என்னை காப்பாற்றிய என் நண்பன்

என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).

நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு எடை தூக்கினாலும் அப்பிரிவில் வெற்றி பெற்று விடுவேன் என்று ஒரு நண்பன் (நண்பனா அவன்) உசுப்பேத்தி விடவே நானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தயாரானேன்.

முதலில் எனது நண்பன் பளுத் தூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயத்தமானான். என்ன ஆயிற்றோ தெரிய வில்லை. அவன் சரியாக பளுத் தூக்காமல் தவறி ஏடாகூடமாக கீழே போட்டு விட்டான். அதனால் அவனது தோள்பட்டை பிசகி விட்டது.  உடனே அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அப்பொழுது.

எனவே எங்கள் நண்பர்கள் பட்டாளம் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆகையால் நான் அன்று பளு தூக்க வில்லை. அனுபவம் உள்ள அவனுக்கே அன்று அக்கதி என்றால் கற்றுக்குட்டியான என் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். எனவே தான் அவனை  என்னை காப்பாற்றிய நண்பன் என்று சொன்னேன். சரிதானே? 🙂

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Advertisements

6 responses to “என்னை காப்பாற்றிய என் நண்பன்

 1. I am the first one to comment this post

 2. நீங்க பேர் கொடுத்துட்டு பளு தூக்காம எஸ்கேப் ஆனதுக்கு இப்படி ஒரு காரணமா?
  பலே வெள்ளையத்தேவா…

 3. // I am the first one to comment this post //

  நண்பரே நீர்தான் முதலில் எனது இடுகைக்கு பின்னூட்டம் இட்டீர்கள். மிக்க நன்றி.

 4. // நீங்க பேர் கொடுத்துட்டு பளு தூக்காம எஸ்கேப் ஆனதுக்கு இப்படி ஒரு காரணமா?
  பலே வெள்ளையத்தேவா…//

  இப்படி உண்மையை பட்டுன்னு போட்டு உடைக்கலாமா, ஸ்ரீராம்? ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரன்ட்!

 5. //நீங்க பேர் கொடுத்துட்டு பளு தூக்காம எஸ்கேப் ஆனதுக்கு இப்படி ஒரு காரணமா?
  பலே வெள்ளையத்தேவா…

  ம் …..அதானே

  இருந்தாலும் வீர தீர மோகனை இப்படி பயமுறுத்திவிட்டாரே.

 6. வீரம் தீரமா இதை எல்லாம நான் புத்தகத்துல தான் பாத்து இருக்கேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s