தே.மு.தி.க வேட்பாளர் சேலம் அழகாபுரம் மோகன்ராஜ்

சேலம் பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுகம் 1: அழகாபுரம் மோகன்ராஜ்

சேலம் பாராளுமன்றத்தொகுதியில் தே.மு.தி.க சார்பாக நிற்பவர் அழகாபுரம் மோகன்ராஜ். இவரைப்பற்றி;

mr

மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் தீவிர சிஷ்யர்களில் ஒருவரான மோகன் ராஜ், சேலம் தே.மு.தி.க வேட்பாளராக களம் நிற்கிறார். தீவிர காங்கிரஸ்காரர் மோகன்ராஜ். வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் இணைந்து மோகன்ராஜும் வெளியேறினார். பின்னர் வாழப்பாடியார் ராஜீவ் காங்கிரஸைக் கலைத்து விட்டு திவாரி காங்கிரஸில் இணைந்தபோது மோகன்ராஜும் உடன் சென்றார். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது மோகன்ராஜும் அதில் இணைந்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அழகாபுரம் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே கூறியபடி நாங்கள் மக்களுடனும், தெய்வத்துடனும்தான் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளோம். சேலம் எம்.பி. தொகுதியில் போட்டியிட, விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மக்களின் ஆதரவுடனும், எங்கள் கட்சியின் அனைத்து தோழர்களின் ஒத்துழைப்புடனும், சேலம் தொகுதியில் வெற்றிபெற்று, வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்பேன்.

55 வயதாகும் மோகன்ராஜ் 1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அழகாபுரம் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி உள்ளார். இவர் 17 வயதில் மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜின் குடும்பம் நீண்ட நெடிய அரசியல் பின்னணியைக் கொண்டது. 96-ம் ஆண்டு திவாரி காங்கிரஸ் சார்பில், சட்டமன்ற சேலம் 2-வது தொகுதியில் போட்டியிட்டார். மோகன்ராஜ் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். இவரது சகோதரர் சுரேஷ்குமார்(அ.தி.மு.க.வை சேர்ந்தவர்) சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆவார்.

குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சேலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரசாரம் தொடங்கினார்

இவருடைய தேர்தல் வாக்குறுதிகள்

 • சேலம் மாநகரில் மக்களை அவஸ்தைக்குள்ளாக்கும் கொசுத் தொல்லை உள்ளிட்டவற்றை ஒழிக்க பாடுபடுவேன்
 • தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயிகளின் குறைகளை போக்க பாடுபடுவேன்
 • மத்திய அரசின் உதவியோடு இரும்பாலை விரிவாக்க திட்டம்
 • சேலம் விமான நிலையத்தை முழு அளவில் இயங்கச் செய்யும் திட்டம்
 • ஏழை மக்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் திட்டம் மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை
 • மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க  நடவடிக்கை

இச்செய்திகள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டவை. ஏதேனும் தவறு/காப்புரிமை பிரச்சினை இருந்தால் தயவுசெய்துத் தெரிவிக்கவும்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

நன்றி thatstamil.oneindia.in

Advertisements

21 responses to “தே.மு.தி.க வேட்பாளர் சேலம் அழகாபுரம் மோகன்ராஜ்

 1. சேலம் மாநகரில் மக்களை அவஸ்தைக்குள்ளாக்கும் கொசுத் தொல்லை உள்ளிட்டவற்றை ஒழிக்க பாடுபடுவேன்//

  முதல்ல அரசியல்ல இருக்குற கொசுவை ஒழிக்க சொல்லுங்க…மத்த கொசு கடி எல்லாம் மக்களுக்கு பழகிப் போச்சு…

 2. வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்பேன்.//

  கனியை சமர்பிக்கிறது எல்லாம் இருக்கட்டும் எம்.பி சீட்டுக்கு எவ்வளவு ரூபாய்க்கு பேரம் பேசுனாரு?

 3. வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் இணைந்து மோகன்ராஜும் வெளியேறினார். பின்னர் வாழப்பாடியார் ராஜீவ் காங்கிரஸைக் கலைத்து விட்டு திவாரி காங்கிரஸில் இணைந்தபோது மோகன்ராஜும் உடன் சென்றார். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது மோகன்ராஜும் அதில் இணைந்தார்.//

  அடே சாமி…ஜெயித்த பிறகு தனது தொகுதியை விட்டு வெளியேறாமல் இருந்தால் சரி…

 4. . இவரது சகோதரர் சுரேஷ்குமார்(அ.தி.மு.க.வை சேர்ந்தவர்) சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆவார்.//

  இது வேறயா … கிழிஞ்சது கிருஷ்ணகிரி…இல்லை இல்லை கிழிஞ்சது சேலம்…

 5. குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சேலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரசாரம் தொடங்கினார்//

  ஏழு குண்டலவாட கோவிந்தா கோவிந்தா

 6. மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை//

  மக்களின் அடிப்படை பிரச்சினை எந்த மந்திரியும் தொகுதிக்கென்று உருப்படியாக எதுவும் செய்யாதது தான்… அதை தீர்த்துக் கட்டுவேன் எதையும் செய்யாததை மறைக்க ஏதும் திட்டம் வைத்திருக்கிறாரா ??

 7. இச்செய்திகள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டவை. ஏதேனும் தவறு/காப்புரிமை பிரச்சினை இருந்தால் தயவுசெய்துத் தெரிவிக்கவும்//

  நோட் பண்ணிகொங்க மக்களே…

 8. ஒருவேளை நீங்க தான் அந்த மோகனா ? அப்படி ஏதும் இருந்தால் மன்னிச்சுக்கோங்க அண்ணாச்சி..சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக்கிறேன்…

 9. // Sriram
  Me the first

  //
  வாங்க, ஸ்ரீராம்.

