உதவிக்கு வரலாமா 4

குகனும் குமாரும் திருவல்லிக்கேணி யில் உள்ள ராஜா மேன்சனுக்கு கிளம்பினார்கள்.

ராஜா: வாங்கடா என்னடா அதிசயமா இந்த பக்கம் வந்து இருக்கீங்க அதுவும் இந்த நேரத்துல
குகன், குமார்: டே வெண்ணை, வர வச்சிட்டியேடா
ராஜா: என்னங்கடா சொல்லறீங்க?
குகன்: எங்கடா சந்திரனோட கசின்?
ராஜா: எனக்கு தெரியாதே. உங்க வீட்டுக்கு வந்தானா அவன்?
குமார்: வந்தாண்டா, எங்க ரெண்டு பேரு கார்டையும் கொடுத்தோம்
ராஜா: என்னது ரெண்டு கார்டா, அவன்கிடே என்னோடது சேத்து  ரெண்டு கார்டு இருந்துச்சே, இன்னும் ஒரே ஒரு கார்டு தான் வேணும்னு சொன்னான். அதன் உங்ககிடே வாங்கிகிட்டம்னு உங்க அட்ரஸ் கொடுத்தேன்.
குகன்: ஓஹோ, அப்படி வேற கதை போகுதா. எங்க ரெண்டு பேரு கார்டு வாங்கிட்டு போனான். ஆறு மணிக்குள்ள கொண்டு வந்து தரேன்னு சொன்னான். ஆனா வரவேல்லை
குமார்: சந்தேகப்பட்டு எங்க ஆன்லைன் அக்கௌன்ட் லாகின் பண்ணி பாத்தா எங்க பணம் எல்லாத்தையும் எடுத்துட்டான்
ராஜா: என்னது, பணம் எடுத்துட்டானா?? அப்போ என் பணம் எல்லாம் போச்சா?
குமார்: ராசா, உன்னோடது எவ்ளோ பணம் இருந்துச்சி?
ராஜா: ஹிஹி, 50 ரூபாய் தாண்டா இருந்துச்சி

குகன்: ங்கொய்யாலே அதெல்லாம் ஒரு பணமாடா?, என்னுதுல 1500 ரூபாய் இருந்துச்சி
குமார் அமைதியாய் இருப்பதை பார்த்த ராஜா “உன்னுதுல எவ்ளோடா இருந்துச்சி”
குமார்: உன்னை விட அதிகமா இருந்திச்சி, அதாவது 100 ரூபீஸ்
ராஜா: இதுல ஒன்னும் கொறச்சல் இல்லை.
ராஜா: சரி, வா நாம போய் சந்திரனுக்கு போன் பண்ணலாம்.

ராஜா: ஹலோ, சந்திரன்
சந்திரன்: ஹாய் ராஜா
ராஜா: டேய் உனக்கு குருன்னு யாரவது கஸின் இருக்காங்களா?
சந்திரன்: இல்லையே
ராஜா: என்னடா சொல்லுறே, நேத்து ஒருத்தன் உன்னோட கஸின்னு சொல்லிட்டு நம்ம ரூமுக்கு வந்தாண்டா
சந்திரன்: நான்தாண்டா நம்ம மேன்சன் அட்ரஸ் கொடுத்தேன்
ராஜா: அவன் உன்னோட கஸின்னு  சொல்லி என்கிடே இருந்து என்னோட டெபிட் கார்ட் வாங்கிட்டு போய்டாண்டா
சந்திரன்: ஏன்டா நீ உன்னோட டெபிட் கார்ட் கொடுத்தே?
ராஜா:(கடுப்பாக) டேய் ஏன்டா பேச மாட்டே, வந்தவன் உன்னோட டெபிட் கார்ட் வச்சி இருந்தான், உன்னை பத்தின டீடெயில்ஸ் வேற சொன்னாண்டா
சந்திரன்: அவன் அப்படி சொன்னா நீ ஏன்டா கொடுத்தே, சரி என்ன ஆச்சி இப்போ?
ராஜா: டேய் பன்னாடை, அவன் என்னோட கார்ட் வாங்கினது மட்டும் இல்லாம, நம்ம குகன், குமார் கார்டையும் வாங்கி அதுல இருந்த பணத்தையும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகிடாண்டா
சந்திரன்: டேய் அவன் எனக்கு யாருன்னே தெரியாதுடா
ராஜா: அப்புறம் ஏன்டா அவன்கிடே உன்னோட டெபிட் கார்ட் கொடுத்து நம்ம மேன்சன் அட்ரசும் கொடுத்த?
சந்திரன்: அவன் தொல்லை தாங்க  முடியாம தாண்டா
ராஜா: உன் தொல்லை தாண்டா தாங்க முடியலை
சந்திரன்: சரி, இப்போ என்ன பண்ணுறது? நான் நாளைக்கு ஊருக்கு வரேன்.
ராஜா: வந்து என்ன பண்ணுவே? அவனை தேடி புடிப்பியா?
சந்திரன்: போடாங்க

இதற்காக சந்திரன் கோவையிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தான்.

சந்திரனும் ராஜாவும் இதை பற்றி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று நினைத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் போய் நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, அவர்கள் இது ஆரம்பித்தது ரயில் நிலையத்தில் எனவே அங்கே சென்று புகார் கொடுக்க சொன்னார்கள்.

ராஜாவும் சந்திரனும் மத்திய ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றார்கள்.

