பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை மிக அவசிய தேவையா?

தமிழக அரசு கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை சென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா  சம்மதித்துள்ளதாக தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கன்னட பாலகா சங்க வளாகத்தில் கவிஞர் சர்வக்னர் சிலை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி முன்பே அனுமதி வழங்கி விட்டது. அதே போலே பல வருடங்களாக நிறுவப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இப்பொழுது ஒரு தகவல் பரவியுள்ளது

தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கனவு நிறைவேறும். மாநிலத்துக்கு மாநிலம் இதுபோன்று நல்லுறவு தழைத்து செழிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம் நோக்கம் என்று சொல்லி இருக்கிறாராம் அமைச்சர் அன்பழகன்.

அந்த கன்னட கவிஞர் சர்வக்னர் யாரென்றே நமக்குத் தெரியாது. அவருடைய சிலையை சென்னையில் நிறுவப் போகிறார்களாம். அதே போன்று திருவள்ளுவர் என்றால் யார் என்றே பெரும்பாலான கன்னடர்களுக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.இம்மாதிரி நிலையில் திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் நிறுவினால் எதாவது ஒரு சின்ன பிரச்சினைக்கு கூட கண்டிப்பாக அந்த சிலையைத் தான் பதம் பார்ப்பார்கள் விஷமிகள். அதை கேள்விப்பட்டவுடன் நம்மவர்களும் சற்றும் சளைக்காதவர்களாக சர்வக்னர் சிலையை பதம் பார்ப்பார்கள். பிரச்சினை பெரியதாகும். இரண்டு மாநிலங்களிற்கு இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளப்போது இன்னொரு பிரச்சினையை புதிதாக உருவாக்க வேண்டுமா?

Advertisements

37 responses to “பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை மிக அவசிய தேவையா?

 1. // From Sriram

  Me the first?? //

  ஸ்ரீராம் அண்ணா நீங்க தான் பர்ஸ்டு. அல்வேஸ் பெஸ்ட்டு

 2. எப்படியோ ரெண்டு ஊரு காக்கைங்களுக்கும் குஜால் தான். கக்காப் போறதுக்கு… 🙂

 3. // From Sriram

  எப்படியோ ரெண்டு ஊரு காக்கைங்களுக்கும் குஜால் தான். கக்காப் போறதுக்கு… 🙂 //

  ஸ்ரீராம், எவ்ளோ பெரிய உண்மைய (தத்துவத்தை) இவ்ளோ சிம்பிளா போட்டு உடச்சிடீன்களே. இதுக்காக உங்களுக்கு ஒரு சிலை வைக்கலாமே?

 4. அய்யயோ எனக்கு சிலையா… வேண்டாம் அண்ணாச்சி…
  நீங்க தான் என்ன விட தகுதியானவர்…அதனால சிலை உங்களுக்கே வெச்சுருவோம்…

 5. // From Sriram

  அய்யயோ எனக்கு சிலையா… வேண்டாம் அண்ணாச்சி… நீங்க தான் என்ன விட தகுதியானவர்…அதனால சிலை உங்களுக்கே வெச்சுருவோம்… //

  அடடே, எனக்கும் வேண்டாம். நம்ம ஆண்கள் முன்னேற்ற கழகத்த தலைவர் புவனேஷ்க்கு வச்சிடலாமா? 🙂

 6. ஆமா ஆமா நம்ம புவனேஷ் மச்சிக்கு வெச்சிடலாம்…
  பொருத்தமான ஆளு அவரு தான்.

 7. // From Sriram
  ஆமா ஆமா நம்ம புவனேஷ் மச்சிக்கு வெச்சிடலாம்… பொருத்தமான ஆளு அவரு தான். //

  ஆஹா சிக்கினாருய்யா சூரப்புலி புவனேஷ்!

