தேர்தல் கலாட்டாக்கள்

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக அரக்கோணம் தொகுதியில் நிற்கும் டாக்டர். வி.ஐசக் கொடுத்திருக்கும் தேர்தல் அறிக்கை:

மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி(வரவர என்ன தேர்தல் அறிக்கைல சொல்லுறாங்க பாருங்க), குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு (அட்ரா சக்கை, இதுக்கு மேல இவங்களைப்பத்தி சொல்ல முடியலை)

அரசியல் கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேருவதற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக மேடைகளில் முழங்கி வரும் விஜயகாந்த் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் சொல்லியிருப்பது உண்மையென்றால் அப்படி பேரம் பேசியிருப்பவர்க ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை காட்டிக்கொடுக்க விஜயகாந்த் மறுத்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது “சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்”.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக விழுப்புரம் வேட்பாளர் வேலாயுதம் மீது 171 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது. எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

என்னை கூட்டணியில் சேர்க்க பல கட்சிகளும் பயப்படுகின்றன. வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: பாஜக, சரத்குமார், கார்த்திக் கூட்டணி

கேள்வி பகுதி:
வைகோவை ஏன் அலைய வைத்தார் ஜெயலலிதா? பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி உருவாகும் முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வை ஏன் ஜெயலலிதா இவ்வளவு அலைக்கழித்தார்? ம.தி.மு.க.வை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வுடன் வை.கோ கூட்டணி அமைக்கமாட்டாரென்று நினைத்ததாலா? அல்லது பா.ஜ.கவுடன் ம.தி.மு.க கூட்டணி சேர்ந்தாலும் அக்கூட்டணி எதிரணியின் ஓட்டைத்தான் பிரிக்கும் என்று நினைத்தாரா? அல்லது அக்கட்சியில் யாருமே இல்லையென்று நினைத்ததாலா? அல்லது வேறு காரணங்களோ யாருக்குத் தெரியும்? ஆனால் வை.கோ ரொம்ப பாவம் என்று மட்டும் தெரிகிறது. இவருக்கு இதனால் அனுதாப ஓட்டுக்கள் விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

Advertisements

27 responses to “தேர்தல் கலாட்டாக்கள்

 1. //இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்////

  ok..

 2. ///நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார்.////

  😦

 3. ///மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி///

  wat abt quarter???
  ( indiya KUDI magan)

 4. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  //இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்////
  ok.. //

  பட்டைய கிளப்பீட்டீங்க அணிமா நண்பரே!

 5. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  naan thaan muthalla.. //

  வாங்க! ஆமா, நீங்கதான் முதல்ல அணிமா!

 6. இப்போ தான் தமிழ் பாண்ட் சரியாச்சு..

 7. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  ///நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார்.////
  😦 //

  அரசியல் கட்சிகள் தானே கதிகலங்கும் என்று சொன்னார், நீங்க ஏன் கலங்குறீங்க?

 8. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்
  ///மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி/// wat abt quarter??? ( indiya KUDI magan) //

  அது ஆப் த ரெகார்ட் 😉

 9. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  இப்போ தான் தமிழ் பாண்ட் சரியாச்சு.. //

  Okay, okay!

 10. //அரசியல் கட்சிகள் தானே கதிகலங்கும் என்று சொன்னார், நீங்க ஏன் கலங்குறீங்க?///

  அரசியல் கட்சிக்கே அந்த நிலைமைன்னா , நம்ம கதி??
  அதுதான்..

 11. ///மோகன்

  இப்போ தான் தமிழ் பாண்ட் சரியாச்சு.. //

  Okay, okay!///

  உங்க ஃபாண்டுக்கு என்ன ஆச்ஹு??

 12. //அது ஆப் த ரெகார்ட் ;-)///

  ஹையா ஜாலி..

  ” HALF” d Record தானே அது??

