கன்னாபின்னாச் செய்திகள்

ஆஸ்கர் விருதுக்கு ரொக்கப் பரிசு உண்டு என்றால், அதில் ரஹ்மானிற்கு வரி விலக்கு அளிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றார். ப.சிதம்பரம்

ஏங்க அவர் வரிவிலக்கு கேட்டாரா? ஒழுங்கா டேக்ஸ் கட்டற எங்களுக்கு எதாவது வரிவிலக்கு கொடுங்களேன்.

தமிழத்தில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன
தமிழத்தில் அனைத்து நீதி மன்றங்களும் மூடப்பட்டன

மழலையர் பள்ளியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக எல்லா மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டன

‘ப்ளசண்ட் ஸ்டே’-ஜெ மீதான வழக்கை வாபஸ் பெற்ற திமுக

வரும் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி?

ஒரு மாற்றத்திற்கு விஜயகாந்தே கன்னாபின்னாச் செய்தி சொல்லுகிறார்:
அவர் முதலில் சொன்னது
இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாண வலியுறுத்தி, வருகிற தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது.

அப்புறமாகச் சொன்னது
பதவியைக் காப்பாற்றவே இலங்கைப் பிரச்னைக்கு குரல் கொடுப்பதுபோல அரசியல் கட்சிகள் நடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற உண்மையிலேயே போராடும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை நான் மதிக்கிறேன்.

கீழே உள்ள இரண்டு செய்திகளிற்கும் சம்பந்தம் உள்ளதா?
ஜெயலலிதா மீதான வழக்கு 20-வது முறையாக ஒத்திவைப்பு
போராடினால்தான் முன்னேற முடியும்: ஜெயலலிதா

மு.க.அழகிரி, கனிமொழி நீங்களும் (அதிமுகவினர்), நானும் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஆமாம், அக்கா சொல்லுறது சரிதான் என்று சொல்லுகிறார் சசிகலா

தீவிரவாதிகளின் சொர்க்கபூமி பாகிஸ்தான்: ஒபாமா கடும் கண்டனம்

ரொம்ப புகழாதீங்க – சொல்கிறார் ஜர்தாரி
இன்னும் சில வசதிகள் வேண்டும் என கேட்கின்றனர் தீவிரவாதிகள்

ஒரு நிகழ்வு பல செய்திகள்
நிகழ்வு:  ஆளுநர் உரை
செய்திகள்:
‘செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு, ஓட்டை விழுந்த தவரக் குவளை, உடைந்து போன மண்பாண்டம் தான் இந்த ஆளுநர் உரை என்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
கேள்வி: ஆளுநர் அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, அதனை செல்லரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறாரே?
பதில்: அதிலே கூட `நோட்டு’, `காசு’ என்று தான் அவருக்கு நினைப்பு போகிறது. அவரது தரம் தாழ்ந்த வர்ணனையை சில ஏடுகள் வெளியிடாமலே மறைத்து விட்டதை கவனித்திருப்பீர்களே!.

‘தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளியூட்டுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

ஆளுநரின் உரை இன்னொரு ‘கலைஞரின் கடிதம்’ – பாமக நிறுவனர் ராமதாசும்
பொய்கள் நிறைந்த மோசடி அறிக்கை – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

வேதனைச் செய்தி:
அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் படித்த எம்.பி.ஏ. மாணவர்கள் (2006 பேட்ச்) ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதில், “”தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவர்கள் எம்.பி.ஏ. முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களைவிடக் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள்” என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கல்வி ரீதியாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர்கள் போதிய வசதிகள் பெறாததால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை. குறைவாகவே மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். இதுவே இப்படியொரு சம்பள வித்தியாசத்திற்குக் காரணம் என்கிறதாம் அந்த சர்வே.

பாராட்டப் பட வேண்டியச் செய்தி:
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மனிதச் சங்கிலி போராட்டம்: பழ.நெடுமாறன்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வேகமான- தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன
இந்த இடைக்கால பட்ஜெட், தேர்தலை மனதில் கொண்டு மக்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். இது தேர்தல் மிட்டாய் என்று மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்னிக்க வேண்டும் அவசர அவசரமாக டைப் செய்ததில் செய்திகள் மாறி விட்டன. உண்மையானச் செய்திகள்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வேகமான- தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால பட்ஜெட், தேர்தலை மனதில் கொண்டு மக்களுக்காக போடப்பட்ட பட்ஜெட். இது தேர்தல் மிட்டாய் என்று என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Advertisements

18 responses to “கன்னாபின்னாச் செய்திகள்

 1. //மழலையர் பள்ளியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக எல்லா மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டன//

  இது டாப்பு!!

 2. /தீவிரவாதிகளின் சொர்க்கபூமி பாகிஸ்தான்: ஒபாமா கடும் கண்டனம்

  ரொம்ப புகழாதீங்க – சொல்கிறார் ஜர்தாரி
  இன்னும் சில வசதிகள் வேண்டும் என கேட்கின்றனர் தீவிரவாதிகள்//

  ஆப்கானிஸ்த்தான் சண்டைக்கு வரலையா??

