சேலம் வேட்பாளர்கள்

சேலம் பாராளுமன்ற தேர்தலுக்கு இதுவரை  தே.மு.தி.க வைத் தவிர வேற எந்த கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை. தற்போதைய சேலம் வேட்பளார்கள் நிலவரம் பற்றிய ஒரு சிறு பதிவு:

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ககள் நடேசன், எஸ்.கே.செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் கணவர் பழனிச்சாமி, வக்கீல்கள் அய்யப்பமணி, அருள்புஷ்பராஜ், விவேகானந்தன், மற்றும் ஆக்ஸ்போர்டு பாபு, லலிதா செந்தில்குமார், முன்னாள் எம்.பி. கண்ணன் மகள், தொழில் அதிபர் ஏ.இ.சுகுமார், சதீஷ்குமார் உள்பட 63 பேர் மனு கொடுத்து உள்ளனர். இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது 9-ந் தேதி தெரியவரும்.

 • கொங்குநாடு முன்னேற்ற பேரவை சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்சாம்ராஜ் (இவர் அருண்குமார் மற்றும் மந்த்ரா நடித்த ப்ரியம் படத்தை தயாரித்தவர்) போட்டியிடுகிறார் என்று ஒரு செய்தி
 • கொங்கு இளைஞர் பேரவையும் சேலத்தில் வேட்பாளரை நிறுத்துகிறது (இவை இரண்டும் வெவ்வேறு கட்சிகள் தான்).
 • பாரதீய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.
 • தி.மு.க. கூட்டணியில் சேலம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான தங்கபாலு மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • ஆர்.பாலசுப்பிரமணி சேலம் பாராளுமன்ற தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

இந்த வேட்பாளர்களை பற்றி அதிக விவரம் திரட்ட முயற்சிக்கிறேன்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

Advertisements

2 responses to “சேலம் வேட்பாளர்கள்

 1. அ.தி.மு.க வில் அனேகமாக முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு வாய்ப்பு தரப்படலாம்….ஆனால் அம்மா குறித்து கணிப்பது கடினம்…திடீரென்று சீட்டே கேட்காத ஒருவர் உகாண்டாவிலிருந்தோ, சிங்கப்பூரிலிருந்தோ இல்லை அமெரிக்காவிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தப்படலாம்….

  நிலவரம் எப்படி இருக்கு மோகன்? சூழ்நிலையை வச்சிப் பார்த்தா தங்கபாலு தொங்கபாலு ஆயிடுவார் போலருக்கே??

 2. //
  அதுசரி

  அ.தி.மு.க வில் அனேகமாக முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு வாய்ப்பு தரப்படலாம்….ஆனால் அம்மா குறித்து கணிப்பது கடினம்…திடீரென்று சீட்டே கேட்காத ஒருவர் உகாண்டாவிலிருந்தோ, சிங்கப்பூரிலிருந்தோ இல்லை அமெரிக்காவிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தப்படலாம்….

  நிலவரம் எப்படி இருக்கு மோகன்? சூழ்நிலையை வச்சிப் பார்த்தா தங்கபாலு தொங்கபாலு ஆயிடுவார் போலருக்கே??//

  முன்னால் அமைச்சர் செம்மலை மீது வரதட்சணை புகார் ஒன்று நிலுவையில் உள்ளது. அதனால் அவருக்கு இம்முறை சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே.

  தங்கபாலு மீது பொதுமக்கள் மட்டும்மல்லாது அவரது கட்சியினரும் கடுப்பில் உள்ளனர். அதனால் நீங்க சொன்னது போல தான் நடக்கும். இன்னும் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்க படவில்லை. அதை பொறுத்து நிலைமை மாறக் கூடும். தங்கள் தொடர் வருகைக்கு நன்றி அதுசரி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s