியின்றி பரிதாபமாகத் தன் பயணத்தை நின்றுக் கொண்டே தொடர்ந்தார்.

குறிப்பு 1:கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.
குறிப்பு 2: என் முதல் சிறுகதை முயற்சி. எப்படி இருக்கிறதென்று பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Advertisements

76 responses to “கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்

 1. நல்ல முயற்சி.

  வாழ்த்து(க்)கள்.

 2. //நல்ல முயற்சி.

  வாழ்த்து(க்)கள்.//

  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி துளசி கோபால்.

 3. சந்தனமுல்லை தங்கள் முதல் வருகைக்கும் 🙂 க்கும் மிக்க நன்றி

 4. //என் முதல் சிறுகதை முயற்சி. எப்படி இருக்கிறதென்று
  பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்//

  Simply Superb, keep it up

  But, Innum konjam Yochichu irukkalam….

  Best wishes to you

 5. // கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார் //

  Nice Attempt அண்ணாச்சி…கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உக்காருகிற இடத்தில் கட்டியா?

 6. //Simply Superb, keep it up
  But, Innum konjam Yochichu irukkalam….
  Best wishes to யு//

  மிக்க நன்றி ரேவதி. அடுத்த கதையை(எழுதினால்) இன்னும் சிறப்பாகத் தர முயற்சிக்கிறேன்.

 7. //Nice Attempt அண்ணாச்சி…கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு உக்காருகிற இடத்தில் கட்டியா?//

  ஸ்ரீராம் தங்கள் வருகைக்கும் கடி ஜோக்கிற்க்கும் மிக்க நன்றி. 🙂

 8. நான் சொன்ன மொக்கையை கூட கடி ஜோக்ன்னு சொல்லி என்னைப் பாராட்டி நன்றி கூறிய எங்கள் தானைத் தலைவர் மோகன் வாழ்க … வாழ்க…

 9. இது போல என் கண்முன்னாடியே நடந்திருக்கு மோஹன்.நல்லா எழுதிருக்கீங்க.
  அன்புடன் அருணா

 10. உண்மைய சொல்லுங்க —

  ஆனந்த் — மோகனா?? ??

 11. //குறிப்பு 1:கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே.///

  இப்படி எல்லாம் சொன்னா நம்புறதுக்கு நாங்க என்ன மோகனா??

 12. முயற்சி என்று நீங்கள் சொன்னதால் ——

  சிறுகதை (முயற்சி) அருமை

 13. பெரிய கதாசிரியரா ஆகிட்டீங்க..

  வாழ்த்துக்கள்..

 14. நான் கொஞ்சம் தள்ளி உக்காந்துக்குறேன்..
  (எதுக்கு வம்பு??)
  ( இதில் உள்குத்து உண்டு )

 15. //நான் சொன்ன மொக்கையை கூட கடி ஜோக்ன்னு சொல்லி என்னைப் பாராட்டி நன்றி கூறிய எங்கள் தானைத் தலைவர் மோகன் வாழ்க … வாழ்க…//

  ஆஹா, இதை பாராட்டு அப்படின்னு எடுத்துகிட்டீங்களா? நீங்க வாழ்க!

 16. //இது போல என் கண்முன்னாடியே நடந்திருக்கு மோஹன்.நல்லா எழுதிருக்கீங்க.
  அன்புடன் அருணா//

  அருணா தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்(பாராட்டிற்கும்) மிக்க நன்றி.

  ஆம், இது போன்ற சம்பவங்களை நாமும் பார்த்து இருப்போம். ஆகவே இது கதையல்ல நிஜம். 🙂

 17. சின்னபையன் தங்கள் வருகைக்கும் 🙂 க்கும் மிக்க நன்றி

 18. அணிமா தங்கள் வருகைக்கும் 🙂 க்கும் மிக்க நன்றி. அது என்ன நீங்களும் 🙂 ?

 19. //உண்மைய சொல்லுங்க —
  ஆனந்த் — மோகனா?? ??//

  இது என்ன கொடுமை? இவ்ளோ வருஷம் பழகிட்டு இப்படி கேள்வி கேக்கறீங்க? நான் மோகன் தான். நோ டவுட்டு. ஒகேவா?