 13. // உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  //அரசியல் கட்சிகள் தானே கதிகலங்கும் என்று சொன்னார், நீங்க ஏன் கலங்குறீங்க?/// அரசியல் கட்சிக்கே அந்த நிலைமைன்னா , நம்ம கதி?? அதுதான்.. //

  ஆஹா, இப்போ புரியுது உங்க கவலை

 14. // From உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  ///மோகன் இப்போ தான் தமிழ் பாண்ட் சரியாச்சு.. // Okay, okay!/// உங்க ஃபாண்டுக்கு என்ன ஆச்ஹு?? //

  ஹிஹி ஒண்ணும் ஆகலை, அப்படியேத்தான் இருக்கு.

 15. // From உருப்புடாதது_அணிமா on தேர்தல் கலாட்டாக்கள்

  //அது ஆப் த ரெகார்ட் ;-)/// ஹையா ஜாலி.. ” HALF” d Record தானே அது?? //

  ஹாப் போதாதே உங்களுக்கு அணிமா?

 16. நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு

  நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,

  படித்து பிடித்தால் வோட்ட போடுங்க 🙂

  தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.

  http://sureshstories.blogspot.com/2009/04/29.html

  காதல் – படித்து பாருங்க பசங்களா – பேச்சுலர் தேவதாஸ்களுக்கு

  http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

 17. wat abt quarter???
  ( indiya KUDI magan)

  என் இனம் அண்ணே நீங்க…

 18. சத்தியமா ஒண்ணுமு புரியலபா!!!!!!!!!!
  கொஞ்சம் லேட்டா வரேன்.

 19. “மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி”
  கோழி யா, ஆடா, காக்காவா…
  தெளிவா சொல்லுங்க தலீவா மக்கள் கேக்கறாங்கள்ல…….

 20. கலக்கல் மோகன் அண்ணே..

  // வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்//

  அவரு பேசுனாலே ஆச்சர்யம் தான்.. இதுல இது வேறையா?

 21. //மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி, குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு

  பேசாம நான் வேலையை விட்டுவிட்டு அங்கிட்டாம வந்து செட்டிலாகப் போறேன்.

  //நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்//

  அதையே நாம சொன்னா என்ன செய்வாரு?

 22. // suresh

  நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு

  நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,

  படித்து பிடித்தால் வோட்ட போடுங்க 🙂

  தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.

  http://sureshstories.blogspot.com/2009/04/29.html

  காதல் – படித்து பாருங்க பசங்களா – பேச்சுலர் தேவதாஸ்களுக்கு

  http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html//

  சுரேஷ், தங்கள் முதல் வருகைக்கும், ஓட்டிற்கும் மிக்க நன்றி. நானும் உங்கள் பதிவு ஒன்றுக்கு ஓட்டு போட்டு விட்டேன்..

 23. // சுபாஷ்

  சத்தியமா ஒண்ணுமு புரியலபா!!!!!!!!!!
  கொஞ்சம் லேட்டா வரேன்.//

  என்ன சுபாஷு, இதுக்கூடவா புரியலை?

 24. // ராஜா

  “மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி”
  கோழி யா, ஆடா, காக்காவா…
  தெளிவா சொல்லுங்க தலீவா மக்கள் கேக்கறாங்கள்ல……//

  வாங்க ராஜா, நம்ம அரசியல்வாதிகள் எப்போது தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்?

 25. //Bhuvanesh

  கலக்கல் மோகன் அண்ணே..

  // வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்//

  அவரு பேசுனாலே ஆச்சர்யம் தான்.. இதுல இது வேறையா? //

  வாங்க புவனேஷ், ஏன் இப்படி ஷொல்லறீங்க? கார்த்திக் நல்லாவே பே ஷுவாரு.

 26. // குந்தவை

  //மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி, குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு

  பேசாம நான் வேலையை விட்டுவிட்டு அங்கிட்டாம வந்து செட்டிலாகப் போறேன்.

  //நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்//

  அதையே நாம சொன்னா என்ன செய்வாரு?//

  அக்கா, என்ன இப்படி அதிரடியா கேட்டுடீங்க? தேர்தல் ரிசல்ட் வந்தப்புறம் தெரிஞ்சுக்குவாரு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s