ராஜா: சார், ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்.
அதோ எங்க பாரு ரைட்டர் இருக்காரு, அவர் கிட்டே போய் சொல்லுங்க

சார், ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்
ரைட்டர்: என்ன கம்ப்ளைன்ட்,  நீங்க யாரு, எந்த ஏரியா?
சந்திரன், ராஜா: சார், நாங்க ட்ரிப்ளிகேன்ல ஸ்டே பண்ணி இருக்கோம்.
ரைட்டர்: ட்ரைன்ல எதாவது திருடு போய்டிச்சா?
சந்திரன்: இல்லை சார்
ரைட்டர்: அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க?
ராஜா நடந்தவை எல்லாவற்றையும் சொன்னான்.

ரைட்டர் கேட்டார் ஒரு கேள்வி: ஏய்யா நீங்க எல்லாம் படிச்ச பசங்க தானே? இப்படியா ஏமாரறது?
ராஜாவும் சந்திரனும் மனதில் படிச்சவங்க ஏமாற கூடாதா, படிச்சவங்க தானே இல்லை ஏமாரறாங்க
சந்திரன், ராஜா: ஹிஹி, அது இல்லை சார்
ரைட்டர்: எவ்ளோ பணம் போச்சி?
சந்திரன்: 2500 ரூபாய் சார்
ரைட்டர்: அவ்ளோ தானே, அவ்ளோதானே  போச்சின்னு சொல்லிடு போய்டுங்க, இதை நாங்க எங்க போய் இன்வெஸ்டிகேட் பண்ணுறது?
ராஜா: சார்
ரைட்டர்: யோவ் கெளம்புங்கய்யா
ராஜா: சரி சார்
ராஜாவும் சந்திரனும் சோகமாக வந்தனர்.

இந்த மொக்கையைக் கூட நான்கு பாகங்களாக படித்த (படிச்சீங்க தானே?) ரசிக பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு உண்மைக் கதை என்பதால் சுவாரசியமாக இருந்து இருக்காது.

இதற்கு முந்தைய பாகங்களைப் படி க்க

பாகம் 3

பாகம் 2

பாகம் 1

பின்குறி ப்பு: அடுத்து ஒரு கதையுடன் உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களை விடமாட்டேன்.

Advertisements

10 responses to “உதவிக்கு வரலாமா 4

 1. அண்ணாச்சி இப்படி சப்பையா முடிச்சுட்டீங்களே இந்த கதையை…

 2. // From englishkaran

  அண்ணாச்சி இப்படி சப்பையா முடிச்சுட்டீங்களே இந்த கதையை… //

  உண்மைதான் ஸ்ரீராம். ஆனால் என் செய்வது, இது உண்மை கதை ஆயிற்றே.

 3. மோகன் ஐயா, இவ்வளவு நல்ல நண்பர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தாமல், என்ன அடுத்த கதை? நாட்டுல இப்படி நாலு பேரு இருக்கிறதினால தான் நாலு பேரு கஷ்டப்படாம வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
  வாழ்க உங்கள் நண்பர்களின் தியாகம், வளர்க அவர்களது தொண்டு.

 4. // From குந்தவை

  மோகன் ஐயா, இவ்வளவு நல்ல நண்பர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தாமல், என்ன அடுத்த கதை? நாட்டுல இப்படி நாலு பேரு இருக்கிறதினால தான் நாலு பேரு கஷ்டப்படாம வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
  வாழ்க உங்கள் நண்பர்களின் தியாகம், வளர்க அவர்களது தொண்டு. //

  அக்கா அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன். நானும் நல்லவன் தாங்கோ.

 5. அண்ணே, இப்படி ஒரு பயங்கரமான முடிவு இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைகல!!

 6. மோகன் நான் உசிலம்பட்டியில் இருந்து வரேன்.. எங்க நாட்டுல (அதாவது உசிலம்பட்டி) இருந்து வரும் போது Customs பிரச்சனை.. உங்க டெபிட் கார்டு கொடுத்தா நாளைக்கு திருப்பி கொடுத்திருவேன்!

 7. // From Bhuvanesh

  அண்ணே, இப்படி ஒரு பயங்கரமான முடிவு இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைகல!! //

  கதை ஆரம்பிக்கும் போதே பயங்கரமான முடிவு இருக்கும்னு ஒரு டிஸ்கி கொடுத்து இருக்கணுமோ?

 8. // Bhuvanesh
  மோகன் நான் உசிலம்பட்டியில் இருந்து வரேன்.. எங்க நாட்டுல (அதாவது உசிலம்பட்டி) இருந்து வரும் போது Customs பிரச்சனை.. உங்க டெபிட் கார்டு கொடுத்தா நாளைக்கு திருப்பி கொடுத்திருவேன்!
  //

  புவனேஷ், நேத்தே ஒருத்தர் உங்க கசின்னு சொலிட்டு வந்து டெபிட் கார்ட் வாங்கிட்டு போய்ட்டாரே?

 9. //அக்கா அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன். நானும் நல்லவன் தாங்கோ.

  புல்லரிக்குது. பேசுறதுக்கு வார்த்தையே வரவில்லை. மோகன் தம்பி நீங்க இவ்ளோ நல்லவரா? கடவுள் தான் உங்களை காபாத்தணும்.

 10. // From குந்தவை
  புல்லரிக்குது. பேசுறதுக்கு வார்த்தையே வரவில்லை. மோகன் தம்பி நீங்க இவ்ளோ நல்லவரா? கடவுள் தான் உங்களை காபாத்தணும். //

  ஆமாம் அக்கா , ரொம்ப அப்பாவியா இருக்கேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s