 20. // இப்படி எல்லாம் சொன்னா நம்புறதுக்கு நாங்க என்ன மோகனா?? //

  நீங்க அணிமா. அதனால நம்பித்தான் ஆகணும்.

 21. //முயற்சி என்று நீங்கள் சொன்னதால் ——

  சிறுகதை (முயற்சி) அருமை//

  அப்போ சிறுகதை என்று சொல்லி இருந்தால், சிறுகதை அருமை இல்லையா?

 22. //பெரிய கதாசிரியரா ஆகிட்டீங்க..
  வாழ்த்துக்கள்..//

  அப்போ அடுத்தது சினிமா தான். நீங்க தயாரிப்பாளர் ஆக ரெடியா?

 23. //நான் கொஞ்சம் தள்ளி உக்காந்துக்குறேன்..
  (எதுக்கு வம்பு??)
  ( இதில் உள்குத்து உண்டு )//

  இன்னும் கொஞ்சம் தள்ளி உக்காருங்க. நானும் உக்காரணும்.

  இதுல என்ன உள்குத்து. என் மரமண்டைக்கு புரியலையே. தயவுசெஞ்சி விளக்குங்க.

 24. கதையில் மரியாதைகள் அதிகம் இருக்கின்றன??காத்துக் கொண்டிருந்தார்

  இடம் தேடினார்.

  அருகேச் சென்றார்.

  என்று கேட்டார்

  உட்கார்ந்துக் கொண்டார்.

  என்று கேட்டார்

 25. நீங்களே 25 போட்டு கொண்டதற்கு மிகுந்த கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன் .

 26. //மோகன்

  அணிமா தங்கள் வருகைக்கும் 🙂 க்கும் மிக்க நன்றி. அது என்ன நீங்களும் 🙂 ?///

  என்ன பண்றது??
  அப்போ அப்போ நாங்களும் கொஞ்ச நல்லாவே சிரிப்போம் ..
  ஹா ஹா ஹா ஹி ஹி ஹி 🙂

 27. ///மோகன்

  //உண்மைய சொல்லுங்க —
  ஆனந்த் — மோகனா?? ??//

  இது என்ன கொடுமை? இவ்ளோ வருஷம் பழகிட்டு இப்படி கேள்வி கேக்கறீங்க? நான் மோகன் தான். நோ டவுட்டு. ஒகேவா?///

  யோவ் நான் கதையில வர அந்த கதாபாத்திரம் ( இது அந்த பாத்திரம் இல்லப்பா) பேரு மோகனான்னு கேட்டேன்???

  ( இது தெரியாம வேற என்ன என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே )

 28. //கதையில் மரியாதைகள் அதிகம் இருக்கின்றன??காத்துக் கொண்டிருந்தார்//

  நான் மரியாதை தெரிஞ்சவன், கொடுக்கறவன். இதுல சந்தேகமா?

 29. //நீங்களே 25 போட்டு கொண்டதற்கு மிகுந்த கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன் .//

  நாங்க கேப் கெடச்சா 50 பத்தும் நாங்களே போட்டுக்குவோம்.

 30. //என்ன பண்றது??
  அப்போ அப்போ நாங்களும் கொஞ்ச நல்லாவே சிரிப்போம் ..
  ஹா ஹா ஹா ஹி ஹி ஹி :-)//

  ஓவர்-ஆ சிரிக்காதீங்க, ஆசுபத்திருக்கு கூட்டிகிட்டு போய்ட போறாங்க.

 31. ///மோகன்

  நான் மரியாதை தெரிஞ்சவன், கொடுக்கறவன். இதுல சந்தேகமா?///

  அந்த சந்தேகம் இருக்குறதால தான் கேக்குறேம்..
  எப்படியா இப்படி கூசாம பொய் சொல்றீரு ??

 32. //யோவ் நான் கதையில வர அந்த கதாபாத்திரம் ( இது அந்த பாத்திரம் இல்லப்பா) பேரு மோகனான்னு கேட்டேன்???

  ( இது தெரியாம வேற என்ன என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே )//

  பாருங்க, இது கூட தெரியாத அப்பாவியா இருக்கேன்.

 33. //யோவ் எங்கேயா போனீரு ??//

  இங்கேதான் உள்ளேன் அய்யா!

