உதவிக்கு வரலாமா 3

(இதன் இரண்டாவது பாகத்தை பார்க்க இங்கே கிளிக்கவும்
இதன் முதலாவது பாகத்தை பார்க்க இங்கே கிளிக்கவும்)

வ.ஊ.சி தெரு, தி. நகர்.

தட், தட்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு குமார் எழுந்தான். யாரது இந்த நேரத்துல? என்று யோசித்தபடியே கதவை திறந்தான்.

எதிரே குரு.

குமார்: யாரு வேணும்?
குரு: இங்க குமார்?
குமார்: நான் தான். நீங்க யாரு?
குரு: நான் சந்திரனோட கசின்.
குமார்: (தூக்க கலக்கத்தில்) சந்திரனா எந்த சந்திரன்?
குரு: உங்க கிளாஸ் மேட் சந்திரன்.
குமார்: (ஆமா மணி என்ன இப்போ, என்று திரும்பி சுவர்கடிகாரத்தை பார்க்க அது 3 எனக் காட்டியது) ஒ, அவனா. ஆமா, சொல்லுங்க.
குரு: இன்னிக்கு தான் நான் யு.எஸ்ஸில இருந்து வரேன்.
குமார்: சரி
குரு:  என்னோட எலெக்ட்ரானிக் ஐடம்ஸ் கஸ்டம்ஸ்ல மாட்டிகிச்சி. அதை எடுக்கறதுக்கு பணம் தேவை படுது. என்னுடைய யூ.எஸ் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து டைரக்ட்-ஆ பணம் எடுக்க முடியாது. அதை நம்ம ஊரு பேங்க் அக்கௌன்ட்க்கு மாத்தி அதுல இருந்து வேணா எடுத்துக்கலாம். அப்போ தான் வழியில சந்திரனை பார்த்தேன். அவன்கிட்டே என்னோட சிச்சுவேசன் சொன்னப்போ அவனோட ரூம் மேட் ராஜாவை பாக்க சொன்னான். ஆனா என்னோட யூ.எஸ் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து இன்னொரு அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணுறதுல லிமிட் இருக்கு.
குமார்: ஓஹோ அப்படியா?

குரு: நானும் ராஜாவை பாத்து ராஜா அக்கௌன்ட் நம்பரும் டெபிட் கார்டும் வாங்கிட்டு வந்து இருக்கேன். ஆனா எனக்கு இன்னும் ரெண்டு கார்ட் தேவை படுது. ஒரு அக்கௌன்ட்க்கு ஒரு நாளுக்கு 10000 தான் ட்ரான்ஸ்பர் பண்ண முடியும்.
குமார்: டெபிட் கார்ட் வேணுமா?
குரு: ஆமா, உங்க அக்கௌன்ட் நம்பரும் டெபிட்/ஏ.டி.எம் கார்டும் வேணும். பணம் உங்க அக்கௌன்ட்க்கு டிரான்ச்பர் பண்ணிட்டு உங்க கார்ட் வச்சி பணம் எடுத்துக்குவேன்.
குமார்: சரி, கார்ட் இன்னிக்கே திருப்பி கொடுத்துடுவீங்க தானே?
குரு: ஆமா, ஏர்போர்ட்ல இருந்து திரும்பி வரப்போ உங்ககிடே கார்ட் கொடுத்துட்டு தான் நான் ஊருக்கே போவேன்.
குமார்: சரி, இருங்க. கார்ட் எடுத்துட்டு வரேன்.

குமார் அவனுடைய ஏ.டி.எம் கார்டை எடுத்துக் கொண்டு அவனுடைய நண்பன் குகனை எழுப்பி நடந்த விவரங்களை சொல்லி அவனுடைய ஏ.டி.எம் அட்டையையும் வங்கி கணக்கு எண்ணையும் வாங்கி குருவிடம் கொடுத்தான்.

குரு: ரொம்ப தேங்க்ஸ் பாஸ். காலைல ஆறு மணிக்குள்ள உங்க கார்டை உங்ககிடே திருப்பி கொடுத்துடறேன்.
குமார்: ஓகே குரு.

