சேலம் செய்திகள்

சேலத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

25ம் தேதி ஜெயலலிதா சேலம் வருகை
சேலத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 25ம் தேதி சேலம் வருகிறார். ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதால், ஹெலிபேடு தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சேலத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், அரசு கலைக்கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளி ஆகும். இந்த இடங்களை ஆய்வு செய்வதற்காக ஹெலிபேடு தள இன்ஜினியர் ஹரி என்பவர் சேலம் வந்தார். சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இடம் தகுதியற்றதாக இருந்ததால் அது நீக்கப்பட்டது(தப்பித்தது சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானம் 🙂 ). தற்போது அரசு கலைக்கல்லூரி மட்டுமே ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு தகுதியாக உள்ளது. ஏப்., 25ம் தேதி வரும் ஜெயலலிதா நான்கு நாட்கள் சேலம் எல்.ஆர்.என்., ஹோட்டலில் தங்குகிறார். சேலத்தில் இருந்து நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி சுயேட்சை வேட்பாளர் முதல் மனு தாக்கல்

சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேட்சை ஒருவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.லோக்சபா தேர்தல் மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேட்சையாக போட்டியிடும் ஷாஜகான் என்பவர் முதலாவதாக மனுத்தாக்கல் செய்தார். அவர் பற்றிய விபரம்: பெயர் – எம்.ஏ.ஷாஜகான்(38). தொழில் – வக்கீல். சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை வித்யாநகரில் வசித்து வருகிறார்.கடந்த 2004 லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இவர் எட்டாயிரத்து 466 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்(என்னது மூன்றாவது இடமா?). 2006 சட்டசபை தேர்தலில் சேலம் 1வது தொகுதியில் போட்டியிட்டு 766 வாக்குகள் பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஐந்து ஏக்கர் நிலம் ரூ.15 லட்சம், மனைவி பெயரில் உள்ள வீடு ரூ.15 லட்சம், நகை ரூ.நான்கு லட்சம், ஒரு ஹோண்டா பைக் ஆகியவற்றை காட்டியுள்ளார். சிலிண்டர், “டிவி’ முரசு இவற்றில் ஏதாவது ஒன்றை சின்னமாக ஒதுக்க வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.

தொழிலாளர் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிவிப்பு கூட்டம்

அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று நடக்கிறது.அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் மண்டல செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை:
அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் வேட்பாளராக கவுசல்யா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று மாலை சவுடாம்பிகா ஹோட்டலில் நடக்கிறது. இதில் அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை மாற்றக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஓமலூர் பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு வட்டார தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 200 பேர் வரை கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் இருந்த மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

தங்கபாலு சரியில்லாத வேட்பாளர், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை. ஏற்கனவே அவர் மக்களுக்காக எந்தவித உதவியும் செய்யவில்லை. நலத்திட்ட உதவிகளையும் வாங்கித்தரவில்லை. இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரசில் எம்.பி.யாக இருந்த அவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஒன்றும் செய்ய வில்லை. உதவி கேட்டு போன தொண்டர்களையும் புறக்கணித்தார். அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபட்டு உள்ளார்.

தொண்டர்களையும் அவர் அனுசரித்து போகவில்லை (இதற்கு என்ன அர்த்தம்). அவரை சேலம் தொகுதியில் இருந்து மாற்றிவிட்டு வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தா விட்டால் அவருக்கு ஓட்டு போட மாட்டோம். வேறு கட்சிக்கு ஓட்டு போடுவோம்.

சேலம் தாதகாப்பட்டி அருகில் உள்ளது குமரன் நகர். இந்த பகுதியில் சிறிய அளவிலான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடமாட்டோம். பொதுமக்கள் ஓட்டு போட வும் கூடாது. ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. இலங்கை தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

சுயமாரியாதை உள்ள தமிழர்கள் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். சேலத்திலும் காங்கிரசை தோற்கடிப்போம்.

இவ்வாறு அந்த போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரத வெண்புறா இயக்கம் தேர்தலில் இருந்து விலக முடிவு

லோக்சபா தேர்தலில் பாரத வெண்புறா தமிழ்நாடு இயக்கம்(இப்படி ஒரு கட்சியா????)‌ சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட முடிவு செயயப்பட்டது. கடந்த ஏப்., 5 ல் நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

Advertisements

15 responses to “சேலம் செய்திகள்

 1. சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இடம் தகுதியற்றதாக இருந்ததால் அது நீக்கப்பட்டது(தப்பித்தது சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானம் 🙂 ).

  அண்ணாச்சி இது நான் படித்த!? பள்ளி அண்ணாச்சி…
  ஏற்கனவே ஒருமுறை இவர் அங்கு ஹெலிகாப்டர் மூலம் இறங்கி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு ஒரு மாநாடு கூட நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அப்போது அங்கு இலவசமாக மோர் பாக்கெட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு காந்தி ஸ்டேடியம் விட்டு மோர் குடிக்க எங்கள் பள்ளிக்கு சென்றோம்.