  ஐ வில் மீட் யு ஆப்டர் த பிரேக்.

 34. //மோகன்

  //நீங்களே 25 போட்டு கொண்டதற்கு மிகுந்த கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன் .//

  நாங்க கேப் கெடச்சா 50 பத்தும் நாங்களே போட்டுக்குவோம்.///

  மன்னிப்பு கேக்க சொன்னா, இப்படி எடா கூடமாவா பதில சொல்றது..

  GAPகிடைச்சா எங்க வேணாலும் எதுல வேணாலும் போடுவீங்களா??
  இருக்கட்டும் இருக்கட்டும் ..

 35. ///மோகன்

  //யோவ் எங்கேயா போனீரு ??//

  இங்கேதான் உள்ளேன் அய்யா!

  ஐ வில் மீட் யு ஆப்டர் த பிரேக்.///

  என்ன இது விளம்பர இடைவேளையா??

 36. நீங்க உள்ள இல்லனா நான் ஜகா வாங்கிக்கிறேன் ..

 37. //// மோகன்

  நீங்க அணிமா. அதனால நம்பித்தான் ஆகணும்.///

  முடியாது.. முடியவே முடியாது..
  ஒழுங்கா சொல்லுங்க …
  அது நீங்க தானே ?/

 38. //அந்த சந்தேகம் இருக்குறதால தான் கேக்குறேம்..
  எப்படியா இப்படி கூசாம பொய் சொல்றீரு ??//

  ஒரு பச்ச புள்ளைய பாத்து எப்படி இப்படி உங்களால கேக்க முடியுது?

 39. //மன்னிப்பு கேக்க சொன்னா, இப்படி எடா கூடமாவா பதில சொல்றது..

  GAPகிடைச்சா எங்க வேணாலும் எதுல வேணாலும் போடுவீங்களா??
  இருக்கட்டும் இருக்கட்டும் ..//

  மன்னிப்பா? மன்னிச்சிக்குங்க.

  எதோ உள்குத்து மாதிரி இருக்கே

 40. //என்ன இது விளம்பர இடைவேளையா??//

  ஹிஹி, இரவு உணவு இடைவேளை.

 41. ///மோகன்

  அப்போ சிறுகதை என்று சொல்லி இருந்தால், சிறுகதை அருமை இல்லையா?//

  என்னது இது சின்ன பு;ள்ள தனமா கேள்வி ??
  ( மனசுக்குள், அத நாங்க சொல்லி தான் தெரியனுமா என்ன??)

 42. //முடியாது.. முடியவே முடியாது..
  ஒழுங்கா சொல்லுங்க …
  அது நீங்க தானே ?///

  என்னது சின்ன புள்ளத் தனமா இருக்கு.

 43. ///மோகன்

  டிசம்பர் 15th, 2008 at 9:58 பிற்பகல்

  //என்ன இது விளம்பர இடைவேளையா??//

  ஹிஹி, இரவு உணவு இடைவேளை.///

  அடுத்த கதை களம் ரெடி…
  உணவு விடுதியில் ,

  சார் அத கொஞ்சம் தரீங்களா???

 44. //நீங்க உள்ள இல்லனா நான் ஜகா வாங்கிக்கிறேன் ..//

  உள்ளேன் அய்யா

 45. //என்னது இது சின்ன பு;ள்ள தனமா கேள்வி ??
  ( மனசுக்குள், அத நாங்க சொல்லி தான் தெரியனுமா என்ன??)//

  அதெல்லாம் தெரியாது. சிறுகதை நல்ல இருந்துச்சா இல்லையா?

 46. ///மோகன்

  ஒரு பச்ச புள்ளைய பாத்து எப்படி இப்படி உங்களால கேக்க முடியுது?///

  வேணாம், விட்டுடு…
  அப்புறம் ஒரு நல்லவன, மேன்மையானவன கொலைகாறன மாத்துன பாவம் உன்ன சும்மா விடாது

 47. //அடுத்த கதை களம் ரெடி…
  உணவு விடுதியில் ,

  சார் அத கொஞ்சம் தரீங்களா???//

  எனக்கு ஒன்னும் புரியலை. நீங்க நல்ல கதை ஆசிரியரா இருப்பீங்க போல இருக்கே?

