டூபர் வுட் பிலிம்ஸ் வழங்கும் ஸ்கை அண்ட் எர்த்!

சென்னை டூபர் வுட் பிலிம்ஸ் அலுவலகம்

ராமையா கதை கேட்பதற்காக உட்கார்ந்து இருக்கின்றார். அப்போது கதை சொல்வதற்காக வருகிறார் ராஜா.

ராமையா: வாங்க …..
ராஜா: என் பேரு ராஜா சார்
ராமையா: வாங்க ராஜா, என்ன கதை வச்சி இருக்கீங்க
ராஜா: சூப்பர் லவ் ஸ்டோரி சார்
ராமையா: லவ் ஸ்டோரியா? (இது வரைக்கும் லவ் ஸ்டோரி எடுத்து பட்டது பத்தாதா? நெற்றியை கீறி யோசிக்கறார்)
ராஜா: சார், ஹாலிவுட் ரேஞ் லவ் ஸ்டோரி
ராமையா: (ஹாலிவுட் ரேஞ்சா? நிமிர்ந்து உட்கார்கிறார்) சரி சொல்லுங்க பாப்போம்

ராஜா: ராமசாமி டெக்சாஸ் மாநிலத்துல இருக்கற ….
ராமையா ஜெர்க் ஆகிறார்.

ராமையா: என்னது டெக்சாஸா? அது எங்கே இருக்குது?
ராஜா: அமெரிக்கா சார்
ராமையா: எக்கச்சக்கமா செலவு ஆகுமேயா
ராஜா: இல்லை சார், இங்க லோக்கல்ல போய் ஷூட்டிங் எடுக்கறதை விட அமெரிக்காக்கு போய் ஷூட்டிங் எடுத்த செலவு கம்மியா தான் ஆகும்.

ராஜா தொடர்கிறார்
ராஜா: ராமசாமி டெக்சாஸ் மாநிலத்துல இருக்கற வாடர்லூ கிராமத்துல பெரிய நாட்டாமை.
ராமையா: ஆமா அவங்க எப்போ அமெரிக்கா போனாங்க?
ராஜா: ரெண்டாம் உலக போர்ல ராமசாமியோட தாத்தா கலந்துகிட்டாரு. அப்போ அப்படியே அவங்க குடும்பம் அமெரிக்கால செட்டில் ஆயிடிச்சி
ராமையா: ம்ம் இன்டரஸ்டிங், ஆனா அமெரிக்காலயும் நாட்டமையா?
ராஜா: அட கதை தானே சார்.
ராமையா: சரி, மேல சொல்லுங்க

ராஜா கதையை தொடருகிறார்

ராமசாமிக்கு கல்யாணம் ஆயிடிச்சி சார். ராமசாமிக்கு ஒரு தம்பி. அவர் பேரு சக்திவேல். அவரை சுத்தி தான் கதையே நகருது
அந்த கிராமத்துலயே அதிகம் படிச்சவர் சக்திவேலுதான்
அவரு ஒரு நாள் அந்த கிராமத்துல இருக்கற தியேட்டர்க்கு படம் பாக்க அவர் வீட்டு கணக்கு புள்ளையோட போறாரு.
அப்போ படத்துல வர ஹீரோயின பாத்து பாத்தவுடன் காதலுல விழுந்துடறாரு, அந்த பொண்ணு பேரு ஜெனிபர் அனிஸ்டன்
அன்னியில இருந்து அந்த பொண்ணு நியாபகமாவே இருக்காரு. எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டேங்கறாரு

ராமையா குறுக்கிட்டு: சக்திவேல் என்ன வேலை செஞ்சிகிட்டு இருக்காரு?
ராஜா: அவரு ஒரு வேலையும் செய்யலைங்க, சும்மாதான் சுத்திகிட்டு இருக்காரு
சக்திவேலு கல்யாணம் கட்டினா அந்த பொண்ணை தான் கட்டுவேன் ஒரு முடிவு எடுக்கறாரு.
அந்த சமயம் பாத்து அவங்க ஊருல ஒரு பிலிம் ஷூட்டிங் நடக்குது. அதுல நடிக்கறது நம்ம சக்திவேலு ஆசை படற ஜெனிபர் அனிஸ்டனே தான்

