விழா கொண்டாட்டங்கள்

என்ன நண்பர்களே, எல்லாரும்  பொங்கலை நன்றாக  கொண்டாடினீர்களா?

நான் சிறு வயதில் தீபாவளி, பொங்கல் மற்றும் எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகைகளை கொண்டியப் போது இருந்த ஒரு சந்தோசம் இப்போது இல்லாத மாதிரியே உணருகின்றேன். இப்பொழுது பண்டிகை காலங்களிற்கு சொந்த ஊருக்கு சென்று அடைந்தால் போதும் என்று தான் நினைக்கிறேன். வீட்டிற்கு   போவதிலே தான் சந்தோஷம் இருக்கிறதே தவிர  விழாவை கொண்டாடுவதில் அப்படி பிரமாதமாக சந்தோஷம் இல்லை. நான் மட்டும் தான் இம்மாதிரி நினைக்கிறேனா அல்லது மற்றவர்களும் இப்படியே நினைகின்றார்களா?  குறைந்த பட்சம் குழந்தைகளாவது விழாக் காலங்களில் மிக்க சந்தோசமாக இருக்கிறார்களா? விழாவை எதிர்  நோக்கி காத்திருக்கிறார்களா? நான் என் சிறு வயதில் விழாக்களை எதிர் நோக்கிக் காத்திருப்பேன்.. இந்த பொங்கல் பண்டிகையின்போது நான் தொலைக்காட்சி பெட்ட்டியில் ஒரு படம் கூட முழுமையாகப் பார்க்கவில்லை. உறவினர்களை சந்திப்பது, வேறு வேலை செய்வது என்று சற்று உபயோகமாக பொழுதை செலவழித்தேன். அதனால் சற்று நிம்மதியாக உணருகிறேன் 🙂

Advertisements

33 responses to “விழா கொண்டாட்டங்கள்

 1. //வீட்டிற்கு போவதிலே தான் சந்தோஷம் இருக்கிறதே தவிர விழாவை கொண்டாடுவதில் அப்படி பிரமாதமாக சந்தோஷம் இல்லை. //

  அப்படித்தான் இருக்கிறது.

 2. நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவிற்கு இங்கே அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும்

 3. நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவிற்குஇங்கே அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும்

 4. // அப்படித்தான் இருக்கிறது. //

  சரவணகுமரன் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. வீட்டை விட்டு வெளியே வந்து வேலை செய்பவர்களுக்கு இந்த நிலைமைதான்.

 5. // நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவிற்கு இங்கே அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும் //

  நண்பரே, தொடர்ப் பதிவிற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி(அவ்வ்வ்வ்). நண்பர் ஸ்ரீராம் @ இங்கிலிஷ்காரன் முன்னரே என்னை இத்தொடர்ப்பதிவிற்கு அழைத்துள்ளார். ஆனால் எனக்கு இன்னும் அந்த மாதிரி வார்த்தைகள் கிடைக்க வில்லை. கிடைத்த உடன் நான் பதிவு போட்டு விடுகிறேன்.

 6. //உறவினர்களை சந்திப்பது, வேறு வேலை செய்வது என்று சற்று உபயோகமாக பொழுதை செலவழித்தேன்//

  இதை போல செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமும்.

 7. வாங்க கிரி, ரொம்ப நாட்களுக்கு பின் கொஞ்சம் சந்தோசமாக ஒரு விழாவை கழித்தேன்.

 8. //வேறு வேலை செய்வது என்று சற்று உபயோகமாக பொழுதை செலவழித்தேன்//

  Sema Comedy sir neenga

 9. // Sema Comedy sir neenga //
  ஸ்ரீராம், என்ன காமெடி நான் பண்ணேன்? எனக்கு பத்ம விபூஷண் விருது கொடுப்பாங்களா?

