பட்டாம்பூச்சி விருது

சில நாட்களுக்கு முன் நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா என்னுடையப்பதிவிற்கு “Butterfly Award” கொடுத்துள்ளார். இந்த அவார்ட் “Coolest Blog I ever Know (இதை எப்படி தமிழில் சொல்லுவது?)” க்கு தரப்படுவதாம்.

butterfly_award4

இந்த அவார்ட் கொடுத்த நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த அவார்ட் (விருது -என்று சொல்லலாமா?) பெற எனது பதிவிற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்  எழாமல் இல்லை.(இது தான் சாக்குன்னு விருதை திருப்பி கேட்டுடாதீங்க  அணிமா, ஹிஹி). கொடுத்ததை திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்காது மற்றும் அணிமா மனம் புண்படும் என்பதாலும் இந்த விருதை நானே வைத்துக் கொள்கிறேன். இப்பொழுது இந்த விருதுக்கு நானும் சிலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கிரி – மிகுந்த இயல்பாக பதிவுகள் எழுதுபவர்.
அது சரி – அவருடைய வேதாளம்-மாதி கதைகள்
குந்தவை – பெரும்பாலும் அவருடைய குழந்தை கண்மணியின் குறும்புகளை பற்றி எழுதுவார். அவ்வப்பொழுது சொந்த அனுபவங்களையும் சொல்வார். அதில் பள்ளிக்கு கட் அடித்த அனுபவத்தை படித்து பாருங்கள். ஹாஹா.

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

பின்குறிப்பு:
இவ்விருதை ஏன் எனக்கு கொடுக்க வில்லை என்றும் ஏன் எனக்கு கொடுத்தாய் என்றும் யாரும் கோவித்துக் கொள்ள வேண்டாம்.

Advertisements

23 responses to “பட்டாம்பூச்சி விருது

 1. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!

  அப்புறம் நம்ம கிரி-ஜிக்கு இந்த விருதை வழங்கினதுக்கு ரொம்ப நன்றிங்க!!!

 2. பாசகி உங்கள் வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி. கிரிஜிக்கு இந்த விருது எல்லாம் சும்மா.

 3. Vaazhthukkal Annaathai…

 4. உங்க வாழ்த்துகளிற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

 5. விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் மோகன் :))

 6. எனக்கெல்லாம் விருதா??? ரொம்ப தர்ம சங்கடத்துல மாட்டி விட்டுட்டீங்களே!

  ஆஹான்னு ஏத்துக்கலாம், அதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கு…ஏத்துக்கிட்டா என் ப்ளாக் ஏதோ நல்ல ப்ளாக்குன்னு ஒத்துக்கிட்டா மாதிரி ஆயிடுமே…நான் அடிக்கிறதே ஜல்லி….எழுதறதெல்லாம் மொக்கை….அதனால விருதை ஏத்துக்கிற தகுதி எனக்கு இல்லைங்க….

  தப்பா எடுத்துக்காதீங்க…இந்த விருதை நல்லா எழுதற வேற யாருக்காவது கொடுத்துருங்களேன், ப்ளீஸ்!

  (லிங்க் பத்தி பிரச்சினை இல்லை…இதுவரையில் நான் படிச்சதுல நல்லா எழுதறாங்கன்னு நான் நினைக்கிற பதிவுகளுக்கு ஏற்கனவே என் சைட்ல இருந்து லிங்க் இருக்கு…அதுல உங்க பதிவும் ஒண்ணு!)

  மறுப்புக்கு மன்னிக்க!

 7. எனக்கு உங்கள் அன்பை கொடுத்தமைக்கு நன்றி மோகன்.