அந்த பட டைரக்டர் லோகேசன் பாக்கறதுக்கு அந்த கிராமம் முழுசும் சுத்தராறு. அப்போ ராமசாமி பண்ணைய பாத்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிடறாரு. அவர் ராமசாமியா சந்திச்சி அவங்க பண்ணைல ஷூட்டிங் நடத்த பெர்மிசன் கேக்கறாரு. ராமசாமி ஒத்துகல

ஆனா சக்திவேலுக்கு அந்த படத்துல நடிக்கறது அவரோட ஆளு ஜெனிபர் அனிஸ்டன் தான்னு தெரிஞ்ச அப்புறம் அவங்க அண்ணாகிட்டே பேசி சம்மதிக்க வச்சிடறார். அப்புறம் அவரு அண்ணிக்கிட்ட ஜெனிபர் அனிஸ்டன விரும்பறதை சொல்லறாரு. அவங்க அண்ணிக்கு ரொம்ப சந்தோசம். ஷூட்டிங் நடக்கறப்போ ஜெனிபர் அனிஸ்டன அவங்க வீட்டு மருமகள் மாதிரியே நடத்துறாங்க. ஆனா ஜெனிபர் அனிஸ்டனுக்கு இது தெரியலை.

படம் ஷூட்டிங் முடிஞ்ச அப்புறம் ஜெனிபர் அனிஸ்டன் அவங்க ஊருக்கே போயிடறாங்க. சக்திவேல் தன்னோட காதலை சொல்லுறதுக்காக ஜெனிபர் அனிஸ்டன் வீட்டுக்கு போயிடறாங்க. தன்னோட காதலை சொல்லுறாரு. ஆனா ஜெனிபர் அனிஸ்டன் அவரோட காதலை ஏத்துக்கலை. அவரை வீட்டை விட்டு துரத்திடறாங்க.

எப்படி சக்திவேல் ஜெனிபர் அனிஸ்டன் மனசை மாத்தி அவரையே கல்யாணம் பண்ணிக்காரு அப்படிங்கறது தான் மீதி கதை சார்.

ராமையா: கதை நல்லா தான் இருக்கு, ஆனா இதை முன்னாடியே பாத்தா மாதிரி இருக்கே?
ராஜா (அவசரமாக): இல்லை சார், இது நான் சொந்தமா யோசிச்ச கதை சார்.

ராமையா: சரியா, இந்த புடி அட்வான்ஸ். படத்தை அடுத்த மாசம் ஆரம்பிச்சிடலாம்
ராஜா: ரொம்ப தேங்க்ஸ் சார்.

பின்குறிப்பு: வழக்கம் போல இது ஒரு கற்பனை பதிவு. சிரிக்க மட்டுமே (சிரிப்பு வந்துச்சா?). புடிச்சி இருந்தா கமெண்டும் ஓட்டும் போடுங்க. புடிக்காட்டி கமெண்ட் போடுங்க

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

Advertisements

23 responses to “டூபர் வுட் பிலிம்ஸ் வழங்கும் ஸ்கை அண்ட் எர்த்!

 1. என்ன கொடுமை இது???

 2. //சிரிக்க மட்டுமே (சிரிப்பு வந்துச்சா?).///

  இதுல உங்களுக்கு டவுட் வேறயா???

 3. // urupudaathathu

  என்ன கொடுமை இது??? //

  வாங்க அணிமா, ரொம்ப நாளைக்கு அப்புறமா முதல்ல வந்து கமெண்ட் போட்டு இருக்கீங்க. மிக்க நன்றி.

  // /சிரிக்க மட்டுமே (சிரிப்பு வந்துச்சா?)./// இதுல உங்களுக்கு டவுட் வேறயா??? //

  இது மூலமா என்ன சொல்ல வரீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே!

 4. //புடிக்காட்டி கமெண்ட் போடுங்க//

  ??????

