சேலம் அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை

முன்னாள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இம்முறை சேலம் அ.தி.மு.க பாராளுமன்ற வேட்பாளர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செம்மலை 1945ம் ஆண்டு பிறந்தவர். சேலம் எம். ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கேட்டும் எம்.ஜி.ஆர் சீட் கொடுக்காதப்போது சுயேட்சையாக நின்று வென்றவர். வழக்கறிஞரான இவர் 1980, 85, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் செல்வகணபதிக்கு ஈடு கொடுக்க இவராலேயே முடியும் என்று மேலிடம் நினைத்ததால் இவருக்கு வாய்ப்பு.

சேலத்தில் சில நாட்களுக்கு முன் கூட்டத்தில் பேசிய செம்மலை, ஜெயலலிதா பிரதமராவார். அவர் போடும் முதல் கையெழுத்து தி.மு.க ஆட்சியை கலைப்பதற்காகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சில தகவல்கள்:

அன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறை அமைச்சர் செம்மலையை 2004 ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குப் பின் இந்த அமைச்சரவை மாற்றம் நடந்தது. சொல்லப்பட்ட காரணங்கள்; தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது மக்களின் அதிருப்தி காரணமாக தொகுதிக்குள் நுழைய முடியாத நிலையில் இருந்த அமைச்சர்களில் டாப் லிஸ்டில் இருந்தவர்களில் செம்மலையும் ஒருவர். கல்வியமைச்சரான பின்னர், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது போன்ற விஷயங்களில் இவர் அதிகமாகவே ‘கை நீட்டியதாக’ வந்த புகார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செம்மலையின் மருமகள் வாணிப்ரிதா வரதட்சிணைக் கேட்டு கணவர் எழிலமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் கொடுமைப்படுத்துகின்றனர் என்று மேட்டூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த கேஸ் இன்னும் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு சேலத்தில் நிறுத்தப்பட்டால் வெற்றிக்கனி செம்மலை பக்கம் தான் என்கின்ற பேச்சு தொகுதியில் அடிபடுகிறது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

Advertisements

2 responses to “சேலம் அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை

 1. தொடர்ச்சியாய் சேலம் தொகுதி குறித்தான பல உபயோக தகவல்கள் மோகன். நன்றி.

  எனக்கும் தங்கபாலு செம்மலைக்கு சரியான நிகர் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் கொங்கு பேரவை ஓட்டுக்கள் அதிமுக விர்கு கிடைக்காது என்பது சற்றே பின்னடைவுதான்.

  வீரபாண்டி அஆறுமுகம் பத்தாதற்கு செல்வகணபதியும் இருக்கும் இந்த சூழ்நிலையில் திமுகவிற்கு இந்த தொகுதி கிடைத்திருந்தால் கண்டிப்பாய் வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்றாக சேலம் இருந்ருக்கக் கூடும்.

  தங்கபாலு தனக்காகத்தான் சேலம் தொகுதியை கேட்டு போராடி பெற்றிருக்கிறார். இப்போது கொஞ்சம் கஷ்டம்தான்.

  தனிப்பட்ட முறையில் நான் தங்கபாலுதோற்க வேண்டும் என்று மட்டுமல்ல, டெபாசிட் கூட வாங்கக் கூடாது என்று கடும் வெறியிலிருக்கிறேன்.

  ஆனால் என்ன பண்ணினாலும் புலிக்குதிமுக அல்லது அதிமுக என்ற இந்த நிலையும் கடுப்பாய்தான் இருக்கிறது.

  ஓமலூர் ஏரியாவுல செம்மலைக்கு மரியாதையே இல்லைன்னு வேற கேள்விப்பட்டேன்.

 2. // நந்தா

  தொடர்ச்சியாய் சேலம் தொகுதி குறித்தான பல உபயோக தகவல்கள் மோகன். நன்றி.

  எனக்கும் தங்கபாலு செம்மலைக்கு சரியான நிகர் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும் கொங்கு பேரவை ஓட்டுக்கள் அதிமுக விர்கு கிடைக்காது என்பது சற்றே பின்னடைவுதான்.

  வீரபாண்டி அஆறுமுகம் பத்தாதற்கு செல்வகணபதியும் இருக்கும் இந்த சூழ்நிலையில் திமுகவிற்கு இந்த தொகுதி கிடைத்திருந்தால் கண்டிப்பாய் வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்றாக சேலம் இருந்ருக்கக் கூடும்.

  தங்கபாலு தனக்காகத்தான் சேலம் தொகுதியை கேட்டு போராடி பெற்றிருக்கிறார். இப்போது கொஞ்சம் கஷ்டம்தான்.

  தனிப்பட்ட முறையில் நான் தங்கபாலுதோற்க வேண்டும் என்று மட்டுமல்ல, டெபாசிட் கூட வாங்கக் கூடாது என்று கடும் வெறியிலிருக்கிறேன்.

  ஆனால் என்ன பண்ணினாலும் புலிக்குதிமுக அல்லது அதிமுக என்ற இந்த நிலையும் கடுப்பாய்தான் இருக்கிறது.

  ஓமலூர் ஏரியாவுல செம்மலைக்கு மரியாதையே இல்லைன்னு வேற கேள்விப்பட்டேன்.//

  நந்தா, தங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களிற்கும் மிக்க நன்றி. கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால் தி.மு.க & காங்கிரஸ் சிலத்தொகுதிகளை மாற்றிக்கொள்ள இருக்கின்றனவாம். அப்படியென்றால் சேலம் தி.மு.க வசம் போக வாய்ப்புகள் உள்ளன.

  உள்ளூர் செய்தித்தாள்களில் செம்மலைக்கு வன்னியர் ஓட்டுகள் நிறைய கிடைக்க வாய்ப்பு உள்ளதாகப் படித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s