 48. //வேணாம், விட்டுடு…
  அப்புறம் ஒரு நல்லவன, மேன்மையானவன கொலைகாறன மாத்துன பாவம் உன்ன சும்மா விடாது//

  சரி, சரி. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

 49. ///மோகன்

  //என்னது இது சின்ன பு;ள்ள தனமா கேள்வி ??
  ( மனசுக்குள், அத நாங்க சொல்லி தான் தெரியனுமா என்ன??)//

  அதெல்லாம் தெரியாது. சிறுகதை நல்ல இருந்துச்சா இல்லையா?////

  சரி இப்போ சீரியஸ் பின்னூட்டம் :
  திரு மோகன் அவர்களே,
  தாங்கள் எடுத்த கொண்ட கதை களத்தை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம்.
  மேலும் ஆனந்த் பற்றிய குணத்தை கூட விவரித்து இருக்கலாம் ( முன்பே அவனது குணம் அப்படி தானா? இல்லை சூழ்நிலையால் அப்படி சொன்னான??)

  இப்படி எல்லாம் கேக்கணும்ன்னு எனக்கும் ஆசை தான்..
  ஆனால் நமக்கு வராததை பற்றி விமர்சிப்பது அழகல்ல.. அதனால் நான் எஸ்கேப்

 50. ///மோகன்

  //நீங்க உள்ள இல்லனா நான் ஜகா வாங்கிக்கிறேன் ..//

  உள்ளேன் அய்யா//

  இந்த பயம் இருக்கணும்…

 51. //சரி இப்போ சீரியஸ் பின்னூட்டம் :
  திரு மோகன் அவர்களே,//

  எதுக்கு திரு?

  //தாங்கள் எடுத்த கொண்ட கதை களத்தை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம்.
  மேலும் ஆனந்த் பற்றிய குணத்தை கூட விவரித்து இருக்கலாம் ( முன்பே அவனது குணம் அப்படி தானா? இல்லை சூழ்நிலையால் அப்படி சொன்னான??)//

  இது சிறுகதை தானே, அதான்.

  சூழ்நிலை தான் மனிதனின் உண்மையான முகத்தை காட்டுகிறது. இந்த மாதிரி செல்வம் நம்முள்ளும் உண்டு. இது தான் கதையோட நீதி. புரிஞ்சதா?

  //இப்படி எல்லாம் கேக்கணும்ன்னு எனக்கும் ஆசை தான்..
  ஆனால் நமக்கு வராததை பற்றி விமர்சிப்பது அழகல்ல.. அதனால் நான் எஸ்கேப்//

  ஹிஹி

 52. //இந்த பயம் இருக்கணும்…//

  உங்க மேல எப்பவுமே பயம் இருக்கும்!

 53. //
  “ஈரோடு வரைக்கும் போகனும்னா சென்னை சென்ட்ரல் போய் அங்க இருந்து ஏதோ ஒரு ட்ரைன்ல உட்காந்துட்டு வர வேண்டியது தானே? ஏன் எங்க உயிரை எடுக்கறீங்க?” என்று கடுகடுத்துவிட்டு தூங்குவது போல பாவ்லா செய்ய ஆரம்பித்தார்
  //

  உங்க கதை நல்லாத் தான் இருக்கு…ஆனா அதுக்காக, “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய” தமிழ் கலாச்சாரத்தை இப்படில்லாம் தோலுரிக்கப்படாது! :))

 54. மோகன்,
  சூப்பர். நான் இதை நிறைய தடவை பார்த்து இருக்கேன்!! கதை அருமை!!
  முதல் முயற்சியே வெற்றி (நிஜமா முதல் முயற்சியா?)!! வாழ்த்துக்கள்!!

 55. //எதுக்கு திரு?
  கதாசிரியர்னா சும்மாவா?

 56. //சூழ்நிலை தான் மனிதனின் உண்மையான முகத்தை காட்டுகிறது. இந்த மாதிரி செல்வம் நம்முள்ளும் உண்டு. இது தான் கதையோட நீதி. புரிஞ்சதா?

  கதாசிரியர் பேசறது என்னிக்கு யாருக்கு புருஞ்சுருக்கு?