 3. //வரும் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி?//

  சொல்லமுடியாது.. இலங்கை தமிழர் பிரச்சனைல இவங்க ரெண்டு பேரும் ஒரே முடிவு தான்!!

 4. கொஞ்சம் லேட்டு..இருங்க படிச்சிட்டு வந்துடறேன்…

 5. //‘ப்ளசண்ட் ஸ்டே’-ஜெ மீதான வழக்கை வாபஸ் பெற்ற திமுக
  வரும் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி?//

  அய்யயோ கண்ணா பின்னா செய்திகளில் கூட இப்படி நடக்க வேண்டாம்.நாடு தாங்காது டா சாமி…

 6. “”தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவர்கள் எம்.பி.ஏ. முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களைவிடக் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள்” என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கல்வி ரீதியாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மாணவர்கள் போதிய வசதிகள் பெறாததால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை. குறைவாகவே மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். இதுவே இப்படியொரு சம்பள வித்தியாசத்திற்குக் காரணம் என்கிறதாம் அந்த சர்வே.
  I believe all students are getting equal facility in college and also SC/St candidates are having scholarship for education.

 7. //
  மு.க.அழகிரி, கனிமொழி நீங்களும் (அதிமுகவினர்), நானும் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

  ஆமாம், அக்கா சொல்லுறது சரிதான் என்று சொல்லுகிறார் சசிகலா
  //

  நச்சுன்னு அடிக்கறீங்க!

 8. //ரொம்ப புகழாதீங்க – சொல்கிறார் ஜர்தாரி
  இன்னும் சில வசதிகள் வேண்டும் என கேட்கின்றனர் தீவிரவாதிகள்

  ha…ha… Good as usual.

 9. // Bhuvanesh

  Me the First!!
  //மழலையர் பள்ளியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக எல்லா மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டன//

  இது டாப்பு!! //

  நன்றி புவனேஷ், நாட்டு நடப்பை பார்த்த இப்படி தான் நடக்கும் போல இருக்கு.

 10. // Bhuvanesh
  ஆப்கானிஸ்த்தான் சண்டைக்கு வரலையா?? //

  ஆஹா, நீங்களும் கன்னாபின்னா செய்திகள் ஆரம்பிக்கலாம் போல இருக்கே?

 11. // Bhuvanesh
  //வரும் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி?//

  சொல்லமுடியாது.. இலங்கை தமிழர் பிரச்சனைல இவங்க ரெண்டு பேரும் ஒரே முடிவு தான்!! //

  மக்களுக்கு தேவையானப்போ ஒன்னு சேர மாட்டாங்க, தேவை இல்லத்துக்கு ஒன்னு சேர்ந்துடுவாங்க போல இருக்கு.

 12. //
  englishkaran
  கொஞ்சம் லேட்டு..இருங்க படிச்சிட்டு வந்துடறேன்…

  அய்யயோ கண்ணா பின்னா செய்திகளில் கூட இப்படி நடக்க வேண்டாம்.நாடு தாங்காது டா சாமி…
  //
  லேட் ஆ வந்த என்னங்கண்ணா? உங்க கருத்தை சொல்லிடீங்களே.

  ஹாஹா, ஏன் அவங்க கூட்டணி அமைச்ச என்ன பிரச்சினை? அதையே ஒரு பதிவா போடுங்களேன்.

 13. // surya
  I believe all students are getting equal facility in college and also SC/St candidates are having scholarship for education //
  சூர்யா, தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  sc/st மாணவர்கள் மட்டும் அல்ல, bc/mbc மாணவர்களும் கூட தான் ஸ்காலர்ஷிப் பெறுகின்றனர். ஆனால் இந்த செய்திக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. தயவு செய்து விளக்கவும் :).

 14. // அதுசரி
  நச்சுன்னு அடிக்கறீங்க! //

  மிக்க நன்றி அதுசரி :)!

 15. // Kunthavai

  ha…ha… Good as usual.//

  மிக்க நன்றி அக்கா!

 16. //ஒழுங்கா டேக்ஸ் கட்டற எங்களுக்கு எதாவது வரிவிலக்கு கொடுங்களேன்//

  சூப்பருருருருரு

  மோகன் கன்னா பின்னா செய்திகளை கொஞ்சம் சுருக்கமா கொடுங்க அப்ப தான் படிக்க எளிதாகவும் சுவாராசியமாகவும் இருக்கும்

 17. //
  From கிரி

  //ஒழுங்கா டேக்ஸ் கட்டற எங்களுக்கு எதாவது வரிவிலக்கு கொடுங்களேன்// சூப்பருருருருரு மோகன் கன்னா பின்னா செய்திகளை கொஞ்சம் சுருக்கமா கொடுங்க அப்ப தான் படிக்க எளிதாகவும் சுவாராசியமாகவும் இருக்கும் //

  டேங்க்ஸ் கிரி. அடுத்த தபா மாத்திடறேன் :).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s