உதவிக்கு வரலாமா?

நள்ளிரவு சந்திரன் சென்னை மத்திய ரயில்நிலையத்தில் (Chennai Central) கோவை ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தான். அவன் எப்பொழுதும் நேரங்கெட்ட நேரத்தில்தான் ஊருக்கு கிளம்புவது வழக்கம்.

அப்பொழுது பார்ப்பதற்கு டீசண்டாக காட்சி தந்த ஒருவன்  சந்திரனிடம் வந்து பேச்சை ஆரம்பிக்கிறான்.

புதிய நபர்: ஹாய்
சந்திரன்: ஹாய்
புதிய நபர்: ஹாய், ஐ யாம் குரு!
சந்திரன்: ஹாய், ஐ யாம் சந்திரன்
குரு: நீங்க தப்பா நெனைக்கலைன்னா உங்க கிட்டே ஒரு உதவி கேக்கலாமா?
சந்திரன்: (மனதுக்குள் வேண்டாம்னு சொன்ன கேக்கவா போறீங்க!) சொல்லுங்க பாஸ்
குரு: நான் யு.எஸ்ஸில இருந்து இப்போதான் வரேன். எனக்கு கஸ்டம்ஸ்ல கொஞ்சம் பிரச்சினை ஆயிடிச்சி.
சந்திரன்: என்னது  யு.எஸ்ஸில இருந்து டிரைன்ல வந்தீங்களா?
குரு: இல்லைங்க, பிளைட்ல தான் வந்தேன். ஏர்போர்ட் பக்கம் தானே ரயில்வே ஸ்டேஷன் இருக்கு, அங்க இருந்து ட்ரயின் புடிச்சி இங்க வந்தேன்.
சந்திரன்: சரி அதுக்கு என்ன இப்போ?
குரு: இந்த தடவை நெறைய எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் வாங்கிட்டு வந்தேனா, கஸ்டம்ஸ்ல புடிச்சிட்டாங்க
சந்திரன்: (கஷ்டம்டா சாமி), ஓஹோ
குரு: கஸ்டம்ஸ்ல நெறைய காசு கேக்கறாங்க
சந்திரன்: அதுக்கு?
குரு: என்கிடே இப்போ அவ்ளோ பணம் இல்லை. உங்ககிட்டே பணம் இருந்தா கொடுங்க. நான் ஊருக்கு போய்ட்டு உங்களுக்கு அனுப்பிடறேன்.

சந்திரன்: நீங்க யாருன்னே எனக்கு தெரியாது? நான் எப்படி உங்களுக்கு பணம் தரது?
குரு: பாஸ், அப்படி சொல்லிடாதீங்க. பணம் கொடுக்காட்டி எல்லா பொருளும் கஸ்டம்ஸ்ல மாட்டிக்கும்
சந்திரன்: அதுக்கு நான் என்னாங்க பண்ணுறது?
குரு: பணம் கொடுத்து உதவி பண்ணீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும். ஊருக்கு போய் நான் பணம் அனுப்பிடறேன்.
சந்திரன்: சொன்ன நம்புங்க பாஸ் என்கிட்டே பணம் இல்லை. டிரையின் டிக்கெட்க்கு மட்டும் தான் வச்சி இருக்கேன்.
குரு: பாஸ், பாஸ் பிளீஸ் அப்படி சொல்லிடாதீங்க பாஸ். வீட்டுல இருக்குறவங்களுக்கு வாங்கிட்டு வந்த பொருள் எல்லாமே அவங்க எடுத்துக்குவாங்க பாஸ்.
சந்திரன்: (ஆகா, தெரியாத தனமா பேச்சு கொடுத்துட்டோமே) இல்லை பாஸ் என்கிட்டே பணம் இல்லை.
குரு: பாஸ், உங்க பேங்க் அக்கௌன்ட் ல பணம் வச்சி இருப்பீங்கல்ல?
சந்திரன்: (அட பாவி) அதுக்கென்ன?
குரு: அதுல இருந்து பணம் எடுத்துக் கொடுங்க பாஸ்
சந்திரன்: யோவ் என்ன விளையாடறியா?
குரு: இல்லை பாஸ் (பேசிக் கொண்டிருக்கும் போதே கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்க்கிறது)