 10. // எனக்கு பத்ம விபூஷண் விருது கொடுப்பாங்களா? //
  ஆஹா ஆஹா…கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க…

 11. // சற்று உபயோகமாக பொழுதை செலவழித்தேன்//

  அண்ணாச்சி நீங்க சொல்றது எப்படி இருக்கு என்றால் …

  நபர் 1: ஊருல நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
  நபர் 2: எங்க அப்பாவுக்கு உதவியாக இருந்தேன்.
  நபர் 1:உங்க அப்பா என்ன பண்ணிட்டு இருந்தார்?
  நபர் ௨: சும்மா தான் இருந்தார்.
  நபர் 1: அப்ப நீங்க உங்க அப்பாவுக்கு என்ன உதவி செஞ்சீங்க ?
  நபர் 2: ??!!

 12. //ஸ்ரீராம், என்ன காமெடி நான் பண்ணேன்? எனக்கு பத்ம விபூஷண் விருது கொடுப்பாங்களா?

  என்னது விருது வேணுமா ?? அதுக்கு டபுள் மீனிங்ல நிறைய பேசணும்!!
  நல்லா கெட்ட வார்த்தை பேசீட்டு அடிக்கடி நான் பகுத்தறிவுவாதி, ஊரை திருத்தறேன் னு சொல்லணும்!! இது எல்லாம் செய்யாமா விருது வேணுமா ??

 13. நண்பரேபுதியதாக முதன் முதலில் உபுண்டு 8.04.1 டெஸ்க்டாப் எடிசன் விண்டோஸ் எக்ஸ்பியின் வாயிலாக நிறுவினேன். என்னுடைய உபுண்டுவில் எப்படி வீடியோ பார்ப்பது என்று விளக்கம் அளிக்கவும். என்னிடம் இண்டெர்நெட் இல்லை. அத்துடன் எந்த மென்பொருள் டவுண்லோடு செய்து எப்படி இண்ஸ்டால் தெளிவாக விளக்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி

 14. சும்மா இருக்கறதும் ஒரு வேலை தானே ஸ்ரீராம் 🙂

 15. // என்னது விருது வேணுமா ?? அதுக்கு டபுள் மீனிங்ல நிறைய பேசணும்!! //
  அப்படியா புவனேஷ், அப்போ உங்களுக்கு ஏன் இன்னும் பத்மா பூசன் விருது கெடைக்கலை?

  ஹிஹி, சும்மா

 16. வடிவேலன் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

  இந்த இணைப்பை பாருங்கள் https://help.ubuntu.com/community/RestrictedFormats இதில் இருப்பவற்றை முயன்றும் வேலை செய்ய வில்லை என்றால் சொல்லுங்கள் பிரித்து மேய்ந்து விடுவோம்.

 17. ஆமாம் அண்ணாச்சி ,,,,சும்மா இருப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் அண்ணாச்சி…

 18. ஏன் இப்படி ஆள் ஆளுக்கு”பத்மா” பூஷனுக்கு சண்டை போட்டுக்கிறாங்க…

 19. அண்ணாச்சி எனக்கு ஒரு சந்தேகம்…ஹ்ரித்திக் ரோஷனோட சொந்தக் கார பொண்ண இந்த பத்மா பூஷன்?

 20. //// என்னது விருது வேணுமா ?? அதுக்கு டபுள் மீனிங்ல நிறைய பேசணும்!! //
  அப்படியா புவனேஷ், அப்போ உங்களுக்கு ஏன் இன்னும் பத்மா பூசன் விருது கெடைக்கலை?

  ஹிஹி, சும்மா//

  புவனேஷ் ஏன் இன்னும் பத்ம விபூசன் உங்களுக்கு குடுக்கலை?
  ஸ்ரீராம் தவறை திருத்திட்டேன் போதுமா?

 21. // அண்ணாச்சி எனக்கு ஒரு சந்தேகம்…ஹ்ரித்திக் ரோஷனோட சொந்தக் கார பொண்ண இந்த பத்மா பூஷன்? //

  வாங்கய்யா, நல்ல கேக்கறீங்க டவுட்டு!

