கன்னாபின்னாச் செய்திகள் 5

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …

ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்

பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?

ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.

நமது அண்டை நாடுகளில்  இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்

அப்படியா!

தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது புற வழியா?

யோகா தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு வருவேன். எனக்குப் பிடித்த ஊர்களில் மெட்ராஸும் ஒன்று. சில்பா ஷெட்டி

நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.

நான் கொடுத்தது லஞ்சம் அல்ல – ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு வாழ்த்து கேட்டபோது, தான் பிறந்த நாள் பரிசு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒன்னும் சொல்லறதுக்கில்லை

சத்யம் நிறுவனத்தில் நடந்த கோல்மால்களை வைத்து ராம் கோபால் வர்மா ஒரு படம் எடுப்பதற்காக சத்யம் நிறுவன நிதி ஆவணங்களை ஆராய்ந்துள்ளார் என்று நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி

திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்

பணம் பலம் வென்று விட்டது: ஜெயலலிதா

இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்

அதிமுகவின் வெற்றி ஓர் மாயை: கருணாநிதி

பண பலத்தையும் மீறி மக்கள் எங்களுக்கு ஒட்டு போட்டதற்கு அதிமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைதான் காரணம் – ஜெயலலிதா

இந்த வண்ணத்தில் இருப்பவை நிஜச் செய்திகள். இவ்வண்ணத்தில் இருப்பவை கன்னாபின்னாச் செய்திகள்.

Advertisements

27 responses to “கன்னாபின்னாச் செய்திகள் 5

 1. //
  ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …
  ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!
  //

  அப்படி அவங்களுக்கு பஸ்ல, ட்ரெய்ன்ல போறது கஷ்டமா இருந்தா கொஞ்சம் அழுத்திக் கேட்டா தனி ஃபிளைட்டே அரேஞ்ச் பண்ணுவாங்க…

  உங்க கமெண்ட்டெல்லாம் நல்லா இருக்கு மோகன் :0))

 2. Bhuvanesh enna vilaiyaatu ithu chinna pillaiyaattam…

 3. //இதுவே அதிமுக ஜெயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்

  நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்கிறேன்!!

 4. //Bhuvanesh enna vilaiyaatu ithu chinna pillaiyaattam…

  ஸ்ரீராம், நான் சின்ன பையன் தான்!!

 5. பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணாச்சி…
  ஆமாம் பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லுறதா…
  இல்லை புத்தாண்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லுறதா..
  ஒரே குழப்பமா இருக்கே…

 6. // ஸ்ரீராம், நான் சின்ன பையன் தான்!! //

  சரி சரி நம்மள மாதிரி சின்ன பசங்க இப்படி எல்லாம் கலாய்ச்சிகிறது சகஜம் தான்…

 7. //தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்

  என்ன தான் ட்வின் டவரை இடித்தாலும் ஒசாமா நம்மக்கு நண்பன் : புஷ்

  எங்கள் இனத்தை அழித்தாலும் ஸ்ரீலங்கா ஆர்மி எங்கள் நண்பர்கள்: விடுதலை புலிகள்

 8. //ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

  அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.

  இது டாப்.

  வழக்கம் போல் எல்லா செய்தியையும் ரசித்து சிரித்தேன்.
  ஆமா இதென்ன ரெண்டு பிள்ளைங்க இங்க ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க வீட்டுல தேட மாட்டாங்களா? ம்….ம்… எல்லாரும் ஓடுங்க.

 9. // அப்படி அவங்களுக்கு பஸ்ல, ட்ரெய்ன்ல போறது கஷ்டமா இருந்தா கொஞ்சம் அழுத்திக் கேட்டா தனி ஃபிளைட்டே அரேஞ்ச் பண்ணுவாங்க… //
  அது சரி, சரியா சொன்னீங்க, சார்டர்ட் பிளைட் ரெடி பண்ணித் தருவாங்க.

  //உங்க கமெண்ட்டெல்லாம் நல்லா இருக்கு மோகன் :0))//
  உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

 10. புவனேஷ், அது சரி (முரண்தொடை) தான் முதல்ல வந்தாரு.

 11. // Me the second //
  ஸ்ரீராம், நீங்க மூணாவதா வந்து இருக்கீங்க.

 12. // Bhuvanesh enna vilaiyaatu ithu chinna pillaiyaattam… //
  நாம எல்லாருமே சின்ன பசங்க தானே?

 13. // பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணாச்சி…
  ஆமாம் பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லுறதா…
  இல்லை புத்தாண்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லுறதா..
  ஒரே குழப்பமா இருக்கே…//

  உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் ஸ்ரீராம். இன்னும் நம்ம மக்கள் இதை தமிழ் புத்தாண்டா ஒத்துக்கலை. அதனால நானும் ஒத்துக்கலை. எனவே வெறும் பொங்கல் வாழ்த்துகள்னு மட்டுமே சொல்லலாம்.

 14. // சரி சரி நம்மள மாதிரி சின்ன பசங்க இப்படி எல்லாம் கலாய்ச்சிகிறது சகஜம் தான்… //

  இதெல்லாம் சகஜமப்பா

 15. // என்ன தான் ட்வின் டவரை இடித்தாலும் ஒசாமா நம்மக்கு நண்பன் : புஷ்

  எங்கள் இனத்தை அழித்தாலும் ஸ்ரீலங்கா ஆர்மி எங்கள் நண்பர்கள்: விடுதலை புலிகள்//

  புவனேஷ், பிரமாதம். நீங்க கூட இம்மாதிரி ஏடாகூட செய்திகள் போடலாமே?

 16. // வழக்கம் போல் எல்லா செய்தியையும் ரசித்து சிரித்தேன்.
  ஆமா இதென்ன ரெண்டு பிள்ளைங்க இங்க ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க வீட்டுல தேட மாட்டாங்களா? ம்….ம்… எல்லாரும் ஓடுங்க.//

  மிக்க நன்றி அக்கா. பசங்களா வீட்டுக்கு போங்க அக்கா சொல்லுராங்கல்ல?

 17. அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

 18. // நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்கிறேன்!! //

  யாருங்க அது?

 19. //யாருங்க அது?
  சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப்ரீம் ஸ்டார் !! இப்பவும் தெரியலைனா அவரு தான் ஊருக்கெல்லாம் சித்தப்பா (ஐ மீன் சித்தியோட புருஷன்!!)

 20. //அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.//

  ஹா ஹா ஹா ரிப்பீட்டேய்

  //நம்பிடாதீங்க, இதையே ஹைதராபாத்லையும் சொல்லுவாங்க.//

  இப்படி எல்லாம் உண்மைய உடைக்க கூடாது 😉

  //Bhuvanesh // ஜனவரி 15, 2009 இல் 12:31 பிற்பகல்

  //யாருங்க அது?
  சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப்ரீம் ஸ்டார் !! இப்பவும் தெரியலைனா அவரு தான் ஊருக்கெல்லாம் சித்தப்பா (ஐ மீன் சித்தியோட புருஷன்!!)//

  :-))))))))

 21. நமது அண்டை நாடுகளில் இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் நிலையான ஜனநாயகம் இல்லை ப.சிதம்பரம்

  செம காமெடி பண்றீங்க சார் நீங்க …

 22. கிரி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி 🙂

 23. ஸ்ரீதர் கண்ணன், தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  // செம காமெடி பண்றீங்க சார் நீங்க …//

  சிதம்பரத்தை தானே சொன்னீங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s