  // முதல்ல அரசியல்ல இருக்குற கொசுவை ஒழிக்க சொல்லுங்க…மத்த கொசு கடி எல்லாம் மக்களுக்கு பழகிப் போச்சு…//
  ஹாஹா, அப்போ அவரு என்ன?

 10. // Sriram
  வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்பேன்.//

  கனியை சமர்பிக்கிறது எல்லாம் இருக்கட்டும் எம்.பி சீட்டுக்கு எவ்வளவு ரூபாய்க்கு பேரம் பேசுனாரு?//

  ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தினசரியில் படித்தது அவர் 8 கோடி செலவு செய்யத்தயாராம்.

 11. ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்.//

  I dont tell this secret to anyone annachi…So u plz dont worry…

 12. சேலம் தொகுதி குறித்த இப்பதிவு உபயோகமாய் இருக்கிறது. அனேகமாய் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு நிற்க வேண்டி இருக்கலாம்.

  மற்ற கட்சி வேட்பாளார்கள் குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பதிவிடுங்கள். உபயோகமாக இருக்கும்.

 13. // Sriram
  வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் இணைந்து மோகன்ராஜும் வெளியேறினார். பின்னர் வாழப்பாடியார் ராஜீவ் காங்கிரஸைக் கலைத்து விட்டு திவாரி காங்கிரஸில் இணைந்தபோது மோகன்ராஜும் உடன் சென்றார். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது மோகன்ராஜும் அதில் இணைந்தார்.//

  அடே சாமி…ஜெயித்த பிறகு தனது தொகுதியை விட்டு வெளியேறாமல் இருந்தால் சரி…//

  தொகுதியை விட்டுட்டு போக மாட்டருன்னு தான் நெனைக்கறேன். என்னா அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாரு 🙂

 14. // Sriram

  . இவரது சகோதரர் சுரேஷ்குமார்(அ.தி.மு.க.வை சேர்ந்தவர்) சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆவார்.//

  இது வேறயா … கிழிஞ்சது கிருஷ்ணகிரி…இல்லை இல்லை கிழிஞ்சது சேலம்…//

  ஹாஹா

  // ஏழு குண்டலவாட கோவிந்தா கோவிந்தா //

  நாராயண நாராயண!

 15. // Sriram
  மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை//

  மக்களின் அடிப்படை பிரச்சினை எந்த மந்திரியும் தொகுதிக்கென்று உருப்படியாக எதுவும் செய்யாதது தான்… அதை தீர்த்துக் கட்டுவேன் எதையும் செய்யாததை மறைக்க ஏதும் திட்டம் வைத்திருக்கிறாரா ??//

  ஆஹா, என்னா என்னமோ சொல்லுறீங்களே நீங்க?

 16. // Sriram

  இச்செய்திகள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டவை. ஏதேனும் தவறு/காப்புரிமை பிரச்சினை இருந்தால் தயவுசெய்துத் தெரிவிக்கவும்//

  நோட் பண்ணிகொங்க மக்களே…//

  ஆனா அப்புறமா மறந்துடனும் மக்களே!

 17. // Sriram

  ஒருவேளை நீங்க தான் அந்த மோகனா ? அப்படி ஏதும் இருந்தால் மன்னிச்சுக்கோங்க அண்ணாச்சி..சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக்கிறேன்…//

  நான் முன்னாடியே சொல்லி இருக்கணும். அவர் பேரையே நான் இப்போதான் கேள்விபடறேன். பெயர் தான் ஒண்ணு. மத்தபடி எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.

 18. //
  நந்தா

  சேலம் தொகுதி குறித்த இப்பதிவு உபயோகமாய் இருக்கிறது. அனேகமாய் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு நிற்க வேண்டி இருக்கலாம்.

  மற்ற கட்சி வேட்பாளார்கள் குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பதிவிடுங்கள். உபயோகமாக இருக்கும்.//

  தங்கள் முதல் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நந்தா. காங்கிரஸ் சார்பாக தங்கபாலு தான் நிற்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. மற்ற கட்சி வேட்பாளர்கள் பற்றி விவரங்கள் திரட்டி வருகிறேன். முடிந்த வரை சேலம் தேர்தல் பற்றிய செய்திகள் சேகரித்து தருகிறேன். அவ்வப்பொழுது என் தளத்தை பாருங்கள்.

 19. என்ன மோகன் இப்படி முழு நேர அரசியல் செய்தியாளரா மாறிட்டீங்க.

  //முதல்ல அரசியல்ல இருக்குற கொசுவை ஒழிக்க சொல்லுங்க

  என்ன தம்பி நீங்க… ஏதாவது நடக்கக் கூடியதா ஆசைபடுங்க. இதெல்லாம் பேராசைன்னு உங்களுக்கு படல்ல?

 20. // kunthavai

  என்ன மோகன் இப்படி முழு நேர அரசியல் செய்தியாளரா மாறிட்டீங்க.

  //முதல்ல அரசியல்ல இருக்குற கொசுவை ஒழிக்க சொல்லுங்க

  என்ன தம்பி நீங்க… ஏதாவது நடக்கக் கூடியதா ஆசைபடுங்க. இதெல்லாம் பேராசைன்னு உங்களுக்கு படல்ல?//

  ஹிஹி, தேர்தல் முடியர வரைக்கும் என்னால முடிஞ்ச சேவை 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s