சந்திரன்: இதுக்கு ஏனய்யா அழற?
குரு: பாஸ் 1200$ வொர்த் எலெக்ட்ரானிக் ஐடம்ஸ் பாஸ். வீட்டுல இருக்குறவங்களுக்கு ஆசையா வாங்கிட்டு வந்தது. இப்போ நான் பணம் கொடுக்காட்டி ஒண்ணு கூட எடுத்துக்கிட்டு போக முடியாது.
சந்திரன்: உன்னோட அக்கௌன்ட்ல பணம் இருக்குமே, அதை எடுக்க வேண்டியது தானே?
குரு: இல்லை பாஸ், என்னோட யு.எஸ். பேங்க் அக்கௌன்ட்ல இருந்து இப்போ பணம் எடுக்க முடியாது. அது லாக் ஆகிடிச்சி. ஒரு மெயில் அவங்களுக்கு அனுப்பி தான் அதை மறுபடி எனேபில் பண்ணனும்.
சந்திரன்: சரி, ஆனா நெஜமாவா என்கிட்டே பணம் இப்போ இல்லையே. நான் என்ன பண்ணுறது?
குரு: பாஸ், உங்க அக்கௌன்ட்ல  இருந்து பணம் எடுத்து தாங்களேன். உங்க உதவிய நான் மறக்கவே மாட்டேன்.
சந்திரன்: யோவ், இது உனக்கு ரொம்ப ஓவரா தெரியலை. நானே இங்க ட்ரைன்க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
குரு: பாஸ், ப்ளீஸ் ப்ளீஸ் (மறுபடி கண்களில் கண்ணீர்)

சந்திரன்: (ம்ம்ம்ம், ஐடியா) என்கிட்டே ஒரு பழைய டெபிட் கார்ட் இருக்கு அதுல கொஞ்சம் பணம் இருக்கும். அதை வேணும்னா யூஸ் பண்ணிகொங்களேன்.
குரு: தேங்க் யு வெரி மச் பாஸ். எவ்ளோ பணம் இருக்கும்.
சந்திரன்: (எவ்ளோ சொல்லலாம்), 1000 ரூபாய் இருக்கும்.
குரு: பத்தாதே பாஸ். 5000 ரூபாய் கேக்கராங்களே
சந்திரன்: என்கிட்டே இருக்கறதை தான் தர முடியும். இங்க வேற யார்கிட்டேயாவது கேட்டுகோங்க.
குரு: பாஸ், இங்க மத்த யாரும் ஹெல்ப் பண்ண மாட்டங்க. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
சந்திரன்: உன்னோட இம்சையா போச்சே. என்கிட்டே இருக்கறதை தானே தர முடியும்
குரு: பாஸ் உங்க பிரன்ட்  யார்கிட்டேயாவது வாங்கி தாங்களேன்.
சந்திரன்: என்ன வெலயாடரியா? நீயே யாருன்னு தெரியாது இதுல நான் எப்படி வாங்கி தரது?
குரு: ப்ளீஸ் பாஸ்
சந்திரன்: (டே ராஜா, மன்னிசிக்கொடா நான் தப்பிக்கறதுக்கு உன்னை மாட்டி விடறேன்) என்னோட ரூம்க்கு போங்க. அங்க என் பிரன்ட் ராஜா இருப்பான். அவன்கிட்டே பணம் வாங்கிக்குங்க.
குரு: சரி பாஸ், அட்ரஸ் கொடுங்க
சந்திரன்: abcd மேன்சன், ரூம் நம்பர் 45, ட்ரிப்ளிகேன்.
குரு: தேங்க் யு வெரி மச் பாஸ். இந்த ஹெல்பை நான் மறக்கவே மாட்டேன்.