  நான் ரெண்டு கமெண்ட் போட்டுட்டேன்..

 5. ///வாங்க அணிமா, ரொம்ப நாளைக்கு அப்புறமா முதல்ல வந்து கமெண்ட் போட்டு இருக்கீங்க. மிக்க நன்றி. ////

  நாங்க லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்ட்டா வருவோம்ல!!!

 6. ///// /சிரிக்க மட்டுமே (சிரிப்பு வந்துச்சா?)./// இதுல உங்களுக்கு டவுட் வேறயா??? //

  இது மூலமா என்ன சொல்ல வரீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே!/////

  புரியறது புரியாம போகாது..
  புரியாதது என்னிக்குமே புரியாது..
  எதுனா புரியுதா?

 7. // urupudaathathu

  //புடிக்காட்டி கமெண்ட் போடுங்க// ?????? நான் ரெண்டு கமெண்ட் போட்டுட்டேன்.. //

  அடப்பாவிகளா, இதை மட்டும் கரெக்டா செஞ்சிடுங்க! அவ்வ்வ்வ்!

 8. // urupudaathathu
  நாங்க லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்ட்டா வருவோம்ல!!! //

  ஒத்துக்கறேன் ஆமா என்ன லேட்டஸ்டா வந்தீங்க? ஹிஹி

 9. கற்பனை நல்லா இருக்கு…..கதை வசனம் மட்டும் நீங்க எழுதுங்க…டைரக்ஷனை கே.எஸ். ரவிக்குமார் கிட்ட குடுத்துருங்க…ஏன்னா நாட்டாமை கதைக்கெல்லாம் அவரு தான் நாட்டாமை :0))

 10. அந்த கதைக் கேட்கிறவரை அப்படி உக்காரச் சொல்லுங்க மோகன்…. என் கிட்டேயும் ஒரு கதை இருக்கு…..
  ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட சுட வடச்சுட்டுட்டு இருந்தாங்களாம். ஒரு காக்கா சூடா இருந்த வடையை சுட்டுட்டு வந்திருச்சாம். ஒரு நரி அந்த காக்கா சுட்ட வடையச் சுட்டிருச்சாம். சூடா இருந்த சுட்ட வடைய சுட சுட சாப்பிட்டதால நரிக்கு நாக்கு சுட்டிருச்சாம். அதன் பிறகு அந்த நரி இனிமேல் நான், சுட்ட வடைய சாப்பிடவேமாட்டேன்… சுடாத வடயத்தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருந்திச்சாம். அந்த நரியோட நரி நன்பன் எப்படி சுடாத வடைய கண்டுபிடிச்சு நண்பனை காப்பாத்ரார்ன்னு தான் கதை.
  சரி யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க…. அப்புறம் உங்க மேல் தான் கதை திருட்டு வழக்கு போடுவேன்.

 11. அண்ணாச்சி இங்க ராஜா என்று நீங்க சொல்றது ரீமேக் ராஜாவை தான…

 12. ஒரு காக்கா சூடா இருந்த வடையை சுட்டுட்டு வந்திருச்சாம். ஒரு நரி அந்த காக்கா சுட்ட வடையச் சுட்டிருச்சாம். சூடா இருந்த சுட்ட வடைய சுட சுட சாப்பிட்டதால நரிக்கு நாக்கு சுட்டிருச்சாம். அதன் பிறகு அந்த நரி இனிமேல் நான், சுட்ட வடைய சாப்பிடவேமாட்டேன்… சுடாத வடயத்தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருந்திச்சாம்.//

  அக்கா நரி எதுக்கு உண்ணாவிரதம் இருந்துச்சு? இப்ப எல்லாரும் உண்ணாவிரதம் இருக்குறது நரியையும் பாதிச்சுடுச்சு போல இருக்கே…

 13. டைரக்ஷனை கே.எஸ். ரவிக்குமார் கிட்ட குடுத்துருங்க…ஏன்னா நாட்டாமை கதைக்கெல்லாம் அவரு தான் நாட்டாமை :0)) //

  இல்லை இல்லை இந்த கதையில காதல் வருவதுனால செண்டிமெண்ட் இருக்கும். அதனால விக்ரமன் – எஸ்.எ ராஜ்குமார் கூட்டணி தான் வொர்க் அவுட் ஆகுமுன்னு நான் நினைக்கிறேன்.