 22. தவறுக்காக சொல்லலீங்க அண்ணே…
  உண்மையிலேயே இந்த விருது எல்லாம் எதுக்கு கொடுக்கறாங்க?
  பேரெல்லாம் வேறே ஒரே டெர்ரராக இருக்குது…
  அதான் பயந்துட்டேன்.

 23. // தவறுக்காக சொல்லலீங்க அண்ணே… உண்மையிலேயே இந்த விருது எல்லாம் எதுக்கு கொடுக்கறாங்க? பேரெல்லாம் வேறே ஒரே டெர்ரராக இருக்குது… அதான் பயந்துட்டேன். //

  ஸ்ரீராம் தவறை திருத்துவதற்கு நீங்கள் உதவியதாகவே எண்ணிக் கொள்கிறேன்.

  பத்மா என்கிற பெயர் உங்களுக்கு டெர்ரராக இருக்கிறதா?

 24. // நண்பரேபுதியதாக முதன் முதலில் உபுண்டு 8.04.1 டெஸ்க்டாப் எடிசன் விண்டோஸ் எக்ஸ்பியின் வாயிலாக நிறுவினேன். என்னுடைய உபுண்டுவில் எப்படி வீடியோ பார்ப்பது என்று விளக்கம் அளிக்கவும். என்னிடம் இண்டெர்நெட் இல்லை. அத்துடன் எந்த மென்பொருள் டவுண்லோடு செய்து எப்படி இண்ஸ்டால் தெளிவாக விளக்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

  வடிவேலன் இணைய இணைப்பு இல்லாமல் இவற்றை நிறுவுவது மிகக்கடினம் தான். நான் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று முயற்சிக்கிறேன்.

 25. // அண்ணாச்சி எனக்கு ஒரு சந்தேகம்…ஹ்ரித்திக் ரோஷனோட சொந்தக் கார பொண்ண இந்த பத்மா பூஷன்?
  ஹா….ஹா…நக்கல் பிடிச்ச ஆசாமியா இருக்காரு.

  //பேரெல்லாம் வேறே ஒரே டெர்ரராக இருக்குது…
  அதான் பயந்துட்டேன்.
  இது தானே வேண்டாங்கிறது.

 26. //அப்படியா புவனேஷ், அப்போ உங்களுக்கு ஏன் இன்னும் பத்மா பூசன் விருது கெடைக்கலை?

  ஒரு சின்ன பையன இப்படியா காலாய்கறது ??

 27. // // அண்ணாச்சி எனக்கு ஒரு சந்தேகம்…ஹ்ரித்திக் ரோஷனோட சொந்தக் கார பொண்ண இந்த பத்மா பூஷன்?
  ஹா….ஹா…நக்கல் பிடிச்ச ஆசாமியா இருக்காரு.

  //பேரெல்லாம் வேறே ஒரே டெர்ரராக இருக்குது…
  அதான் பயந்துட்டேன்.
  இது தானே வேண்டாங்கிறது.//

  சரியாகச் சொன்னீங்க அக்கா, ஸ்ரீராம் ரொம்ப நக்கல் புடிச்சவர் தான்.

 28. // ஒரு சின்ன பையன இப்படியா காலாய்கறது ?? //
  புவனேஷ் நீங்க சின்ன பையனா? உங்க பிளாக் பேரே சுட்ட பழம் தானே 🙂

 29. // Hello Sir, where r u? //
  அக்கா நான் இங்கயே தான் இருக்கேன். ரெம்ப பிசி. எல்லார் வீட்டுக்கும் வரணும். வந்து பின்னூட்டம் போடணும். அப்புறமா வரேன்.

 30. அன்னாசி எங்க ஆளையே காணோம்?

 31. அண்ணாச்சி எங்க ஆளையே காணோம்?

 32. ஸ்ரீராம், ரெம்ப வேலை இருக்கு. அது தவிர பதிவு போடறதுக்கு மேட்டரும் கெடைக்கலை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s