சேலம் வேட்பாளர்கள் 2

எஸ்.எம்.எஸ். மூலம் ஓட்டு சேகரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்

சேலம் குகையை சேர்ந்தவர் ஆர்.பாலசுப்பிரமணி. இவர் சேலம் பாராளுமன்ற தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இதையடுத்து இவர் கடந்த ஒரு வாரகாலமாக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் டிவிசன் டிவிசனாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

தனது கையில் யானை சின்னத்தை பிடித்து வீடு வீடாக சென்றும் பாலசுப்பரமணி ஓட்டு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் வேட்பாளர் ஆர்.பாலசுப்பரமணி செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஓட்டும் சேகரித்து வருகிறார். இதில் சமூக பொருளாதாரம் மாற்றமடைய யானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டு வருகிறார்.

இந்த நூதன பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக பகுஜன்சமாஜ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

தங்கபாலு ஆதரவுச்செய்தி:

தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இந்த முறையும் சேலம் தொகுதியில் அவர் தான் நிற்க வேண்டும் என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தீவிர பிரசாரம் செய்தால் வெற்றியை பெற்று விடலாம் என்றும் அவரிடம் தெரிவித்து வருகிறார்களாம். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது

தங்கபாலு எம்.பி. கள்ளக்குறிச்சி தொகுதி அல்லது சேலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. நாங்கள் சேலம் தொகுதியில் போட்டியிட வற்புறுத்தி வருகிறோம். அவர் தனது எம்.பி. நிதியில் பல லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி ஏழைகள் மற்றும் மலைவாழ்மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

தங்கபாலு எதிர்ப்புச்செய்திகள்:

தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் சொன்னது; தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்தினோம். அதே தேதியில் கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கபாலு எம்.பி. சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர்கள் இயக்கத்தை தடை செய்யவும் கூறி இருந்தார். இது விவசாயிகள் மற்றும் பனை தொழிலாளர்களை இழிவுபடுத்திய செயலாகும். சேலம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்கட்சி சார்பில் தங்கபாலு போட்டியிடுவார் என கருதுகிறோம். அப்படி அவர் போட்டியிட நிறுத்தப்பட்டால் அவரை தோற்கடிப்போம். அவரை எதிர்த்து 1000 பேரை தேர்தலில் நிறுத்துவோம்.

தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு மீண்டும் சேலத்தில் போட்டியிடுவதற்கு கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிருப்தியாளர்கள் சிலர் தங்களது பெயரை வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர். சேலம் கிழக்கு மாவட்ட காங்.,பொதுச் செயலரான உலகநம்பி, தங்கபாலு மாநில தலைவராக பொறுப்பேற்றபோது தன் ஆதரவாளர்களுடன் இணைந்து மொட்டை போட்டு எதிர்ப்பை காட்டினார். தேர்தலில் தங்கபாலுவுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவலால், அவர் தன்னை வேட்பாளராக அறிவித்து சுவர் விளம்பரம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

கொசுறுச்செய்தி:

சென்னை: தொண்டர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம்தான் கூற வேண்டும். மாறாக, கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: மாலைமலர், தினமலர்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

Advertisements

10 responses to “சேலம் வேட்பாளர்கள் 2

 1. Tamil unicode sariyaaka velai seiyavillai ( ennai pola??)..

  so sorry for Taminglishhhhhhhhhhh

 2. என்ன அண்ணாச்சி… உங்க பதிவுல அரசியல் இடுகைகள் அனல் பறக்குது போங்க…
  நான் எப்படியாவது திருட்டு ரயில் ஏறியாவது ராமநாதபுரத்துக்கு சென்று எங்கள் தானைத் தலைவர் (ரசிகக் கண்மநிகளாலும், தொண்டர்களாலும் ஜெ.கே.ரித்தீஷ் என்றும் அன்போடு அழைக்க கூடிய) முகவை குமார் அவர்களுக்கே ஓட்டுப் போட்டுவிடலாம் என்று இருக்கிறேன்.