 14. இந்த படத்தோட கதை வெயிட் ஆனா கதை.. இதுக்கு டைரக்டர் எல்லாம் ஒரு மேட்டர் இல்ல.. இந்த கதையோட கதாபாத்திரங்களை தாங்கி பிடிக்கற அளவுக்கு நடிகர்கள் மட்டும் போதும்..

  நாட்டாமை – கேப்டன்
  ஹீரோ – ஜே.கே. ரித்திஷ்
  அண்ணி – ப்ரீத்தி ஜிந்தா..

  படத்தில் நாட்டாமை பேசும் ” ஏ புள்ள ஜிந்தா..” என்ற வசனத்துக்கு திரை அரங்கம் அதிரும்!!

 15. Pl change ur template…
  and also the comment section is very difficult to read..
  I know u will accept the suggestions…

 16. // urupudaathathu

  புரியறது புரியாம போகாது..
  புரியாதது என்னிக்குமே புரியாது..
  எதுனா புரியுதா? //

  எல்லாம் புரிஞ்சது

 17. // அதுசரி
  கற்பனை நல்லா இருக்கு…..கதை வசனம் மட்டும் நீங்க எழுதுங்க…டைரக்ஷனை கே.எஸ். ரவிக்குமார் கிட்ட குடுத்துருங்க…ஏன்னா நாட்டாமை கதைக்கெல்லாம் அவரு தான் நாட்டாமை :0))
  //

  அது சரி, நிஜமா நக்கல் பண்ணுறீங்களா? இது எந்த படம்னு யாருக்குமே தெரியலையா? ஸ்ரீராம் சொன்ன மாதிரி இதுக்கு கே.எஸ். ரவிகுமார் சரிப்பட்டு வர மாட்டார். இதுக்கு விக்ரமன் & கோ தான் சரி பட்டு வரும்.

 18. // குந்தவை
  அந்த கதைக் கேட்கிறவரை அப்படி உக்காரச் சொல்லுங்க மோகன்…. என் கிட்டேயும் ஒரு கதை இருக்கு…..
  ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட சுட வடச்சுட்டுட்டு இருந்தாங்களாம். ஒரு காக்கா சூடா இருந்த வடையை சுட்டுட்டு வந்திருச்சாம். ஒரு நரி அந்த காக்கா சுட்ட வடையச் சுட்டிருச்சாம். சூடா இருந்த சுட்ட வடைய சுட சுட சாப்பிட்டதால நரிக்கு நாக்கு சுட்டிருச்சாம். அதன் பிறகு அந்த நரி இனிமேல் நான், சுட்ட வடைய சாப்பிடவேமாட்டேன்… சுடாத வடயத்தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருந்திச்சாம். அந்த நரியோட நரி நன்பன் எப்படி சுடாத வடைய கண்டுபிடிச்சு நண்பனை காப்பாத்ரார்ன்னு தான் கதை.
  சரி யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க…. அப்புறம் உங்க மேல் தான் கதை திருட்டு வழக்கு போடுவேன்.
  அந்த கதைக் கேட்கிறவரை அப்படி உக்காரச் சொல்லுங்க மோகன்…. என் கிட்டேயும் ஒரு கதை இருக்கு….. ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட சுட வடச்சுட்டுட்டு இருந்தாங்களாம். ஒரு காக்கா சூடா இருந்த வடையை சுட்டுட்டு வந்திருச்சாம். ஒரு நரி அந்த காக்கா சுட்ட வடையச் சுட்டிருச்சாம். சூடா இருந்த சுட்ட வடைய சுட சுட சாப்பிட்டதால நரிக்கு நாக்கு சுட்டிருச்சாம். அதன் பிறகு அந்த நரி இனிமேல் நான், சுட்ட வடைய சாப்பிடவேமாட்டேன்… சுடாத வடயத்தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருந்திச்சாம். அந்த நரியோட நரி நன்பன் எப்படி சுடாத வடைய கண்டுபிடிச்சு நண்பனை காப்பாத்ரார்ன்னு தான் கதை. சரி யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க…. அப்புறம் உங்க மேல் தான் கதை திருட்டு வழக்கு போடுவேன்.
  //
  அக்கா கதை நல்ல தான் இருக்கு. ஆனா இதுல ரெண்டு குத்து பாட்டு, ரெண்டு பைட்டு, கொஞ்சம் காமெடி இதெல்லாம் கலந்து கதையே சொல்லுங்க. நான் அந்த தயாரிப்பாளர் கிட்டே பேசி பாக்கறேன். இந்த கதை உரிமை உங்களுக்கே தான்.