குரு பேசியதில் இருந்த லாஜிக் மீறல்கள் எதையும் யோசிக்காமல் அக்கௌன்ட் நம்பர் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் கொடுத்து விட்டு கதவை மூடிவிட்டு குமார் தனது படுக்கைக்கு சென்று தூங்க ஆரம்பித்தான்.

“டேய் குமார், எந்திரிடா” குகன் குமாரை எழுப்பினான்.

குமார்: என்னடா குகன்?
குகன்: நீ என்னை எழுப்பி என்னோட பேங்க் அக்கௌன்ட் நம்பர், ஏ.டி.எம் கார்ட் வாங்கின தானே. அவன் எப்போ கார்ட திருப்பி தரேன்னு சொன்னான்.
குமார்: ஆறு மணின்னு சொன்னான். என்ன ஆச்சி?
குகன்: இப்போ டைம் என்ன தெரியுமா? எட்டு.
குமார்: அப்படியா. இன்னும் அவன் வந்து கார்ட் தரலையா?
குகன்: ஆமாண்டா, அவன் சந்திரனோட கசினா? எப்படி ராஜாவை தெரியுமாம்?
குமார் நடந்தவற்றை சொல்கிறான்.
குகன்: சரி, சந்திரன், ராஜா போன் நம்பர் தெரியுமா? (அப்போது மொபைல் போன் புழக்கத்தில் இல்லை)
குமார்: இல்லையேடா.
குகன்: எட்டு மணி ஆச்சி, இன்னும் அவன் வரலையே. எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு.
குமார்: சரி என்ன பண்ணலாம்
குகன்: வா, நாம இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் போய் நம்ம பேங்க் அக்கௌன்ட் லாகின் பண்ணி பாக்கலாம்.

குகன் குமார் இருவரும் அருகிலிருந்த பிரவுசிங் சென்டருக்கு போய் தத்தம் வங்கி கணக்கில் லாகின் செய்கின்றனர். இருவரும் ஒரு சேர,
“டேய் பணத்தை அவன் எடுத்துட்டாண்டா”

குகன்: அடப்பாவி, ஒரு நய பைசா வைக்காம எல்லாத்தையும் எடுத்துட்டானே.
குமார்: ஆமாண்டா, என்னுதுல இருந்தும் எல்லா பணத்தையும் எடுத்துட்டான்.
குகன்: இப்போ என்ன பண்ணுறது?
குமார்: நாம ராஜா, சந்திரன் மேன்சனுக்கு போய் பாத்துடலாம்.
குமார்: சரி, ராஜா, சந்திரன் ஆபீஸ் போன் நம்பர் என்கிடே இருக்கு. அவங்க எப்படியும் பத்து மணிக்கு தான் ஆபிஸ் வருவாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.

Advertisements

15 responses to “உதவிக்கு வரலாமா 3

 1. மறுபடியும் வந்துட்டோம்ல

 2. ஒரு லுக் வுட்டுகினு வந்ததுக்கு அப்பால என் கருத்த சொல்றேன் நைனா…

 3. // (அப்போது மொபைல் போன் புழக்கத்தில் இல்லை) //
  அண்ணாச்சி கதை விறுவிறுப்பு ஒ.கே. ஆனால் லாஜிக் இடிக்கிறதே…
  டெபிட் கார்டு, இன்டர்நெட் இருக்கும் காலத்தில் மொபைல் போன் இல்லையா??

 4. //இன்டர்நெட் இருக்கும் காலத்தில் மொபைல் போன் இல்லையா??

  நான் பத்தாவது படிக்கும் போதே இன்டர்நெட் வசதி எல்லாம் இருந்தது.. மொபைல் அப்போ அப்போ எல்லாம் காஸ்ட்லி.. பணக்காரர்களின் அடையாளமாக கருதப்பட்டது.. இப்படி பாத்தா லாஜிக் வருதே?? (அவர் சொன்னது புழக்கத்தில் இல்லை.. அதாவது இருந்து ஆனா இல்ல..)

  டெபிட் கார்டு பத்தி தெரியல.. அப்புறம் இன்டர்நெட் Banking பத்தியும் தெரியல..

 5. // From Sriram
  மறுபடியும் வந்துட்டோம்ல //

  நீங்க தான் என்னோட பதிவுக்கு எப்பவும் முதல்ல வரீங்க. வாங்க தலை.