சந்திரன் அந்த டெபிட் கார்டை மிஸ்டர் எக்ஸிடம் கொடுத்து விட்டு ‘ஐ ஆம் எஸ்கேப்’ என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தை காலி செய்தான்.

குரு சந்திரனிடம் இருந்து டெபிட் கார்ட் வாங்கிக் கொண்டு திருவல்லிகேணி கிளம்பினான். பாவம் அவனுக்கு தெரியாது அந்த அக்கௌன்ட்டில் கொஞ்சம் கூட பணம் இல்லை என்று.

(தொடரும்)

Advertisements

27 responses to “உதவிக்கு வரலாமா?

 1. அண்ணாச்சி கதை முடிஞ்சுடுச்சா.. இல்லை இன்னும் தொடருமா …

 2. // Me the first //
  நீங்க தான் பர்ஸ்டு ஸ்ரீராம்.

  // அண்ணாச்சி கதை முடிஞ்சுடுச்சா.. இல்லை இன்னும் தொடருமா …//
  கதை இன்னும் தொடரும்.

 3. கதை சுவாரசியமாக செல்கிறது… நடை உரையாடல்கள் மூலம் செல்வது போல அமைத்திருப்பது அருமை. சீக்கிரம் அடுத்த தொடர்ச்சியை வெளியிடுங்கள்.

 4. டேங்க் யூ ஸ்ரீராம். (என்னை வச்சி காமடி பண்ணலியே). இதை டைப் அடிக்கறதுக்கு எம்புட்டு நேரம் ஆச்சி தெரியுமா. அடுத்த பாகத்தை டைப் அடிசிகினே இருக்கேன். முடியரப்போ பதிவு போட்டுட வேண்டியது தான்.

 5. காமெடி எல்லாம் பண்றதுக்கு நான் வடிவேலுவோ, விவேக்கோ இல்லீங்க அண்ணாச்சி …
  ஹா ஹா ஹா …உண்மைய சொன்னேன்!!!(பாஷா ரஜினி ஸ்டைல்ல படித்துக் கொள்ளவும்)

 6. // காமெடி எல்லாம் பண்றதுக்கு நான் வடிவேலுவோ, விவேக்கோ இல்லீங்க அண்ணாச்சி …
  ஹா ஹா ஹா …உண்மைய சொன்னேன்!!!(பாஷா ரஜினி ஸ்டைல்ல படித்துக் கொள்ளவும்) //

  தேங்க் யூ தேங்க் யூ ஸ்ரீராம் (இதை படையப்பா ரஜினி ஸ்டைல்ல படிக்கவும் 🙂 )

 7. 🙂 ஆஹா அசந்தா அடிக்கறது என்னோட பாலிசினா அசராம அடிக்கறது அண்ணாச்சியோட பாலிசி போல இருக்குதே…

 8. // 🙂 ஆஹா அசந்தா அடிக்கறது என்னோட பாலிசினா அசராம அடிக்கறது அண்ணாச்சியோட பாலிசி போல இருக்குதே… //
  ஹாஹா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரீராம்ஜி. எதோ உங்களுக்கு ஈடு கொடுக்கற மாதிரி பேசறேன்.

 9. வாங்க கிங் தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி, ஒரு ஸ்மைலீயோட போய்டீங்க 🙂 .

 10. மோகன் டெம்ப்ளேட் கலக்கலா இருக்கு ..உண்மையாகவே சூப்பர்!

  படிக்க எளிதாக உள்ளது 🙂

 11. // மோகன் டெம்ப்ளேட் கலக்கலா இருக்கு ..உண்மையாகவே சூப்பர்!

