பன் டிவி & பன் பிக்சர்ஸ்

பன் டிவிநிலையம்

காட்சி இரண்டு:

பன் மியூசிக் சேனல் அறை

ட்ரிங் ட்ரிங்

திவ்யா: ஹல்லோ நான் தான் திவ்யா பேசறேன், நீங்க யாரு?

தொலைபேசியில் அந்தப்பக்கம்: ஹல்லோ, நான் கடலூருல இருந்து முருகேசன் பேசறேங்க.

திவ்யா: முருகேசன் நல்ல இருக்கீங்களா? உங்க அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மனைவி எல்லாம் நல்ல இருக்காங்களா?

முருகேசன்: எல்லாரும் நல்ல இருக்காங்க மேடம்

திவ்யா: என்னை மேடம்னு கூப்டாதீங்க முருகேசன். என் பேரை சொல்லியே கூப்டுங்க

முருகேசன்: சரி திவ்யா, நல்லா இருக்கீங்களா?

திவ்யா: நான் நல்லா இருக்கேன் முருகேசன், சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

முருகேசன்: திவ்யா எனக்கு, “நடுரோட்டில் விழுந்தேன்” படத்துல இருந்து “உன் கிட்னி” பாட்டு வேணுங்க

திவ்யா: சரி முருகேசன், உங்களுக்காக அந்த பாட்டு வந்துகிட்டே இருக்கு.

(அப்பாடல் முடிவடைகிறது)

முருகேசனுக்காக ஒரு அற்புதமான பாட்டு பார்த்தோம். இப்போ அடுத்த காலர் யாருன்னு பாப்போம்.

டிரிங் டிரிங்

திவ்யா: ஹல்லோ நான் திவ்யா பேசறேன், நீங்க யாரு

ராஜேஷ்: ஹலோ திவ்யா நான் தான் ராஜேஷ், பிரம் பெரம்பூர்

திவ்யா:ஹை ராஜேஷ், என்ன ஆச்சி ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ராஜேஷ்: திவ்யா, ஒரு லாங் டூர் போய் இருந்தேன், அதான்.

திவ்யா: ஒஹ், நல்லா என்ஜாய் செஞ்சீங்களா. சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

ராஜேஷ்: எனக்கு படிக்கட்டு படத்துல இருந்து அந்த ரீ-மிக்ஸ் பாடு போடுங்க.

திவ்யா: சரி ராஜேஷ், உங்களுக்காக இப்போ அந்த பாடல் ஒளிப்பரப்புறோம்

இப்படியே இன்னும் பல நேயர்கள் குண்டுக்கல் பாரதி மற்றும் பிடிக்காதவன் படங்களில் இருந்து அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு முடிக்கின்றனர்.

நிகழ்ச்சி நிறைவடையும் சமயம் இன்னொரு நேயர் அழைக்கிறார்

திவ்யா: ஹலோ சொல்லுங்க, யார் பேசறது? நான் திவ்யா

மறுமுனை: மேடம் நான் தான் கோபால் பேசறேன்.

திவ்யா: சொல்லுங்க கோபால். நல்லா இருக்கீங்களா?

கோபால்: நல்ல இருக்கேன் திவ்யா.

திவ்யா: ஓகே கோபால், இந்த புரோகிராமோட கடைசி காலர் நீங்க, என்ன பாட்டு வேணும்?

கோபால்: எனக்கு அவுட் லேன்டர் படத்துல இருந்து எதாவது ஒரு பாட்டு போடுங்க

திவ்யா: ?????

திவ்யா: கோபால், நீங்க பேசறது சரியாய் கேக்க மாட்டேங்குது. டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க

கோபால்: மேடம் நான் டிவி மியூட் பண்ணி தான் வச்சி இருக்கேன்.

திவ்யா: கோபால் நீங்க பேசறது கேக்கலை

கோபால்: ????

(திவ்யா போன் கட் செய்து விடுகிறார்.)

காட்சி ஒன்று:

பன் மியூசிக் சேனல் அறைக்கு பக்கத்து அறை.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?

இன்னொருவர்: நியாபகம் இருக்கு சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: ஒவ்வொரு தடவையும் பேரு மாத்தணும். வாய்சும் மாத்தணும். சொதப்பக் கூடாது. சரியா?

