உதவிக்கு வரலாமா 2?

(இதன் முதல் பாகத்தை பார்க்க இங்க க்ளிக்கவும் )

ஏ.பி.சி.டி மேன்சன், ரூம் நம்பர் 45. அதிகாலை 2 மணி. ராஜா அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

தட், தட்

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராஜா எந்திரித்து நேரம் பார்த்தான்.

காலம் காத்தால ரெண்டு  மணிக்கு எவண்டா இது. இந்த சந்திரனா இருப்பானோ? சரியான இம்சை. அவன் கிட்டே கீ இருக்குமே தொறந்துகிட்டு வர வேண்டியது தானே.

கதவை திறக்கிறான் ராஜா. எதிரே அவன் இது வரை பார்த்திராத நபர்.

ராஜா: யாரு வேணும்?
குரு: நீங்க ராஜாவா?
ராஜா: ஆமா
ம: நீங்க சந்திரனோட ரூம் மேட் தானே?
ராஜா: ஆமா, என்ன ஆச்சி?
ம: நான் சந்திரனோட கசின். இன்னிக்கி தான் யு.எஸ்ஸுல இருந்து வரேன்.
ராஜா: சரி, இன்னிக்கி இங்க தங்கிக்கனுமா?
ம: இல்லை, என்னோட எலெக்ட்ரானிக் ஐடம்ஸ் கஸ்டம்ஸ்ல மாட்டிகிச்சி. அதை எடுக்கறதுக்கு பணம் தேவை படுது. என்னுடைய யூ.எஸ் பேங்க் அக்கௌன்ட்ல பணம் இருக்கு. ஆனா இப்போ என்னால அதுல இருந்து டைரக்ட்-ஆ பணம் எடுக்க முடியாது. அதை நம்ம ஊரு பேங்க் அக்கௌன்ட்க்கு மாத்தி அதுல இருந்து வேணா எடுத்துக்கலாம். அப்போ தான் வழியில சந்திரனை பார்த்தேன். அவன்கிட்டே என்னோட சிச்சுவேசன் சொன்னப்போ அவனோட டெபிட் கார்டை கொடுத்தான்.ஆனா என்னோட யூ.எஸ் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து இன்னொரு அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணுறதுல லிமிட் இருக்கு. ஒரு அக்கௌன்ட்க்கு ஒரு நாளுக்கு 10000 தான் ட்ரான்ஸ்பர் பண்ண முடியும்.

தூக்க கலக்கத்தில் இருந்த ராஜாவிற்கு ஒன்றுமே புரிய வில்லை. வந்திருப்பவன் சந்திரனோட உறவுக்காரன் என்பது மட்டும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
ராஜா: நான் என்ன பண்ணனும்
குரு: உங்க பேங்க் அக்கௌன்ட் நம்பரும் எ.டி.எம் கார்டும் கொடுத்தீங்கன்னா என்னோட அக்கௌன்ட் ல இருந்து உங்க அக்கௌன்ட்க்கு மத்தி உங்க ஏ.டி.எம் கார்ட் வச்சி பணம் எடுத்து கொடுத்துடுவேன்.

ராஜா கொஞ்சம் யோசித்தான், எப்படி இவரை நம்பி ஏ.டி.எம் கார்ட் கொடுக்கறது.

ராஜா யோசிப்பதை பார்த்த குரு, “பாஸ் பயப்படாதீங்க, நான் சந்திரனோட கசின் தான். பாருங்க அவன் டெபிட் கார்ட் என்கிடே இருக்கு”.

சந்திரனுடைய டெபிட் கார்டை பார்த்த ராஜாவிற்கு சற்று நம்பிக்கை வந்தது. தவிர அவனது அக்கௌன்ட்டிலும் பணம் கிடையாது, மாச கடைசி ஆயிற்றே. ராஜா அவனுடைய டெபிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு எண்ணை அவனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிய பிறகும் கிளம்பாமல் நின்ற குருவை பார்த்து,
ராஜா: என்ன பாஸ்?
குரு: இல்லை, இப்போ ரெண்டு பேங்க் அக்கௌன்ட் தான் இருக்கு. எனக்கு இன்னும் ஒரே ஒரு அக்கௌன்ட் கெடச்ச போதும்.
ராஜா: ரெண்டு அக்கௌன்ட் வச்சி நீங்க தான் 20000 எடுக்கலாமே, அதுக்கு மேல எதுக்கு பணம்?
குரு: இல்லை பாஸ், ஹோம் தியேட்டர், ரெண்டு லேப்டாப் இன்னும் சில எலக்ட்ரானிக் பொருள் இருக்கு. இதுக்கு 40000 ரூபாய் கேட்டாங்க, நான் தான் கெஞ்சி கூத்தாடி 30000 க்கு குறைச்சி இருக்கேன்.
ராஜா: எனக்கு இந்த மேன்சன்ல வேற யாரையும் தெரியாதே
குரு: உங்க பிரண்ட்ஸ் யாரவது இருந்தா சொல்லுங்க, அவங்ககிடே வாங்கிக்கறேன்.
ராஜா: என்னோட பிரண்ட்ஸ் டி.நகர்ல இருக்காங்க, அங்க போய் வாங்கிக்கறீங்களா?
குரு: ஓகே பாஸ், வாங்கிக்கறேன். அட்ரஸ் சொல்லுங்க
ராஜா: நம்பர் 24, வ.ஊ.சி தெரு, டி. நகர்.
குமார்: உங்க பிரன்ட்  பேரு என்னங்க?
ராஜா: குமார், குமாரும் சந்திரனும் கிளாஸ் மேட்ஸ் தான். சோ கண்டிப்பா அவன் ஹெல்ப் பண்ணுவான்.
குரு: ஓகே, ராஜா. தேங்க் யு வெரி மச். உங்க ஹெல்பை மறக்க மாட்டேன்.
ராஜா: பரவாலைங்க

ராஜா குருவை அனுப்பிவிட்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.