 3. தங்கபாலு எங்க நின்னாலும் தோல்வி என்று தான் நினைக்கிறன்.. சொந்த கட்சி காரங்களே அதுக்கு வேலை செய்வாங்கன்னு நினைக்கிறேன்!!

  ஸ்ரீராம், ராமநாதபுரத்துக்கு நான் கள்ள தோணில போறேன்!!

 4. // உருப்புடாதது_அணிமா

  nalla muyarchi…//

  மிக்க நன்றி அணிமா உங்கள் பாராட்டுக்கு 🙂

 5. // உருப்புடாதது_அணிமா

  Tamil unicode sariyaaka velai seiyavillai ( ennai pola??)..

  so sorry for Taminglishhhhhhhhhhh //

  Its okay, we are friends 🙂

 6. // Sriram

  என்ன அண்ணாச்சி… உங்க பதிவுல அரசியல் இடுகைகள் அனல் பறக்குது போங்க…
  நான் எப்படியாவது திருட்டு ரயில் ஏறியாவது ராமநாதபுரத்துக்கு சென்று எங்கள் தானைத் தலைவர் (ரசிகக் கண்மநிகளாலும், தொண்டர்களாலும் ஜெ.கே.ரித்தீஷ் என்றும் அன்போடு அழைக்க கூடிய) முகவை குமார் அவர்களுக்கே ஓட்டுப் போட்டுவிடலாம் என்று இருக்கிறேன்.//

  தேர்தல் சமயமில்லையா அதனால் தான் ஸ்ரீராம் 🙂

  அவர் படத்தை பார்க்க வரவங்களுக்கே காசு கொடுத்ததா கேள்வி, நீங்க அவருக்கு ஒட்டு போடறேன்னு சொன்ன சும்மா விட்டுடுவாரா, பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி டிக்கெட் எடுத்து கொடுப்பாரு.

 7. // Bhuvanesh

  தங்கபாலு எங்க நின்னாலும் தோல்வி என்று தான் நினைக்கிறன்.. சொந்த கட்சி காரங்களே அதுக்கு வேலை செய்வாங்கன்னு நினைக்கிறேன்!! //

  அதே அதே!

  // ஸ்ரீராம், ராமநாதபுரத்துக்கு நான் கள்ள தோணில போறேன்!!//

  அவர் படத்தை பார்க்க வரவங்களுக்கே காசு கொடுத்ததா கேள்வி, நீங்க அவருக்கு ஒட்டு போடறேன்னு சொன்ன சும்மா விட்டுடுவாரா, பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி டிக்கெட் எடுத்து கொடுப்பாரு.

 8. மோகன்,

  நான் அன்னிக்கே சொன்னேன், ஞாபகம் இருக்கா? அதிமுகவில செம்மலைக்கு சீட்டு கொடுப்பாங்கன்னு….இப்ப குடுத்துட்டாங்க போலருக்கே :0))

  இப்ப இருக்க நிலவரப்படி, செம்மலை ஜெயிக்க வாய்ப்பு அதிகம்…ஆனா வோட்டு வித்தியாசம் 20,000 இருந்து 30,000 உள்ள இருக்கலாம்….அதிகம் இருக்காது…

  தங்கபாலு?? ம்ம்ம்ம்….

 9. // அதுசரி

  மோகன்,

  நான் அன்னிக்கே சொன்னேன், ஞாபகம் இருக்கா? அதிமுகவில செம்மலைக்கு சீட்டு கொடுப்பாங்கன்னு….இப்ப குடுத்துட்டாங்க போலருக்கே :0))

  இப்ப இருக்க நிலவரப்படி, செம்மலை ஜெயிக்க வாய்ப்பு அதிகம்…ஆனா வோட்டு வித்தியாசம் 20,000 இருந்து 30,000 உள்ள இருக்கலாம்….அதிகம் இருக்காது…

  தங்கபாலு?? ம்ம்ம்ம்….//

  வாங்க அதுசரி, நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கு. நீங்கதான் ஆலோசகரோ?

  செம்மலை vs தங்கபாலு = செம்மலை வாய்ப்பு அதிகம். என்னோட செம்மலை பதிவை பாருங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s