இன்னொருவர்: சொதப்ப மாட்டேன் சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும். ஒவ்வொரு புரோகிராம் ஸ்லாட்டுலயும் நம்ம படங்க பாட்டு ரெண்டாவது வரணும். அப்போதான் ஜனங்க நம்ம படங்கள்/பாட்டுகள் உண்மையிலே நல்லா இருக்குன்னு நெனப்பாங்க. அத வச்சி கொஞ்சம் பேராவது தியேட்டர்க்கு வருவாங்க.

இன்னொருவர்: புரியுது சார்.

டை கட்டி கொண்டிருக்கும் நபர்: (என்னது நான் சொன்னவுடனே புரியுதா? அப்போ இவனை மாத்திட வேண்டியது தான்) சரி, புரோகிராம் இன்னும் பத்து நிமிஷத்துல ஆரம்பிச்சிடும், ரெடியா இரு.

இன்னொருவர்: ஓகே சார்.

குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.

இது ஒரு கற்பனை பதிவு. சிரிக்க மட்டுமே. பாத்திரங்கள் பெயர் கற்பனையே.

Advertisements

32 responses to “பன் டிவி & பன் பிக்சர்ஸ்

 1. aaii.. me the first!!

 2. செம கலக்கல் மோகன்!

 3. //நடுரோட்டில் விழுந்தேன்//

  காதலை நாடுரோடு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

 4. //குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.//

  இதனால் தாங்கள் கூற விளைவது ?

 5. ஹா….ஹா….
  //நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும். ஒவ்வொரு புரோகிராம் ஸ்லாட்டுலயும் நம்ம படங்க பாட்டு ரெண்டாவது வரணும்.
  உங்களுக்கு ரெம்பத் தான் லொள்ளு மோகன்.
  தலைப்பும் super.

  //குண்டுக்கல் பாரதி மற்றும் பிடிக்காதவன்
  ஆனா அடுத்த படத்துக்கு தலைப்பு இலவசமாக கொடுத்திட்டீங்களே தம்பி….

 6. //காதலை நாடுரோடு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

  அதானே படுகுழியில் விழுந்தேன் என்றல்லவா எழுதியிருக்கவேண்டும் 🙂

 7. அய்யயோ இந்த தடவை வடை போச்சே…

 8. கலக்கல் நையாண்டி அண்ணாச்சி…

 9. 🙂
  ஐயோ தாங்க முடியலயே என்னால!!!

  அப்பறம் எப்படி இருக்கீங்க மோகன்?

 10. ஃஃஃ
  எனக்கு அவுட் லேன்டர் படத்துல இருந்து எதாவது ஒரு பாட்டு போடுங்க

  திவ்யா: ?????
  ஃஃஃஃஃ

  இது சூப்பரு.

 11. ஃஃ
  ஒவ்வொரு தடவையும் பேரு மாத்தணும். வாய்சும் மாத்தணும். சொதப்பக் கூடாது. சரியா?

  நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும்.

  ஃஃஃஃ

  ஓஹோ. அப்ப இப்பஎத்தான் நடக்குதா?????
  🙂

 12. //குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.///

  hehehehe
  ஒத்துக்கறேன். நீங்க ஒரு அறிவாளி ஸ்கிரிப் ரைட்டர்னு ஒத்துக்கறேன்

 13. // Bhuvanesh
  aaii.. me the first!!
  செம கலக்கல் மோகன்!
  //

  வாங்க புவனேஷ், மிக்க நன்றி.

 14. // Bhuvanesh
  //நடுரோட்டில் விழுந்தேன்//

  காதலை நாடுரோடு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்!!! //

  அது படம் பாத்துட்டு ரோட்டுல விழுந்து புரண்டவங்களை பத்தி!

 15. // Bhuvanesh

  //குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.//

  இதனால் தாங்கள் கூற விளைவது ? //

  ஹிஹி மெமெண்டோ படம் பாத்து இருக்கீங்களா, அந்த மாதிரி இது!

 16. // kunthavai

  ஹா….ஹா….
  //நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும். ஒவ்வொரு புரோகிராம் ஸ்லாட்டுலயும் நம்ம படங்க பாட்டு ரெண்டாவது வரணும்.
  உங்களுக்கு ரெம்பத் தான் லொள்ளு மோகன்.
  தலைப்பும் super.