  படிக்க எளிதாக உள்ளது 🙂 //

  வாங்க கிரி. நாங்க (வோர்ட்பிரஸ்) அதை தீம் நு சொல்லுவோம்

  டெம்ப்ளேட் பத்தி சொன்னீங்க, ஆனா என்னோட பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அவ்ளோ மோசமாவா இருக்கு?

 12. நல்லா இருக்கு மோகன்! அடுத்த பாகம் எப்போ??

 13. // From Bhuvanesh

  நல்லா இருக்கு மோகன்! அடுத்த பாகம் எப்போ?? //
  நன்றி புவனேஷ், டைப் அடிச்சி முடிச்சவுடனே 🙂

 14. சூப்பர், அப்புறம் என்ன ஆச்சு, பாசு?

 15. Atlast U came back….. with a nice (drama)story. Continue….
  How R U Thambi?

 16. // From Logesh TamilSelvan

  சூப்பர், அப்புறம் என்ன ஆச்சு, பாசு? //

  வாங்க லோகேஷ். தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  அடுத்து என்ன ஆசிங்கரத்தை தானும் நானும் டைப் அடிச்சிகிட்டே இருக்கேன். எப்படியும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் செஞ்சிடுவேன்னு நெனைக்கறேன்.

 17. // From Kunthavai
  Atlast U came back….. with a nice (drama)story. Continue…. How R U Thambi? //

  ஆமாம் அக்கா, வந்துட்டேன், நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? எனக்கும் பதிவு போடறதுக்கு விஷயங்கள் கெடைக்குதே. நல்ல கதைனு சொல்லிடீங்க. மிக்க நன்றி.

 18. //டெம்ப்ளேட் பத்தி சொன்னீங்க, ஆனா என்னோட பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அவ்ளோ மோசமாவா இருக்கு?//

  நீங்க தான் தொடரும் போட்டுட்டீங்களே! 😉

 19. // From கிரி

  //டெம்ப்ளேட் பத்தி சொன்னீங்க, ஆனா என்னோட பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அவ்ளோ மோசமாவா இருக்கு?// நீங்க தான் தொடரும் போட்டுட்டீங்களே! 😉 //

  ஓஹோ, அப்போ சரி. அடுத்ததுக்கும் வந்து கருத்து சொல்லுங்க.

 20. அப்புறம் என்னதான் ஆச்சு…???
  அன்புடன் அருணா

 21. // From aruna

  அப்புறம் என்னதான் ஆச்சு…??? அன்புடன் அருணா //

  வாங்க அருணா, அதை இன்னும் டைப் அடிச்சிகினே கீறேன். சீக்கிரமே அதை போஸ்ட் பண்ணிடறேன். நான் கதை எழுதறப்போ மட்டும் தான் இந்த பக்கம் வரீங்க. மத்த சமயமும் வாங்க 🙂

 22. Pingback: உதவிக்கு வரலாமா 3 « மோகனின் எண்ணங்கள்

 23. Pingback: உதவிக்கு வரலாமா 4 « மோகனின் எண்ணங்கள்

 24. தவப்புதல்வன்

  அட நல்ல கத. சரியான அட்ரஸ் கொடுத்திங்களா?
  நானும் உங்க பதிவுக்கு முதலா தான் வந்திருக்கேன். எம் பதிவயும் பாத்து கிழிங்க.

 25. // From தவப்புதல்வன்
  அட நல்ல கத. சரியான அட்ரஸ் கொடுத்திங்களா? நானும் உங்க பதிவுக்கு முதலா தான் வந்திருக்கேன். எம் பதிவயும் பாத்து கிழிங்க. //

  வாங்க தவப்புதல்வன். சரியான அட்ரஸ் தாங்க. மொத்தம் நாலு பதிவு போட்டு இருக்கேன் இதை பத்தி. எல்லாத்தையும் படிச்சி பாருங்க. உங்க பிளாக் அட்ரஸ் தரவே இல்லையே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s