 6. // From Sriram

  ஒரு லுக் வுட்டுகினு வந்ததுக்கு அப்பால என் கருத்த சொல்றேன் நைனா… //

  வாங்க ராசா. ராசா உங்களுக்கு இ-மெயில்(official id) அனுப்பினேன். ரிப்ளை இல்லையே. ரிப்ளை பண்ணுங்க.

 7. // From Sriram on உதவிக்கு வரலாமா 3

  // (அப்போது மொபைல் போன் புழக்கத்தில் இல்லை) // அண்ணாச்சி கதை விறுவிறுப்பு ஒ.கே. ஆனால் லாஜிக் இடிக்கிறதே… டெபிட் கார்டு, இன்டர்நெட் இருக்கும் காலத்தில் மொபைல் போன் இல்லையா?? //

  நெசமாத்தான் சொல்லுறேங்க. இந்த கதை நடக்கறது 2002 ஆம் வருஷம். 2003 ல இருந்து தான் மொபைல் இன்கமிங் ப்ரீ பண்ணாங்க. அப்புறம் தான் மொபைல் உபயோகம் பரவலாக ஆரம்பம் ஆச்சி .

 8. இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபத்திரங்கள் எல்லாம் உண்மை.

  இந்த loosu பசங்க எல்லோரயும் எனக்கு தெரியும்…

 9. அப்படியே இவங்க எல்லாம் இப்ப எங்கேயிருக்காங்க என்று அவங்க முகவரியும் கொடுங்க மோகன், எவ்வ்வ்வளவு நல்லவங்களாஆஅ இருக்காய்ங்க.

 10. // Bhuvanesh
  //இன்டர்நெட் இருக்கும் காலத்தில் மொபைல் போன் இல்லையா??

  நான் பத்தாவது படிக்கும் போதே இன்டர்நெட் வசதி எல்லாம் இருந்தது.. மொபைல் அப்போ அப்போ எல்லாம் காஸ்ட்லி.. பணக்காரர்களின் அடையாளமாக கருதப்பட்டது.. இப்படி பாத்தா லாஜிக் வருதே?? (அவர் சொன்னது புழக்கத்தில் இல்லை.. அதாவது இருந்து ஆனா இல்ல..)

  டெபிட் கார்டு பத்தி தெரியல.. அப்புறம் இன்டர்நெட் Banking பத்தியும் தெரியல.. //

  ஆஹா புவனேஷ், சரியா சொன்னீங்க. நாம எதாவது ப்ரீ அப்படின்னு சொன்னாதானே யூஸ் பண்ணவே ஆரம்பிப்போம். இன்டர்நெட் பேங்கிங் ப்ரீ, டெபிட் கார்ட் ப்ரீ. அப்படின்னு சொன்ன வாங்காம இருப்போமா?

 11. // From ஸ்ரீனிவாசன்

  இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபத்திரங்கள் எல்லாம் உண்மை. இந்த loosu பசங்க எல்லோரயும் எனக்கு தெரியும்… //

  வாடா ஸ்ரீனிவாசா, வந்து கதைய இப்படி பட்டுன்னு போட்டு உடச்சிட்டயேடா

 12. // From kunthavai

  அப்படியே இவங்க எல்லாம் இப்ப எங்கேயிருக்காங்க என்று அவங்க முகவரியும் கொடுங்க மோகன், எவ்வ்வ்வளவு நல்லவங்களாஆஅ இருக்காய்ங்க. //

  அக்கா நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்

 13. சின்ன புள்ளதனமால்ல இருக்கு 🙂 இப்படியா ஏமாறுவது? பின்ன எப்படின்னு எல்லாம் வம்புக்கு கேட்கப்படாது! 😉

 14. // From கிரி

  சின்ன புள்ளதனமால்ல இருக்கு 🙂 இப்படியா ஏமாறுவது? பின்ன எப்படின்னு எல்லாம் வம்புக்கு கேட்கப்படாது! 😉 //

  சின்னபுள்ளத் தனம் இல்லை கிரி. நல்லபுள்ளை தனமா இருக்கோம்

 15. Pingback: உதவிக்கு வரலாமா 4 « மோகனின் எண்ணங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s