 8. புவனேஷ் எங்க மச்சி இருக்க உனக்கு இங்க சிலை வேக்கரத பத்தி பேசிகிட்டு இருக்கோம். வந்து இத பாத்து அப்படியே ஷாக் ஆயிடாத …

 9. // From Sriram

  புவனேஷ் எங்க மச்சி இருக்க உனக்கு இங்க சிலை வேக்கரத பத்தி பேசிகிட்டு இருக்கோம். வந்து இத பாத்து அப்படியே ஷாக் ஆயிடாத … //

  ஹாஹா, புவனேஷ் சீக்கிரம் வந்துடுங்க. இல்லேன்னா சிலை கன்பார்ம் பண்ணிடுவோம்.

 10. ஆணியே புடுங்க வேண்டாம்! 🙂

 11. // From கிரி

  ஆணியே புடுங்க வேண்டாம்! 🙂 //
  வாங்க கிரி. உங்க கருத்தை சுருக்கமா சொல்லிபுடீங்க.

 12. நீங்க சொல்றது ரொம்ப சரி….

 13. திருவள்ளுவர் இப்படித்தான் இருந்தாரா? யாரோ ஒருவர் கற்பனையில் உருவானதை சிலைகளாய் செதுக்கி இவர் தான் திருக்குறள் எழுதினார் என்று வரும் தலைமுறைகளை ஏமாற்றுவது உண்மையான திருவள்ளுவரை இருட்டடிப்பு செய்வதாகாதா?திருவள்ளுவர் என்ற பெயர் கூட அவரது தான என்று சந்தேகம்.

 14. //அடடே, எனக்கும் வேண்டாம். நம்ம ஆண்கள் முன்னேற்ற கழகத்த தலைவர் புவனேஷ்க்கு வச்சிடலாமா?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  //ஆஹா சிக்கினாருய்யா சூரப்புலி புவனேஷ்!
  நான்: எதுக்குங்க இந்த சிலை?? நான் நல்ல பதிவு எழுதுனாதுக்கா ??
  மக்கள்: இல்லைங்க!!! இனிமேல் பதிவே போட கூடாதுன்னு தான்!!

 15. //புவனேஷ் எங்க மச்சி இருக்க உனக்கு இங்க சிலை வேக்கரத பத்தி பேசிகிட்டு இருக்கோம். வந்து இத பாத்து அப்படியே ஷாக் ஆயிடாத …
  என்னதான் சொன்னாலும் நான் அப்படியே ஷாக் ஆய்ட்டேன் ..

 16. //ஹாஹா, புவனேஷ் சீக்கிரம் வந்துடுங்க. இல்லேன்னா சிலை கன்பார்ம் பண்ணிடுவோம்.

  வந்துட்டேன்!! கேன்செல் பண்ணுங்க!!

 17. //ஆணியே புடுங்க வேண்டாம்!
  எனக்கு சிலை வைக்கறதை பத்தி தானே சொன்னீங்க??

 18. Pingback: சிங்கத்துகே சிலையா?? « Suttapalam’s Weblog

 19. // அதுசரி

  நீங்க சொல்றது ரொம்ப சரி….//

  வாங்க அது சரி, நீங்க ரொம்ப சரின்னு சொன்னதுக்கு மிக்க நன்றி.

 20. // சாதிக் அலி
  திருவள்ளுவர் இப்படித்தான் இருந்தாரா? யாரோ ஒருவர் கற்பனையில் உருவானதை சிலைகளாய் செதுக்கி இவர் தான் திருக்குறள் எழுதினார் என்று வரும் தலைமுறைகளை ஏமாற்றுவது உண்மையான திருவள்ளுவரை இருட்டடிப்பு செய்வதாகாதா?திருவள்ளுவர் என்ற பெயர் கூட அவரது தான என்று சந்தேகம். //

  வாங்க சாதிக் அலி, தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. அவருக்கு ஒரு கற்பனையாக ஒரு உருவத்தை கொடுத்தாங்க. அதை நம்ம ஊருல மட்டும் வச்சிக்க வேண்டியது தன் நல்லது. எதை வச்சி பிரச்சினை பண்ணலாம்னு இருக்கற ஊருல இதை வச்சி எதுக்கு பிரச்சினைய கெளப்பணும்னு என்பது தான் என்னோட ஆதங்கம்.