Advertisements

17 responses to “உதவிக்கு வரலாமா 2?

 1. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை போல இருக்கே அண்ணாச்சி…
  கிளைமாக்ஸ்ல ஏதோ போடி வைக்கப் போறீங்கன்னு தெரியுது.
  ஆனா எப்படின்னு தான் விளங்கல…

 2. சஸ்பென்ஸ் த்ரில்லர் சூப்பர் சார்!!

 3. //சரி, இன்னிக்கி இங்க தங்கிக்கனுமா?//

  😀

  நாங்க US இல்ல அமிஞ்சிகரை அப்படின்னு அல்வா கொடுத்துடாதீங்க 😉

 4. // Sriram
  Again Me the first? //

  ஆம் ஐயா, நீர் தான் முதலில் வந்தீர்.

 5. // Sriram

  சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை போல இருக்கே அண்ணாச்சி…
  கிளைமாக்ஸ்ல ஏதோ போடி வைக்கப் போறீங்கன்னு தெரியுது.
  ஆனா எப்படின்னு தான் விளங்கல… //

  ஆஹா, சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆ? நீங்க என்னை ஓட்டரீங்கன்னு தெரியுது 🙂

 6. // Bhuvanesh
  naan than second //

  இல்லை ஐயா, நீங்கள் மூன்றாவது கமெண்ட். ஆனால் இரண்டாவது நபர்.

 7. // Bhuvanesh
  சஸ்பென்ஸ் த்ரில்லர் சூப்பர் சார்!! //

  நீங்களுமா?

 8. // கிரி
  //சரி, இன்னிக்கி இங்க தங்கிக்கனுமா?//

  😀

  நாங்க US இல்ல அமிஞ்சிகரை அப்படின்னு அல்வா கொடுத்துடாதீங்க 😉 //

  கிரி, என்ன சொல்லி இருக்கீங்கன்னு எனக்கு சரியா புரியலை. எனக்கு கூட புரியர மாதிரி சொல்லுங்க 🙂

  அமெரிக்கான்னா ஏன் நாம உடனே அமிஞ்சக்கரைன்னு சொல்லுறோம்? அ-நாவுக்கு அ-நாவா?

 9. //அமெரிக்கான்னா ஏன் நாம உடனே அமிஞ்சக்கரைன்னு சொல்லுறோம்?

  கிட்ட தட்ட அப்படிதான்.. எனக்கு தெருஞ்சு இந்த வசனம் மின்னலே படத்துல வரும்!! அதா தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்!!

 10. இன்னும் எத்தனை பேர் கார்ட் கிளப்பப் போறார்???
  சஸ்பென்ஸ் தாங்கலை…
  அன்புடன் அருணா

 11. // Bhuvanesh
  //அமெரிக்கான்னா ஏன் நாம உடனே அமிஞ்சக்கரைன்னு சொல்லுறோம்?

  கிட்ட தட்ட அப்படிதான்.. எனக்கு தெருஞ்சு இந்த வசனம் மின்னலே படத்துல வரும்!! அதா தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்!!//

  புவனேஷ், மின்னலே படத்துல இந்த மாதிரி டையலாக் வரும். ஏன் அயனவரம்னு சொல்லுறது இல்லை?

 12. // aruna
  இன்னும் எத்தனை பேர் கார்ட் கிளப்பப் போறார்???
  சஸ்பென்ஸ் தாங்கலை…
  அன்புடன் அருணா //
  அருணா மூன்றாவது பதிவும் போட்டாச்சி. படிங்க. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க. தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

 13. //அமெரிக்கான்னா ஏன் நாம உடனே அமிஞ்சக்கரைன்னு சொல்லுறோம்? அ-நாவுக்கு அ-நாவா?//

  பாருங்க புவனேஷ் கப்புனு பிடித்துட்டாரு 😉

  சும்மா ஒரு ஃப்ளோ க்கு சொல்வதை எல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது 😀

 14. // From கிரி

  //அமெரிக்கான்னா ஏன் நாம உடனே அமிஞ்சக்கரைன்னு சொல்லுறோம்? அ-நாவுக்கு அ-நாவா?// பாருங்க புவனேஷ் கப்புனு பிடித்துட்டாரு 😉 சும்மா ஒரு ஃப்ளோ க்கு சொல்வதை எல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது 😀 //

  கிரியார் சொன்ன சரியாத்தான் இருக்கும்

 15. Pingback: உதவிக்கு வரலாமா 4 « மோகனின் எண்ணங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s