  தொடர் விளையாட்டு என்றாலே கலவரம் ஆகி விடுவேன். ஆனால் இதில் உள்ள விதி முறைகள் படி எனக்கு இதை தொடர்வது சிரமம். முயற்சி செய்ய முயற்சிக்கிறேன் 🙂

  வாழ்த்து கூறிய சக்திக்கு நன்றி

 8. //எனது பதிவிற்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை

  இப்படியெல்லாம் கேள்வி கேட்டுகொண்டிருந்தால், இந்த பிளாக் எழுதி எவ்வளவு பேருக்கு தொல்லை கொடுக்கிறோம் என்று நிறைய உண்மை வெளிவரும் தம்பி. இந்த கஷ்டமெல்லாம் நமக்கு தேவையா, அதனால கேள்வி கேட்ககூடாது.

  அதனால இந்த மாதிரி கேள்வி கேட்காம நான் வாங்கிக்கிறேன். எவ்வளவோ கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறாங்க இதையும் அனுபவிக்கட்டும்.

  விருது கொடுத்த மோகனுக்கு நன்றி.

 9. பெண்களுக்கு எப்போதும் ரெம்ப தாராள மனது தம்பி , சந்தோஷமா விருதை மூணுபேருக்கு கொடுத்துவிடுகிறேன்.

 10. என்ன கன்னு சவுக்கியமா??

 11. இப்போ போறேன்..

  கண்டிப்பா வருவேன்

 12. விருது வாங்குன அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா!

 13. சாரி பா!! லைட்டா கொழம்பிட்டேன்! மனுசுக்க பா!!

 14. //சாரி பா!! லைட்டா கொழம்பிட்டேன்! மனுசுக்க பா!!

  கொஞ்சம் ஓவரா கொழம்பி, வேற எடத்துல போட வேண்டிய மறுமொழியை இங்கே போட்டுட்டேன்! இதுக்கும் மனுசுருங்க!

 15. நன்றி அதுசரி. நீங்க விருது வாங்கியதற்கும் வாழ்த்துகள்.

 16. குடுத்த அவார்ட திரும்ப வாங்கற பழக்கம் எனக்கு இல்லைங்க.

  நானே வெக்கம் இல்லாம அவார்ட வாங்கினப்புறம் உங்களுக்கு என்ன? உங்க நவீன விக்கிரமாதித்தன் கதைகளுக்கு இதை விட நல்ல விருது கெடைக்கணும்.

  சந்தேகமே பட வேண்டாம். உங்க பிளாக் நல்ல பிளாக் தான்.

  நீங்க ரிடர்ன் பண்ணுற விருதை வாங்க மறுக்கரதுக்கு என்னை மன்னிச்சிகோங்க.அந்த விருது உங்களுக்கு தான்.

 17. முயற்சி செய்யுங்கள் கிரி இல்லையென்றால் அந்த விருதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் 🙂

 18. //இப்படியெல்லாம் கேள்வி கேட்டுகொண்டிருந்தால், இந்த பிளாக் எழுதி எவ்வளவு பேருக்கு தொல்லை கொடுக்கிறோம் என்று நிறைய உண்மை வெளிவரும் தம்பி. இந்த கஷ்டமெல்லாம் நமக்கு தேவையா, அதனால கேள்வி கேட்ககூடாது.//
  அக்கா இதை நான் கன்னாபின்னாவென்று வழி மொழிகிறேன்.

  //அதனால இந்த மாதிரி கேள்வி கேட்காம நான் வாங்கிக்கிறேன். எவ்வளவோ கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறாங்க இதையும் அனுபவிக்கட்டும். //
  நல்ல அக்கா.

 19. அண்ணே நான் சவுக்கியம் தான். நீங்க எப்படி இருக்கீங்க?

 20. அண்ணே இந்த வீடு உங்களுக்காக எப்பவும் திறந்து இருக்கும்.

 21. // விருது வாங்குன அனைவருக்கும் வாழ்த்துக்கள் பா! //
  நன்றிபா, சீக்கிரமே நீயும் ஒன்னு வாங்கிடு.

 22. // கொஞ்சம் ஓவரா கொழம்பி, வேற எடத்துல போட வேண்டிய மறுமொழியை இங்கே போட்டுட்டேன்! இதுக்கும் மனுசுருங்க! //
  இன்னுமா ஹேங் ஓவர் இருக்கு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s