 21. // Bhuvanesh
  நான்: எதுக்குங்க இந்த சிலை?? நான் நல்ல பதிவு எழுதுனாதுக்கா ??
  மக்கள்: இல்லைங்க!!! இனிமேல் பதிவே போட கூடாதுன்னு தான்!! //

  புவனேஷ், நாங்க அப்படி சொல்லலை. இந்த சிலை வச்சா நீங்க அடிக்கடி பதிவு போடுவீங்கன்னு தான்.

 22. // Bhuvanesh

  வந்துட்டேன்!! கேன்செல் பண்ணுங்க!!//

  நீங்க வாரத்துக்கு பத்து பதிவு போடறேன்னு சொல்லுங்க. கேன்சல் பண்ணிடலாம்.

 23. // Bhuvanesh
  //ஆணியே புடுங்க வேண்டாம்!
  எனக்கு சிலை வைக்கறதை பத்தி தானே சொன்னீங்க?? //

  சேச்சே, அவர் உங்களை பத்தி சொல்லவே இல்லை.

 24. நியாயமான கேள்வி. தேவையில்லை என்பதுதான் என் எண்ணமும். இந்த “தமிழர்களின் கனவு” அப்ப்டீன்னு சொல்றங்களே.. அந்தத் தமிழர்களெல்லாம் யாரு.. அவ்ங்களுக்கெல்லாம் உருப்படியான் கனவெ வ்ராதா?

  இந்தமாதிரி எது தோணினாலும் 50 வருட கனவு, 75 வருட கனவு-ன்னு எல்லாம் புரூடா விடுறாங்களே.. அவங்ககிட்டே எல்லாம்.. “ஒரு வாரத்துக்கு முந்திய எல்லாருடைய கனவுகளும் முக்கியமா சிலை வைக்கிற கனவுகளெல்லாம் காலம் கடந்ததாக (expired) அறிவிக்கப்படுகிறது” அப்படீன்னு சொல்லிடணும்..

  Uselss Fellows !!

 25. “அவருக்கு ஒரு கற்பனையாக ஒரு உருவத்தை கொடுத்தாங்க.”
  ஏம்பா மோகன், உங்க வீட்ல இருக்ற கிருஷ்ணன், முருகன், படங்களெல்லாம் நீயே பார்த்து வரஞ்சதா?

 26. அவங்க அரசியல் பண்ண இதுமாதிரி நிறைய வேண்டும் ஐயா.

  நன்றி

  தமிழ் உதயன்

 27. //ஏம்பா மோகன், உங்க வீட்ல இருக்ற கிருஷ்ணன், முருகன், படங்களெல்லாம் நீயே பார்த்து வரஞ்சதா?

  எப்படி தான் இந்த கேள்வி இங்க வந்ததுனு தெரியல.. மோகன் சிலை வேண்டாம்னு சொல்லலை.. அங்க வைக்க வேண்டாம்.. அங்க வெச்சா, பிரச்சனை வரும்போது அதை உடைப்பார்கள், வீண் மனஸ்தாபம் வாரும் என்று தான் மோகன் சொல்லறார்!! ராமர் படம் நம் வீட்டில் மாட்டலாம்.. எங்க பக்கத்து முஸ்லீம் வீட்ல மாட்டணும்னு அடம் பிடுச்ச தப்பு தானே??

 28. //நீங்க வாரத்துக்கு பத்து பதிவு போடறேன்னு சொல்லுங்க. கேன்சல் பண்ணிடலாம்.

  மாசத்துக்கு பத்துகே வழிய காணோம்?? இதுல வாரத்துக்கு பத்தா??

 29. //சேச்சே, அவர் உங்களை பத்தி சொல்லவே இல்லை.

  இல்ல இல்ல என்னை பத்தி தான் சொன்னார்!! சொல்லுங்க கிரி!!

 30. //அடடே, எனக்கும் வேண்டாம். நம்ம ஆண்கள் முன்னேற்ற கழகத்த தலைவர் புவனேஷ்க்கு வச்சிடலாமா?