 57. //உங்க கதை நல்லாத் தான் இருக்கு…ஆனா அதுக்காக, “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய” தமிழ் கலாச்சாரத்தை இப்படில்லாம் தோலுரிக்கப்படாது! :))//

  அது சரி, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  அப்போ, கன்னடம் அல்லது தெலுங்கு-ன்னு மாத்திடட்டுமா? 🙂

 58. //மோகன்,
  சூப்பர். நான் இதை நிறைய தடவை பார்த்து இருக்கேன்!! கதை அருமை!!
  முதல் முயற்சியே வெற்றி (நிஜமா முதல் முயற்சியா?)!! வாழ்த்துக்கள்!!//

  புவனேஷ், தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  சின்ன வயசுல நெறைய கவிதை எழுதி இருக்கேன், அடுத்த ரிலீஸ் அது தான். ஹாஹா. நீங்க எல்லாம் பாவம். நான் எழுதற கதை, கவிதை படிக்க போறீங்க. காதலிக்க நேரம் இல்லை-ல நாகேஷ் சொல்லுற மாதிரி நான் எழுதறதுதான் கதை, கவிதை. மக்கள் அதை படிச்சித்தான் ஆகணும்.

 59. ////எதுக்கு திரு?
  கதாசிரியர்னா சும்மாவா?//

  இதுக்கு நான் திருதிரு னு முழிக்கணும்.

 60. //கதாசிரியர் பேசறது என்னிக்கு யாருக்கு புருஞ்சுருக்கு?//

  ஆஹா, நான் என்ன பின் நவீனத்துவமா பேசறேன். இது புரியாம போறதுக்கு?

 61. //இதுக்கு நான் திருதிரு னு முழிக்கணும்.

  நான் சரி திரு திரு மோகன்னு கூப்படலாமன்னு கேட்கலாம்னு நினச்சேன்!! இருந்தாலும் ஒரு ‘கதா’வா அப்படி கூப்பிட கூடாதுன்னு விட்டுட்டேன்!! ஹி ஹி

 62. // ஒரு பச்ச புள்ளைய பாத்து எப்படி இப்படி
  உங்களால கேக்க முடியுது?

  Mudiyala Mohan…

 63. முதல் முயற்சியிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வை அழகா சொல்லியிருக்கீங்க.

  வாழ்த்துக்கள்

 64. நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வாங்க அப்பு

 65. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

 66. நான் ரெம்ப லேட்டா?
  கதையைவிட பின்னூட்டம் வாசிக்கறதுக்கு தான் ரெம்ப நேரமாகுது.
  இன்னும் சிறந்த கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

  அரசியல் செய்திகளை interesting- அ எழுதற அளவுக்கு இதில் சுவாரஸ்யமான எழுத்து நடை இல்லையோ என்பது என்னுடய கருத்து.

 67. //நான் சரி திரு திரு மோகன்னு கூப்படலாமன்னு கேட்கலாம்னு நினச்சேன்!! இருந்தாலும் ஒரு ‘கதா’வா அப்படி கூப்பிட கூடாதுன்னு விட்டுட்டேன்!! ஹி ஹி//

  நெம்ப டேங்க்ஸ்

 68. //Mudiyala Mohan…//

  அடடா, அப்படி என்ன சொல்லிட்டேன். உண்மையத்தானே சொன்னேன்.

 69. //முதல் முயற்சியிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வை அழகா சொல்லியிருக்கீங்க.

  வாழ்த்துக்கள்//

  நன்றி அத்திரி

 70. //நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வாங்க அப்பு//

  வந்துடோம்ல?

 71. //நான் ரெம்ப லேட்டா?
  கதையைவிட பின்னூட்டம் வாசிக்கறதுக்கு தான் ரெம்ப நேரமாகுது.
  இன்னும் சிறந்த கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

  அரசியல் செய்திகளை interesting- அ எழுதற அளவுக்கு இதில் சுவாரஸ்யமான எழுத்து நடை இல்லையோ என்பது என்னுடய கருத்து.//

  லேட்டேல்லாம் இல்லை. கும்மி அடிக்கறாங்க சங்கத்துல இருக்கோமே, அதான் இம்புட்டு பின்னூட்டங்கள்.

  உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. கதைகளையும் சுவராஷ்யமகாத் தர முயல்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s