சேலம் தொகுதி

சேலம் தொகுதிப் பற்றிய இத்தகவல்கள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டுள்ளது. சேலம் எனது சொந்த ஊர் என்பதால் இப்பதிவு.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையில் திருச்செங்கோடு தொகுதியில் இடம் பெற்றிருந்த எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி சேலம் மக்களவைத் தொகுதியின் கீழ் வந்துள்ளது. ஏற்காடு(தனி) தொகுதி நீக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இத்தொகுதி பெரும்பாலும் காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எஸ்.வி. ராமசாமி, கே. ராஜாராம், ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி (சுயேட்சையாக), கே.வி. தங்கபாலு, செல்வகணபதி போன்ற பிரபலங்கள் சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதில் எஸ்.வி.ராமசாமி மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலம் 3 முறை எம்.பியாகியுள்ளனர்.

கடந்த 1952, 1957, 1962, 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967, 1971, 1980 தேர்தல்களில் திமுகவும், 1977, 1999 தேர்தல்களில் அஇஅதிமுகவும் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 1998ஆம் ஆண்டு சுயேட்சையாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டில் த.மா.கா. இத்தொகுதியைக் கைப்பற்றியது.

கடந்த தேர்தலில் கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 4 லட்சத்து 44 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய ராஜசேகரன் (அஇஅதிமுக) 2 லட்சத்து 68 ஆயிரத்து 964 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இத்தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்: ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

ஓமலூர் – தமிழரசு (பாமக)
எடப்பாடி – காவேரி (பாமக)
சேலம் 1 – ரவிச்சந்திரன் (அதிமுக)
சேலம் 2 – எஸ்.ஆறுமுகம் (திமுக)
வீரபாண்டி – ராஜேந்திரன் (திமுக)

கடந்த தேர்தல் நிலவரம்

தங்கபாலு (காங்கிரஸ்) – 4,44,591.
ராஜசேகரன் (அதிமுக) – 2,68,964.
வெற்றி வித்தியாசம் – 1,75,627 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1952-57 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1957-62 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1962-67 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1967-71 – கே.ராஜாராம் – திமுக.
1971-77 – இ.ஆர்.கிருஷ்ணன் – திமுக.
1977-80 – ப.கண்ணன் – அதிமுக.
1980-84 – சி.பழனியப்பன் – திமுக.
1984-89 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1989-91 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1991-96 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1996-98 – ஆர்.தேவதாஸ் – தமாகா.
1998-99 – வாழப்பாடி ராமமூர்த்தி – சுயேச்சை.
1999-04 – டி.எம். செல்வகணபதி – அதிமுக.
2004 – கே.வி.தங்கபாலு – காங்கிரஸ்.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு – 1952.
வென்றவர் – எஸ்.வி.ராமசாமி (காங்கிரஸ்).

நன்றி: http://tamil.webdunia.com மற்றும் தினமலர்

சேலம் தேர்தல் நிலவரம் பற்றி அதிக தகவல்களை தர முயற்சிக்கிறேன்.

Advertisements

11 responses to “சேலம் தொகுதி

 1. இந்த முறையும் சேலம் காங்கிரஸ் கட்சிக்கு என்று தான் நினைக்கிறன்.. ௮திமுக சார்பில் செல்வகணபதியின் கட்சி தாவல் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறன் .. பாக்கலாம்.. !!

 2. வாங்க புவனேஷ், நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

  தே.மு.தி.க சார்பில் நிற்கின்ற வேட்பாளர் அ.தி.மு.க கூட்டணி ஓட்டுகளை பிரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 3. வாங்க அணிமா, என்ன இப்படி சொல்லிட்டீங்க?

 4. தே.மு.தி.க சார்பில் நிற்கின்ற வேட்பாளர் அ.தி.மு.க கூட்டணி ஓட்டுகளை பிரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

  இம்முறை தே மு தி க பிரிக்கப் போவது தி மு க வின் ஓட்டுகளை அண்ணாச்சி…

 5. வாங்க அணிமா, என்ன இப்படி சொல்லிட்டீங்க? //

  அதான… என்ன அணிமா அண்ணே இப்படி சொல்லிப் புட்டீங்களே…
  மாத்தி சொல்லுங்க
  haiyo!!!!!!!!!!!!
  aiyo??

 6. //
  கடந்த தேர்தலில் கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 4 லட்சத்து 44 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய ராஜசேகரன் (அஇஅதிமுக) 2 லட்சத்து 68 ஆயிரத்து 964 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
  //

  2 லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சி, 5 வருஷமா ஒரு கேள்விக் கூட கேட்காத ஒரு ஜென்மம்!! என்ன மாதிரியான தலைவர் இவரு??? தலைவர விடுங்க, இத்தினி பேரு ஓட்டு போட்ருக்காங்களெ, எதாவது செய்வோம்னு ஒரு அடிப்படை உணர்வு கூடவா இருக்காது??

  இந்த தடவை, ரிசல்ட் அப்படியே மாறி வரும்னு நினைக்கிறேன்…

 7. // Sriram
  இம்முறை தே மு தி க பிரிக்கப் போவது தி மு க வின் ஓட்டுகளை அண்ணாச்சி…//

  ஸ்ரீராம், தே.மு.தி.க வேட்பாளர் வன்னிய இனத்தை சேர்ந்தவர். எனவே அவர் பா..ம.க ஓட்டுகளை பிரிக்கலாம் அல்லவா?

 8. // Sriram
  வாங்க அணிமா, என்ன இப்படி சொல்லிட்டீங்க? //

  அதான… என்ன அணிமா அண்ணே இப்படி சொல்லிப் புட்டீங்களே…
  மாத்தி சொல்லுங்க
  haiyo!!!!!!!!!!!!
  aiyo??//

  I am the escape!

 9. // அதுசரி
  //
  கடந்த தேர்தலில் கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 4 லட்சத்து 44 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய ராஜசேகரன் (அஇஅதிமுக) 2 லட்சத்து 68 ஆயிரத்து 964 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
  //

  2 லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சி, 5 வருஷமா ஒரு கேள்விக் கூட கேட்காத ஒரு ஜென்மம்!! என்ன மாதிரியான தலைவர் இவரு??? தலைவர விடுங்க, இத்தினி பேரு ஓட்டு போட்ருக்காங்களெ, எதாவது செய்வோம்னு ஒரு அடிப்படை உணர்வு கூடவா இருக்காது??

  இந்த தடவை, ரிசல்ட் அப்படியே மாறி வரும்னு நினைக்கிறேன்… //

  அதுசரி, அப்படியென்றால் 99% தற்போதைய பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த முறை தேர்ந்தெடுக்கப் படமாட்டார்களே? மக்களுக்கு மறதி அதிகம். அதை அரசியல்வாதிகள் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். நமக்கும் ஒரு மாற்று இல்லாதனால் இவர்களில் ஒருவரை மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s