  //குண்டுக்கல் பாரதி மற்றும் பிடிக்காதவன்
  ஆனா அடுத்த படத்துக்கு தலைப்பு இலவசமாக கொடுத்திட்டீங்களே தம்பி… //

  மிக்க நன்றி அக்கா. தலைப்புக்கு காசு அவங்க கிட்டே கேட்டு வாங்கிட வேண்டியது தான்

 17. // kunthavai
  //காதலை நாடுரோடு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

  அதானே படுகுழியில் விழுந்தேன் என்றல்லவா எழுதியிருக்கவேண்டும் 🙂 //

  ஏன் இந்த கொலை வெறி?

 18. ஒவ்வொரு பாட்டு முடுஞ்சவுடனே… படம் பேருசொல்லி அந்த படத்துல இருந்து ஒரு Marvellous சாங் பாத்தோம் னு விளம்பரம் கொடுக்கணும்!!

 19. // englishkaran

  அய்யயோ இந்த தடவை வடை போச்சே…

  கலக்கல் நையாண்டி அண்ணாச்சி… //

  அடுத்த தபா உஷாரா முதல்ல வந்துதுங்க

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

 20. //
  chinnappaiyan

  🙂 )))))))))))) //

  வாங்க சின்னபையன் 🙂

 21. // Subash

  🙂
  ஐயோ தாங்க முடியலயே என்னால!!!

  அப்பறம் எப்படி இருக்கீங்க மோகன்? //

  வாங்க சுபாஷ், இதையே தாங்க முடியலையா? அப்போ நீங்க பன் மியூசிக் சேனல் பாக்கறது இல்லையா?

  நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப மாசம் கழிச்சி வந்து இருக்கீங்க. என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

 22. // Subash
  ஃஃஃ
  எனக்கு அவுட் லேன்டர் படத்துல இருந்து எதாவது ஒரு பாட்டு போடுங்க

  திவ்யா: ?????
  ஃஃஃஃஃ

  இது சூப்பரு
  .//

  இது நாள் வரைக்கும் அவுட் லேன்டர் படத்துல இருந்து பாடே போடலை

 23. //Subash
  ஃஃ
  ஒவ்வொரு தடவையும் பேரு மாத்தணும். வாய்சும் மாத்தணும். சொதப்பக் கூடாது. சரியா?

  நம்ம குரூப் தயாரிச்ச எல்லா படத்துல இருந்தும் ஒரு பாட்டு கேக்கணும்.

  ஃஃஃஃ

  ஓஹோ. அப்ப இப்பஎத்தான் நடக்குதா?????//

  நான் இது ஒரு கற்பனைனு தானே சொல்லி இருக்கேன் 🙂

 24. //
  Subash
  //குறிப்பு: இக்கதை நான்-லீனியர் முறையில் எழுதப்பட்டது, ஹிஹி.///

  hehehehe
  ஒத்துக்கறேன். நீங்க ஒரு அறிவாளி ஸ்கிரிப் ரைட்டர்னு ஒத்துக்கறேன்//

  புரிஞ்சிகிட்டதுக்கு மிக்க நன்றி சுபாஷ் 🙂

 25. //Bhuvanesh

  ஒவ்வொரு பாட்டு முடுஞ்சவுடனே… படம் பேருசொல்லி அந்த படத்துல இருந்து ஒரு Marvellous சாங் பாத்தோம் னு விளம்பரம் கொடுக்கணும்!!//

  அப்படியே சான்சே இல்லை, சூப்பர் பாட்டு பாத்தோம் அதையும் சேத்துக்கோங்க புவனேஷ்ஜி

 26. ஹா ஹா ஹா

 27. அற்புதம் …

 28. // From urupudaathathu

  ஹா ஹா ஹா //
  வாங்க அணிமா, ரொம்ப மாசம் கழிச்சி வந்து இருக்கீங்க. எப்படி இருக்கீங்க?

 29. // From ராம்

  அற்புதம் …
  //
  ராம் தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

 30. மோகன் அசத்தல் கற்பனை 🙂

 31. // கிரி

  மோகன் அசத்தல் கற்பனை 🙂 //

  வாங்க கிரி, மிக்க நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s