 19. // Sriram

  அண்ணாச்சி இங்க ராஜா என்று நீங்க சொல்றது ரீமேக் ராஜாவை தான…//

  ஆஹா, கோத்து விட பாக்கறீங்க நான் சிக்க மாட்டேன்.

 20. //Sriram

  ஒரு காக்கா சூடா இருந்த வடையை சுட்டுட்டு வந்திருச்சாம். ஒரு நரி அந்த காக்கா சுட்ட வடையச் சுட்டிருச்சாம். சூடா இருந்த சுட்ட வடைய சுட சுட சாப்பிட்டதால நரிக்கு நாக்கு சுட்டிருச்சாம். அதன் பிறகு அந்த நரி இனிமேல் நான், சுட்ட வடைய சாப்பிடவேமாட்டேன்… சுடாத வடயத்தான் சாப்பிடுவேன்னு உண்ணாவிரதம் இருந்திச்சாம்.//

  அக்கா நரி எதுக்கு உண்ணாவிரதம் இருந்துச்சு? இப்ப எல்லாரும் உண்ணாவிரதம் இருக்குறது நரியையும் பாதிச்சுடுச்சு போல இருக்கே…//

  இதுக்கு அக்காவே பதில் சொல்லட்டும்

 21. // Sriram
  டைரக்ஷனை கே.எஸ். ரவிக்குமார் கிட்ட குடுத்துருங்க…ஏன்னா நாட்டாமை கதைக்கெல்லாம் அவரு தான் நாட்டாமை :0)) //

  இல்லை இல்லை இந்த கதையில காதல் வருவதுனால செண்டிமெண்ட் இருக்கும். அதனால விக்ரமன் – எஸ்.எ ராஜ்குமார் கூட்டணி தான் வொர்க் அவுட் ஆகுமுன்னு நான் நினைக்கிறேன்.//

  அருமை ஸ்ரீராம், எந்த கதை யாருக்கு சரியா வரும்னு சரியாச் சொல்லுறீங்களே, நீங்களே ஒரு தயாரிப்பாளராகலாம் போல இருக்கே?

 22. // Bhuvanesh
  இந்த படத்தோட கதை வெயிட் ஆனா கதை.. இதுக்கு டைரக்டர் எல்லாம் ஒரு மேட்டர் இல்ல.. இந்த கதையோட கதாபாத்திரங்களை தாங்கி பிடிக்கற அளவுக்கு நடிகர்கள் மட்டும் போதும்..

  நாட்டாமை – கேப்டன்
  ஹீரோ – ஜே.கே. ரித்திஷ்
  அண்ணி – ப்ரீத்தி ஜிந்தா..

  படத்தில் நாட்டாமை பேசும் ” ஏ புள்ள ஜிந்தா..” என்ற வசனத்துக்கு திரை அரங்கம் அதிரும்!!//

  வாங்க புவனேஷ்,
  நெஜமா இது எந்த கதையோட சுட்ட கதைன்னு உங்களுக்கு கூடவா தெரியலை?

 23. // உருப்புடாதது_அணிமா
  Pl change ur template…
  and also the comment section is very difficult to read..
  I know u will accept the suggestions…//

  அண்ணா மாத்திட்டேன், இப்போ எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s