 2. சேலம் செய்தியா போட்டு தாக்கிட்டு இருக்கீங்க 🙂

 3. நாராயணா இந்த கொசுத்தொல்லை( அரசியல்வாதிகள்) தாங்க முடியலடா..

 4. அம்மையாரை கொசு என்று கூறிய முதல் ஆள் நீங்க தான் அணிமா அண்ணே…
  அவங்க பாக்கறதுக்கு என்ன கொசு மாதிரியா இருக்காங்க?

 5. ///Sriram // ஏப்ரல் 21, 2009 இல் 4:16 பிற்பகல்

  அம்மையாரை கொசு என்று கூறிய முதல் ஆள் நீங்க தான் அணிமா அண்ணே…
  அவங்க பாக்கறதுக்கு என்ன கொசு மாதிரியா இருக்காங்க?////

  அடப்பாவி நான் நல்லா இருக்குறது பிடிக்காமல் எதிர்க்கட்சி செய்யும் வேலை இது..

 6. நண்பரே இப்போதெல்லாம் ஒரே அரசியலாக இருக்கிறதே.. தலைப்புக்களை சிறிது மாற்றவும்.

 7. //
  தங்கபாலு சரியில்லாத வேட்பாளர், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை.
  //

  அதனால தாங்க அவரு காங்கிரஸு தலீவரா இருக்க முடியுது…கொஞ்சம் செல்வாக்கு இருந்தாலும் தட்டி வச்சிருவாங்கள்ல??

 8. // Sriram

  சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இடம் தகுதியற்றதாக இருந்ததால் அது நீக்கப்பட்டது(தப்பித்தது சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானம் 🙂 ).

  அண்ணாச்சி இது நான் படித்த!? பள்ளி அண்ணாச்சி…
  ஏற்கனவே ஒருமுறை இவர் அங்கு ஹெலிகாப்டர் மூலம் இறங்கி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு ஒரு மாநாடு கூட நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அப்போது அங்கு இலவசமாக மோர் பாக்கெட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு காந்தி ஸ்டேடியம் விட்டு மோர் குடிக்க எங்கள் பள்ளிக்கு சென்றோம்.//

  ஸ்ரீராம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி நீங்கள் படித்த பள்ளி என்பது எனக்கு நினைவிருக்கிறது :). மோர் தான் குடுத்தார்களா 😉 ?

 9. // கிரி

  சேலம் செய்தியா போட்டு தாக்கிட்டு இருக்கீங்க 🙂 //

  ஹாஹா, சேலம் சிட்டிஜன் ஜர்னலிஸ்ட் நான் 🙂

 10. // உருப்புடாதது_அணிமா

  நாராயணா இந்த கொசுத்தொல்லை( அரசியல்வாதிகள்) தாங்க முடியலடா..//

  அணிமா அண்ணே, உங்க கமெண்ட் கொஞ்சம் மாத்திட்டேன். ஹிஹி. எந்த பிரச்சினையும் வந்துட கூடாதுல்ல, அதுதான்

 11. // Sriram

  அம்மையாரை கொசு என்று கூறிய முதல் ஆள் நீங்க தான் அணிமா அண்ணே…
  அவங்க பாக்கறதுக்கு என்ன கொசு மாதிரியா இருக்காங்க?//

  ஆஹா, ஸ்ரீராம் நல்லாவே பாலிட்டிக்ஸ் பண்றாரே?

 12. // உருப்புடாதது_அணிமா

  ///Sriram // ஏப்ரல் 21, 2009 இல் 4:16 பிற்பகல்

  அம்மையாரை கொசு என்று கூறிய முதல் ஆள் நீங்க தான் அணிமா அண்ணே…
  அவங்க பாக்கறதுக்கு என்ன கொசு மாதிரியா இருக்காங்க?////

  அடப்பாவி நான் நல்லா இருக்குறது பிடிக்காமல் எதிர்க்கட்சி செய்யும் வேலை இது..//

  அணிமா இது எதிர் கட்சி செஞ்ச சதி இல்லை, ஸ்ரீராம் செஞ்ச சதி

 13. // பிரவீன்

  நண்பரே இப்போதெல்லாம் ஒரே அரசியலாக இருக்கிறதே.. தலைப்புக்களை சிறிது மாற்றவும்.//

  பிரவீண் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. தேர்தல் சமயம் என்பதால் இப்படி தலைப்பு வைத்து விட்டேன்.

 14. // அதுசரி
  //
  தங்கபாலு சரியில்லாத வேட்பாளர், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை.
  //

  அதனால தாங்க அவரு காங்கிரஸு தலீவரா இருக்க முடியுது…கொஞ்சம் செல்வாக்கு இருந்தாலும் தட்டி வச்சிருவாங்கள்ல??//

  ஹெஹெ, இது நல்லாயிருக்கே? அப்போ இப்படித்தான் நடக்குதா?

 15. Well i am basically from Salem, working in saudi. Its good to see the salem website like yours. But change the topics most of them here are politics newses. We are expecting some common newses.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s