  //காக்கைங்களுக்கும் குஜால் தான். கக்காப் போறதுக்கு…

  ha…ha…ha…

 31. // நியாயமான கேள்வி. தேவையில்லை என்பதுதான் என் எண்ணமும். இந்த “தமிழர்களின் கனவு” அப்ப்டீன்னு சொல்றங்களே.. அந்தத் தமிழர்களெல்லாம் யாரு.. அவ்ங்களுக்கெல்லாம் உருப்படியான் கனவெ வ்ராதா?

  இந்தமாதிரி எது தோணினாலும் 50 வருட கனவு, 75 வருட கனவு-ன்னு எல்லாம் புரூடா விடுறாங்களே.. அவங்ககிட்டே எல்லாம்.. “ஒரு வாரத்துக்கு முந்திய எல்லாருடைய கனவுகளும் முக்கியமா சிலை வைக்கிற கனவுகளெல்லாம் காலம் கடந்ததாக (expired) அறிவிக்கப்படுகிறது” அப்படீன்னு சொல்லிடணும்..

  Uselss Fellows !! //
  சீமாச்சு தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. யாரு அந்த கனவு கண்ட தமிழர்னு கேட்டா பதிலே வராது.

 32. // kadirmadi

  “அவருக்கு ஒரு கற்பனையாக ஒரு உருவத்தை கொடுத்தாங்க.”
  ஏம்பா மோகன், உங்க வீட்ல இருக்ற கிருஷ்ணன், முருகன், படங்களெல்லாம் நீயே பார்த்து வரஞ்சதா? //

  kadirmadi, தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  என் சார்பாக பதில் சொன்ன புவனேஷிற்க்கு மிக்க நன்றி. சிலையை நம்ம ஊருல வச்சிக்கலாமே. எதுக்கு
  முன்னரே புகைஞ்சிகிட்டு இருக்கற ஊருல சிலையை வைப்பானேன். பிரச்சினையை கிளப்புவானேன்.

 33. // tamil udhayan
  அவங்க அரசியல் பண்ண இதுமாதிரி நிறைய வேண்டும் ஐயா.

  நன்றி

  தமிழ் உதயன்//

  தமிழ் உதயன் தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. சரியாகச் சொன்னீர்கள். இந்த பிரச்சினையை வைத்து வேற எதாவது முக்கியமான பிரச்சினையை திசை திருப்புவார்கள். என்னை ஐயா என்று சொல்ல வேண்டாம். மோகன் என்றே சொல்லுங்கள்.

 34. // Bhuvanesh

  ////ஏம்பா மோகன், உங்க வீட்ல இருக்ற கிருஷ்ணன், முருகன், படங்களெல்லாம் நீயே பார்த்து வரஞ்சதா?

  எப்படி தான் இந்த கேள்வி இங்க வந்ததுனு தெரியல.. மோகன் சிலை வேண்டாம்னு சொல்லலை.. அங்க வைக்க வேண்டாம்.. அங்க வெச்சா, பிரச்சனை வரும்போது அதை உடைப்பார்கள், வீண் மனஸ்தாபம் வாரும் என்று தான் மோகன் சொல்லறார்!! ராமர் படம் நம் வீட்டில் மாட்டலாம்.. எங்க பக்கத்து முஸ்லீம் வீட்ல மாட்டணும்னு அடம் பிடுச்ச தப்பு தானே?? //

  புவனேஷ், நான் இல்லாத சமயம் என் சார்பாக பதில் சொன்னதற்கு மிக்க நன்றி. நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு!

 35. // Bhuvanesh
  மாசத்துக்கு பத்துகே வழிய காணோம்?? இதுல வாரத்துக்கு பத்தா?? //

  சரி, மாசத்துக்கு பத்து இடுகை தான் போட முயற்சி பண்ணுறது?

 36. // குந்தவை

  //அடடே, எனக்கும் வேண்டாம். நம்ம ஆண்கள் முன்னேற்ற கழகத்த தலைவர் புவனேஷ்க்கு வச்சிடலாமா?

  //காக்கைங்களுக்கும் குஜால் தான். கக்காப் போறதுக்கு…

  ha…ha…ha…//

  ஆஹா, அக்கா நீங்களுமா! வாங்க வாங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s